Saturday, March 20, 2021

Happy

 happy இன்று முதல் happy


இந்த உலகத்திலே பெரிய பணக்காரன் யாரு?.கொஞ்சம் லிஸ்ட் போடுங்க..


கார் வெச்சிருப்பவரா..

கரன்ஸி கட்டு கட்டா வெச்சிருப்பவரா..

வீடு பெரிசா வெச்சுருப்பவரா..

நல்ல வேலையில் இருப்பவரா..

வெற்றி வாகை சூடுபவரா?

பெரிய பதவியில் இருப்பவரா..

பெரும் புகழோடு இருப்பவரா..


இத்தனையும் இருந்தாலும் இல்லாட்டியும் ...சந்தோஷமா happy ஆ யாரால் இருக்க முடிகிறதோ அவர்தானே உண்மையான பணக்காரர். சரிதானே?


கால் கிலோ கத்திரிக்காய் கொடுனு என்கிறமாதிரி எந்த சூப்பர் மார்க்கெட்லயாவது விற்கிறதா இந்த சந்தோஷம்?


எங்கே தேடுவேன்..சந்தோஷம் உனை

எங்கே தேடுவேன்னு எல்லாரும் கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்க்கு அலையறோமா இல்லையா..

கவிதை என்னும் பேரில் நான் உளற ஆரம்பிச்ச புதுசு.

இப்படி ஒரு மொக்கை எழுதி வெச்சேன்.

'இறைவா

வேண்டும் இன்னொரு பிறவி..

போராட அல்ல..

வாழ்வதற்கு..'

இன்னிக்கு அதைப் படிக்கும்போது..என் மேலே வெறுப்பா வரும்.

போராடி ஜெயிக்கும் சந்தோஷம் போல உலகத்தில் வேற ஏதாவது சந்தோஷம் உண்டா..


பூக்கள் மகிழ்ச்சி..

பூலோகம் மகிழ்ச்சி

இயற்கை மகிழ்ச்சி

இல்லம் மகிழ்ச்சி.

இதெல்லாம் எப்போ மகிழ்ச்சியா தெரியுமென்றால்..நம் உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும் போது தான்.

மகிழ்ச்சியா இருக்கணும்நு சொல்லித் தர பல பேர் இப்போ கிளம்பி இருக்காங்க.


நிஜமாகவே தேடிக் கிடைக்கும் பொருளா..சந்தோஷம் என்பது.

நம்முள் எப்போதும் இருந்து கொண்டு வெளியில் வரத்் துடிக்கிறது..

டேய் சும்மா அடங்கு...இதுக்கெல்லாம் சந்தோசப்பட்டா என்ன ஆவுறதுனு அதை தட்டி உள்ளே உட்கார வெச்சிட்டு..அடுத்தது எது நமக்கு சந்தோஷம் தரும்னு தேடி அலையறோம்.

நல்ல சூப்பரா டிரஸ் பண்ணிட்டு சந்தோஷமா வெளியே கிளம்புவோம்..எதிர் வூட்டுக்காரம்மா ஒரு சோகக் குரலில் 'என்ன இன்னிக்கு கொஞ்சம் டல்லா இருக்கீகநு ' கேட்டதுமே..அத்தனை சந்தோஷமும் ஓட்டை விழுந்த பலூனாய் புஸ்ஸுனு இறங்ககிடும்.


நம்மைச் சுற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் கோடானு கோடி negative energy சுற்றியபடி இருக்கு.

நாம் ஒரு நிமிஷம் தள்ளாடும் போது..டபால்னு வந்து நம் மேல உட்கார்ந்துக்கும். அப்பறம் சந்தோஷமா..அப்படின்னா என்னனு கேட்டு..டன் டன் ஆ சோகமோ..சோகம் தான்.

சந்தோஷம் என்பது ஒரு சின்ன விதை..

அதை நம் மனசிலும் , நம் சுற்றியுள்ளவர் மனசிலும் விதைக்கணும்.

நான் சந்தோஷமா இருக்கணும்னா அடுத்தவன் சாகணும் என்பது சந்தோஷமல்ல..


நாம் இருக்கும் இடத்தை, வீட்டை முதலில் சந்தோஷம் என்னும் சிமெண்ட் போட்டு strong ஆக்கணும்.


அதுக்காக இளிச்ச வாயனா இருக்க சொல்லலை..

நாம்.. எப்போ..எங்கே இருந்தாலும் அங்கே சந்தோஷ, மகிழ்ச்சி அலைகள் கரை புரண்டோடணும் ஒரு பிரதிக்ஞை எடுத்துக்கணும். ஐயொ..வந்துட்டாடா..ஒப்பாரி வைக்கணு யாரும் சொல்லக்கூடாது.


எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை..

நான் சந்தோஷமா இருக்கிறேன்..இருப்பேன் என்பதை நாம் தான் நிர்ணயிக்கிறோம். live this moment happily.

இன்னிக்கு international day of happiness ஆமே..

வாங்க ..

let's be happy i say and spread the fragrance of happiness everywhere.


happy இன்று முதல் happy தான்.


சரிதானே..friends.

 Thanks  Chandrashekar Ramaswamy sir.

Your status today is the seed to this post

No comments: