2012. மே மாதம். ஸ்கூலில் இருந்து prize ம் ,பையுமா ஓடி வந்தாள் என் பெண். இரண்டு certifcate, 2 புக் . புக்கைத் திருப்பி பார்த்தேன். கங்கை ஆற்றைப் பற்றி ஒருவர் பக்தியோடு, தேசப் பற்றோடும் இந்தியில் எழுதிய கவிதைத் தொகுப்பு. free ஆ school க்கு distribute பண்ணச் சொல்லிட்டார் போல இருக்கு. அதனால் 2புக்கும்.ஒரே புக்..அவரே publisher ம் கூட..
திடீர்னு எதோ ஐடியா தோண ,வீட்டுக்காரருக்கு ஃபோன் போட்டு சொன்னேன்.. உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு..இந்த வேலையெல்லாம் அவர் எப்படி செய்வார்..எங்கியாவது போய் வாங்கிக் கட்டிண்டு வராதேனு ஒரே அட்வைஸ்..
ஒரு சுப முகூர்த்த நாளில் அந்த writer cum publisher கிட்ட போனேன் ..என் மாமியார் தங்கமணி சிவபெருமான் மேல் தினமும் எழுதிக் குவித்த கவிதைகளை எடுத்துண்டு. publishing க்கு வந்திருக்கேன் என்று சொன்னதும் வாயெல்லாம் பல்லானவர், பல்பு வாங்கின மாதிரி ஆனார் நான் நீட்டிய தூய தமிழ் கவிதைகளைப் பார்த்து..yeah kaunsi basha mein hai ...
நான் ரொம்ப பெருமையா இது தமிழ் என்றேன்..behenji yeah nahi ho payega..sorry. aap Chinnai ( Chennai அப்படி அழுத்திி தான் சொல்வா அங்கே எல்லாம்.. ரொம்ப ஏமாற்றத்தோட வீடு திரும்பின கொஞ்ச நேரத்தில் அவரிடமிருந்து ஒரு SMS. I am ready to take this project.
தமிழ் வாசமே இல்லாத தேவ பூமி தேஹ்ராதூனில் , முதல் முதலாக ஒரு தமிழ்ப் புத்தக அச்சடிப்பு துவக்கம். முதல் கட்ட பிழை திருத்தங்கள் சந்த வசந்த ஐயா இலந்தையும், அனந்த், சிவசிவா அனைவரும் செய்து தர..நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் புத்தக வேலை நடப்பு. தினமும் proof reading. correction. correction க்கு correction.
thangamani அம்மாவிடம் சொன்னதும், தனக்கே உரிய அடக்கத்தோடு ' அதெல்லாம் எதுக்கு செலவு அகிலா.. blog போதும் எனக்கு' ..நீயும் அலையாதே மழையிலெல்லாம்..( அது மழை கொட்டும் காலம் அப்போ)..அந்த வாஞ்சை..அப்பப்பா..இதுக்கே இவளுக்கு ஏதாவது செஞ்சுடணும்னு ஒரு வைராக்கியம்.
அட்டை கலர் selected. படம் வேணுமே..அந்த publisher நிறைய modern art of Shiva எல்லாம் காண்பிச்சு அதுக்கு தனி ரேட் பேசினார். திடீர்னு ஒரு ஐடியா எனக்கு..' ஐஷு ..நீ தான் drawing பண்ணுவியே..simple ஆ நம்மூர் கோயில் கோபுரம்..ஒரு சிவ லிங்கம் try பன்ணு என்றேன்..அவள் வரைந்த்தது அட்டைப் படமாய் அச்சில். தங்கமணிக்கு ஏக சந்தோஷம்.
book publishing..மிக எளிமையான முறையில் கனாடாவிலிருந்து வந்த எங்கள் தமிழ் ஆசான் அனந்த் மாமா கையால், tupkeshwar shiva temple ,Dehradun சன்னதியில் ஒரு கொட்டும் மழை நாளில் , மந்திரங்கள் முழங்க , அமைதியாய் நடைப் பெற்றது.
this day that year 2012, an unforgettable day in our life.what was thought impossible was made possible.
'என் பணி அரன் துதி' புத்தகம் வெளியிடப்பட்ட நாள்..எங்கள் வாழ்வில் எதையொ பெரிசா சாதித்த நிறைவைத் தந்த நாள்.
இன்னும் நிறைய பாடல்கள் குவிந்திருக்கிறது . தேவபூமியில் அருள் செய்தவன்..மீதி இருக்கும் அவள் பாடல்களைத் தொகுத்து வெளியிட எங்களுக்கு கூடிய விரைவில் அருள வேணும்.
you rocked thangamani..
No comments:
Post a Comment