Wednesday, March 30, 2022

இட்லி தினம்

 ஒரு நாளும் உனை மறவாத பிரியாத வரம் வேண்டும்.


ஆவியில் வெந்த இட்லி..நம்

ஆவியில் கலந்த இட்லி.


அரிசியும் உளுந்தும் ..

அளவாய் அள்ளிப்போட..

அரட்டை கச்சேரியோடு

ஆட்டுிக்கல்லில் அரைத்தெடுக்க..

ஆஹா..பேஷ்.பேஷ்..

அந்தக் கால இட்லி..


வெள்ளைத் துணியில் இட்டு

 வாகாய் வேக வைத்து..

வகையாய் சட்னி சாம்பாருடன்

விள்ளல் காட்டுமே விண்ணுலகம்


நாடு விட்டு போனாலும்

நா தேடும் ருசி..நினைத்தாலே..

நா ஊறும் ருசி..

நம்ம ஊரு இட்டிலி..


பட்டன் இட்லியது

பட்டர் போல கரையுமே..

ரவா இட்லியுமே..

அவாவும் தூண்டுமே..

மல்லிப்பூ இட்லிக்கு

மவுசு ரொம்ப அதிகம்.

குஷ்பூ இட்டிலிக்கோ..

கூட்டமிங்கு கூடுமே..


மிக்ஸி இட்டிலி

முழுங்கியும் வைக்க

க்ரண்டரும் வந்ததே

கவலை தீர்க்க..

ஆட்டும் எண்ணம்

அடியோடு தொலைய

பாக்கெட்டில் வந்தது..படும்

பாட்டை குறைத்திடவே


நோகாமல் கிடைத்தாலும்

நொந்து போக வைக்குமே..


அரைத்து வைத்த மாவுதான்

ஆபத்பாந்தவன் எப்போதும்..


இட்லிக்கு இணையொன்று

இங்குண்டோ சொல்வீரே..


மிளகாய்ப் பொடி இட்லிக்கு

மிஞ்சியதுண்டோ. ஓர் விருந்து?


#happy_idli_day


Tuesday, March 29, 2022

இருந்துட்டு போட்டுமே..!!!

 இருந்துட்டு போட்டுமே..!!!


எடுத்து விட்டெறிய

என் கை  பரபரக்க..

இருந்துட்டு போட்டும்..

இது ஒன்னு மட்டுந்தானே..

இதயஞ் சொல்ல..

இப்படியாக..

SHELF ஒழிக்கும் படலம்..


போகியும் பொங்கல் போல

வருஷாந்திர  மேளா..


பழையது கழித்து

புதியதுக்கு..இடம் தரணும்.

புது வாசம் வீசும் ..

புத்தகமும் நோட்டும்..

புதுமனை புகு விழா..


கடை பரப்பினேன்..

கழித்துக் கட்ட..


google இருக்கே..

GK books க்கு வேலை?

பொது அறிவை..

பேப்பர்காரன்..பேரத்துக்கா..??

சாமி(சரஸ்வதி) கண்ணைக் குத்தும்,,

இருந்துட்டு போகட்டுமே..


ஆசையாய் சேர்த்த

amarchitra katha வோடு

fairy யும் jataka வும்

ராமாயண மும்,பாரதமும்..

படமும் கதையுமாய்..

பழைய நினைவுகளும்..

இருந்துிட்டு போட்டுமே..


இலக்கணம் இழந்த பேச்சிங்கே

wren and martin...தேவையா.?

என்னிக்காவது உதவும்..

இருந்துட்டு போட்டுமே...


படித்த பள்ளிகளின்...(ஒரு பெரிய list உண்டு)

school magazines..

கட்டுரையும்..ஓவியமும்..

group photoக்களும்..

குழந்தைகளின் கைவண்ணமும்

இருந்துட்டு போட்டுமே..


சோழியும்.. தாயமும்..

snake nd ladder m

சோகமா...என்னைப் பார்க்க

இது என்ன இடம் அடைக்கும்..

இருந்துட்டு போட்டுமே..


இப்படியாக..

பழசுகளின்......

பாசப் பார்வை...


இரக்கம் காட்டினேன்..

இருந்துட்டு போகட்டுமேனு...


கஷ்டந்தான்..

புதுசே..

கொஞ்சம்..adjust பண்ணு..

பழசாக... நீயும் ஆகும் வரை..


வழிந்தது...

மீண்டும் shelf..

இடிசலோடு..ஒர் இட ஒதுக்கீடு..

எதிர்ப்புகள்...ஏதுமின்றி..

வந்துட்டாரையா_வந்துட்டாரு

 #வந்துட்டாரையா_வந்துட்டாரு..


சுப்ரபாதம் சொல்லாமலே..

சுறுசுறுப்பா வந்துட்டாரு..

சுட்டெரிக்கப் போறேன்னு

சூளுரைச்சு வந்துட்டாரு..


சத்தமிடும் குளிர்ப்பெட்டி

சன்னமாக்குது குயிலோசையுமே

சட்டுனு எழுந்திடவே

சுருங்குது மனமிங்கே..


ஓவர்டைம் செய்ய..

ஓடோடி வந்தவரே..

ஓடி வரும் மேகத்துக்கு

ஓரமாய் ஓர்  இடம் கொடப்பா..


ஈரம் காணா நிலமிங்கு.

ஈனஸ்வரத்தில் தவிக்கிறதே

வர மொன்று தாருமையா..

வான் மழையும் பொழிந்திடவே..


மின்னலும்் விளக்கேந்த்

இடியும் மத்தளம் முழங்க

கொட்டும் மழை சத்தம் கேட்டு

நாட்கள் ஆச்சு எத்தனையோ


கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்..

கூடட்டும் மேகங்கள்

கொட்டட்டும் மழை..

கொண்டாட்டம் துவங்கட்டும்..


#மழை_வேண்டி_பிரார்த்திப்போம்

Monday, March 28, 2022

த்கங்கமணி

 சத்தம் போடாத..

சாதனை யாளர்கள்.

சரித்திரத்தில்...... பலர் 

எம் குடும்ப ….. சரித்திர நாயகி..

எங்கள் தங்கமணி நீதானே…


”வயசாச்சு எனக்கு..

வேறெதுவும் முடியாதுனு..”

வெறுமை வாழ்க்கை.. உனக்கில்லை 

Versatile blogger award….

விருதுக்கு சொந்தக்காரி நீ


திருக்கயிலை நாதன் முதல்..

..திருவொற்றி யுறைக்கோன் வரையில்

திரும்பிய திசையெலாம்..

திருக்கோலம் கொண்டவனை..

தேடிப் போய்ப் பார்த்ததில்லை..

தேன் சொட்டும் பாவின் வழி

”என் பணி அரன்  துதியென்று”..

என்னாளும் துதித்த நீ..

எம்மை விட்டுச் சென்ற நாள்..


இன்னாள்..28-03-2014

வருத்தங்கள்….. …

தேடுது.. வார்த்தைகளை..

Miss you thangamani..


தோற்றம்  : 05-10-1939        மறைவு  : 28-03-2014

thangamani blog: http://kavidhaithuligal.blogspot.in/


தங்கமணி..எங்கே நீ..

 Thangamani Srinivasan..three years gone without you. But no day passes without thinking of you .

 its not just a post to write about a mother in law. Just trying to learn the life of love and purely unconditional affection you poured on each and every member of the family and to anyone you came across.


தங்கமணி..எங்கே நீ..



2008..ஒரு மத்தியான நேரம். ஃபோன் பெல்லடிக்க..மறுமுனையில் தங்கமணி..(என் மாமியார்)..

என்ன பண்றே அகிலா..

ஒண்ணும் இல்லமா..இப்போதான் ஐஷுவோட ஒரு fight ..ஒரே மூட் அவுட்.

நீங்க சொல்லுங்கோம்மா..என்ன விஷயம்..

நான் சொல்றத கொஞ்சம் செய்வியா..எப்போதும் போல ஒரு அன்பு வழியும் தொனியில்..ம்ம்ம்ம்..என்னது ம்மா..

ஒரு கவிதை எழுதேன்.தலைப்பு .'தலைமுறை இடைவெளி'..

ஐயோ சாமி..அம்மா..are you OK? யாரைப் பார்த்து என்ன கேட்கிறேள்..no no no..ஷாருக் ஸ்டைலில் நான் அலற..நாளைக்கு அனுப்பு எனக்கு .bye ..என்றாள்.

இப்படியாக என் முதல் கவிதை அரங்கேறியது ..எனக்குத் தெரியும் உன்னால் முடியும்னு என்று mail அனுப்பினாள்..

