Thursday, September 27, 2018

ஒரு நாள் ராணி

Thanks Santhi Rajagopalan ..உங்கள் பதிவு..கிளறியது சில பழைய நினைவுகளை)

ஒரு நாள் ராணி..

வத்தல் குழம்பு
வடாம் பொரிச்சது..
வடுமாங்காயோடு..
வெண்ணையாய் ..தயிர்சாதம்..
வாழையிலையில் கட்டி..
வாய் முழுதும் பல்லாக(செட்டாக)
வழியனுப்புவாள் என் பாட்டி..
தாத்தாவை ஊருக்கு..

நாலுமணி பஸ்ஸில் போனாதான்..
நாலு வேலையும்..நடக்குமென்றே..
கட்டு சாத மூட்டையோடு..
கிளம்பிடுவார் என் தாத்தா..

ஆல் இந்தியா ரேடியோவின்..
அலறல் இன்றில்லை..
வந்தே மாதரம் வரும்போது..
வரிசையாய் உருவப்படும்
விரிப்பும் தலையணையும்..
கட்டாந் தரையிலே..
தவக்களை படுக்கையில்லை
தப்பிச்சோம் இன்னிக்குனு..
தாராளத் தூக்கம்..
வீச்சென்று அலறும்..
விவித் பாரதி இன்று..

எட்டு மணி யாச்சு..
எங்கே இரண்டாவது காப்பி..
பத்து மணியாச்சு..
பெருக்கித் தொடக்கலையா..
பூஜைக்கு நாழியாச்சு..
பதினொன்றறை யாச்சு..
பசி உயிர் போறது..
பன்னெண்டு மணியாச்சு..
பாங்க் வேலை முடிக்கணும்
ரெண்டு மணியாச்சு..
ரெடியா..காப்பி..
நாலு மணியாச்சு..
நல்ல சூடா டிபன்..
செல்வராஜ் செய்தி வாசிப்பு..
செவக்காமல் சுட்ட அப்பளம்..
ஒன்பது மணியாச்சு..
ஒரு மோர் சாதம் போதும்..
கடிகாரம் பார்த்து.
காரியம் இன்றில்லை..

வாடகை நூல் நிலயம்..
வாசலில் விழும் புத்தகம்..
வாரி எடுத்து..
வரி விடாமல் படிக்க..
வசதியான நாளிது..
வெளியே போனவர்..
வீட்டுக்கு வரும்வரை..
விலங்குகளில்லா..
விரும்பும் வாழ்க்கை..
வாசலில் காத்திருப்பு..
வர கொஞ்சம் நேரமானால்...

நாள் முழுதும் சுத்திய களைப்பில்
நாய் முகம் காட்ட..
நான் இல்லனா..
நிம்மதியா இருந்திருப்பியே..
பதிலே பேசாமல்..
பறிமாறுவாள் பாட்டி..

பழகிய..வார்த்தைகள்..
புதுசாய் என்ன வலி?...

Sunday, September 23, 2018

புத்தா

syllabus complete செய்த களைப்பில்
self study பண்ணுங்கோனு..
சயனத்தில் இருக்கும்..
சித்தார்த்தனே..

உன் (போதி)மரப் பாடம்..இந்த
மர மண்டைக்குள் போகலையே..
மிகச் சுலபம் என்றாய் நீ..
முழி பிதுங்குகிறதே..
நுனிப்புல் மேயும் எமக்கே..

தேர்வு நேரம் எமக்கு..
என்ன தூக்கம் உனக்கு..
புதுக் கொள்கை..பாடத்திட்டம்..
பிறகு யோசிக்கலாம்..

சோதனை வேளையிது..
சுப்ரபாதம் பாட நேரமில்லை..
சித்தம் என் கலங்குமுன்..
சித்தார்த்தா..எழு நீயே..

Thursday, September 20, 2018

மாமி சுண்டல் 2017

மாமி சுண்டல் -2

பிக் பாஸ் day 2 மாதிரி இன்னிக்கு மாமி சுண்டல் 2 ம் நாள்..
அகம் டீவியெல்லாம் இங்கே இல்ல..அக்கம் பக்கம் எல்லாம் ஒண்ணா ஒரே frame க்குள் இந்த ஒன்பது நாளும்.
சீதாப்பழ பாயசம் ..புடவை நாளைக்கு என்ன கலர்னு எல்லாரும் பேசறத்துக்கு complan தெம்பு தர..
பச்சைக்கு ஒரு சிலர் பச்சை கொடி..மஞ்சள் தான் மங்கலம் ..இன்னொரு க்ரூப்..ரெட்டுக்கு TRP ரொம்ப கம்மி..ஒரு வழியா தலைய பிச்சுண்டு ப்ளூனு முடிவு..கூட்டம் இங்கே கலைந்து...watsapp ல் மீண்டும் கூடியது..
என் கிட்ட இருக்கிற ப்ளூ..கொஞ்சம் பழசு..ear ring என்கிட்ட quillling wala தான் இருக்கு..என்கிட்ட மயில் கழுத்து ப்ளூ தான் இருக்கு..இந்த புடவையில் இப்போதான் வாட்ஸப் profile ..no way..
ஒரே பிரச்சினை..
கடைசியில் முடிவு செய்தபடி..எல்லாரும் அவரவர்களுக்கு பிடித்த கலர் புடவையில் ப்ரகாசமாக ..பிரசன்னம்..
என்ன ஒத்துமை..ஒருத்தர் கூட ப்ளூ கட்டிக்கல..
சஹஸ்ரநாமம் படிக்க ஆரம்பிச்சாச்சு. எப்பவுமே yummy பிரசாதம் கொண்டு வரும் மாமி , டப்பாவோடு உள்ளே நுழைய ..எல்லாரும் அந்த டப்பாக்குள் என்ன இருக்கும்னு ஒரு question mark லுக் விட்டபடி தொடர்ந்தோம்..முடித்தோம்..ஆரத்தி ஆச்சு..
டப்பா திறந்தா..
நூல்கண்டா மெல்லிசா ஃபேணி..அது மேல அப்படியே சக்கரை பொடி தூவி..
இங்கே தான் மாமியின் கை வண்ணம்..
 எப்போதும்போல் அதோட ஒரு ஙேனு ஒரு சக்கரை கம்மி பால் இல்லாமல்..சூப்பரா ரோஸ் மில்க்கோடு.
( உங்க மெனுவை மாத்தி பண்ணி பாருங்கோ லேடீஸ்...மழையா பாராட்டு கொட்டும்..நான் guarantee)
ஒரு பால் ஃபேணி..
ஆஹா..பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்குனு உறிஞ்சு குடித்த வண்ணம்.
மீண்டும் ஆரம்பித்தோம் நேற்று விட்ட இடத்திலிருந்து புடவை கலர் கதை..

நவராத்திரி... நளபாகத்தோடு ...
Happy navarathri

Monday, September 10, 2018

அம்மா நினைவு

10 th September.

கவனிப்பார் யாருமில்லையென
கலங்காத என் வீட்டு செடிகள்.

வறண்ட நாட்களும்
வர்தா புயலும்
வந்தும் தான் போயின.
வாடிப் போனாலும்
வாரி அடித்து சென்றாலும்.
மீண்டு(ம்) எழுந்தது
மருந்தான மணத்தக்காளியும்..
மணம்  தரும் கருவேப்பிலையும்.

அம்மா..இட்ட உரம்..
மரஞ்செடிக்கு மட்டுமல்ல..என்
மனதுக்கும் கூடத்தான்..
miss u maa

வேடிக்கை மனிதர்கள்

வேடிக்கை மனிதர்கள்

வேடிக்கை மனிதரை
வலைவீசி தேடாதே
வீண்சிரமம் ஏனுனக்கு
வேறெங்கும் தேடியேதான்..
நாடித்தான் ஓடாதே
நானிருக்கேன் உன்னுள்ளே
நையாண்டி தான்பேசி
நகைத்தது என்மனமே..!!!


கண்விழித்த வேளை முதல்
கண்ணுறங்கும் வேளை வரை
கண்கட்டி வித்தை காட்டும்
கள்ளமில்லா வேடிக்கை மனம்.

 என்வீட்டு தோட்டத்தில்
ஏராள மலருண்டு
எண்ணமது தோன்றிடுமே
அடுத்தவிட்டு அடுக்குமல்லி
எட்டித்தான் பறித்திடவே !!!!
வேடிக்கை மனமிதுவே..

 
கொத்தவால் சாவடி சென்றே
மொத்தமாய் விலை பேசினாலும்
கொத்தமல்லி கொசுறு தந்த
கடைக்காரன் பேர் சொல்லி
கொடைவள்ளல் பட்டம் சூட்டும்..
வேடிக்கை மனமிதுவே..

  பிள்ளைகளே உலகமென்றே
பிணைந்தே கிடக்குமே-அவர்
சுண்டுவிரல் பிடித்தே
தண்டையுடன் நடந்தவேளை
கண்டதுவே ஓர்சுகமே -அவர்
 சிரிக்கும் வேளை
தெறிக்கும் கண்ணீரும்
சென்றிதயம் சுட்டிடுமே
வேடிக்கை மனமதுவே

 
அடித்தே அடக்க எண்ணும்
அடம் பிடிக்கும் பிள்ளைதனை
லாடம் அடித்த குதிரையாய்
பாடம் படிக்கும் பிள்ளைக்கும்
ஓட்டமே வெற்றிக்கு வித்தென
ஊட்டியே தான் வளர்க்கும்
வேடிக்கை மனமதுவே


 காலதோஷமது கழிந்திடவே
 கோயிலது சென்றிடினும்
கதவோரம் கழற்றிய 
காலணியது காணாமல்
களவாகி விடுமென்ற
கலக்கமுடன் கைக்கூப்பி
 கடவுளை தொழுதிடும்
வேடிக்கை மனமதுவே


நாடிய வளமெலாம்
நலமாய் கிட்டிடவே
கோடிகள் பலசேர
வரமொன்று கோரியே
கேடுதரும் முன்வினைகள்
 தீங்கின்றி நீங்கிடவே
நாடிபிடி ஜோசியரை
 தேடித்தான் ஓடிடுமே
வேடிக்கை மனமதுவே

 இப்பிறவி போதுமென்றே
இறைவனடி நாடிடுமே
இறைஞ்சிடுமே எப்போதும்
இன்னல் இல்லா
இன்னொரு பிறவி
இனியேனும் தாஎன்றே
வேடிக்கை மனமதுவே..


வேடிக்கை வாழ்க்கையிது
தத்துவங்கள் இங்குண்டு
கற்பனைகள் பலவுண்டு
கனவுக்கும் மடலிட்டு
நல்லசேதி ஒன்று
நாளையாவது நல்கு நீ -என்ற
நம்பிக்கை மனமுண்டு.


வயதொரு பொருட்டில்லை
படிப்பொரு தடையில்லை
ஒளிந்து கிடந்திடுமே
ஒவ்வொரு மனிதனுள்ளும்
ஒன்றிபோன இயல்புடனே...
வேடிக்கை மனமிதுவே..

தங்கமணி book release write up

2012. மே மாதம். ஸ்கூலில் இருந்து prize  ம் ,பையுமா ஓடி வந்தாள் என் பெண். இரண்டு certifcate, 2 புக் . புக்கைத் திருப்பி பார்த்தேன். கங்கை ஆற்றைப் பற்றி ஒருவர் பக்தியோடு, தேசப் பற்றோடும் இந்தியில் எழுதிய கவிதைத் தொகுப்பு. free ஆ school க்கு distribute பண்ணச் சொல்லிட்டார் போல இருக்கு. அதனால் 2புக்கும்.ஒரே புக்..அவரே publisher ம் கூட..
திடீர்னு எதோ ஐடியா தோண ,வீட்டுக்காரருக்கு ஃபோன் போட்டு சொன்னேன்.. உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு..இந்த வேலையெல்லாம் அவர் எப்படி செய்வார்..எங்கியாவது போய் வாங்கிக் கட்டிண்டு வராதேனு ஒரே அட்வைஸ்..
ஒரு சுப முகூர்த்த நாளில் அந்த writer cum publisher கிட்ட போனேன் ..என் மாமியார் தங்கமணி சிவபெருமான் மேல் தினமும் எழுதிக் குவித்த கவிதைகளை எடுத்துண்டு.  publishing க்கு வந்திருக்கேன் என்று சொன்னதும் வாயெல்லாம் பல்லானவர், பல்பு வாங்கின மாதிரி ஆனார் நான் நீட்டிய தூய தமிழ் கவிதைகளைப் பார்த்து..yeah kaunsi basha mein hai  ...
நான் ரொம்ப பெருமையா இது தமிழ் என்றேன்..behenji yeah nahi ho payega..sorry. aap Chinnai ( Chennai அப்படி அழுத்திி தான் சொல்வா அங்கே எல்லாம்.. ரொம்ப ஏமாற்றத்தோட வீடு திரும்பின கொஞ்ச நேரத்தில் அவரிடமிருந்து ஒரு SMS. I am ready to take this project.
தமிழ் வாசமே இல்லாத தேவ பூமி தேஹ்ராதூனில் , முதல் முதலாக ஒரு தமிழ்ப் புத்தக அச்சடிப்பு துவக்கம். முதல் கட்ட பிழை திருத்தங்கள் சந்த வசந்த ஐயா இலந்தையும், அனந்த், சிவசிவா அனைவரும் செய்து தர..நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் புத்தக வேலை நடப்பு. தினமும் proof reading. correction. correction க்கு correction.
thangamani அம்மாவிடம் சொன்னதும், தனக்கே உரிய அடக்கத்தோடு ' அதெல்லாம் எதுக்கு செலவு அகிலா.. blog போதும் எனக்கு' ..நீயும் அலையாதே மழையிலெல்லாம்..( அது மழை கொட்டும் காலம் அப்போ)..அந்த வாஞ்சை..அப்பப்பா..இதுக்கே  இவளுக்கு ஏதாவது செஞ்சுடணும்னு ஒரு வைராக்கியம்.
அட்டை கலர் selected. படம் வேணுமே..அந்த publisher நிறைய modern art of Shiva எல்லாம் காண்பிச்சு அதுக்கு தனி ரேட் பேசினார். திடீர்னு ஒரு ஐடியா எனக்கு..' ஐஷு ..நீ தான் drawing பண்ணுவியே..simple ஆ நம்மூர் கோயில் கோபுரம்..ஒரு சிவ லிங்கம் try பன்ணு என்றேன்..அவள் வரைந்த்தது அட்டைப் படமாய் அச்சில். தங்கமணிக்கு ஏக சந்தோஷம்.
book publishing..மிக எளிமையான முறையில் கனாடாவிலிருந்து வந்த எங்கள் தமிழ் ஆசான் அனந்த் மாமா கையால், tupkeshwar shiva temple ,Dehradun  சன்னதியில் ஒரு கொட்டும் மழை நாளில் , மந்திரங்கள் முழங்க , அமைதியாய் நடைப் பெற்றது.
this day that year 2012, an unforgettable day in our life.what was thought impossible was made possible.
'என் பணி அரன் துதி' புத்தகம் வெளியிடப்பட்ட நாள்..எங்கள் வாழ்வில் எதையொ பெரிசா சாதித்த நிறைவைத் தந்த நாள்.
இன்னும் நிறைய பாடல்கள் குவிந்திருக்கிறது . தேவபூமியில் அருள் செய்தவன்..மீதி இருக்கும் அவள் பாடல்களைத் தொகுத்து வெளியிட எங்களுக்கு கூடிய விரைவில் அருள வேணும்.
you rocked thangamani..

அரசு அலுவலக அனுபவம் (மத்யமர்) 09-09-18


#அரசு_அலுவலக_அனுபவம்

மிடுக்காக அந்த பெண் ஆஃபிஸர் உள்ளே தன்
சின்ன..ஒரு பழைய கால மின்விசிறி சுற்றும் கேபினுக்குள் நுழையும்போதே..வழியில் ஃபைலோடும் பெட்டிஷன் லெட்டரோடும் உட்கார்ந்திருப்பவர்களை ஓரக் கண்ணால் பார்த்தபடியே செல்வார்கள்.

வரிசையா வெச்சிருக்கேன் மேடம் எல்லா ஃபைலும் என்று உதவி அதிகாரி சொல்லும் முன்னே..அங்கே பச்சை புடவை கட்டிக்கிட்டு ஒரு அம்மாவும் அவங்க பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற பையனையும் உடனே அனுப்பு என்பார்.
கொஞ்சம் ஏமாற்றறத்துடன் ..(இதே வேலை இந்த அம்மாவுக்கு..நான் தான் எல்லா அடுக்கி வெச்சிருக்கேனே..உதவியின் மை.வாய்ஸ் சொல்ல..' எனக்கு தெரியாதா..யாரைக் கூப்பிடணும்னு' ஆஃபிஸர் எச மைண்ட் வாய்ஸ் பேச..
பென்ஷன் , வந்தது வர வேண்டியது, arrears கணக்கு, அன்ன்னிக்கு காலம்பற வந்த G.O
எல்லாம் விரல் நுனியில் இருக்கும்.
நாம் எல்லாம் government என்னும்  machinery ந் அங்கம். நம் பொறுப்பு உணர்ந்து பணியாற்றணும்நு லெக்சர் கொடுக்கும் ஒருவர்.
வீட்டாள் வெளியாள் வித்தியாசமே கிடையாது.
உங்கள் உழைப்புக்கு இது கண்டிப்பா கிடைக்கணும்னு உறுதி அளித்தபடி அந்த ஆஃபீஸர்.
வேற யாருமில்லைங்க எங்க அம்மா தான்.
 ஒரே ஒரு நாள் ஆபீஸ் போனேன்.
ஒரு சமயம் "அம்பி" இன்னொரு சமயம் ரெமோ..
குடும்பத்தில் இருக்கும் எல்லாருக்கும் , நட்பு வட்டங்களுக்கும், தெரிந்த தெரியாத எல்லாருக்கும் பென்ஷன்னு சொன்னதும் எங்க அம்மா பேர் தான் ஞாபகம் வரும்.
.ஜோசியர் சொன்னாரு..இந்த திசையில் இருக்குற வூட்ல தான் பேப்பர் திருத்தறாங்கனு
மஞ்சப் பையோடு வீட்டு வாசலில் டிபார்ட்மெண்ட் தேர்வுகள் முடிஞ்சவுடன் காத்திருக்கும் ஒரு கும்பல். மஞ்சப் பை காண்பிச்சா மயங்கிடுவேனானு மறுபரிசீலனைக்கே இடமில்ல்லை..போங்க இங்கிருந்துநு அவர்களை அனுப்ப அம்மாவுடன் சேர்ந்து நானும் பாடு பட்டிருக்கேன்.


ரிடையர் ஆகிய போதும் , எல்லா ஆர்டரும் டிப்பில் வைத்து உடனே யார் யாருக்கு என்ன வரும்..அதுக்கு என்ன என்ன செய்யணும்னு ஃபோன் பண்ணி சொல்லிடுவாள்.

எங்க அம்மா எழுதிய கடைசி மெயிலும் கூட கணவனை இழந்த ஒரு சகோதரிக்கு இன்னும் அவர்களுக்கு வர வேண்டிய தொகையை கணக்கு போட்டு ..இந்த இந்த ரெகார்ட்ஸ் எல்லாம் எடுத்துப் போய் செய்து முடி' என்றது தான்.

நேற்றும் கூட எங்களுக்கு தெரிந்த ஒரு நண்பர் சொன்னார்.." அம்மா இருந்திருந்தா..கரெக்டா எங்களுக்கு சொல்லிடுவாங்க'..

பாஸ்போர்ட் வாங்க காசும், ட்ரைவிங் லைசென்ஸ் வாங்க காசும் கொடுத்து அலைந்து கொண்டிருக்கும் என்னைப் பார்த்து அம்மா படத்திலிருந்து சிரிக்கிற மாதிரி இருக்கு.

இந்தப் பதிவு என் அம்மா போன்ற பல அரசு ஊழியர்களுக்கு என் dedication கூட.

இந்த தலைப்பில் என்னை அவள் என்னை விட்டுப் பிரிந்த இந்நாளில் (நாளை)எழுத வைத்த மத்யமருக்கு நன்றி.




Amma 10th September

எங்கே அவள் என்றே மனம்..

ஏம்மா..டல்லா இருக்கே..ஊருக்கு போணுமேன்னா..நான் தான் winter vacation ல வரப் போறேனே..சமாதானம் சொல்ல..அதெல்லாம் இல்ல ..எனக்கு ஒரே ஒரு குறை..கம்ப்யூட்டர் use பண்ணவே தெரியலையே எனக்கு..சின்ன குழந்தைகளுக்கு தெரியறது கூட எனக்குத் தெரியலையே..so இதுதான் உன் mood off க்கு reason aa..ஏதாவது செய்யலாம் இரு.. சொல்லிட்டேனே தவிர..இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ஊருக்கு கிளம்ப..
ஆஃபிஸிலிருந்து வந்த பிராண நாதர் கிட்ட சொன்னேன்..ஜுஜுபி matter ..அந்த பழைய laptop ஒண்ணு இருக்கே ..அதை எடு.. சொல்லிக் கொடுத்துடலாம்.. மூணு மணி நேரம் class. இந்தாங்கோ..இனிமே இது உங்க laptop..enjoy ..என்றார்.

அம்மாவுக்கு ஒரே குஷி. சொன்னதெல்லாம் நோட்ஸ் எடுத்து வெச்சிண்டா.. doubt வரச்சே ஃபோன் பண்ணி கேட்டுக்கறேன்..ஊருக்கு போகறதுக்குள்ளே செம்ம practice.
ஊருக்கு போய் , laptop திறந்து நோட்ஸ் படி எல்லாம் step by step follow பண்ணி..
school student மாதிரி ஆனா..
சாப்பிட்டியா ல ஆரம்பிச்சு..எல்லாம் மெயில் தான்..எல்லாருக்கும் மெயில் மெயில் தான். ஓய்வூதியம் பத்தின எல்லா rules ம் அவள் விரல் நுனியில்.consultancy through mail தான்.
திடீர் திடீர்னு சந்தேகம் வரும் பொது எனக்கு ஃபோனெ வரும்..எதோ cookies..cookies நு வரதே..என்ன பண்ணனும்..அது Dehradun famous இல்லயோ..என்பாள்.its time to clean your PC ..என்ன பண்ணலாம்..அம்மா..விட்டுடு அதல்லாம் என்பேன்.

எல்லா நியூஸ் பேப்பரும் படிச்சுடுவா..முதல்ல பார்க்கிறது bullion rate. local, national, international news எல்லாம் படிச்சுட்டு எனக்கு update பண்ணிடுவா..அதோட ரொம்ப முக்கியம்.. சீரியல் எல்லாம் பாக்க கத்துண்டாச்சு..you tube ல எல்லா ஸ்லோகம் கேட்பது..Skype ல வாயேன்..பார்த்து ஒரு வாரமாச்சு என்பாள்..இப்படி வாழ்க்கையில் ஒரு புது தெம்போடு ஓடிக் கொண்டிருந்த நேரம்..
MND ( motor neuron disease) என்ற எமன்..
வரவேற்பில்லாமலே வீட்டில் நுழைந்தான்..
பேசித் தள்ளிய அம்மா..லேசா குழற ஆரம்பித்தாள். தண்ணீ கூட குடிக்க முடியல இப்பொ எல்லாம். ..கொஞ்ச வேலை பண்ணாலே ரொம்ப weak ஆ இருக்கென்றாள்..பட பட பேச்சு..குடு குடு ஒட்டம்..எல்லாவற்றையும் தூக்கிப் போட்ட கொடுரன் இந்த MND.
மருந்தே இல்லா..குணமே ஆகாத ஒரு அரக்கன்..சொட்டு சொட்டா அம்மா சுரத்தில்லாமல் போனாள். பேச்சு நின்றது.. பேச நினைத்ததெல்லாம் எழுதி எழுதி காண்பிப்பாள். சகோதரிகளுடன் பேசும் சந்தோஷம் நின்று..எல்லாருடனும் இறுதி மூச்சு வரை மெயிலில் தொடர்பு கொண்டாள்..
் அவள் கணினியில் எழுதி அனுப்பிய மடல்கள்..அதில் அவள் அன்பு, வாஞ்சை எல்லாம் கொட்டித் தீர்த்த விதம்..
இன்றோடு மூன்று வருடம் ஆச்சு..அவள் என்னை விட்டுப் போய்..
ஆனால்..இன்னும் எழும் கேள்வி..எந்த உந்துதல் அவளைக் கணினி கற்க வைத்தது? ஏன் இந்த அவள் முதல் முயற்சி ஒரு முடிவுக்கா..
விடை தெரியல..

Amma..10 -09-18

எங்கே அவள் என்றே மனம்..

ஏம்மா..டல்லா இருக்கே..ஊருக்கு போணுமேன்னா..நான் தான் winter vacation ல வரப் போறேனே..சமாதானம் சொல்ல..அதெல்லாம் இல்ல ..எனக்கு ஒரே ஒரு குறை..கம்ப்யூட்டர் use பண்ணவே தெரியலையே எனக்கு..சின்ன குழந்தைகளுக்கு தெரியறது கூட எனக்குத் தெரியலையே..so இதுதான் உன் mood off க்கு reason aa..ஏதாவது செய்யலாம் இரு.. சொல்லிட்டேனே தவிர..இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ஊருக்கு கிளம்ப..
ஆஃபிஸிலிருந்து வந்த பிராண நாதர் கிட்ட சொன்னேன்..ஜுஜுபி matter ..அந்த பழைய laptop ஒண்ணு இருக்கே ..அதை எடு.. சொல்லிக் கொடுத்துடலாம்.. மூணு மணி நேரம் class. இந்தாங்கோ..இனிமே இது உங்க laptop..enjoy ..என்றார்.

அம்மாவுக்கு ஒரே குஷி. சொன்னதெல்லாம் நோட்ஸ் எடுத்து வெச்சிண்டா.. doubt வரச்சே ஃபோன் பண்ணி கேட்டுக்கறேன்..ஊருக்கு போகறதுக்குள்ளே செம்ம practice.
ஊருக்கு போய் , laptop திறந்து நோட்ஸ் படி எல்லாம் step by step follow பண்ணி..
school student மாதிரி ஆனா..
சாப்பிட்டியா ல ஆரம்பிச்சு..எல்லாம் மெயில் தான்..எல்லாருக்கும் மெயில் மெயில் தான். ஓய்வூதியம் பத்தின எல்லா rules ம் அவள் விரல் நுனியில்.consultancy through mail தான்.
திடீர் திடீர்னு சந்தேகம் வரும் பொது எனக்கு ஃபோனெ வரும்..எதோ cookies..cookies நு வரதே..என்ன பண்ணனும்..அது Dehradun famous இல்லயோ..என்பாள்.its time to clean your PC ..என்ன பண்ணலாம்..அம்மா..விட்டுடு அதல்லாம் என்பேன்.

எல்லா நியூஸ் பேப்பரும் படிச்சுடுவா..முதல்ல பார்க்கிறது bullion rate. local, national, international news எல்லாம் படிச்சுட்டு எனக்கு update பண்ணிடுவா..அதோட ரொம்ப முக்கியம்.. சீரியல் எல்லாம் பாக்க கத்துண்டாச்சு..you tube ல எல்லா ஸ்லோகம் கேட்பது..Skype ல வாயேன்..பார்த்து ஒரு வாரமாச்சு என்பாள்..இப்படி வாழ்க்கையில் ஒரு புது தெம்போடு ஓடிக் கொண்டிருந்த நேரம்..
MND ( motor neuron disease) என்ற எமன்..
வரவேற்பில்லாமலே வீட்டில் நுழைந்தான்..
பேசித் தள்ளிய அம்மா..லேசா குழற ஆரம்பித்தாள். தண்ணீ கூட குடிக்க முடியல இப்பொ எல்லாம். ..கொஞ்ச வேலை பண்ணாலே ரொம்ப weak ஆ இருக்கென்றாள்..பட பட பேச்சு..குடு குடு ஒட்டம்..எல்லாவற்றையும் தூக்கிப் போட்ட கொடுரன் இந்த MND.
மருந்தே இல்லா..குணமே ஆகாத ஒரு அரக்கன்..சொட்டு சொட்டா அம்மா சுரத்தில்லாமல் போனாள். பேச்சு நின்றது.. பேச நினைத்ததெல்லாம் எழுதி எழுதி காண்பிப்பாள். சகோதரிகளுடன் பேசும் சந்தோஷம் நின்று..எல்லாருடனும் இறுதி மூச்சு வரை மெயிலில் தொடர்பு கொண்டாள்..
் அவள் கணினியில் எழுதி அனுப்பிய மடல்கள்..அதில் அவள் அன்பு, வாஞ்சை எல்லாம் கொட்டித் தீர்த்த விதம்..
இன்றோடு மூன்று வருடம் ஆச்சு..அவள் என்னை விட்டுப் போய்..
ஆனால்..இன்னும் எழும் கேள்வி..எந்த உந்துதல் அவளைக் கணினி கற்க வைத்தது? ஏன் இந்த அவள் முதல் முயற்சி ஒரு முடிவுக்கா..
விடை தெரியல..

Tuesday, September 4, 2018

தோகை இளம் புறா

உன்னை அடக்கும் முயற்சியில்..
நான் தான் அடைபட்டேன்..
என் சமையலறை..
சிறையானது..

தோகை விரித்து நீ ..
ஜாலம் செய்தாலும்…என்
ஜன்னல் வழி திறவாது..

உன்னைத் தெரியாதா எனக்கு..
இடத்தைக் கொடுத்தால்..
மடத்தைப் பிடிப்பாயே..
மாடப் புறாவே..

Saturday, September 1, 2018

அனுபவம் புதுமை

அனுபவம் புதுமை

ஒரு குட்டி ஷாப்பிங் போகணும்மா..commercial street போலாமா என்றாள் பெண்.
அம்மா தாயே நான் இந்த ஆட்டத்துக்கு வரல..வெள்ளிகிழமை சாயந்திரம் Bangalore ல வெளியே போனா..week end முடிஞ்சு தான் வரமுடியும்..இப்போவே பார்..வாசல்ல எப்படி traffic. வேணும்னா jayanagar போனால் ..நடு ஜாமத்துக்குள்ள வரலாம்
.. 4 கிலோமீட்டர் தூரம் ஒருவழியா ஒரு மணி நேரத்தில் போய் சேர்ந்தாச்சு. வேலை என்னாமொ அரை மணி தான்.
இப்போ ஆட்டோ வேட்டை. ( குருப் பெயர்ச்சி வருமுன்னே குளிர் ஜுரத்தோட படுத்த படுக்கையா workshop ல இருக்கு என் செல்லக்குட்டி..என் Scooty . அதான் இந்த ஆட்டோக்கு அலையல்)
 கை காட்டினதும் வந்தார் ஒரு ஆட்டோகாரர். என் இடத்தை சொன்னேன். வழி நீங்களே சொல்லுங்க என்றார். ( அதானே பார்த்தேன் ஏரியாவுக்கு புதுசு போல..சாமனியத்தில எங்க ஏரியா பக்கம் வந்துட மாட்டாங்களே..அம்பூட்டு பயம் அங்கே இருக்கும் வண்டி நெரிசலுக்கு)
இடது வலதுனு நான் சொல்ல சொல்ல ஓட்டினார். கொஞ்சம் கொஞ்சமா வண்டி மெதுவா ஊர ஆரம்பித்தது. ஒரு லெவெலில் நாலாப் பக்கம் two wheeler,four wheeler,ஒரே ஹாரன் சத்தம்.ஒரு இஞ்ச் கூட நகர வழியில்லை. சிக்னல் எல்லாம் செத்து ரொம்ப நாளாச்சு. traffic constable எல்லாம் tea குடிக்க போய்ட்டாங்களோ என்னமோ. ..
என்ன தோணித்தோ அந்த ஆட்டோக்காரருக்கு.. வண்டி போகாதும்மா..வேற ஆட்டோ ல போங்க ..இங்கேருந்து நகர முடியாது இப்போ ..என்றார். வேற வழி..இறங்கிட்டு 25 ரூபாய் எடுக்க பர்ஸை துழாவினேன். காசு வேண்டாம் போம்மா என்றார். இல்ல வெச்சுக்கோங்க என்று நான் சொல்ல அவர் பிடிவாதமா மறுத்து விட்டார்.
அங்கேரிந்து சொல்ப்ப (ஆஹா..கன்னடம்) தூரம் நடக்க இன்னொரு ஆட்டோ வந்தது. இப்பவும் ஆச்சரியம். எங்க ஏரியா பேர் சொன்னதும் மூஞ்சி சுளிச்சு அங்க traffic ல எவன் மாட்ட்டுவான்னு கடுப்ப்டடிக்காமல் சர்னு கிளம்பினார். ஒரு ஒண்ணேகால் கிலோமீட்டர் வந்தோம் ஊர்ந்து ஊர்ந்து. மீண்டும் action replay ..வண்டி வண்டியாய் வண்டி..இம்மி கூட இடமில்லை நகர. பொறுமையிழந்த அந்த ஆட்டோக்காரர் நீங்க இறங்கி நடங்கம்மா...ஆட்டோ போகாது என்றார். அட ராமா...இது என்ன சோதனனு இறங்கி ரூபாய் எடுக்க..காசு வேண்டாம்..நீங்க  opposite side ல போய் வண்டி எடுங்க என்று அட்வைஸும் கொடுத்தார்.
இறங்கிட்டோமே ஒழிய..நடக்கறது எப்படி? pedestrian பாதையெல்லாம் பைக் பாதையாகி எத்தனையோ காலமாச்சு இங்கே.
இப்போ cross பண்ணி முக்குல நிக்க , இன்னோரு ஆட்டோ பிடித்து மீண்டும் அதே பிஸி ரோடில் ..
ஆட்டோ கொஞ்ச கொஞ்சமா slow ஆச்சு. சீக்காளியான சிக்னல்.ஒரு சைடு செவப்பே எரியறது..இன்னொரு சைடு பச்சை மட்டுமே.. பொறுமை இழந்த் கூட்டம். தாறுமாறா ஓட்ட.. குறுக்கும் நெடுக்குமா வண்டிகள்..இப்போ ஒருத்தர் கூட நகர முடியாதபடி நிலமை.
எங்களைப் பார்த்து பாவமா அந்த ஆட்டோக்காரர்..நீங்க வேற ஆட்டோ பிடிச்சுக்கோங்க மா..நவுறாது இப்போ வண்டி என்றார். காசை நீட்ட வேண்டவே வேண்டாம்னு மறுத்துட்டார்.
இப்போ ஆட்டோ நின்ன இடத்திலேர்ந்து வீடு கிட்டக்க..பொடி நடையா வந்து சேர்ந்தோம். (இதை முன்னாடியே பண்ணியிருக்கலாம்னு நீங்க எல்லாம் முணுமுணுக்கறது என் காதில விழறது.).
செஞ்சோற்றுக் கடன் மாதிரி இப்போ இந்த ஆட்டோ கடனை எப்படி தீர்க்கறதுனு ஒரு பக்கம் யோசனை..
மறுபக்கம்..அதெப்படி ஒரே நாளில் இப்படி ஒரே மாதிரி  மனிதர்களை சந்திக்க நேர்ந்தது.
ஆச்சரியம்