Thursday, December 8, 2016

கட்டுரை..கவிதை

பொருள் வாங்கிக் கொடுக்க செலவழிக்கும் நேரம்..
பேசி கழிக்க பெற்றோருக்கு ஏன் இல்லை..
கட்டுரை தலைப்பை கண்டதும்...
கட்டுக்கடங்காத சந்தோஷம் என்று..
கேள்வித்தாளோடு வந்தாளே..
வாதம் எனது முன் வைப்பேன்..
நேரம் கிடைத்தால் நீயும் படி..

தவழ்ந்து நகர துவங்கையிலே
நானும் உன்னை விலகலையே..
நிலா காட்டி சோறு ஊட்டையிலே..
நானும் நிலவை ரசிச்சேனே..
மழலை மொழியில் நீ கொஞ்சையிலே..
நானும் என் மொழி மறந்தேனே..
தங்கப் பாதம்  நடக்கையிலே..
தன் கை கொடுத்து வெச்சேனே..
பள்ளி வாசல் அனுப்பிவிட்டு..
பரிதவிப்போடு காத்து கிடந்தேனே..
பாடம் நீ படிக்கையிலே..
புதிதாய் மீண்டும் படித்தேனே..
வளர்ந்து நீ வருகையிலே..
விலகாது நானும் தொடர்ந்தேனே.
காற்று புகாத இடைவெளியில்..
காத்தே நானும் இருக்கையிலே.
மூச்சு முட்டத் துவங்கியது உனக்கு
முணுமுணுப்பும் அங்கே முளைவிட்டது.
தலை வாரும் நேரம் ..
தலையாட்டியபடி..பாட்டு கேட்பாய்..
பஸ் ஏற்ற போகையிலே..
பள்ளித் தோழியுடன் அரட்டை அடிப்பாய்..
சாப்பாட்டு நேரம் ..வருவேன் பேச
கொட்டாக் கண்ணோடு டீவியில் மூழ்குவாய்..
விடுமுறை நாளில் வெளியே போலாம்னா..
விடேன் கொஞ்சம் தூங்க என்பாய்..

காத்துக் கிடந்து சலிப்புடனே..
முகநூலில் என்ன நடக்குதுனு..
நுழையும் போது வருவாய் நீயும்..
சரி சரி..நீ பேசிக்கோ..உடன்பிறவா
சக தோழி பலரோடு..
உனக்கேது நேரம் எனக்காக..
முறுக்கிக் கொண்டு போவாயே..
கதவும் அடையும்..உன்..
மனம் போல..

No comments: