Sunday, September 26, 2021

Building a brilliant self

 Building a brilliant self


😀


ஒத்திகை பார்க்காது

ஒரு வார்த்தையும் பேசுவதில்லை..

ஒட்டியும் வெட்டியும்...

ஒருவழியாய் முடிவெடுக்க..


ஆயத்தம் செய்வதிலே..

ஆயாசம் மேலிடவே..

அடப்போப்பா..

அமைதியே காத்திடலாம் என்றிருக்க..


முன் போலில்லை நீ.

மடை திறந்த வெள்ளமாய் பேசுவாயே..

முன் வைத்தார் குற்றச்சாட்டு


எது பேசினாலும்

எதிர்ப்புத்தான் அறிந்தேனே..

எடுத்தேனே ஆயுதத்தை..

எடிட் செய்ய ஆரம்பித்தேனே..😀


(இப்படி எல்லாம் இருக்கத்தான் ஆசை..நம்ம வாய் சும்மா இருக்காதே😀😀)

Friday, September 24, 2021

முகனூல் வாழ்க்கை

 காஃபி குடிக்கும்போது வாட்ஸப்பில் shasri

கவிதைப் போட்டியில் prize என்று.

I was in cloud nine.


எல்லாருக்கும் திறமை இருக்கு.

அது தூங்கிக்கிட்டு இருக்கு..

தட்டி எழுப்ப தானாக வெளி வருகிறது.

#மத்யமர் தளம் இருக்க

மனசில் இருக்கறதை கொட்ட..

Prize கிடைச்சதனால் ..இந்த

Praise இல்லை..

Prize முக்கியமில்லை..

Participation முக்கியம்னு 

 பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தது.

பின்னாளில் கை கொடுக்கிறது எனக்கு.

Thanks so much #madhyamar and my lovely friends there who keep me encouraging.


இன்னிக்கு நாலு வரி நான் எழுதுகிறேன்.என்றால்..அதுக்கு காரணம்..

ஏதாவது எழுது..உன் பாணியில் எழுது என்று என்னை ஊக்குவித்து விட்டு.என்னை விட்டுச் சென்ற என் மாமியார் thangamani

தங்கமணி எங்கே நீ..

உன் கிட்ட இதை காட்டணுமே..


இந்தக் கவிதைக்கு judges special mention certificate .


#மத்யமர்_கவிதைப்_போட்டி

#பதிவு 1

#இதுதான்_முகநூல்_வாழ்க்கை


நூலொன்று படியென்றால்

நுனிப்புல்லும் மேய்வேனே..

முகநூல் வந்திங்கே

மூழ்கடிக்குதே..நாளுமிங்கே


"ஏதாவது எழுதென்று"

என்னைத் தூண்டிடுமே

எதிர்ப்பார்க்க வைத்திடுமே

எத்தனை விரும்பிகளென்று..


#இதுவே_முகநூல்_வாழ்க்கை


விருப்பக் குறிகள்..பதிவின்

விதியை நிர்ணயிக்க..

வீழாமல் காக்குமே..

விழுதாய் நட்புக் குழாம்


#இதுவே_முகநூல் வாழ்க்கை.


முகமூடிகள் நடமாட்டம்

மனதிலோடும் பட்டிமன்றம்.

முடிவறியாப் போராட்டம்.

பட்டாலே புரிந்திடுமே..


#இதுவே_முகநூல்_வாழ்க்கை.


நீலச்சாயம் வெளுத்தாலும்

நிதர்சனங்கள் புரிந்தாலும்

நித்தமுனது தரிசனம்

 நகர்த்துமே... நாட்களை..


முடக்கத் தோன்றினாலோ

முடங்கும் பயமிருக்க

அடங்கிப் போனேனோ?

விடத்தில் வீழ்ந்தேனோ?


முகநூலில்லா வாழ்வு

முகாரி இசைக்குமென்று

மாயை வலையிலிலிங்கு

மீளா மாந்தரானோம்..


நடமாட்டம் கூடினாலும்

நகருவதும் நாடுவதும்

நாளும் பொழுதுமிங்கே

நிலையில்லா வாழ்க்கை..


#இதுவே_முகநூல்_வாழ்க்கை


 ..

Happy birthday Bala Kumar R

 Happy birthday Bala Kumar R


கும்பகோணத்து குடும்பத் தலைவி.

குடுப்பாள் டிமிக்கி சமையலுக்கு..

குடும்பத்தோடு செல்வாள் சுற்றுலா..

கும்மி அடித்து கொண்டாடுவாள் மன்னிகளுடன்..


அண்ணாக்களின் பாச மலர் 🌹 தங்கை..

அழகு மருமாள்களுக்கு மெத்தை இந்த அத்தை மடி..

அன்பைக் கொட்டும் அருமையான அம்மா..

ஆருயிர்த் தோழியும் இவள்தானே


அரிது அரிது...இவள்

சமைப்பது அரிது..


ஏகாதசி இன்று no cooking..

என்னமோ புடிக்கலை..no cooking..

எங்கியோ கல்யாணம்..no cooking..

எல்லாரும் வெளிய போனோம்..no cooking


அதனாலே தானோ..

காகம் வராமல்..

கரிச்சானை அனுப்பி

கலங்க வைக்கும் இவளை..


பவழ மல்லி பூத்துக் குலுங்கும் தோட்டம்..

பூக்குமே  கொன்றையும் இவள் வீட்டில்..


புன்னகை பூத்து போஸ் கொடுப்பாள்..

பார்த்ததில்லை இவளை என்றாலும்..

பல நாள் பழகிய ஒரு அன்னியோனியம்..

போடுவோம் அடிதடி உப்புமா போஸ்ட்டுக்கு


கும்பகோணத்து பாலாவுக்கு....

கம்பு சுத்தி ..இங்கே.

கல கல வாழ்த்து சொல்வோம் வாங்க..

பிறந்தநாள் ..

வாழ்த்து சொல்வோம்.வாங்க..


Happy birthday Revathy Srinivasan

 Happy birthday Revathy Srinivasan



நட்சத்திரம் 🌟 இவள்..


முகநூலில் ஒரு #புதிய_முகம்..


முன்னம் கண்டிராத ஒரு #அவதாரம்..


அடித்தது எங்களுக்கு #jackpot.


இவள் #மெளனராகம் பாட மாட்டாள்..


இவள் எல்லார்க்கும் #பிரியம்ங்க்கா


#மறுபடியும் மறுபடியும்..பார்க்கத் தூண்டும் இவள் நடிப்பு..

இவள் போடும் மீம்ஸ்..ரொம்ப #ஒஸ்தி..


ஆக்கிடுவாள் #ஆயுள்_கைதியாக இவள் நட்பிலே..


#உனக்காவே_வாழ்கிறேன் என்று ஸ்ரீனிவாசன் சொல்ல..

அவர் #இதயத்_தாமரையில் என்றும் இருக்கும் ரேவதிக்கு..


நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்..


உங்கள் திறமை இன்னும் நிறைய வெளிப்பட்டு..

புதிய ஒரு நாடகப் பயணம் தொடங்கணும் நீங்க..


இப்படியே என்னிக்கும் கலகலப்பாக..

களிப்புடன் இருக்க..


பிறந்தநாள் கொண்டாடும் உங்களுக்கு..

மனமார்ந்த வாழ்த்துக்கள் dear.


( நடிகை ரேவதி ..சினிமாப் பாடம் வெச்சு எழுதினேன்.. நீங்கள் எங்கள் சூப்பர் ஸ்டார் ஆச்சே)😀😀

Sunday, September 19, 2021

Subha dhileep anniversary

 Hi Srinivasan Dhileepan..

Not for just oneday..this wish comes to you both for all the years to come..

Late ...but a latest kavidhai for the made (mad)for each other couple..


ஜாடிக்கேத்த மூடி போல

 திலீபன் சுபா ஜோடியிது..

ஜொலிக்கும் வெள்ளி காணும்..

ஜாலியான ஜோடியிது..


கருவைக் காக்கும் மருத்துவர் இவள்..

தருவாள் நம்பிக்கை தம்பதி பலருக்கு

சிறுகூடு இவள் வீடு..

சிறிதும் பஞ்சமில்லை இன்பத்திற்கே..


அறுவை சிகிச்சைக்கு ஆதாரம்

அளவாய் தரும் அனஸ்தீஷியாவில்

அந்தக் கலை .. கைவந்தக் கலையாய்..

அரும்பணி புரியும் திலீபனிவரே..


மயக்க ஊசியில் மயக்குவர் இவரெனில்..

மந்திரப் புன்னகையில் மயங்க வைப்பாளிவளே

பல்லிசை வேந்தர் இவர் என்றாலோ

இல்ல  இசையின் நற் சுருதியும் இவளே..


நிலவு ஆயிரம் 

காண வாழ்த்து..

கனவு யாவும் ..கை...

வசப்பட ..வாழ்த்து..

நலமும் இன்பமும் 

நாடியே வரணும்..

நான்கு தலைமுறை..

நீங்களும் காணணும்..


தங்கம் வைரம் பிளாட்டினங்கள்..

சிங்கக் குட்டியாம்..

சீமந்த புத்திரனுடன்..

சீறும் சிறப்பாய் ..

சேர்ந்தே கொண்டாடணும்..

வாழ்த்துக்கள்..

வாழ்த்துக்கள்..

வாழ்த்துக்கள்..


உருளைக்கு_வந்த_உளைச்ச்ல்

 #உருளைக்கு_வந்த_உளைச்ச்ல்



Alien மாதிரி ஒண்ணு..

அழகான வாத்து மாதிரி ஒண்ணு..


வெட்டப்போறாளே..

வறுக்கப் போறாளா..இல்ல..

வெங்காயத்தோட சேர்க்கப் போறாளா..?


குருமாக்குள்ள.. கூட்டத்தில ஒண்ணா இருக்கப் போறேனா?


தம் ஆலுவாகி..தனித்தன்மை காட்டப் போறேனா..?


Tikky ஆகப் போறேனா..இல்ல..இவ..

Trick எதுவும் செய்யப் போறாளா?


Chaat ஆக்கி ஸ்வாகா பண்ணப் போறாளா

சிப்ஸாக்கி..என்னை பீஸாக்கிடுவாளா?


Bake ஆகி பேக்காவேனா..ஆலு

போண்டாவாகி விடுவேனா?


போட்டோ மட்டும் புடிச்சுட்டு..என்ன

புலம்ப வெச்ச மகராசியே..


முகநூலில் மூழ்கியது போதும்...எனக்கு 

மோட்சம் கொடுக்க வாம்மா நீயும்..😭


வீழ்வேன் என்று நினைப்பாயோ..

வாயுவாக வந்து வதைப்பேனே😀😀


 Happy birthday V N Ganesh V N sir


கானம் பாடும் கணேஷ் இவர்.

கர்நாட்டிக்கும் பாடுவார்..

கானாவும் பாடுவார்..

காதல் ❤️ பாட்டும் பாடுவார்..

கருத்துள்ள பாட்டும் பாடுவார்..


கையில் மைக்கோடு இருக்கும்..

கணேஷ் இவர்..

கணக்கற்ற பாடல்கள் Smule ல்

கேட்கவே இனிமை என்றும்..


இவர்..காதில் இருக்கும் இயர் ஃபோன்..

இவர் பாடல்கள்..

கேட்போருக்கு காதில் பாயும் தேன்..


இசையோடு இணைந்த வாழ்வு...

இன்று போல் என்றும்..

இன்னிசையுடன்.. சப்த ஸ்வரங்களின்

ஓசையுடன் அமைய வாழ்த்துக்கள்.

Saturday, September 18, 2021

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு..

 சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு..


ப்ளாட்ஃபார்மில் டிரெயின் வந்து நின்னதும், தடக் தடக் சத்ததோடு என் லப் டப்பும் ஜாஸ்தியாச்சு..்.இருக்கிற மூட்டை முடிச்சை இடம் பார்த்து உள்ளே தள்ளணுமே..பகவானே என் பெர்த்ல வர யாரும் சாமானே கொண்டு வரக்கூடாதுனு அராஜகமா ஒரு வேண்டுதல் வேற.

எல்லாத்தையும் ஒரு வழியா அடியில தள்ளி நிமிர்ந்தா..நங்குனு மண்டையில் ஒரு அடி..வேறென்ன..விரிக்கப்பட்ட மிடில் பர்த் வீங்க வெச்சது என் முன் சொட்ட மண்டையை. என் பொண்ணோ ..full energy ல் ஆட்டம்..மிடில் பர்த்தை போட்டு நொக்கு நொக்குனு நொக்கி தாளம் போட..மிடில் பர்த் மாமா குறட்டையில் ஆலாபனை செய்ய.எங்க கூ..சிக்கு புக்கு ரயில் பயணம் ஆரம்பம்..

நமக்குத்தான் 4 மணிக்கு முழிப்பு வந்துடுமே..வீட்டு ஞாபகத்தில் எழுந்திருக்க..மீண்டும் டொங்னு மண்டையில் ஒரு அடி..எங்கயும் காலை வெக்க முடியல..மெதுவா....முதுகை கோணலா ஒரு வளை வளைச்சு...தலையை மெதுவா நீட்ட..என் சிண்டை பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சது மிடில் பர்த் சங்கிலி ..ஆ..வலி..கத்த கூட முடியல..

கால் எங்க வெக்கறது..சாமானெல்லாம் தூங்கிண்டிருக்கே..ஒரு வழியா சமாளிச்சு எழுந்து ..அப்பர் பர்த் ல் அக்கடானு தூங்கிண்டிருந்த அகத்துக்காரரை எழுப்பி..கொஞ்சம் குழந்தையைப் பார்த்துக்கோங்கோ..நான் போய் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்..அப்ப்போதான் முதல் ரவுண்ட் வர காபி எனும் கஷாயத்தை குடிக்க முடியும்னு சொல்ல..அம்மா தாயே..வீட்ட்ல தான் அட்டகாசம்னா..இங்கேயுமா..சரி சரி போய்ட்டு வானு வழியனுப்பி வெச்சுட்டு..வாய் பிளந்து தூங்க 

. டாண்ணு ஆறு மணிக்கு என் காது குளிர' காபி..காபி'..'சாய்..சாய்' சத்தம்..என் பெர்த் கிட்ட வந்துட்டார் ..ஒரு காபி குடுங்க..சொன்னதுதான் தாம்தம் கொதிக்க கொதிக்க பேப்பர் கிளாஸில் ரொப்பிட்டு..madam 10 ரூபாய் தாங்க..

ஒரு நிமிஷம் ப்பா..பர்ஸ் பெண்ணின் தலைகாணிக்கடியில்...மெதுவா உருவலையோ.நான் அம்பேல்..ஆட்டம் ஆரம்பிப்பாளே..ஒரு கையில் காபி..மறு கையில் காசு..அப்பத்தான் ட்ரெயின் டிஸ்கோ டான்ஸ் ஆட ஆரம்பிக்க..என் கையிலிருந்த காபியும் சேர்ந்து ஸ்டெப்ஸ் போட..கடைசியில் எனக்கு கிடச்சது 2 ரூபாய் காப்பிதான்.

காபி குடிச்சா எப்படி தூக்கம் வரும்..ஆனந்த சயனத்தில் என்னை சுத்தி எல்லாரும். எனக்கோ வேடிக்கை பார்க்கணும்..

சூரியன் அழகா வெளிய வருமே..மேகமெல்லாம் என்னோட ஓட்டமா ஒடி வரதைப் பாக்கணும்..

மரம் வேகமா ஓடும்..சின்ன சின்ந பாலங்கள்..வயல்வெளி..மாட்டு வண்டி..

ஒவ்வொரு ஊர் ரெயில்வே கேட் கிட்ட நிக்கற ஸ்கூல் பசங்கள் பார்க்கணும்.

குட்டி ஸ்டேஷன் எல்லாம் ஓடி ஓடி வந்து தண்ணியும் ஒட்டகப் பாலும் விற்கும் குட்டீஸ். கொய்யா..ஆரஞ்சு வித்து ரெயில் கிளம்பிடுமோங்கிற பயத்தில் சிறு வியாபாரிகள்..

இத்தனையும் பேரழகன் சூர்யா போஸ்ல உட்கார்ந்த படியே ரசிச்சபடி ..

கொஞ்ச நேரமா ஒரே சைடாகிப்போன கழுத்தை அம்மா...என்று அழைத்தபடி என் பெண் ஒரு திருப்பு திருப்ப..ஆ..வலி..வலி..


அந்தக் கோணக் கழுத்தோடயே பால் கரைத்து கொடுத்தாச்சு்....கொஞ்ச நேரத்தில் இட்லி ஊட்டல்..தோசை தோசை விளையாட்டு .. தண்ணி கொட்டி ஈரமான துணியை மாற்றல் எல்லாம் இனிதே நடந்தேற..' சார்..லஞ்சுக்கு என்ன வேணும் உங்களுக்குனு pantry service கேட்க..

ஒண்ணுமே தெரியாதது போல மிடில் பர்த் மாமா..என்ன லஞ்ச்சா..நான் இன்னும் breakfast ஏ சாப்பிடலையேனு (விவேக் ஸ்டைலில)் ..இந்த மாதிரி long journey ல தான் நம்மைஅறியாம தூங்க முடியறது.. சரிப்பா..வெஜிடேரியன் மீல்ஸ் ஒண்ணு கொண்டு வந்துடு என்றபடி பல் தேய்க்கப் போனார்..எனக்கோ அப்பா..விடுதலை..திரும்பி வந்து பர்த்தை மடிச்சுடுவார்..மடங்கின என் கழுத்தும் பிழைக்குங்கிற நினைப்பில் மண்ணைப் போட்டார் மகானுபாவர்..மீண்டும் தன் berth ல் ஏறி படுத்தபடி..

ஆங்..சொல்ல மறந்துட்டேன்..upper berth ல் படுத்திருந்த என்னவரை நாங்கள் அடித்த லூட்டி ஒரு வழியாய் எழுப்ப..நீயாச்சு உம்ம பொண்ணாச்சுனு  ரெண்டு பேரையும் கோர்த்து விட்டு..நான் கொட்டாவிக்கு பதில் சொல்ல குறட்டை விடலானேன்.

ரயில் பயணம் என்றும் சுகம்..மிடில் பெர்த் இடித்தாலும்..

இனிமே ஆறு மணிக்கு எல்லாரையும் எழுப்பிடுவாங்களாமே..

பரிதாபம்..அந்தோ பரிதாபம்..பாட்டு தான் இப்போ மனசில ஓடறது

Thangamani ..எங்கே நீ?

 பரிசு..


பரிசு..பெரிசா அப்படியெல்லாம் எதுவும் வாங்கியதில்லை.

ஆனால்..என் பசங்க வாங்கி வரும்போது நானே பெற்றது போல சந்தோஷத்தில் திளைத்திருக்கேன்.


முகநூலில் எழுத ஆரம்பித்து எனக்கு கிடைத்த முதல் பரிசு 🎁 


கடிதப் போட்டி சீஸன். ..3 

ஷேக் முஹமது and team நடத்திய ஒரு முகனூல் போட்டியில்.


முதல் நாற்பதில் தேர்ந்தெடுக்கப்பட்டு ,

புத்தகங்கள் நான்கு பரிசாக வந்த நாள்..

எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தேன்.


இன்று..

போன மாதம் ஆகஸ்ட் மங்கையர் மலர் இதழில் என் கவிதை வேறொருவர் பெயரில் வெளிவந்த போது கொஞ்சம் மனசு கஷ்ட்டப்பட்டது. 

தவறு நடந்து விட்டது என்று அவர்கள் சொன்னபோது நம்ம luck அவ்வளவுதான் என்று ஒரு மனசு அழுதாலும்....

ஆஹா..நாம் எழுதின ஒரு நாலு வரி publish ஆகி இருக்கேனு பயங்கர குஷி.


இன்று இன்னுமோர் இன்ப அதிர்ச்சி.


பரிசுத் தொகை 250 ரூபாயும் என்னைத் தேடி வந்தது.


கொஞ்சம் flash back


2008 ம் வருஷம் .தேஹ்ராதூனில்  ஒரு மத்யான வேளையில்  என் மாமியாரின் ஃபோன்.

ஊர் வம்பு அடிச்ச பிறகு , 

அகிலா..' தலைமுறை இடைவெளி' இந்தத் தலைப்பில் நாலஞ்சு வரி கவிதை எழுது பார்க்கலாம் 'என்றாள்.


அம்மா..are you kidding ..உங்களை மாதிரி நான் என்ன கவிதாயினியா ? என்றேன்.


நகை, ,புடவை கேட்டதில்லை என்னிடம் அவள் என்றும்.

அவள் ஆவலாய்க் கேட்டது ஒரு கவிதை.

மனதில் தோன்றியதை எழுதிப் படித்தேன்.


ஆஹா..ஓஹோ என்று புகழ்ந்து என் போக்கில் ..மரபுக்குள் வராத என் கவிதைகளை (கிறுக்கலை) ரசித்தவள் அவளே..


நானும் அவளும் கவிதை ,கட்டுரை பற்றி பேசியதுதான் அதிகம்..a bond envied by many.


Thangamani Srinivasan.இன்னிக்கு நாலு வரி எழுதுகிறேன் என்றால் ..அது உன்னால் தான். 

ஃபோட்டோவில் இருந்தபடியும் இன்னிக்கு என்ன எழுதப் போறேனு அன்பாய் மிரட்டுபவள் அவள்.


Thangamani ..எங்கே நீ?


மூக்குடன் ஒரு 🍅 தக்காளி

 மூக்குடன் ஒரு 🍅 தக்காளி


..


அதிலும் மூஷிக வாகனனே தெரிந்தான்..


 nose cut பண்ண மனசே வரலை..

அதான்..

கீரிடமும் கண்ணும் வைக்க..

கொள்ளை அழகாகக்

கஜானனன் போல எனக்குத் தெரிந்தான்..


பார்க்கும் பொருளிலெல்லாம்..

அந்த


பாசாங்குசதரன்..🙏🙏


யாருக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படியே 🙏🙏

அந்தக் காலம் ..ஒரு பொற்காலம்..

 அடடே..அகிலா..

2012 ல ..இசையோட இணைந்த வாழ்வு  வாழ்ந்தியே..


அந்தக் காலம் ..ஒரு பொற்காலம்..


With SPICMACAY ..முதல் முதலாக இப்படி பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட் ப்ரோக்ராம் எல்லாம் முன் வரிசையில் உட்கார்ந்து பார்த்து..

அவர்களுக்கு service பண்ணி..


Miss those Dehradun days


with classical guitarist Anders clemens and cellist and composer Gustavo Tavares


Friday, September 17, 2021

உப்புமா

 இட்லி மா..

அடை மா..

வடை மா..

ஒரே #dilemமா '😀


வென்றது என்னமோ..


#உப்புமா..

அவல் உப்புமா..

இது

இவள் உப்புமா😀


ஆயிரம் option இருந்தும்..தும்..தும்..


Terrific Thursday😀


Monday, September 13, 2021

Ganesha chathurthi

 கணேச சரணம்.


இசையோடு வருபவன்

இன்னல்கள் தீர்ப்பவன்

இல்லத்தில் அழைப்போம்

இதயத்தில் வைப்போம்

இல்லையென்று எதுவுமில்லை

இன்னமும் வேண்டுமா என்று

அள்ளித் தரும் வள்ளலாம்

அக் கஜானனை ஆராதிப்போம்

அவயத்தில் அன்பு ஓங்க

அவன் பாதம் பணிந்திடுவோம்.


happy ganesha chathurthi


வாட்ஸப்பிருக்க

 வாட்ஸப்பிருக்க..வாய்ஸ் கால் எதற்கு?


சதாப்தியில் செட்டில் ஆனதுமே..

சகலருக்கும் சகட்டு மேனிக்கு ஞானம் வரும்.

ஹலோ ஹலோக்கள் லோ லோ என்று முழங்க


லோக க்ஷேமத்தில் தொடங்கி..

லோக்கல் பாலிடிக்ஸ் வரை..


பக்கத்து சீட்டு மாமா..மாமிக்கு போட்ட ஃபோன்..( ஒட்டு கேக்கலைப்பா..அவர் பேசினது ஊருக்கே கேட்டது)😀


ஒண்ணு கேட்க மறந்துட்டேனு ஆரம்பிச்சவர் தான்..


ஒருலிட்டர் பாக்கெட்டா?

இரண்டு அரை லிட்டரா.? 


ஃப்ரீஸரில் வைக்கணுமா..

Chill tray லயா?..அந்த


a2b பக்கோடா..

அந்தரா..பாஹரா..?


கல்யாண முறுக்கு

கடக்குனு போய்டாதா..?


வலது கரம் வந்தால்

வார்க்கணுமா தோசை?


அரிசிக்கு ஜலம் எத்தனை?

பருப்பும் வைக்கணுமா?..


அடுக்கிக் கொண்டே போக..

ஆவேசக் குரலில் மாமி..

'அட ராமா..

நல்லி கடையிலே..

நாலாயிரம். புடவை குவிய்லில்

நல்லதா ஒண்ணு தேடிண்டு இருக்கேன்

நிம்மதியா ஷாப்பிங் பண்ண விட மாட்டீரோ..

நானே வந்து எல்லாம் பார்த்துக்கறேன் என்று இணைப்பை துண்டிக்க..


'அவள் அப்படித்தான்" என்று ஒரு ஸ்மைலில் சொல்லி..அசடு வழிய..


அடுத்தடுத்து..செல் ஃபோன் மணிகள் சிணுங்க..

ஆறு மணி நேரம்..அட்டகாச entertainment எனக்கு.


வண்டியில் ஏறினதும் கவச குண்டலமான hearing aid ஐ switch off செய்துவிட்டு..

அப்பா..அமைதியாய்..ஜன்னலோர சீட்டில் 

தாண்டிச் செல்லும் மரம் செடியை ரசித்தபடி..பழைய நினைவுகளை அசை போட்டபடி..

Friday, September 10, 2021

வேடிக்கை மனிதர்கள்

 வேடிக்கை மனிதர்கள்


வேடிக்கை மனிதரை

வலைவீசி தேடாதே 

வீண்சிரமம் ஏனுனக்கு

வேறெங்கும் தேடியேதான்..

நாடித்தான் ஓடாதே

நானிருக்கேன் உன்னுள்ளே 

நையாண்டி தான்பேசி

நகைத்தது என்மனமே..!!!


 

கண்விழித்த வேளை முதல் 

கண்ணுறங்கும் வேளை வரை

கண்கட்டி வித்தை காட்டும்

கள்ளமில்லா வேடிக்கை மனம்.


 என்வீட்டு தோட்டத்தில்

ஏராள மலருண்டு

எண்ணமது தோன்றிடுமே

அடுத்தவிட்டு அடுக்குமல்லி

எட்டித்தான் பறித்திடவே !!!!

வேடிக்கை மனமிதுவே..


  

கொத்தவால் சாவடி சென்றே

மொத்தமாய் விலை பேசினாலும்

கொத்தமல்லி கொசுறு தந்த

கடைக்காரன் பேர் சொல்லி

கொடைவள்ளல் பட்டம் சூட்டும்..

வேடிக்கை மனமிதுவே..


  பிள்ளைகளே உலகமென்றே

பிணைந்தே கிடக்குமே-அவர்

சுண்டுவிரல் பிடித்தே

தண்டையுடன் நடந்தவேளை

கண்டதுவே ஓர்சுகமே -அவர்

 சிரிக்கும் வேளை

தெறிக்கும் கண்ணீரும்

சென்றிதயம் சுட்டிடுமே

வேடிக்கை மனமதுவே 


  

அடித்தே அடக்க எண்ணும்

அடம் பிடிக்கும் பிள்ளைதனை

லாடம் அடித்த குதிரையாய்

பாடம் படிக்கும் பிள்ளைக்கும்

ஓட்டமே வெற்றிக்கு வித்தென

ஊட்டியே தான் வளர்க்கும்

வேடிக்கை மனமதுவே


 

 காலதோஷமது கழிந்திடவே

 கோயிலது சென்றிடினும்

கதவோரம் கழற்றிய  

காலணியது காணாமல் 

களவாகி விடுமென்ற

கலக்கமுடன் கைக்கூப்பி

 கடவுளை தொழுதிடும் 

வேடிக்கை மனமதுவே


 

நாடிய வளமெலாம் 

நலமாய் கிட்டிடவே

கோடிகள் பலசேர 

வரமொன்று கோரியே

கேடுதரும் முன்வினைகள்

 தீங்கின்றி நீங்கிடவே

நாடிபிடி ஜோசியரை

 தேடித்தான் ஓடிடுமே

வேடிக்கை மனமதுவே


 இப்பிறவி போதுமென்றே

இறைவனடி நாடிடுமே

இறைஞ்சிடுமே எப்போதும்

இன்னல் இல்லா

இன்னொரு பிறவி

இனியேனும் தாஎன்றே

வேடிக்கை மனமதுவே..


 

வேடிக்கை வாழ்க்கையிது

தத்துவங்கள் இங்குண்டு

கற்பனைகள் பலவுண்டு

கனவுக்கும் மடலிட்டு

நல்லசேதி ஒன்று

நாளையாவது நல்கு நீ -என்ற

நம்பிக்கை மனமுண்டு.


 

வயதொரு பொருட்டில்லை

படிப்பொரு தடையில்லை

ஒளிந்து கிடந்திடுமே

ஒவ்வொரு மனிதனுள்ளும்

ஒன்றிபோன இயல்புடனே...

வேடிக்கை மனமிதுவே..

Thangamani book release

 2012. மே மாதம். ஸ்கூலில் இருந்து prize  ம் ,பையுமா ஓடி வந்தாள் என் பெண். இரண்டு certifcate, 2 புக் . புக்கைத் திருப்பி பார்த்தேன். கங்கை ஆற்றைப் பற்றி ஒருவர் பக்தியோடு, தேசப் பற்றோடும் இந்தியில் எழுதிய கவிதைத் தொகுப்பு. free ஆ school க்கு distribute பண்ணச் சொல்லிட்டார் போல இருக்கு. அதனால் 2புக்கும்.ஒரே புக்..அவரே publisher ம் கூட..

திடீர்னு எதோ ஐடியா தோண ,வீட்டுக்காரருக்கு ஃபோன் போட்டு சொன்னேன்.. உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு..இந்த வேலையெல்லாம் அவர் எப்படி செய்வார்..எங்கியாவது போய் வாங்கிக் கட்டிண்டு வராதேனு ஒரே அட்வைஸ்..

ஒரு சுப முகூர்த்த நாளில் அந்த writer cum publisher கிட்ட போனேன் ..என் மாமியார் தங்கமணி சிவபெருமான் மேல் தினமும் எழுதிக் குவித்த கவிதைகளை எடுத்துண்டு.  publishing க்கு வந்திருக்கேன் என்று சொன்னதும் வாயெல்லாம் பல்லானவர், பல்பு வாங்கின மாதிரி ஆனார் நான் நீட்டிய தூய தமிழ் கவிதைகளைப் பார்த்து..yeah kaunsi basha mein hai  ...

நான் ரொம்ப பெருமையா இது தமிழ் என்றேன்..behenji yeah nahi ho payega..sorry. aap Chinnai ( Chennai அப்படி அழுத்திி தான் சொல்வா அங்கே எல்லாம்.. ரொம்ப ஏமாற்றத்தோட வீடு திரும்பின கொஞ்ச நேரத்தில் அவரிடமிருந்து ஒரு SMS. I am ready to take this project. 

தமிழ் வாசமே இல்லாத தேவ பூமி தேஹ்ராதூனில் , முதல் முதலாக ஒரு தமிழ்ப் புத்தக அச்சடிப்பு துவக்கம். முதல் கட்ட பிழை திருத்தங்கள் சந்த வசந்த ஐயா இலந்தையும், அனந்த், சிவசிவா அனைவரும் செய்து தர..நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் புத்தக வேலை நடப்பு. தினமும் proof reading. correction. correction க்கு correction. 

thangamani அம்மாவிடம் சொன்னதும், தனக்கே உரிய அடக்கத்தோடு ' அதெல்லாம் எதுக்கு செலவு அகிலா.. blog போதும் எனக்கு' ..நீயும் அலையாதே மழையிலெல்லாம்..( அது மழை கொட்டும் காலம் அப்போ)..அந்த வாஞ்சை..அப்பப்பா..இதுக்கே  இவளுக்கு ஏதாவது செஞ்சுடணும்னு ஒரு வைராக்கியம். 

அட்டை கலர் selected. படம் வேணுமே..அந்த publisher நிறைய modern art of Shiva எல்லாம் காண்பிச்சு அதுக்கு தனி ரேட் பேசினார். திடீர்னு ஒரு ஐடியா எனக்கு..' ஐஷு ..நீ தான் drawing பண்ணுவியே..simple ஆ நம்மூர் கோயில் கோபுரம்..ஒரு சிவ லிங்கம் try பன்ணு என்றேன்..அவள் வரைந்த்தது அட்டைப் படமாய் அச்சில். தங்கமணிக்கு ஏக சந்தோஷம்.

book publishing..மிக எளிமையான முறையில் கனாடாவிலிருந்து வந்த எங்கள் தமிழ் ஆசான் அனந்த் மாமா கையால், tupkeshwar shiva temple ,Dehradun  சன்னதியில் ஒரு கொட்டும் மழை நாளில் , மந்திரங்கள் முழங்க , அமைதியாய் நடைப் பெற்றது.

this day that year 2012, an unforgettable day in our life.what was thought impossible was made possible. 

'என் பணி அரன் துதி' புத்தகம் வெளியிடப்பட்ட நாள்..எங்கள் வாழ்வில் எதையொ பெரிசா சாதித்த நிறைவைத் தந்த நாள்.

இன்னும் நிறைய பாடல்கள் குவிந்திருக்கிறது . தேவபூமியில் அருள் செய்தவன்..மீதி இருக்கும் அவள் பாடல்களைத் தொகுத்து வெளியிட எங்களுக்கு கூடிய விரைவில் அருள வேணும்.

you rocked thangamani..


Amma- எங்கே அவள் என்றே மனம்..

 எங்கே அவள் என்றே மனம்..


ஏம்மா..டல்லா இருக்கே..ஊருக்கு போணுமேன்னா..நான் தான் winter vacation ல வரப் போறேனே..சமாதானம் சொல்ல..அதெல்லாம் இல்ல ..எனக்கு ஒரே ஒரு குறை..கம்ப்யூட்டர் use பண்ணவே தெரியலையே எனக்கு..சின்ன குழந்தைகளுக்கு தெரியறது கூட எனக்குத் தெரியலையே..so இதுதான் உன் mood off க்கு reason aa..ஏதாவது செய்யலாம் இரு.. சொல்லிட்டேனே தவிர..இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ஊருக்கு கிளம்ப..

ஆஃபிஸிலிருந்து வந்த பிராண நாதர் கிட்ட சொன்னேன்..ஜுஜுபி matter ..அந்த பழைய laptop ஒண்ணு இருக்கே ..அதை எடு.. சொல்லிக் கொடுத்துடலாம்.. மூணு மணி நேரம் class. இந்தாங்கோ..இனிமே இது உங்க laptop..enjoy ..என்றார்.


அம்மாவுக்கு ஒரே குஷி. சொன்னதெல்லாம் நோட்ஸ் எடுத்து வெச்சிண்டா.. doubt வரச்சே ஃபோன் பண்ணி கேட்டுக்கறேன்..ஊருக்கு போகறதுக்குள்ளே செம்ம practice.

ஊருக்கு போய் , laptop திறந்து நோட்ஸ் படி எல்லாம் step by step follow பண்ணி..

school student மாதிரி ஆனா..

சாப்பிட்டியா ல ஆரம்பிச்சு..எல்லாம் மெயில் தான்..எல்லாருக்கும் மெயில் மெயில் தான். ஓய்வூதியம் பத்தின எல்லா rules ம் அவள் விரல் நுனியில்.consultancy through mail தான்.

திடீர் திடீர்னு சந்தேகம் வரும் பொது எனக்கு ஃபோனெ வரும்..எதோ cookies..cookies நு வரதே..என்ன பண்ணனும்..அது Dehradun famous இல்லயோ..என்பாள்.its time to clean your PC ..என்ன பண்ணலாம்..அம்மா..விட்டுடு அதல்லாம் என்பேன்.


எல்லா நியூஸ் பேப்பரும் படிச்சுடுவா..முதல்ல பார்க்கிறது bullion rate. local, national, international news எல்லாம் படிச்சுட்டு எனக்கு update பண்ணிடுவா..அதோட ரொம்ப முக்கியம்.. சீரியல் எல்லாம் பாக்க கத்துண்டாச்சு..you tube ல எல்லா ஸ்லோகம் கேட்பது..Skype ல வாயேன்..பார்த்து ஒரு வாரமாச்சு என்பாள்..இப்படி வாழ்க்கையில் ஒரு புது தெம்போடு ஓடிக் கொண்டிருந்த நேரம்..

MND ( motor neuron disease) என்ற எமன்..

வரவேற்பில்லாமலே வீட்டில் நுழைந்தான்..

பேசித் தள்ளிய அம்மா..லேசா குழற ஆரம்பித்தாள். தண்ணீ கூட குடிக்க முடியல இப்பொ எல்லாம். ..கொஞ்ச வேலை பண்ணாலே ரொம்ப weak ஆ இருக்கென்றாள்..பட பட பேச்சு..குடு குடு ஒட்டம்..எல்லாவற்றையும் தூக்கிப் போட்ட கொடுரன் இந்த MND.

மருந்தே இல்லா..குணமே ஆகாத ஒரு அரக்கன்..சொட்டு சொட்டா அம்மா சுரத்தில்லாமல் போனாள். பேச்சு நின்றது.. பேச நினைத்ததெல்லாம் எழுதி எழுதி காண்பிப்பாள். சகோதரிகளுடன் பேசும் சந்தோஷம் நின்று..எல்லாருடனும் இறுதி மூச்சு வரை மெயிலில் தொடர்பு கொண்டாள்..

் அவள் கணினியில் எழுதி அனுப்பிய மடல்கள்..அதில் அவள் அன்பு, வாஞ்சை எல்லாம் கொட்டித் தீர்த்த விதம்..

இன்றோடு மூன்று வருடம் ஆச்சு..அவள் என்னை விட்டுப் போய்..

ஆனால்..இன்னும் எழும் கேள்வி..எந்த உந்துதல் அவளைக் கணினி கற்க வைத்தது? ஏன் இந்த அவள் முதல் முயற்சி ஒரு முடிவுக்கா..

விடை தெரியல..

Ammaa

 10 th September.


கவனிப்பார் யாருமில்லையென

கலங்காத என் வீட்டு செடிகள்.


வறண்ட நாட்களும்

வர்தா புயலும்

வந்தும் தான் போயின.

வாடிப் போனாலும்

வாரி அடித்து சென்றாலும்.

மீண்டு(ம்) எழுந்தது

மருந்தான மணத்தக்காளியும்..

மணம்  தரும் கருவேப்பிலையும்.


அம்மா..இட்ட உரம்..

மரஞ்செடிக்கு மட்டுமல்ல..என்

மனதுக்கும் கூடத்தான்..

miss u maa


Amma

 அரளிப்பூவும் ..என்

அம்மா எங்கே தேடும்போது..இந்த

அகிலாப்பூ அழுவது..உனக்கு

கேட்கிறதா அம்மா..?


அஞ்சு வருஷம் ஓடிப்போச்சு..

அங்கே நீ நலமா அம்மா..?


அம்மா...அம்மா தான்..


என் அம்மா..பிரேமா.

 என் அம்மா..பிரேமா.


.


உன் வீட்டுத் தோட்டத்தின்..

எலுமிச்சையும் கேட்டுப்பார்..


உன் பெயர் ..சொல்லுமே அம்மா..


ஆறாவது வருடம்..

ஆறவில்லை இன்னும்..


பாசம் என்றால் பிரேமா..

பாதாம் அல்வா என்றால் பிரேமா..


கறார் பேர்வழி பிரேமா..

கர கர தட்டைக்கு பிரேமா..


Punctualityக்கு பிரேமா

பச்சை இங்க்கில் கையெழுத்து போட்ட பிரேமா..


சுத்தத்துக்கு மறுபெயர் பிரேமா..கடைகண்ணி..

சுத்தவும் அலுக்காத பிரேமா..


மீசையில்லாத பாரதி பிரேமா..நம்ம

தோசை பாட்டியும் பிரேமா..


Sister களின் master பிரேமா..

Mr.அப்புவின் ..ring master பிரேமா.


பேரன் பேத்திகளின் pet பிரேமா..

பிள்ளையாருடன் பேரம் பேசும் பிரேமா


அகிலாவே அகிலம் என்ற பிரேமா.

அகம் முழுதும் அன்பே பிரேமா..


அகலாமல் அவளைக் காக்க..கடைசிக்

காலத்தில் வாய்ப்பு தந்தாள்..


உலகமாக இருந்தவள்..வேறு

உலகம் சென்ற நாள் இது..

உள்ளத்தின் பாரத்தை..

உங்களுடன் இறக்கி வைத்தேன்..


அவள் ஆசி நமக்கு என்றும் உண்டு.

அவள் ஆவியான பின்னும் கூட..


அன்புடன் அகிலா..

Friday, September 3, 2021

படம்_பார்த்து_கதை-கொடுப்பினை

 #படம்_பார்த்து_கதை.


#கொடுப்பினை


"ஏங்க..இந்த அரை டிராயரைப் போட்டுண்டு வெளிய வராதீங்கனு எத்தனை தடவை சொல்றது..அவங்க எல்லாம் என்ன நினைச்சுப்பாங்க" என்று கிரிஜா கேட்கவும்.."போடி போ..என் ட்ரஸ்ஸை யார் பார்க்கப் போறாங்க அங்கேனு" நக்கலடித்தபடி கைலாசம் மாமா.


அந்த பெரிய பில்டிங்கின் கேட் முன் சென்றதும்..வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டி சலாமடித்தபடி.." எல்லாரும் உங்களுக்காக தான் காத்துக்கிட்டிருக்காங்க ..போங்க சீக்கிரம் நு வாய் நிறைய வரவேற்றான்.

இண்டர்காமில் சொன்னது தான் தாமதம்..


"சகலை..வந்துட்டீங்களா..' மூணாவது மாடிலேர்ந்து மாதவன்.

டேய்..கைலாசம்..சீக்கிரம் வர மாட்டியா..கிளம்பணும் கிளம்பணும்னு கால்ல கஞ்சியோட பறப்பியே அப்பறம்..சீனு பெரியப்பா சிட்டாய் வந்தார்.

அங்கே இவரைப் பார்த்து ஓடி வந்த சேகர்..வாரத்தில் இந்த ஒரு நாளுக்காக தாண்டா காத்திண்டு இருக்கேன் என்று நட்பின் உரிமையோடு..


ஏய கிரி்ஜா..வந்தாச்சா..வா..வா..இங்க க்ளப் ஹவுஸில் எல்லாரும் உனக்காக தான் காத்திட்டிருக்கோம். அவள் கையை இழுத்தபடி..கோமதி மாமி.


தன் கையில் கொண்டு வந்திருந்த கிருஷ்ண ஜயந்தி பட்சணமெல்லாம் எல்லாருக்கும் கொடுத்தாள் கிரிஜா


சொல்லு சொல்லு ..போன வாரம் கல்யாணத்துக்கு போனியே..எப்படி இருந்தது..?

யார் யார் வந்தா..என்ன மெனு.. வரிசையாக் கேள்விகள்.

இவர் செளக்கியமா..அவர்கள் செளக்கியமா.. ஒருத்தரை விடாமல் விசாரிப்புகள்.

அந்தப் பக்கம்..கைலாசம் மாமாவுடன் சேர்ந்து வெடிச் சிரிப்பு சத்தம் அந்த காம்பவுண்ட்டிலே எதிரொலித்தது..


மணி அஞ்சு அடிக்கவும்..கைலாசமும் கிரிஜாவும் கிளம்ப ஆரம்பிக்க..இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருந்துட்டு போங்களேன் என்று அன்புக் கட்டளைகள்.


ஒரு வழியா..அஞ்சே முக்காலுக்கு..இனிமே ரொம்ப நேரமாகிடும்..கிளம்பிடுங்கோனு அவர்களே சொல்ல..அடுத்த வாரம் பார்க்கலாம் 

அந்த காம்பவுண்டு கேட்டை கடக்கையில்..

"happy old age home ' என்ற பெயர்ப் பலகையின்  பின்..கலங்கிய கண்களுடன் .கை..வலிக்க வலிக்க ..டாட்டா காட்டிய உறவு மற்றும் நட்புகள்.


"அப்பா..எங்கே இருக்கீங்க..நான் வந்து பிக் அப் பண்ணட்டுமா?"..என்ற மகனின் குரல் தேனாய் காதுகளில்..


(போன வருஷம் எழுதின கதை)


Wednesday, September 1, 2021

September மாதம்

 September மாதம்..September மாதம்


வருஷத்தின் ஒன்பதாம் number

 வந்தாச்சு இப்போ  September.


நாமே வாழ்க்கையின் driver

இருப்போமே என்றும் clever.


எல்லாரும் இங்கே player

நாளும் அடிப்போமே sixer.


உபயோகிப்போம் நம்ம brain power

ஆகுவோமே mind blower.


பூந்தோட்டத்தில் நாம் sunflower

பரப்புவோம் அன்பின் power.


இதெல்லாம் எப்போதும் remember.

இன்பமாகுமே இந்த September😀😀


அன்புடன்..