அடையாளம்
குட்டி கண்ணா..பாலைக் குடிச்சிடுமா..சங்கர் மாமா..சங்கர் மாமா..சீக்கிரம் வாங்கோ..குழந்தையை டாடா கூட்டிண்டு போங்கோ...சொன்னது தான் தாமசம்..ஒரே உறியில் பால் உள்ளே போகும்..ஆச்சு அடுத்தது கொஞ்ச நேரத்தில நன்னா..குழைய பிசைஞ்சு மணக்க மணக்க நெய் விட்டு பருப்பும் ரசமும் கலந்து ஊட்டல் தொடங்கணும்..கண்ணப்பா..ஆ..அம்.tight lipped...ஆனை வரது..பூனை வரது ...என்ன சொன்னாலும்..திறக்காத வாய்..என் பெரியம்மா அடிக்கடி சொல்வா..இந்த குட்டீஸ் எல்லாத்துக்கும் ஒரு zip வயத்தில இருந்தா எவ்வளவு நன்னா இருக்கும்பிசைஞ்சமா உள்ள அடைச்சோமா..ஆஹா..என்ன சூப்பர் ஐடியா..உனக்கும் பெப்பே..உங்கப்பனுக்கும் பெப்பேனு ..ஒரு வாய் ஊட்டறதுக்குள்ள உசுரு பாதி போய்டும்..ஒரே ஒரு மந்திரத்துக்கு அடங்கும்..அதோ யாரு பாரு..சங்கர் மாமானு நான் சொல்ல..கங்க்கர் மாமா..கஙக்கர் மாமானு பின்பாட்டு ..
மாமா..கோந்தையை என்ன சொல்லி கொஞ்சுவா..செல்லமே..என் லட்டுவே..என் ஜாங்கிரியே..என் மைசூர் பாகே..இல்லடா..
வாயில் ஜொள் வழிய..கங்க்கர் கங்க்கர்னு ஜபிச்சுண்டே ஆகாரம் இறங்கும்..மாமா எந்த வண்டில வருவானு கேட்டா..புர் புர் புர்னு எச்சல் தெறிக்க சொல்லுவா..
அடுத்து ஒரு ஆளு..அப்பு தாத்தா..
இவா ரெண்டு பேரும் இருந்தாதான் சாப்பாடு இறங்கும்..
டெல்லியிலிருந்து வரும் Bangalore express மெதுவா..station ல நுழைய ஆரம்பிச்சது..second class பயணம்..ஜன்னல் வழியா..நம்ம மனுஷாளைத் தேடல்..நானும் அவரும் பார்வையை ஓட விட.ரயிலின் ஆட்டத்தில் தள்ளாடியபடி நானு..நானுனு வந்த குட்டிச் செல்லம்..திடீர்னு high pitch ல கங்க்கர் மாமா..கங்க்கர் மாமாநு சந்தோஷத்தில் கத்த...
அந்த ஒரு நொடி உலக மகா சந்தோஷமான நொடி..
ஏன்னு கேட்கிறேளா..
ஆறு மாசக் குழந்தையா டெல்லி போனதிலிருந்து..அன்னி வரைக்கும் கங்க்கர் என்ற சங்கர் ஃபோட்டோ பார்த்தே வளர்ந்த குழந்தை..டக்குனு அத்தனை ஜனத்திரள் ல அதுவும் train moving ல இருக்கும்போதே கண்டுபிடிச்சு ..அவள் முகத்தில தெரிஞ்ச சந்தோஷம்.மறக்க முடியாது..
Watsapp,fb, Skype,face time இதெல்லாம் தெரியாத 90s life. Kodak and Konica எங்க குடும்பத்தினால் நிறைய லாபம் சம்பாதிச்சிருப்பான்..அத்தனை photo க்கள்.. அதை செலவுனு நினைச்சதெல்லாம் தூசாக்கினது..
அவள் காட்டிய அடையாளம்.
No comments:
Post a Comment