Thursday, December 15, 2016

அழியாத கோலங்கள்

அழியவே எழுதப்பட்ட
அழகான கோலங்கள்..
அழிக்கப் படும்போது..
அழுமே நெஞ்சமுமே..



கலைந்து சிதறிய கோலம்..
கொட்டிக் கவிழ்த்த எண்ணெய்..
குட்டி எலி வேலையோ ..இல்லை
குட்டிச் சாத்தான்களின்
கும்மாளம் ..குதூகலம்..

துடைப்பத்துடன் வந்த
துப்புரவு பணியாளர்..
சுத்தம் சுத்தம்னு
சத்தம் போடுவியே..
அசுத்தம் இங்கே..
ஆசிட் கொண்டா..
அழுக்கு போகலையோ..
ஆளைத் தூக்கிடுவான்..
அலம்பல்..புலம்பலுடன்..

தூக்கில் ஏற்றி என்னை
தூ இவ்வளவுதானா..
தூசியாய் பார்த்த வேளை..
வாதம் என்னுடையது
வாதத்தில் தவித்த வேளை..

வாழ்க்கை பாடம்..
வளரும் வயதிலே..
வகையாய் கற்பித்தால்..
வாழ்வும் செழிக்குமே..
வளமை பெருகுமே..


நாகரீக நண்டுசிண்டுகள்..
நுனி நாக்கில் ஆங்கிலம்
நாலும் தெரிந்த பேச்சு.
'நான்' என்ற எண்ணம்..

வாண்டுகளின் வால்த்தனம்..
கண்டும் காணாமல்...
காணாமல் விட்ட தொடரின்
கதை கேட்டும் அம்மா ..

குறை சொல்ல நானில்லை..
கற்றுத் தரலாமொ கொஞ்சம்..
சுற்றியிருப்பதெல்லாம்..
சொத்து உனதல்ல வென்று..

நாளைய மன்னர்கள்..
நல்லது கற்கட்டும்..
நல்லாட்சி அமைக்கட்டும்
நலமோடு வாழட்டும்..

பிரியா விடை

தென்னை மரமேற ஆள் வருவான்
தெண்டச் செலவென திருப்பி அனுப்பல்..
பக்கத்து வீட்டு மாமரம்..
நம்பக்கம் காய் தருகையிலே..
அக்கப்போர் ஒன்னு வந்ததில்ல..
அது கிடக்கு விடுங்கனு..
அமைதிப் புறா பறக்கும்..
உலகக் கோப்பை கிரிக்கெ்ட் வரும்..
உளுத்த கம்பமும் சாய்ந்து போகும்.
இழுத்துக் கட்டு இப்போதைக்கு..
இன்னிங்ஸ் முடிஞ்சிடும்னு இம்சைகள்..
தன்னலம் ...தலை தூக்கும்

பாலம் பல கட்டணும்..
பாதை பல ஆகணும்..
புதிய ஊராய் மாறணும்
பாவப்பட்ட் மரங்களை
பலி கொடுத்தோம் என்றும்..
வரும் என் முறை எப்போனு
வருத்தத்தில் வாடிய மரத்துக்கு
வந்ததே வார்த் புயலும்..
வெட்டி வீழ்த்துமுன்..
வேரோடு சாய்க்கவே..
வலியில்லா...சாவோ..
வழியில் கிடக்கும் மரங்களுக்கு..
வண்டியில் ஏற்றுமுன்னே
வணங்கி வேண்டுவோம்..
வேரோ..விதையோ
 விட்டுப் போ..
வரும் சந்ததிக்கு காட்ட

Oh butterfly

திறந்த ஜன்னல் வழி..
தெரிந்து தான் வந்தாயா..???
தேடி எதுவும் வந்தாயா..???
தேவை என்ன சொல்..??
தட்டாமல் தருவேனே.
பட்டாம்பூச்சி உனக்கே..

அடைபடாதே ..சிறையிலிங்கே..
அங்கே தெரியுது பார்..
அழகான என் தோட்டம்..
ஓடிப் பிடிச்சு விளையாட..
ஓயும்போது நானும் வரேன்..
ஓடிப் போ நீயும்..
படபட பட்டாம்பூச்சியே..

Tuesday, December 13, 2016

வர்தா

வேரோடு வீழ்ந்த் மரங்கள்..
வெறிச்சோடிய தெருக்கள்....
விளக்கில்லா வீடுகள்..
விரும்பாத இவைகள்..
வருடந்தோறும் வருதே..
வேலை பளுவில்லா அம்மா..
வீட்டுக்கு திரும்பிய அப்பா..
வெட்டி அரட்டை அடிக்க ஆளில்லா அண்ணா..
வெறுமனே ஃபோனை நோண்டாத தங்கை..
மெகா சீரியல் இல்லா தாத்தா பாட்டி..
உருண்டை பிடித்து கையில் சாதம்..
ஊர்க்கதை பேச நேரம்..
விளையாட்டும் சிரிப்பும்..
வேடிக்கை பேச்சும்..
விடியும் வரை ஓடும்..
விளக்கில்லா ஒரு நாள்..
வேண்டுமிங்கே..
வருடத்துக்கோர் முறை..
ek KitKat break tho bantha ha Yar



Thursday, December 8, 2016

கட்டுரை..கவிதை

பொருள் வாங்கிக் கொடுக்க செலவழிக்கும் நேரம்..
பேசி கழிக்க பெற்றோருக்கு ஏன் இல்லை..
கட்டுரை தலைப்பை கண்டதும்...
கட்டுக்கடங்காத சந்தோஷம் என்று..
கேள்வித்தாளோடு வந்தாளே..
வாதம் எனது முன் வைப்பேன்..
நேரம் கிடைத்தால் நீயும் படி..

தவழ்ந்து நகர துவங்கையிலே
நானும் உன்னை விலகலையே..
நிலா காட்டி சோறு ஊட்டையிலே..
நானும் நிலவை ரசிச்சேனே..
மழலை மொழியில் நீ கொஞ்சையிலே..
நானும் என் மொழி மறந்தேனே..
தங்கப் பாதம்  நடக்கையிலே..
தன் கை கொடுத்து வெச்சேனே..
பள்ளி வாசல் அனுப்பிவிட்டு..
பரிதவிப்போடு காத்து கிடந்தேனே..
பாடம் நீ படிக்கையிலே..
புதிதாய் மீண்டும் படித்தேனே..
வளர்ந்து நீ வருகையிலே..
விலகாது நானும் தொடர்ந்தேனே.
காற்று புகாத இடைவெளியில்..
காத்தே நானும் இருக்கையிலே.
மூச்சு முட்டத் துவங்கியது உனக்கு
முணுமுணுப்பும் அங்கே முளைவிட்டது.
தலை வாரும் நேரம் ..
தலையாட்டியபடி..பாட்டு கேட்பாய்..
பஸ் ஏற்ற போகையிலே..
பள்ளித் தோழியுடன் அரட்டை அடிப்பாய்..
சாப்பாட்டு நேரம் ..வருவேன் பேச
கொட்டாக் கண்ணோடு டீவியில் மூழ்குவாய்..
விடுமுறை நாளில் வெளியே போலாம்னா..
விடேன் கொஞ்சம் தூங்க என்பாய்..

காத்துக் கிடந்து சலிப்புடனே..
முகநூலில் என்ன நடக்குதுனு..
நுழையும் போது வருவாய் நீயும்..
சரி சரி..நீ பேசிக்கோ..உடன்பிறவா
சக தோழி பலரோடு..
உனக்கேது நேரம் எனக்காக..
முறுக்கிக் கொண்டு போவாயே..
கதவும் அடையும்..உன்..
மனம் போல..

நம் நட்புக்கு ஒரு ஜே

Happy birthday kalai
orkut ஆ..ஐயோ..
அதெல்லாம் சரியில்லை..
id  எல்லாம் வேண்டாம்..
அக்கடானு கிடந்தேன்..
அசட்டுத் துணிச்சல் வர..
அதுவும் தான் என்னதுனு..
அலசிப் பார்போமே..
அதிரடியா நுழைந்தேன்..
scrap ,friend request ..
 சுத்தமா ஒன்னும் புரியல..
சத்தமில்லாமல்...
சகி ஒருத்தி வந்தாள்....
இளையராஜா இசையால்..
இனிதாய் ஒரு அறிமுகம்..
scrap அதிகமானது ..
சொந்தமும் இறுகியது..
சொல்றேன் ஒரு தலைப்பு..
சும்மா எழுதலாம் வாங்கன்னா..
எங்கள் கூட்டணி..
எண்ணிக்கை கூடியது..
எங்கோ இருந்தாள்..
என்னை..ஆட்கொண்டாள்..
எல்லையிலா அன்பிலே..
ஊடகங்கள் மாறியது..
உறவு எமது மாறலையே..
எந்தப் பயணத்திலும்..
என் கூடவே வருவாள்..
பத்திரமா இருக்கீங்களா..
ஊர் போய் சேர்ந்தாச்சா..
கடல் கடந்து வாழ்ந்தாலும்..
குறுஞ்செய்தியில்.. தொடர்வாள்..
நல்லதோ கெட்டதோ..
வருத்தமோ..சந்தோஷமோ..
வரி விடாமல் பகிர்வோமே..

ஆச்சரியம் உண்டு இதிலே
ஆண்டு எட்டாச்சு..
அவளை இன்னும் பார்த்ததில்லை..
அதனால் துளி வருத்தமில்லை..

நட்பெனும் கடலினிலே
நல்லதொரு முத்து நீ..
நலமுடன் வாழ்க நீ..
கலை நீயும் என்றென்றும்..


இந்த உன்  பிறந்த நாள்..
இப்படியே கொண்டாடுவோம்..
அடுத்த வருஷமும் வரும்..
அதற்குள்ளாவது பார்ப்போமா..

Tuesday, December 6, 2016

போய் வா..மகளே.போய் வா

போய் வா..மகளே ..போய் வா

எப்போதும் போல வீட்டு எஜமானி ..எடுத்து வைத்தாள்..பழைய சோற்றை..வேலைக்கு உதவும் பெண்ணுக்கு..
ஐயே....சோறு வேண்டாம்மா .ரவைக்கே grinder ல மாவு போட்டாச்சு..mixie ல ஒரு சட்னி அரைச்சா போதும்...
laptop ல வேலை செய்யும் புள்ளைக்கு கொடுத்துட்டு..
table fan காத்தில..TV கொஞ்ச நேரம் பார்த்துட்டு...அடுத்த வேலைக்கு ஓடணும்..
அம்மா..உணவகம்..அம்மா..குடிநீர்..எங்களுக்கு என்ன குறை..
தலை நிமிர்ந்த பல குடும்பங்கள்... அம்மாவின்..அதே..
ஆற்றலுடன் முன்னேறும் மக்கள்..
இழந்தோம்....ஒரு சக்தியை....

வெண்ணிற ஆடையில்..
எங்கிருந்தோ வந்த
சந்திரோதயம் நீ..
யார் நீ என்றால்..
தனிபிறவி என்றாய் நீ
அடிமைப் பெண்ணல்ல நீ
சவாலே சமாளி நீ..
மணிமகுடம் சூடிய..
குமரிப் பெண் நீ.
எங்கள் தங்கம் நீ..
ஆதி பராசக்தி நீ
அன்னை வேளாங்கண்ணி நீ.
அன்னமிட்ட கை நீ..
சூரிய காந்தி நீ..
வைர நெஞ்சம் நீ
ஒளிவிளக்கு நீ..
அரச கட்டளையாய்
ஒரு தாய் மக்களென
புதிய பூமியாய்
நம் (தமிழ்) நாட்டை ..
காவல் காத்து..
பொம்மலாட்ட உலகில்..
திக்கு தெரியாத காட்டில்..
சக்தி லீலை புரிந்து..
குடியிருந்தாய் ..
மக்கள் மனமெனும்..
கோவிலிலே..
அன்பைத் தேடி ..
பட்டிக்காடும்..
பட்டணமும் விட்டு..
நதியை தேடும் கடலில்..
கரைந்தே போவாயோ..
கந்தன் கருணயுண்டு..
காவல்காரனில்லை இப்போ..
ரகசிய போலீசாய்...
காப்பாய்..
கண்டிப்பாய்..எம்மை..
Rest in peace Amma..

Monday, December 5, 2016

ரயில் பயணங்கள்

காபி டீ போண்டா கூவல் ஒருபுறம் .
காள்  காள் கத்தும் சத்தம் மறுபுறம்
சிணுங்கும் செல்ஃபோன்  காதோடு ஒருபுறம்
சின்ன குழந்தை செல்லம் மறுபுறம்
சீனியர் சிட்டிசன் சீற்றம் ஒருபுறம்.
சீறிப்பாயும் சிறுபிள்ளத்தனம் மறுபுறம்..
குறட்டை விட்ட் கூட்டம் ஒருபுறம்.
கூவி வித்ததை கொறித்தது மறுபுறம்..
ஊர்க்கதை பேசிய உறவுகள் ஒருபுறம்..
உப்பு பெறாததை ஊதியது மறுபுறம்..
வயதான அம்மா..வாஞ்சை ஒருபுறம்..
வாயத் திறவென மிரட்டல் மறுபுறம்..
ஆபீஸ் வேலையில் ஆழ்ந்தோர் ஒருபுறம்..
அனந்த பத்மனாப சயனம் மறுபுறம்..
விடாது ஒலித்த ஒம் பூர்புவஸ்வ ஒருபுறம்..
விட்டதை பேசியே வீணான காசு மறுபுறம்..
வருமான வரி விவரித்தல் ஒருபுறம்
வரிசையில் நிக்கணுமே கவலை மறுபுறம்
அடைபட்ட இருக்கையில் நெளிந்தது ஒருபுறம்..
கொட்டுதா மழை யங்கே..கேள்வி மறுபுறம்..

சென்ட்ரல் வந்ததும்
சிதறும் இக்கூட்டம்..
சுவாரசியம் என்றும்..இந்த
சிக்கு புக்கு ரயில் பயணம்