Saturday, September 1, 2018

அனுபவம் புதுமை

அனுபவம் புதுமை

ஒரு குட்டி ஷாப்பிங் போகணும்மா..commercial street போலாமா என்றாள் பெண்.
அம்மா தாயே நான் இந்த ஆட்டத்துக்கு வரல..வெள்ளிகிழமை சாயந்திரம் Bangalore ல வெளியே போனா..week end முடிஞ்சு தான் வரமுடியும்..இப்போவே பார்..வாசல்ல எப்படி traffic. வேணும்னா jayanagar போனால் ..நடு ஜாமத்துக்குள்ள வரலாம்
.. 4 கிலோமீட்டர் தூரம் ஒருவழியா ஒரு மணி நேரத்தில் போய் சேர்ந்தாச்சு. வேலை என்னாமொ அரை மணி தான்.
இப்போ ஆட்டோ வேட்டை. ( குருப் பெயர்ச்சி வருமுன்னே குளிர் ஜுரத்தோட படுத்த படுக்கையா workshop ல இருக்கு என் செல்லக்குட்டி..என் Scooty . அதான் இந்த ஆட்டோக்கு அலையல்)
 கை காட்டினதும் வந்தார் ஒரு ஆட்டோகாரர். என் இடத்தை சொன்னேன். வழி நீங்களே சொல்லுங்க என்றார். ( அதானே பார்த்தேன் ஏரியாவுக்கு புதுசு போல..சாமனியத்தில எங்க ஏரியா பக்கம் வந்துட மாட்டாங்களே..அம்பூட்டு பயம் அங்கே இருக்கும் வண்டி நெரிசலுக்கு)
இடது வலதுனு நான் சொல்ல சொல்ல ஓட்டினார். கொஞ்சம் கொஞ்சமா வண்டி மெதுவா ஊர ஆரம்பித்தது. ஒரு லெவெலில் நாலாப் பக்கம் two wheeler,four wheeler,ஒரே ஹாரன் சத்தம்.ஒரு இஞ்ச் கூட நகர வழியில்லை. சிக்னல் எல்லாம் செத்து ரொம்ப நாளாச்சு. traffic constable எல்லாம் tea குடிக்க போய்ட்டாங்களோ என்னமோ. ..
என்ன தோணித்தோ அந்த ஆட்டோக்காரருக்கு.. வண்டி போகாதும்மா..வேற ஆட்டோ ல போங்க ..இங்கேருந்து நகர முடியாது இப்போ ..என்றார். வேற வழி..இறங்கிட்டு 25 ரூபாய் எடுக்க பர்ஸை துழாவினேன். காசு வேண்டாம் போம்மா என்றார். இல்ல வெச்சுக்கோங்க என்று நான் சொல்ல அவர் பிடிவாதமா மறுத்து விட்டார்.
அங்கேரிந்து சொல்ப்ப (ஆஹா..கன்னடம்) தூரம் நடக்க இன்னொரு ஆட்டோ வந்தது. இப்பவும் ஆச்சரியம். எங்க ஏரியா பேர் சொன்னதும் மூஞ்சி சுளிச்சு அங்க traffic ல எவன் மாட்ட்டுவான்னு கடுப்ப்டடிக்காமல் சர்னு கிளம்பினார். ஒரு ஒண்ணேகால் கிலோமீட்டர் வந்தோம் ஊர்ந்து ஊர்ந்து. மீண்டும் action replay ..வண்டி வண்டியாய் வண்டி..இம்மி கூட இடமில்லை நகர. பொறுமையிழந்த அந்த ஆட்டோக்காரர் நீங்க இறங்கி நடங்கம்மா...ஆட்டோ போகாது என்றார். அட ராமா...இது என்ன சோதனனு இறங்கி ரூபாய் எடுக்க..காசு வேண்டாம்..நீங்க  opposite side ல போய் வண்டி எடுங்க என்று அட்வைஸும் கொடுத்தார்.
இறங்கிட்டோமே ஒழிய..நடக்கறது எப்படி? pedestrian பாதையெல்லாம் பைக் பாதையாகி எத்தனையோ காலமாச்சு இங்கே.
இப்போ cross பண்ணி முக்குல நிக்க , இன்னோரு ஆட்டோ பிடித்து மீண்டும் அதே பிஸி ரோடில் ..
ஆட்டோ கொஞ்ச கொஞ்சமா slow ஆச்சு. சீக்காளியான சிக்னல்.ஒரு சைடு செவப்பே எரியறது..இன்னொரு சைடு பச்சை மட்டுமே.. பொறுமை இழந்த் கூட்டம். தாறுமாறா ஓட்ட.. குறுக்கும் நெடுக்குமா வண்டிகள்..இப்போ ஒருத்தர் கூட நகர முடியாதபடி நிலமை.
எங்களைப் பார்த்து பாவமா அந்த ஆட்டோக்காரர்..நீங்க வேற ஆட்டோ பிடிச்சுக்கோங்க மா..நவுறாது இப்போ வண்டி என்றார். காசை நீட்ட வேண்டவே வேண்டாம்னு மறுத்துட்டார்.
இப்போ ஆட்டோ நின்ன இடத்திலேர்ந்து வீடு கிட்டக்க..பொடி நடையா வந்து சேர்ந்தோம். (இதை முன்னாடியே பண்ணியிருக்கலாம்னு நீங்க எல்லாம் முணுமுணுக்கறது என் காதில விழறது.).
செஞ்சோற்றுக் கடன் மாதிரி இப்போ இந்த ஆட்டோ கடனை எப்படி தீர்க்கறதுனு ஒரு பக்கம் யோசனை..
மறுபக்கம்..அதெப்படி ஒரே நாளில் இப்படி ஒரே மாதிரி  மனிதர்களை சந்திக்க நேர்ந்தது.
ஆச்சரியம்

No comments: