Tuesday, March 30, 2021

Idli day

 ஒரு நாளும் உனை மறவாத பிரியாத வரம் வேண்டும்.


ஆவியில் வெந்த இட்லி..நம்

ஆவியில் கலந்த இட்லி.


அரிசியும் உளுந்தும் ..

அளவாய் அள்ளிப்போட..

அரட்டை கச்சேரியோடு

ஆட்டுிக்கல்லில் அரைத்தெடுக்க..

ஆஹா..பேஷ்.பேஷ்..

அந்தக் கால இட்லி..


வெள்ளைத் துணியில் இட்டு

 வாகாய் வேக வைத்து..

வகையாய் சட்னி சாம்பாருடன்

விள்ளல் காட்டுமே விண்ணுலகம்


நாடு விட்டு போனாலும்

நா தேடும் ருசி..நினைத்தாலே..

நா ஊறும் ருசி..

நம்ம ஊரு இட்டிலி..


பட்டன் இட்லியது

பட்டர் போல கரையுமே..

ரவா இட்லியுமே..

அவாவும் தூண்டுமே..

மல்லிப்பூ இட்லிக்கு

மவுசு ரொம்ப அதிகம்.

குஷ்பூ இட்டிலிக்கோ..

கூட்டமிங்கு கூடுமே..


மிக்ஸி இட்டிலி

முழுங்கியும் வைக்க

க்ரண்டரும் வந்ததே

கவலை தீர்க்க..

ஆட்டும் எண்ணம்

அடியோடு தொலைய

பாக்கெட்டில் வந்தது..படும்

பாட்டை குறைத்திடவே


நோகாமல் கிடைத்தாலும்

நொந்து போக வைக்குமே..


அரைத்து வைத்த மாவுதான்

ஆபத்பாந்தவன் எப்போதும்..


இட்லிக்கு இணையொன்று

இங்குண்டோ சொல்வீரே..


மிளகாய்ப் பொடி இட்லிக்கு

மிஞ்சியதுண்டோ. ஓர் விருந்து?


#happy_idli_day

Monday, March 29, 2021

வந்துட்டாரையா_வந்துட்டாரு

 #வந்துட்டாரையா_வந்துட்டாரு..


சுப்ரபாதம் சொல்லாமலே..

சுறுசுறுப்பா வந்துட்டாரு..

சுட்டெரிக்கப் போறேன்னு

சூளுரைச்சு வந்துட்டாரு..


சத்தமிடும் குளிர்ப்பெட்டி

சன்னமாக்குது குயிலோசையுமே

சட்டுனு எழுந்திடவே

சுருங்குது மனமிங்கே..


ஓவர்டைம் செய்ய..

ஓடோடி வந்தவரே..

ஓடி வரும் மேகத்துக்கு

ஓரமாய் ஓர்  இடம் கொடப்பா..


ஈரம் காணா நிலமிங்கு.

ஈனஸ்வரத்தில் தவிக்கிறதே

வர மொன்று தாருமையா..

வான் மழையும் பொழிந்திடவே..


மின்னலும்் விளக்கேந்த்

இடியும் மத்தளம் முழங்க

கொட்டும் மழை சத்தம் கேட்டு

நாட்கள் ஆச்சு எத்தனையோ


கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்..

கூடட்டும் மேகங்கள்

கொட்டட்டும் மழை..

கொண்டாட்டம் துவங்கட்டும்..


#மழை_வேண்டி_பிரார்த்திப்போம்

Sunday, March 28, 2021

தங்கமணி

 Thangamani Srinivasan..three years gone without you. But no day passes without thinking of you .

 its not just a post to write about a mother in law. Just trying to learn the life of love and purely unconditional affection you poured on each and every member of the family and to anyone you came across.


தங்கமணி..எங்கே நீ..


2008..ஒரு மத்தியான நேரம். ஃபோன் பெல்லடிக்க..மறுமுனையில் தங்கமணி..(என் மாமியார்)..

என்ன பண்றே அகிலா..

ஒண்ணும் இல்லமா..இப்போதான் ஐஷுவோட ஒரு fight ..ஒரே மூட் அவுட்.

நீங்க சொல்லுங்கோம்மா..என்ன விஷயம்..

நான் சொல்றத கொஞ்சம் செய்வியா..எப்போதும் போல ஒரு அன்பு வழியும் தொனியில்..ம்ம்ம்ம்..என்னது ம்மா..

ஒரு கவிதை எழுதேன்.தலைப்பு .'தலைமுறை இடைவெளி'..

ஐயோ சாமி..அம்மா..are you OK? யாரைப் பார்த்து என்ன கேட்கிறேள்..no no no..ஷாருக் ஸ்டைலில் நான் அலற..நாளைக்கு அனுப்பு எனக்கு .bye ..என்றாள்.

இப்படியாக என் முதல் கவிதை அரங்கேறியது ..எனக்குத் தெரியும் உன்னால் முடியும்னு என்று mail அனுப்பினாள்..

அதற்கு பிறகு சந்த வசந்தத்தில் எல்லா கவியரங்கியிலும் என்னை சேர்த்து விடுவாள்..தங்கமணி மருமகளே..கொஞ்சம் இலக்கணம் கத்துக்கோயேன் உன் அம்மாவிடம்..செவிடன் காதில் ஊதிய சங்கு தான்...

நீ எழுது உன் பாணியில் என்பாள்.


கமகமனு சமையல்..

கைவந்த கலை..

கவிதை எழுதி..

கடவுளைக் கண்டாள்.

கணினி அவளுக்கு

கைப் பொம்மை

காமெரா கண்டாலே

காண்பதை படம்பிடிப்பாள்

குழந்தைகள் கண்டால்

குறையும் வயது

கடுகடு முகமே

கண்டதே இல்லை..

கடகடனு சொல்வாள்

கேட்டதும் ராகங்களை

குளுகுளு பானங்கள்

கொழுப்பாய் குடிப்பாள்

கொல்கொல் இருமலில்

கழிப்பாள் இரவுகளை..

ஆட்டோ பாட்டி பேரிலிவள்

ஆடாது அசையாதாள்

ஆட்டும் துன்பத்திலும்..

அன்பு தான் வெல்லும்

ஆணித்தரமாய் சொன்னாளே

அனைவரின் பிரியம்

அன்பின் உயரம்..

ஆண்டாள் அன்பினால்..

அடைந்தாள் அவனடி..

அரைமூச்சிலும்

அரை மயக்கதிலும்

அருகே வா என்றாள்..

அம்மாவை அழைத்துவா.

அருமையா பார்த்துக்கோ

அவளுக்கும் நீ வேணுமென்றாள்.

மனமொன்று வேண்டும்..தங்க

மணி போல் என்றும்.

மாய்ந்து பேசுகிறார்..நீ

மறைந்த பின்னும்..


தங்கமணி..

எங்கே நீ..

தங்கமணி

 சத்தம் போடாத..

சாதனை யாளர்கள்.

சரித்திரத்தில்...... பலர் 

எம் குடும்ப ….. சரித்திர நாயகி..

எங்கள் தங்கமணி நீதானே…


”வயசாச்சு எனக்கு..

வேறெதுவும் முடியாதுனு..”

வெறுமை வாழ்க்கை.. உனக்கில்லை 

Versatile blogger award….

விருதுக்கு சொந்தக்காரி நீ


திருக்கயிலை நாதன் முதல்..

..திருவொற்றி யுறைக்கோன் வரையில்

திரும்பிய திசையெலாம்..

திருக்கோலம் கொண்டவனை..

தேடிப் போய்ப் பார்த்ததில்லை..

தேன் சொட்டும் பாவின் வழி

”என் பணி அரன்  துதியென்று”..

என்னாளும் துதித்த நீ..

எம்மை விட்டுச் சென்ற நாள்..


இன்னாள்..28-03-2014

வருத்தங்கள்….. …

தேடுது.. வார்த்தைகளை..

Miss you thangamani..


தோற்றம்  : 05-10-1939        மறைவு  : 28-03-2014

thangamani blog: http://kavidhaithuligal.blogspot.in/

Monday, March 22, 2021

தண்ணீர்..தண்ணீர்.

 தண்ணீர்..தண்ணீர்.


ஒரு கப் சக்கரையும் காப்பி பொடியும் கடன் வாங்கும் காலம் போய் ஒரு கப் தண்ணீ இருக்கா..அடுத்த மாசம் திருப்பித் தரேனே மாமி எனலாம்..


அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா..அவள் ஆத்துக்காரர் அரை லிட்டர் தண்ணீ வாங்கிண்டு வந்ததை கேட்டேளா..பட்டு மாமி பொறாமையில் மூக்கை சிந்தலாம்..


அப்பா..அப்பா..ஏன் எனக்கு தண்ணிகாசலம் னு பேர் வெச்ச..என் friends எல்லாம் கேலி பண்றாப்பா..என்று அடம்பிடிக்கும் மகனிடம்..அது மூதாதையர் பேருடானு சொல்லலாம்..


Demonetization சமயத்தில் ஒரே ஒரு 500 ரூபாயும் ,ஆயிரம் ரூபாயும் தனியா எடுத்து உண்டியல் அடியில் போட்டு  வெச்சு காண்பிச்சோமே..இந்த தண்ணீரை இவங்களுக்கு எப்படி இருக்கும்னு காட்ட எடுத்து வெச்சிருக்கலாமோனு வருந்தலாம்.


'கண்ணீர் சுத்திகரிப்பு' நிலையங்கள் பல உருவாகலாம்..அதிகம் அழுவோர்க்கு மானியம் தரப்படலாம்.


திரவப்பொருளில் தண்ணீர் என்றதும் திருதிருனு முழிக்கலாம்..


நிலத்தடி நீர் தேடப்போனவர்கள் ..நிலத்தடி அபார்ட்மெண்ட்டுகள் கட்டலாம்..

அங்கேயே IT companies ஆரம்பிச்சு..பல மூர்த்திகள் முன்னுக்கு வரலாம்.


Education loan,home loan எல்லாம் போய் water loan வாங்கி அதுக்கு emi கட்டலாம்.


கோடை விடுமுறைக்கு தண்ணீர் கிடைக்கும் mars க்கு சுற்றுலாப் பயணம் போகலாம்..


ஐயோ ..

நினைக்கவே நடுங்குதே..

நீயில்லாமல் நானா

நீரில்லாமல் வாழ்வா..?


நிறமில்லா நீர்..

நதியாய்..ஆறாய்

நானிலம் காக்க

சுயநல வாழ்வில்

கயவராய் மாறினோம்

தண்ணீர் தானே...

தாராளமாய்..

தண்ணீராய் செலவு..


விளைவோ..


ஒரு குடம் நீருக்கு

ஒரு மணி காத்திருப்பு


தவிக்கும் வாய்க்கு

தண்ணீர் தரவே

தயக்கமும்  ஆச்சு.


சேமித்த காசு..நீர்

சேந்தித் தரல..

சிந்திய துளிகளும்

சேர்க்க முடியல..


கங்கையும் யமுனையும்

காவிரியும் நர்மதையும்

கைக் கோர்க்கட்டும்..

கண்ணீர் துடைக்கட்டும்


நதியெல்லாம் இணையட்டும்..

நலமெல்லாம் பெருகட்டும்..

நாளை வரும் சந்ததிக்கு

நம்மால் முடிந்த உதவி..

நல்லக் குடிநீரும்

நோயில்லா வாழ்வுந்தானே..

Saturday, March 20, 2021

Happy

 happy இன்று முதல் happy


இந்த உலகத்திலே பெரிய பணக்காரன் யாரு?.கொஞ்சம் லிஸ்ட் போடுங்க..


கார் வெச்சிருப்பவரா..

கரன்ஸி கட்டு கட்டா வெச்சிருப்பவரா..

வீடு பெரிசா வெச்சுருப்பவரா..

நல்ல வேலையில் இருப்பவரா..

வெற்றி வாகை சூடுபவரா?

பெரிய பதவியில் இருப்பவரா..

பெரும் புகழோடு இருப்பவரா..


இத்தனையும் இருந்தாலும் இல்லாட்டியும் ...சந்தோஷமா happy ஆ யாரால் இருக்க முடிகிறதோ அவர்தானே உண்மையான பணக்காரர். சரிதானே?


கால் கிலோ கத்திரிக்காய் கொடுனு என்கிறமாதிரி எந்த சூப்பர் மார்க்கெட்லயாவது விற்கிறதா இந்த சந்தோஷம்?


எங்கே தேடுவேன்..சந்தோஷம் உனை

எங்கே தேடுவேன்னு எல்லாரும் கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்க்கு அலையறோமா இல்லையா..

கவிதை என்னும் பேரில் நான் உளற ஆரம்பிச்ச புதுசு.

இப்படி ஒரு மொக்கை எழுதி வெச்சேன்.

'இறைவா

வேண்டும் இன்னொரு பிறவி..

போராட அல்ல..

வாழ்வதற்கு..'

இன்னிக்கு அதைப் படிக்கும்போது..என் மேலே வெறுப்பா வரும்.

போராடி ஜெயிக்கும் சந்தோஷம் போல உலகத்தில் வேற ஏதாவது சந்தோஷம் உண்டா..


பூக்கள் மகிழ்ச்சி..

பூலோகம் மகிழ்ச்சி

இயற்கை மகிழ்ச்சி

இல்லம் மகிழ்ச்சி.

இதெல்லாம் எப்போ மகிழ்ச்சியா தெரியுமென்றால்..நம் உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும் போது தான்.

மகிழ்ச்சியா இருக்கணும்நு சொல்லித் தர பல பேர் இப்போ கிளம்பி இருக்காங்க.


நிஜமாகவே தேடிக் கிடைக்கும் பொருளா..சந்தோஷம் என்பது.

நம்முள் எப்போதும் இருந்து கொண்டு வெளியில் வரத்் துடிக்கிறது..

டேய் சும்மா அடங்கு...இதுக்கெல்லாம் சந்தோசப்பட்டா என்ன ஆவுறதுனு அதை தட்டி உள்ளே உட்கார வெச்சிட்டு..அடுத்தது எது நமக்கு சந்தோஷம் தரும்னு தேடி அலையறோம்.

நல்ல சூப்பரா டிரஸ் பண்ணிட்டு சந்தோஷமா வெளியே கிளம்புவோம்..எதிர் வூட்டுக்காரம்மா ஒரு சோகக் குரலில் 'என்ன இன்னிக்கு கொஞ்சம் டல்லா இருக்கீகநு ' கேட்டதுமே..அத்தனை சந்தோஷமும் ஓட்டை விழுந்த பலூனாய் புஸ்ஸுனு இறங்ககிடும்.


நம்மைச் சுற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் கோடானு கோடி negative energy சுற்றியபடி இருக்கு.

நாம் ஒரு நிமிஷம் தள்ளாடும் போது..டபால்னு வந்து நம் மேல உட்கார்ந்துக்கும். அப்பறம் சந்தோஷமா..அப்படின்னா என்னனு கேட்டு..டன் டன் ஆ சோகமோ..சோகம் தான்.

சந்தோஷம் என்பது ஒரு சின்ன விதை..

அதை நம் மனசிலும் , நம் சுற்றியுள்ளவர் மனசிலும் விதைக்கணும்.

நான் சந்தோஷமா இருக்கணும்னா அடுத்தவன் சாகணும் என்பது சந்தோஷமல்ல..


நாம் இருக்கும் இடத்தை, வீட்டை முதலில் சந்தோஷம் என்னும் சிமெண்ட் போட்டு strong ஆக்கணும்.


அதுக்காக இளிச்ச வாயனா இருக்க சொல்லலை..

நாம்.. எப்போ..எங்கே இருந்தாலும் அங்கே சந்தோஷ, மகிழ்ச்சி அலைகள் கரை புரண்டோடணும் ஒரு பிரதிக்ஞை எடுத்துக்கணும். ஐயொ..வந்துட்டாடா..ஒப்பாரி வைக்கணு யாரும் சொல்லக்கூடாது.


எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை..

நான் சந்தோஷமா இருக்கிறேன்..இருப்பேன் என்பதை நாம் தான் நிர்ணயிக்கிறோம். live this moment happily.

இன்னிக்கு international day of happiness ஆமே..

வாங்க ..

let's be happy i say and spread the fragrance of happiness everywhere.


happy இன்று முதல் happy தான்.


சரிதானே..friends.

 Thanks  Chandrashekar Ramaswamy sir.

Your status today is the seed to this post

Friday, March 19, 2021

ஒத்திகை

 நெருடும் நிஜம்


கொளுத்தறது வெய்யில்

குளுகுளு பிரதேசத்துக்கு

குடும்பத்தோட போறேன்..

கொஞ்ச நாள் தப்பிக்க..


நீயெங்கே வரமுடியும்

நீட்டிப் படுத்துடுவியே..

நானும் இவளும் 

நண்டும் சிண்டோட

நாளைக்கு கிளம்பணும்..

நீ வேணா..

நாலு மனுஷாளோட

நாளைக் கழிக்கிறயா..

நல்ல பொழுதும் போகும்

நான் வரும் வரைக்கும்..


நனைத்த நார்ப்புடவை

படுக்கையாய் விரித்தபடி

புன்னகைப் பார்வையுடன்

 போய்ட்டு வா நீ 

 பார்த்துக்கறேன் நானென்றாள்


ஒத்திகை அத்தனையும்

ஒரு தூசானது..அவள்..

ஒற்றை வார்த்தையில்..

அம்மானா..

சும்மாவா..

Monday

 ஐயோ ..சனி ஞாயிறு எப்படிப் போச்சுனே தெரியல..எல்லாரும் புலம்புவது இது. திங்கள் கிழமை..ஆரம்பிக்கும் ஓட்டம்.

சும்மா ஒரு ஜாலி போஸ்ட்.

நீங்களும் உங்க வரிகளை எடுத்து விடுங்க..


weekend..ஆ....WEAKend..ஆ...

 வருவதும் தெரியாது

போறது தெரியாது..

வரிசையாய் செய்யணும்

விட்டுப் போன வேலையெல்லாம்.


மாவரைக்கணும்..துணி

மடிச்சு வெக்கணும்..

மளிகை வாங்கணும்..

'மாலு'க்கு போகணும்.


படிக்க வெக்கணும்

ப்ராஜக்ட் பண்ணனும்

 PTA போகணும்

progress reportம் வாங்கணும்.


பிடிச்சதை சமைக்கணும்

பில்லும் கட்டணும்.

பார்லரும் போகணும்.

ஃப்ளாட்டின் வம்பும் கேட்கணும்


குட்டித் தூக்கம் போடணும்

குழந்தைகளோட..

கொஞ்சி விளையாடணும்

கோயிலுக்கு போகணும்.


ஹோட்டலுக்கு போகணும்

ஹாய்யா இருக்கணும்..


இதுக்கு நடுவுல

ஈமெயிலும் பார்க்கணும்.

இன்ஸ்டண்ட் பதிலடிக்கணும்

இடித்தே உரைத்தாலும்

இடிச்ச புளியாட்டம் இருக்கணும்


அன்னபூரணி ..என்

கணினினு சொல்லணும்.


சனியும் ஞாயிறு

சட்டுனு ஓடிடும்.


 திங்களும் வந்திடும்

 சீக்கிரம் முழிக்கணும்.

சுறுசுறுப் பாகணும்.

சந்தோஷமா வரவேற்கணும்


அடுத்த weekend 

அஞ்சு நாளில் வந்திடும்

அதுவரை கொஞ்சம்..

ஆபீஸும்..வீடும்

அழகாய்ப் பார்த்துக்கணும்..


 திங்கள் கிழமை வந்தால்..

சொங்கி போல இல்லாமல்

தங்கம் போல ஜொலிக்கணும்..

ஆமாம்..

தங்கம் போல ஜொலிக்கணும்..


happy Monday to friday.

Tuesday, March 16, 2021

அனுபவம்

 இன்னிக்கு என் அனுபவம்..


என் மகளின் board exam ..the paper was good..

நான் என் சித்தப்பாவுக்கு அனுப்பிய watsapp msg .

நன்னா..(nanna) என்பதை type அடிச்சதா நினைத்து manna  என்று போக..ஐயோ என்ன 'மண்ணா 'போச்சா..என அலறி ஒரு ஃபோன்..


நாம் ஒன்று நினைக்க..அது ஒண்ணு அடிக்க..


Send button தட்டுமுன்...spelling சரி பாரு..

Sunday, March 14, 2021

காரடையான் நோன்பு

 #urvasi urvasi take it easy policy..


உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் வைத்தேன்..

(ஊரில் இருக்கும் கணவன்)  ஒருநாளும் பிரியாத வரம் தருவாய் என்று..

உருகி வேண்டும் உமைகள் ..


சைட்டில் (site)இருக்கும் சத்தியவானுடன்

Skype இல் சரடு கட்டிண்டு

கணினி முன் காலில் விழுந்து

காலம் மாறினால் நம் காதல் மாறுமா பாட்டு BGM உடன்..

காரடையான் நோன்பு..


வெல்ல அடை..

வெண்ணையோடு வழிச்சு ..

உப்பு அடை..

ஊ ஊனு ஊதி சூடா..

அப்படியேச் சாப்பிடணும்..

'ஆ'னு அவர் வாய் பார்க்க..


அடடடா..நாழி ஆகிடுத்து..

மெஸ் மூடிடப்போறான்..

காஞ்ச ரொட்டியும்..

கருப்பு தாலும்கூட

கிடைக்காம போய்டப்போறது..

போங்கோ..கிளம்புங்கோ..

நானும் போகணும்..

நாலு வீட்டுக்கு 

நம்மாத்து ப்ரசாதம்னா

நண்பிகளுக்கு உசுருனு..


Take it easy urvashi


மீள் தானுங்கோ..

Saturday, March 6, 2021

ராதே..என் ராதே

 ராதே..என் ராதே


இறக்கடி உன் கோபத்தை

இறகாக்கடி உன் மனத்தை..


போகும் பொழுதும் தெரியலையே..

பேதையுன் மொழிப் போதையிலே..

போதுமென்ற மனமும் இல்லையே..

போகா விடில் விழும் பழியே..


காத்திருப்பர் கோபியர் அங்கே

கண்கட்டி விளையாட்டும் ஆட

கொஞ்ச நேரம் போகவேணும்

கோபமேனோ சகியே உயிரே...


காதலன் மட்டுமல்லடி உன்கண்ணன்

காவலனாய் என்றும் காக்கும்

கடமை ஒன்றும் உள்ளதே

களங்கம் வரலாமோடி  

கண்ணன் உன் மன்னனுக்கு..


கனல் பார்வை நீ விட்டு

கனிவோடு வழி அனுப்பு

காத்திருப்பும் சுகமென

கண்டறி நீ கண்மணியே..


Thanks Padma Gopal for the pic.

Just tried to write something..but you rock

Wednesday, March 3, 2021

கோவில் மணியோசை

 கோவில் மணியோசை


பிரகாரத்தை சுற்றி முடித்து

பகவானே நான் சொன்னதெல்லாம்

நினைவில் வை..

பாவி எனக்கு உன்னை விட்டா யாரென்று

பக்திப் பரவசத்தில் இன்னோரு மீள் வேண்டல் தொடங்க

படியைத் தொட்டு கும்பிட்டபடி

பவ்வியமாய் நுழைந்த ஒருவர்

பிடித்து அடித்த கோவில் மணி


'பரமன் என் அருட்பார்வை 

பேதையே உனக்குமுண்டு

பதறாமல் போய் வா'வென

பாசமுடன் சொன்னதோ..


கோவில் மணியோசை..

இன்னும் ஒலிக்கிறது..

Monday, March 1, 2021

பரீட்சை

 '#ஏதாவது_எழுதலாமே' நம்ம மார்க்கு எப்பவுமே உசுப்பி விடுவார்.


' எதையாவது எழுதிட்டு வராதே..ஒழுங்கா கேள்வியைப் படிச்சுட்டு அப்பறம் எழுது என்று டென்ஷனோட இருப்பார் அம்மாவும் அப்பாவும்.


பரீட்சை ஜுரம்..ரம்பம் பம் பம் ..ஆரம்பம்..

இன்றிலிருந்து பல வீடுகளில்..


"மார்க்கு' நமக்கு  'பந்து' இல்லைனு கொஞ்ச நாள் டூ விட்டால் தான் 

மார்க் வரும்..

மார்க்கமும் கிடைக்கும்.


பொதுத் தேர்வு எழுதும் எல்லா வீட்டு செல்லங்களுக்கும் என்னோட அன்பான wishes. 


படிச்சதுதான் வரணும்னு வேண்டிக்காதீங்க..


எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் தரக்கூடிய wisdom and intelligence கொடு கடவுளே என்று வேண்டிக்கோங்க.


சிலபஸே இல்லாத வாழ்க்கைப் பாடத்தில் எத்தனை கேள்விகளுக்கு பதில் தருகிறோம்.


அப்படி இருக்கும்போது..சிலபஸ் உள்ள ஸ்கூல் பாடத்திலிருந்து வரும் கேள்விகள் பெரியதா  என்ன?


Confident ஆ போங்க ..over confidence இல்லாமல்..


All the very best to students of 10th and 12th