Sunday, January 5, 2020

I quit

#தற்கொலை_வேண்டாமே_கதை

" இங்கேயே வெயிட் பண்ணுமா. நான் ஓடிப் போய் ஸ்கூட்டி கீ எடுத்துண்டு  வரேன்'
சொல்லி விட்டு சிட்டாகப் பறந்தான் கவுதம்.

ரம்யா,அவன் அம்மா.. , அபார்ட்மெண்ட் லானில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் தன் இரண்டாவது மகனுடன் உட்கார்ந்து அவனோடு விளையாட ஆரம்பித்தாள்.

7 வது மாடியில் தன் வீட்டைத் திறந்தவன்..தன் ரூமுக்குள் போய் ஒரு பேப்பரில வேக வேகமாக  எழுதினான்  அந்த ஐந்தே எழுத்து..
#I_QUIT.

என் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் என் அப்பா அம்மா.
இன்னிக்கும் எனக்கு இப்படி ஒரு ரிஸல்ட் வந்தும் கூட ..எதுவுமே நடக்காதது போல .." இப்படி தோல்விகள் சகஜம் கண்ணா..அடுத்த முறை ட்ரை பண்ணு..you will succeed' என்று அம்மா..

ஃபோனில் பேசிய அப்பா "டேய் மக்கு நானெல்லாம் இப்படி பரீட்சையெல்லாம் தைரியமா போய் உட்கார்ந்து எழுதினது கூட இல்லடா..இந்த எக்ஸாமுக்கு செஞ்ச preparation உனக்கு வேற ஒரு இடத்தில் கண்டிப்பா உதவும்.
ஜாலியா ஃப்ரண்ட்ஸோட போய் ஒரு நல்ல சினிமா பாரு..ரிலாக்ஸ்' சாயந்தரம் பார்ப்போம்டா ' அப்பா..

ஆனாலும் மனசு ஆறவில்லை..so ..இந்த முடிவு.

அம்மா என்னை ஏன் ஒரு வார்த்தை கூட திட்டலை?
அப்பா..ஒரு அடியாவது கொடுத்திருக்கலாம்.
அவங்க நம்பிக்கையை இப்படி உடைச்சிட்டேனே என்ற குற்ற உணர்வு ..அந்த குற்ற உணர்வுதான் அவனை இந்த முடிவுக்கு கூட்டிச் சென்றது.
டைனிங் டேபிளில் ஒரு டம்ளரை வெய்ட்டாக வைத்து கதவை சார்த்தி விட்டு..காத்திருந்த லிஃப்டை விட்டுவேக வேகமாக படிகள் ஏறத் துவங்கினான்.

11 வது மாடியில் அவனைப் பார்த்த அவன் ஃப்ரண்ட் விஷால்..' டேய் எங்கடா போற..ஓடாதடா .நானும் வரேன்' துரத்தினான்.

16 வது மாடி..மொட்டை மாடி..
அங்குமிங்கும் ஓடினான் கவுதம். வாகாக எந்த இடம் இருக்குனு ஒரு தேடல்.

"என்னடா ஆச்சு' மூச்சிறைக்க வந்த விஷால்..

கெளதமின் கண்களைப் பார்த்தான்.

 அதில் இருந்த ஒரு வெறி, ஒரு துக்கம்..

" வாடா கீழே போகலாம்' அவன் இழுக்க  "விடுறா என்னை' திமிறிக் கொண்டு குதிக்க நினைத்தவனை " " அங்க பாருடா" என்ற விஷாலின் குரல் அவன் காட்டிய  திசையை நோக்க வைத்தது.

அம்மா..அங்கே தம்பியுடன்.
எப்போதும் அடம் செய்து அண்ணனை உட்காரவே விட மாட்டேன் என்று படுத்துபவனை.
.' இந்த சைட் அண்ணா சைட்..இது உன்னோட சைட்' தன் மடியினை பாகப் பிரிவினை செய்யும் அம்மா..இத்தனை தூரத்திலிருந்தும் அம்மாவின் அன்பு முகம் கவுதமுக்கு புரிந்தது.

"இந்த அம்மாவை ஏமாத்திட்டு நீ குதிக்கப்போறியா டா நீ...?"

விஷால் கேட்டுக் கொண்டே இருக்க..மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல கீழே இறங்கினான்.

ரூமுக்குள் சென்றான். எழுதிய வாசகம் தூள் தூளானது.

கீழே ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டான்.

என்னாச்சு இன்னிக்கு ..are you OK ?
எதுவுமே புரியாத ரம்யா.."கீ எங்கடா?

எப்போதும் எதிர்த்துப் பேசும் அவன் , "sorry ma" என்று மீண்டும் வீட்டை நோக்கி ஓட்டம் பிடிக்க..

டேய் உன் வீடு 7 th floor.
கிண்டலாகச் சொன்ன விஷாலை நன்றியுடன் பார்த்த்தான் கவுதம

பரவாயில்லைனு சொல்லி அப்பாவும் அம்மாவும் ..அவன் குற்ற உணர்வை இன்னும் அதிகமாக்கியதற்கு பதிலாக..அவனோடு உட்கார்ந்து பேசி . அவன் ப்ளஸ்ஸும் மைனஸும் பக்குவமாக எடுத்து சொல்லி ..அவனை ஊக்குவிப்பதும் பெற்றோர் கடமை..
இந்த மாதிரி சமயத்தில்..இந்த கால கட்டத்தில்..பசங்களுடன் கூடவே இருக்கணும்.
விஷால்  எனும் நண்பன் ரோலை  அம்மா அப்பாவும் எடுத்துக் கொண்டால்..?
எல்லா குழந்தைகளின் வாழ்வும் வளம்.தானே?

தற்கொலை என்பது தீர்வல்ல..
இன்று கவுதமுக்கு ஒரு விஷால் கிடைத்தான்.
என்றும் அப்படி கிடைக்குமா?
நம் நம்பிக்கை..போராடி ஜெயிப்பதில் இருக்க வேண்டுமே தவிர ..மாய்வதில்.அல்ல..

thank you Bala Hari for your  inspiring posts

No comments: