ஒரு நாளும் உனை மறவாத பிரியாத வரம் வேண்டும்.
ஆவியில் வெந்த இட்லி..நம்
ஆவியில் கலந்த இட்லி.
அரிசியும் உளுந்தும் ..
அளவாய் அள்ளிப்போட..
அரட்டை கச்சேரியோடு
ஆட்டுிக்கல்லில் அரைத்தெடுக்க..
ஆஹா..பேஷ்.பேஷ்..
அந்தக் கால இட்லி..
வெள்ளைத் துணியில் இட்டு
வாகாய் வேக வைத்து..
வகையாய் சட்னி சாம்பாருடன்
விள்ளல் காட்டுமே விண்ணுலகம்
நாடு விட்டு போனாலும்
நா தேடும் ருசி..நினைத்தாலே..
நா ஊறும் ருசி..
நம்ம ஊரு இட்டிலி..
பட்டன் இட்லியது
பட்டர் போல கரையுமே..
ரவா இட்லியுமே..
அவாவும் தூண்டுமே..
மல்லிப்பூ இட்லிக்கு
மவுசு ரொம்ப அதிகம்.
குஷ்பூ இட்டிலிக்கோ..
கூட்டமிங்கு கூடுமே..
மிக்ஸி இட்டிலி
முழுங்கியும் வைக்க
க்ரண்டரும் வந்ததே
கவலை தீர்க்க..
ஆட்டும் எண்ணம்
அடியோடு தொலைய
பாக்கெட்டில் வந்தது..படும்
பாட்டை குறைத்திடவே
நோகாமல் கிடைத்தாலும்
நொந்து போக வைக்குமே..
அரைத்து வைத்த மாவுதான்
ஆபத்பாந்தவன் எப்போதும்..
இட்லிக்கு இணையொன்று
இங்குண்டோ சொல்வீரே..
மிளகாய்ப் பொடி இட்லிக்கு
மிஞ்சியதுண்டோ. ஓர் விருந்து?
#happy_idli_day
No comments:
Post a Comment