அதற்கு பிறகு சந்த வசந்தத்தில் எல்லா கவியரங்கியிலும் என்னை சேர்த்து விடுவாள்..தங்கமணி மருமகளே..கொஞ்சம் இலக்கணம் கத்துக்கோயேன் உன் அம்மாவிடம்..செவிடன் காதில் ஊதிய சங்கு தான்...

நீ எழுது உன் பாணியில் என்பாள்.


கமகமனு சமையல்..

கைவந்த கலை..

கவிதை எழுதி..

கடவுளைக் கண்டாள்.

கணினி அவளுக்கு

கைப் பொம்மை

காமெரா கண்டாலே

காண்பதை படம்பிடிப்பாள்

குழந்தைகள் கண்டால்

குறையும் வயது

கடுகடு முகமே

கண்டதே இல்லை..

கடகடனு சொல்வாள்

கேட்டதும் ராகங்களை

குளுகுளு பானங்கள்

கொழுப்பாய் குடிப்பாள்

கொல்கொல் இருமலில்

கழிப்பாள் இரவுகளை..

ஆட்டோ பாட்டி பேரிலிவள்

ஆடாது அசையாதாள்

ஆட்டும் துன்பத்திலும்..

அன்பு தான் வெல்லும்

ஆணித்தரமாய் சொன்னாளே

அனைவரின் பிரியம்

அன்பின் உயரம்..

ஆண்டாள் அன்பினால்..

அடைந்தாள் அவனடி..

அரைமூச்சிலும்

அரை மயக்கதிலும்

அருகே வா என்றாள்..

அம்மாவை அழைத்துவா.

அருமையா பார்த்துக்கோ

அவளுக்கும் நீ வேணுமென்றாள்.

மனமொன்று வேண்டும்..தங்க

மணி போல் என்றும்.

மாய்ந்து பேசுகிறார்..நீ

மறைந்த பின்னும்..


தங்கமணி..

எங்கே நீ..

Saturday, March 26, 2022

Wedding anniversary

 நேற்றோடு நிறைவு

இருபத்து மூன்று வருட

இல்லற வாழ்வு..


அந்த நாள்..

வளையம் விட்டு

வைரம ணிந்தது என் காது..

வளையல் இதுவரை

 காணா கையோ..

வடித்தது ரத்தம்..


சிகை அலங்காரம் அத்தைகள் செய்ய..

சித்திகளோ... சுத்தி சுத்தி வேலை செய்ய..

parlour போகாமலே..

பளிச்சென்று make up..(courtesy Mrs Raghu Nathan)

தாழம்பூ பின்னல்..

தலையை கனமாக்க..(ஏற்கனவே நமக்கு உண்டு..!!!)


அண்ணனும் தம்பிகளும்..

ஆர்கெஸ்ட்ரா வுடன் ஆட..

bindaas life மாறி..

பந்தத்தில் இணைந்த நாள்..


புகைப்படங்களை புரட்டினேன்..

ஒல்லியாய் இருந்தவரெல்லாம்

oh..இப்பொ ஒரு சுத்து பெருத்தாச்சு..

உயிரோட்டமாய் இருந்த சிலர்..

உலகம் வேறு போயாச்சு..

miss those loved ones..


நகரும் வாழ்க்கையோடு..

நகரம் பல சென்றாலும்..

நிற்பது நினைவில்..

இன்னாள்  என்றும்...பொன்னாளாய்..


Wednesday, March 23, 2022

புத்தம் புது காலை..

 புத்தம் புது காலை..

good morning சொன்னது 

கொஞ்சியே..குயில்கள்..

பூபாளம் இசைத்தது..

பட்டாம் பூச்சிகள்..

கடைசி சொட்டு தூக்கத்தை

விட்டுக் கொடுத்து..

விரிய விழைந்த பூக்கள்..


பரீட்சைக்கு நேரமாச்சு

பதறியபடி..பள்ளிச்சிறார்கள்..

குழந்தைகளை பஸ் ஏற்றி

குட்டி மாநாடு போடும்...அம்மாக்கள்

jogging நு சொல்லி ஜகா வாங்கி

jolly அரட்டை அடிக்கும்...அப்பாக்கள்

மருமகளுக்கு டிமிக்கு கொடுத்து

மாங்கு மாங்கென்று 

exercise செய்யும்..மாமியார்கள்

மாமி கொடுத்த காபி!(கஷாயம்..) மறக்க

MTR வாசலில் க்யூவில் நிற்கும்..மாமாக்கள்..

காதலியின் தரிசனம் காலையிலேயே கிடைக்க

காத்துக் கிடக்கும்...கட்டிளங் காளையர்கள..

senior citizens சிரிப்பது எப்படினு ..

seriousஆ கத்துக்கும்..laughter clubs

(என்னையும் கேட்டார்கள்.. கொஞ்ச நாள் போட்டும்னேன்)

வாக்கிங் வந்தும் வானத்தை பார்த்து

வாழ்க்கை யோசனையோடு ஒரு சிலர்

இப்படி தினம் வந்து போவோரை ந்ம்பி

வியாபாரம் நடத்தும் ஒரு கூட்டம்....

காலை வீசி நடக்கத் தானே வந்தே.

கவிதை என்ன வேண்டிக் கிடக்கு..

கடமை நினைவில் வர..

நடக்க ஆரம்பித்தேன்...

இந்த நாள் நல்ல நாளாய்

எல்லாருக்கும் இருக்கனும் என்று..

good day to all

Monday, March 14, 2022

urvasi urvasi take it easy policy

 #urvasi urvasi take it easy policy..


உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் வைத்தேன்..

(ஊரில் இருக்கும் கணவன்)  ஒருநாளும் பிரியாத வரம் தருவாய் என்று..

உருகி வேண்டும் உமைகள் ..


சைட்டில் (site)இருக்கும் சத்தியவானுடன்

Skype இல் சரடு கட்டிண்டு

கணினி முன் காலில் விழுந்து

காலம் மாறினால் நம் காதல் மாறுமா பாட்டு BGM உடன்..

காரடையான் நோன்பு..


வெல்ல அடை..

வெண்ணையோடு வழிச்சு ..

உப்பு அடை..

ஊ ஊனு ஊதி சூடா..

அப்படியேச் சாப்பிடணும்..

'ஆ'னு அவர் வாய் பார்க்க..


அடடடா..நாழி ஆகிடுத்து..

மெஸ் மூடிடப்போறான்..

காஞ்ச ரொட்டியும்..

கருப்பு தாலும்கூட

கிடைக்காம போய்டப்போறது..

போங்கோ..கிளம்புங்கோ..

நானும் போகணும்..

நாலு வீட்டுக்கு 

நம்மாத்து ப்ரசாதம்னா

நண்பிகளுக்கு உசுருனு..


Take it easy urvashi

Wednesday, March 9, 2022

கேஸரி

 ஸ ரி..

ஸ ரி..

ஸ ரி..


அடுத்தது பாடும்மா..

ஸ ரி

ஸ ரி

கே..ஸ..ரி..மா.


Ice cream மட்டுந்தான் scoop ல எடுக்கணுமா..?


கேஸரியும் எடுக்கலாம்..


சரி பாதியாய் பிரிக்கலாம்..


Distribution made easy and every one will get cashew and badam😁😋


கேஸரி ஸ்பெஷல் for satyanarayana poojai 


Prayed for all my friends.🙏


Saturday, March 5, 2022

அச்சே தின்

 Acche din..

The wait is on..


அஞ்சறைப் பெட்டியிலும்

அரிசி டப்பாவிலும்

அடுக்கின புடவையிலும்

அலமாரி இடுக்கிலும்


 மடித்தும் சுருட்டியும்

மறைச்சு வெச்சேனே

மாங்கா நெக்லெஸும்

முத்து வளையலுமா

மாறும் ஒருநாள்

மகளுக்கு சீராகனு


விளக்கேற்றிய மாலை

வீட்டோர் எல்லாம்

விறுவிறு சீரியலில்

வாய்பிளந்த வேளை

அறிக்கை வந்தது

ஆயிரமும் ஐநூறும்

அந்திமக் கிரியையில்


ஆசையாய் வளர்ந்தது

அழுது புலம்பியபடி

அம்மாவைப் பிரிந்தது

அவளருமைக் குழந்தை.


அப்பவும் நம்பிக்கை

'அச்சே தின்'

அதோ வந்திடுமென்று

காத்திருப்பு

கருப்பொழிந்து

வெள்ளைப் பூக்கள்

வாழ்வில் மலருமென்று..


சொந்தக் காசும்

சொந்தமில்லாமல்..

வந்த காசும்

வாழ விடாமல்..


வழியெல்லாம் அடைப்பு

வளர்ச்சியென மார்த்தட்டல்

வருமொரு நல்ல நாள்

வெறும் கனவாகிடுமோ..!!


நம்பிக்கைக் கவிதை

நவம்பர் மாதத்தில்

மன உளைச்சல்

மார்ச் மாதத்தில்

வானிலை மாற்றமாய்

வாக்குகள் மாற

வாக்காளன் பாடு

வீதியிலே..வரிசையிலே..


'அச்சே தின்'

அவ்வப்போது..

அழுத்திச் சொல்கிறேன்..

அப்படியாவது

வராதா என்று..

இவங்க_வேற_லெவல்

 #இவங்க_வேற_லெவல்


வீட்டுத் திண்ணையில் நின்று பராக்கு பார்த்துக் கொண்டிருந்தேன்..

ஒரு ஆட்டோ..

ரொம்ப மெதுவாக..இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போய்ட்டு வந்து கொண்டே இருந்தது..

சரி.. ஏதோ அட்ரஸ் தேடறாங்க போலருக்குனு வேடிக்கை பார்த்துக் கொணடு இருந்தேன்.

எங்க தெருவில் மொத்தம் எட்டு வீடு அதில் இரண்டு அபார்ட்மெண்ட்..

இதுல இத்தனை நேரம் தேட என்ன இருக்குனு நான் "சிந்து பைரவி " ஜனகராஜ் ஆக..

திண்ணையை விட்டு..எழுந்து பாக்கறேன்..


ஆத்தாடி..

ஷாக் ஆகிட்டேன்..


உள்ளே ஒரு அம்மா..அவங்க குட்டிப் பாப்பா...

கப்பில சாதம்..டம்ளரில் தண்ணீர்..


ஆட்டோ அப்பா..நகர்வலம் கூட்டிக் கொண்டு போனபடி..


பாப்பாவுக்கு சாதம் ஊட்டிக் கொண்டிருந்தாங்க..அம்மா..


நிலாவை காட்டி சோறு ஊட்டி பார்த்திருக்கேன்..

டீவியைக் காட்டி திணிச்சவங்க  இருக்காங்க..

மொபைலைக் காட்டி மடக் மடக்னு முழுங்க வெச்சவங்க இருக்காங்க..


இவங்க வேற லெவல்..

ஆட்டமே காணாத ஆட்டோவில்..

ஆ...அம்..அம்மா🤔

Soup dosa

 வாங்க..வாங்க.


சைட் டிஷ் இல்லாமலேயே

அப்படியே சாப்பிடலாம்..


#நான்_கண்டுபிடிச்ச_தோசை.


#soup_dosa


இருந்ததோ ஒரே ஒரு கப்பு தோசை மாவு..

என்ன செய்யலாம்னு யோசிக்க...


சேர்த்தேன்..

1 spoon rava, 2 spoon அரிசி மாவு, 1 spoon கடலை மாவு..

மிக்ஸ் பண்ணியாச்சு


இப்போதான் வருது கதையில twist.


Soup செய்ய வேக வைத்து அரைத்து வைத்திருந்த கோஸ், காரட், வெங்காயம் ,தாக்காளி போட்டு கலக்கினேன் இதை மாவுடன்.


தாளித்தேன் கடுகு,ஜீரகம் ,மிளகு.

கிள்ளிப் போட்டேன் கருவேப்பிலை, கொத்தமல்லி..


கொண்டா..கொண்டா..என்று..

அண்டா காலி😁


Wednesday, March 2, 2022

கண்ணன்

 Pic courtesy:  Padma Gopal..

Good day to all


பஞ்சு மெத்தை யுந்தான்..உன்

கொஞ்சும் கழல் பாதமன்றோ

காது கொடுத்துக் கேட்பேனே..

காதல்  அதுவும் சொல்வதாலே

பாதம் உனது  பற்றியிங்கே

பாவி நானுன் அடிமையானேன்

பார்க்கா நாளிலும் பரவசமே..உனை

பற்றிய கையின் வாசமுமே

போகாதேடி என்னைவிட்டு

பித்தனாகிப் போவேனே நானுந்தான்..


காசு..பணம்..துட்டு..money..money

 காசு..பணம்..துட்டு..money..money


சேர்க்கக் கூடாது

செலவழிக்கக் கூடாது

போடவும் கூடாது

எடுக்கவும் கூடாது

கார்டு கூடாது

காசோலையும் கூடாது

சம்பளக் கணக்கோ

சேமிப்புக் கணக்கோ

சும்மா போட்டெடுத்தா

சுளையா அபராதம்

வரவு வரும்வரை

வருந்தி அழைத்தோர்

வருத்துவது ஏனோ

வாயில்லா ஜீவன்களை

நாளும் ஒரு சட்டம்

நல்ல குழப்பமப்பா

நடுத்தர வர்க்கமிங்கே

நசுங்கி அழியுதப்பா..


நாளை சந்ததிக் கிங்கே

நாலுகாசு நிற்குமா இங்கே

நல்லா நம்மை ஏசுமப்பா

நாம் பட்ட துன்பமறியாமல்..

Tuesday, March 1, 2022

ஏதாவது_எழுதலாமே

 '#ஏதாவது_எழுதலாமே' நம்ம மார்க்கு எப்பவுமே உசுப்பி விடுவார்.


' எதையாவது எழுதிட்டு வராதே..ஒழுங்கா கேள்வியைப் படிச்சுட்டு அப்பறம் எழுது என்று டென்ஷனோட இருப்பார் அம்மாவும் அப்பாவும்.


பரீட்சை ஜுரம்..ரம்பம் பம் பம் ..ஆரம்பம்..

இன்றிலிருந்து பல வீடுகளில்..


"மார்க்கு' நமக்கு  'பந்து' இல்லைனு கொஞ்ச நாள் டூ விட்டால் தான் 

மார்க் வரும்..

மார்க்கமும் கிடைக்கும்.


பொதுத் தேர்வு எழுதும் எல்லா வீட்டு செல்லங்களுக்கும் என்னோட அன்பான wishes. 


படிச்சதுதான் வரணும்னு வேண்டிக்காதீங்க..


எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் தரக்கூடிய wisdom and intelligence கொடு கடவுளே என்று வேண்டிக்கோங்க.


சிலபஸே இல்லாத வாழ்க்கைப் பாடத்தில் எத்தனை கேள்விகளுக்கு பதில் தருகிறோம்.


அப்படி இருக்கும்போது..சிலபஸ் உள்ள ஸ்கூல் பாடத்திலிருந்து வரும் கேள்விகள் பெரியதா  என்ன?


Confident ஆ போங்க ..over confidence இல்லாமல்..


All the very best to students of 10th and 12th

noodles_pakoda_அல்ல

 #எச_to_டோக்ளா  Radha Sriram


#நூடுல்ஸ்_உடல்_நலத்துக்கு_கேடு விளைவிக்கும்

#noodles_pakoda_அல்ல


மீந்து போன நூடுல்ஸு முழிச்சு முழிச்சு பார்க்க

மின்னலாய் ஒரு ஐடியா மினி டி்பனுக்கென்றே..

வளையமாய் குடமிளகாய் வட்டமாக வெங்காயம்

துருவின கேரட்டு கொஞ்சம் கோஸு சேர்த்து

காரத்துக்கு பச்சை மிளகாய்

ஜீரணத்துக்கு இஞ்சி  ருசிக்கு உப்பு

வாசனைக்கு கொத்தமல்லி

தனித்தீவாய் இருக்கும் இவர்களை சேர்த்திடவே க்டலை மாவு அரிசி மாவு சோள மாவு

வேண்டுமானால் நாலு முந்திரி..

நூடுல்ஸும் போட்டு கலந்து

உருப்டையாக உருட்டி உருட்டி

எண்ணெயில் பொறித்தெடுக்க..

taste bhi..healthy bhi recipe ரெடி..


நினைப்பதெல்லாம் ..நடந்து விட்டால்

 நினைப்பதெல்லாம் ..நடந்து விட்டால்


பெரிய க்யூ அங்கே..

நான் முந்தி நீ முந்தி இல்லை..


"கண்ணுங்களா..எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கடா.'

நான் கேட்டதும் ..

வெட்கத்தில் முகத்தை மூடிச் சிரித்தனர்..

"நீங்களா..?

நோ ஆண்ட்டி..அது எப்புடி..நீங்க?:


முகம் சிவந்து அவர்கள் நாணிக் கோண..


"நான் அப்புடி என்னத்தைப் புள்ளங்களா கேட்டுப்புட்டேன்..?!!!


 என் பேச்சு வார்த்தை கடைசியில் தோல்வியைத் தழுவ..


ச்சே....என்னடா இது..இந்த அகிலாவுக்கு வந்த சோதனை நு மை.வாய்ஸ் சொல்ல..


வேற ஒண்ணுமில்லங்க..


பார்க்கில் வாக்கிங் போனபோது..

நானும் வரட்டா "சறுக்குமரம்" விளையாடனு கேட்டது தப்பாங்க?😁😁😂