ஒரு கலகல போஸ்ட்..
கைகலப்பு இல்லை..ஆமாஞ் சொல்லிட்டேன்..
அடுப்படி எனக்குச் சொந்தமானு இப்போ எல்லாரும் பாட ஆரம்பிச்சாச்சு..
சும்மா..ஒரு கற்பனை..
பாத்திரம் தேய்க்கும்போது இவர்கள் மை.வாய்ஸ் என்ன நினைக்கும்?
#கம்ப்யூட்டர்_எஞ்சினியர்: code எழுதினால் promotion கிடைக்கும். இங்கே பாத்திரத்தில் கோடு விழுந்ததோ..பீஸ்..பீஸ் தான்..
#Mechanical_engineer; " குக்கர் ..கைப்பிடி ஸ்க்ரூ.. ..இந்த structural analysis பண்ணுவாரோ.
#Automobile_engineer: கடாய் கைப்பிடியில் கார் ஓட்டி பார்ப்பாரோ?
#நடிகை: சின்ன பாத்திரமோ..பெரிய பாத்திரமோ.. ஜொலிக்கணும்..
#பல்_டாக்டர்: ஒவ்வொரு பல்லுக்கும் டாக்டர் வந்தாச்சு..இத்தனை பாத்திரத்தை எப்படி பிரிச்சு .எப்படி தேய்க்கிறது?
.
#நடிகர்: இதுக்கு டூப் போட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்?
#ஜோசியர்: இன்னிக்கு குக்கர்..மக்கர்
கரண்டி..வலிமை , பால் பாத்திரம்..பழுது
#மார்கெட்டிங்_executive; காலையிலே target சொல்லிட்டா பெட்டரா இருக்கும்..
#Bank_manager; ATM கூட இப்படி ரொப்ப முடியறதில்லையே .
#Accountant: tally ஆகவே மாட்டேங்கிறதே..சமைச்ச ஐட்டமும் உபயோகிச்ச பாத்திரமும்..
#வக்கீல்: வாதம் விவாதமே இல்லாமல் சரண்டர் தான் இங்கே..
#சிவில்_எஞ்சினியர்: இந்தப் பாத்திரத்துக்கு ..எத்தனை சிமிண்ட்..sorry.. Sabena வேணும்னு யோசிப்பாரோ.
#அரசியல்வாதி: இலவச அடுக்கு செட் கொடுக்கிற டெண்டரை இப்பவே நிறுத்தி யாகணும்..
#காப்பிப்_பொடி_கடைக்காரர்: இனிமே சத்தியமா ஸ்பூனும் கப்பும் ஆஃபர் தரமாட்டேண்டா சாமி
#காலேஜ்_பெண்: இந்த நெயில் பாலிஷ் அழியாமல் இருக்கணுமே ..தேவுடா
#டைலர்: இந்த்க ஜல்லிக் கரண்டி, ரிப்பர் அச்சு எல்லாம் வெச்சு ஒரு லாக்டவுன் டிஸைன் ஒண்ணு போட்டுட வேண்டியதுதான்..
#பால்காரர்: தண்ணி நல்லா கலந்து வைக்கலாம் இந்த டிஷ் வாஷ் லிக்விட்ல..
வேற யாரையாவது விட்டேனா?
No comments:
Post a Comment