Saturday, April 10, 2021

ஆத்தா..நான் பாஸாயிட்டேன்..

 ஆத்தா..நான் பாஸாயிட்டேன்..


சொன்னபடி கேளு..மக்கர் பண்ணாதே

என்னுடைய ஆளு..இடைஞ்சல் பண்ணாதேனு..

செல்லக் குட்டி என்

ஸ்கூட்டிக்கு சொல்லியாச்சு.


லைசென்ஸ் வாங்கணும்

லைனல் நிக்கணும்..

இன்ஸ்பெக்டர் இருந்தாரு

இன்ஸ்ட்ரக்‌ஷன் தந்தாரு


என் முறை எப்போனு

ஏக்கமாய் நான் காத்திருக்க

driving school ஆளுமே

dive அடிச்சு வந்தாரு..என்

தலைக்கவசம் பார்த்துட்டு

தேய்ஞ்ச சட்டியா இதுன்னாரு.


பரிதாபப்பட்ட பக்கத்து மாமாவும்

பாய்ந்து வந்து உத்வினாரு

பாத்துக்கறேன் உங்களையென்று

பத்ரகாளியான மாமியும் முரைச்சாளே..


அப்பாடானு போன ஆளு

ஐயோனு ஓடிவந்தாரு

அண்டை மாநில ரெஜிஸ்ட்ரேஷன் வண்டியா

ஐயா ஒத்துக்க மாட்டாரே என்றாரு

அதுக்கென்ன இப்போ

அதுக்கும்் கவனிச்சுடலாம்னு

அறிவுரையும் சொன்னாங்க.


இரவல் தொப்பியும்..இரும்பு

இலுப்பச்சட்டி போல் கனக்க

இஷ்ட தெய்வமெல்லாம் வேண்டி

இறங்கினேன் களத்தினிலே


நாலு நாலு பேராக

நானும் டெஸ்ட் எடுப்பேன்னு

நாட்டாமை தீர்ப்புக்கு

நாங்கள் தலையாட்ட..


பரீட்சை ஆரம்பம்.

அபய ஹஸ்த முத்திரையை

ஆடாம காட்டணும்..அப்படியே

அலை பாயும் அழகையும்

அஞ்சு முறை காட்டணும்

ஓடாம ஓட்டணும் 

ஒரு ரவுண்டு அடிக்கணும்.


 U turn அடிச்சதும்

you passed என்றார்.


சதம் அடிக்கும்வரை

சாரதி வேலையும் தொடருமோ?


கொடுத்த வாக்கை காப்பாற்ற

கொடுத்தேன் ரெஸ்ட் ஸ்கூட்டிக்கு.


குரல்வளையைப் பிடிச்சபடி/(அதான்..breaku)

கொடுமை பண்ண மாட்டேன்னு

கொடுத்த சத்தியத்தை மட்டும்

காப்பாத்த முடியலையே..

கொல்லும் இந்த பெங்களூரு கூட்டத்திலே.

No comments: