Tuesday, March 29, 2022

வந்துட்டாரையா_வந்துட்டாரு

 #வந்துட்டாரையா_வந்துட்டாரு..


சுப்ரபாதம் சொல்லாமலே..

சுறுசுறுப்பா வந்துட்டாரு..

சுட்டெரிக்கப் போறேன்னு

சூளுரைச்சு வந்துட்டாரு..


சத்தமிடும் குளிர்ப்பெட்டி

சன்னமாக்குது குயிலோசையுமே

சட்டுனு எழுந்திடவே

சுருங்குது மனமிங்கே..


ஓவர்டைம் செய்ய..

ஓடோடி வந்தவரே..

ஓடி வரும் மேகத்துக்கு

ஓரமாய் ஓர்  இடம் கொடப்பா..


ஈரம் காணா நிலமிங்கு.

ஈனஸ்வரத்தில் தவிக்கிறதே

வர மொன்று தாருமையா..

வான் மழையும் பொழிந்திடவே..


மின்னலும்் விளக்கேந்த்

இடியும் மத்தளம் முழங்க

கொட்டும் மழை சத்தம் கேட்டு

நாட்கள் ஆச்சு எத்தனையோ


கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்..

கூடட்டும் மேகங்கள்

கொட்டட்டும் மழை..

கொண்டாட்டம் துவங்கட்டும்..


#மழை_வேண்டி_பிரார்த்திப்போம்

No comments: