Thursday, December 29, 2022

Door)Mat finish..😃😃😃🌟⭐

 (Door)Mat finish..😃😃😃🌟⭐


போட்டிருந்தேன் வேறொரு திட்டம்..

பொழுதைப் புதிதாக்க அழகாய் ஒரு பூக்கோலம்..


வாசலில் இருந்த மிதியடியோ..

வாட்டமாய் எனை பார்க்க..

வந்ததே ஒரு எண்ணம்..

வா..வா..என்றேன்..

வண்ணத்தை அதில் நுழைத்தேன்..

வாவ்..வாவ்..என சொல்ல வைத்தது..

வஞ்சி நான் போட்ட கோலம்..

(நாமளே சொல்லிப்போம்😃😃💪)..


மிதி தாங்கும்   உன் விதியை..

மாற்றினேன் இன்று ஒரு நாள் மட்டும்..


மகிழ்ந்திருப்பாய் நீயும்..

மலர்ந்த புது திங்கள் நாளில்..


Let's bring a broad smile in everyone and everything around us..


Mogambo kush hua..இல்ல இல்ல..

எங்க வீட்டு door mat ம் இன்று மகிழ்ச்சியில்😃😃


Border..ம்ம்ம்ம் நிச்சயம் உண்டு😃😃


அன்புடன்😃😃


என் உருவைக் கொஞ்சம் மாற்றி

 என்னைக் கொஞ்சம் மாற்றி..

என் உருவைக் கொஞ்சம் மாற்றி..

----------------------------------------------------

நேற்றும் இன்றும் வேறு..🎵🎵🎵🎵🎶🎼


இந்தப் பாட்டை .நான் பாடலை..எங்க வீட்டு அப்பம் பாடியதே..🤦


ஆசையாகச் செய்தேன்..

ஆனைமுகனுக்கு அப்பம்..

அடுப்பிலிருந்து எடுத்துக் கொடுக்க..

Awesome awesome என்றார்கள்..


அடுத்த நாள் கேட்க..

அப்புறம் சாப்பிடறேனே..என்று

அங்கிருந்து நகர்ந்தார்கள்..

வேற யாரு..நம்ம வீட்டு மக்கள் தான்..


ஐஸ் பெட்டிக்குள் வைத்தேன்..

அக்கடானு உள்ளே இருனு..

'அவனில்'(oven) சுட வைத்ததில்..

ஆளுக்கு அரை உள்ளே போச்சு..


நாலே நாலு..மீந்து போக..

ஸேல் இதை எப்படி செய்வேன்னு திணற.


உள்ளே பிரகாசித்தது..

ஒளி தரும் பல்பு ஒண்ணு...💡💡💡💡💡


உதிர்த்தேன் அப்பத்தை..

ஓட விட்டேன் மிக்ஸியில்..

வெல்லமும் ஏலமும் சேர்த்து பொடி செய்ய..


நெய்யில் முந்திரி வறுத்து..

நெய்யப்ப பொடியை..

நோகாமல் சேர்த்தேன்..

நொடியில் ஒரு டிஷ் ரெடி..


அவலப்பம்..அவலப்பம்..

ஏலம் போடாமலேயே..

எல்லாமே காலி..

இன்னும் இல்லையானு கேள்வி😄😄😄😄😄


இது எப்படி இருக்கு..


யாரு கிட்ட???💪💪💪


என்_சமையலறை

 #ஸண்டே_ஸ்பெஷல்

#என்_சமையலறை


Shankar sir ..நிறைய டிப்ஸ் கேட்டிருந்தார் இந்த டாபிக்கில்.


அதெல்லாம்..எனக்கு தெரியாது.

ஏன்னு கேட்டால்..இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை ஊர் ஊரா திரிஞ்சு..இன்று வரை அதே நிலமைதான்.


கண்டது..கிச்சன்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.


ஒரு ஆள் மட்டுமே நிற்கக்கூடிய  கிச்சன்.. சதுர கிச்சான்.செவ்வக கிச்சன்..டெல்லி வீட்டில்..ரூம் எல்லாம் தாண்டி வெளியே இருக்கும் கிச்சன்...


நமக்கு ஏத்த மாதிரி இல்லனா என்ன?..நாம அதை நமக்கு ஏத்த மாதிரி  மாத்திடுவோம்னு இன்று வரை தொடரும் ..கிச்சன் வைபவங்கள்.


பாத்திரங்கள் எண்ணிக்கையை விட..எங்க கிச்சனில் சமைத்த பாத்திரங்கள் ..

அதாங்க characters ஏராளம்.😄😄😄


உங்க கிச்சனுக்குள்ள வரலாமானு யாரும் கேட்டுடக் கூடாது..🤣


இக்கட சூடு, அல்லி நோடு, உதர் தேகோ....இப்படி எல்லா சாமான்களையும் காண்பிச்சுவிட்டு

உன்னால் முடியும் தம்பி ..மனோரமா ஸ்டைலில்..me ..enjoy தான்.💪💪


" சமையலறை..எனக்கு மட்டும் சொந்தமா.?..நீயும் வந்து சமைத்து பாருனு" ..வரவங்களையும் இழுத்துப் போட்டுடுவோம்ல.


என்ன செய்யறது..நம்ம டிசைன் அப்படி..


கல்யாணம் முடிஞ்சு ,டெல்லிக்கு போனால்..அங்கே ஞாயிற்று கிழமைகளில் என் கிச்சன்..இவரோட ஃப்ரண்ட்ஸ் பேச்சிலர்கள் கையில் போக..நான் பேச்சு மூச்சு இல்லாம அவங்க அட்டகாசத்தை பார்த்து..மயங்கி விழாத குறைதான்.


ஒரே குக்கரில் ஓஹோ production செய்யும் ஒருத்தர்..

ஒண்ணு விடாம் எல்லாப் பாத்திரத்தை யும் அள்ளிப் போடும் ஒருத்தர்..

சமைத்தபடியே..துடைக்கும் ஒருத்தர்..( வேற யாரு எங்க அம்மா தான்)..

கப்பும் டம்ளரும் அடுக்குப் பாத்திரமும் ,டவராவும் ஸ்பூனும் அழகா பார்த்து பார்த்து அடுக்கும் ஒருத்தர்..( என் மாமியார் தான்)


எங்க வீட்டு கிச்சன் மேடைகள் ..எத்தனை பேரை ..master chef ஆக்கின புகழ்பெற்ற மேடைகள் தெரியுமா?..


இவரோட ஃப்ரண்ட்ஸ், என் பெண்கள், அவங்களோட ஃப்ரண்ட்ஸ் ,அவங்க அம்மாக்கள், மாமியார், அம்மா, அத்தை, சித்தி, நாத்தனார் ,கொழுந்தனார்னு எல்லாரையுமே அவங்க signature dish அரங்கேற உதவியது ..my super kitchen மேடை.


இப்போ லேட்டஸ்ட்டா என் வூட்டுக்காரரையும் நள பாகத்தில் இறக்கி, பெருமைப்படுத்திய மேடையாக்கும்..

இன்னும்..மாப்பிள்ளை மட்டும் வந்து ..அவர் திறமையைக் காட்டணும்..me ..waiting


அந்த அடுப்பு இருக்கே ..அடுப்பு..

அப்படியே மூளையில பொறி பறக்க வைக்கும் ஒரு creativity.


பாஸ்ட்டாக்கள்..வெறும் டோஸ்ட்டாக மாறினால்கூட..டேஸ்ட்டாக..பாஸ் மார்க்கு வாங்குமிடம்..

பிட்ஸாக்கள் ..best ஆ மாறுமிடம்

பக்கோடாக்கள்..பக்காவா கிடைக்குமிடம்..

தோசைகள்..உருமாறும்.


உப்மாக்களோ..உவகை தரும்..


பானி பூரிக்கள்..பூரித்து மகிழும்


சாட் ஐட்டமெல்லாம்..சகட்டு மேனிக்கு கிடைக்குமிடம்..


ஜவ்வரிசி கள் ..ஜாலம் காட்டுமிடம்..

வடையோ..தடையில்லாமல் கிடைக்கும்..


"வந்தவரெல்லாம் தங்கி விட்டால்..இந்த அகிலாவுக்கு கிச்சனில் வேலையேதுனு"...உங்க மை வாய்ஸ் கேக்கறது.😄


அப்போ நீ எப்போதான் சமையல் செய்வ..?..

கரெக்ட்டு தான்..

நிறைய செய்வேன்.நிறைவாகச் செய்வேன்.


துடைப்பது, அடுக்குவது, தூஸி தட்றது..

எல்லாமே..வலது கை செய்ய்றது இடதுகைக்கு தெரியாது.


புடிச்சது சுத்தம்..

இல்லாட்டி..வீட்ல சத்தம் தான்.


நம்ம சமையலறை என்பது..வெறும் மசாலாக்களும் பொடிகளும், பாத்திரமும் மட்டும் இருக்கும் இடமல்ல..நிறைய memories ம் இருக்குமிடம். 


வாணலியைப் பார்த்து...ஹலோ இன்னிக்கு உன்னைத்தான் போட்டு வறுக்கப் போறேன்னு சொல்லுவேன்..


குக்கரே..இன்று ..நோ மக்கர்னு சொல்லி ..வேலை ஆரம்பிப்பேன்..


பால் வழியும் பாத்திரமாகிடாதேனு..பால் பாத்திரத்துக்கு சொல்லிடுவேன்.


கட்டரே..வெட்டு நீ காயை மட்டும்னு caution செய்வேன்..


ஒரு positive vibration கொண்டு வந்ததால்..

என் சமையலறை ..மையல் கொள்ள வைக்கும் அறை..


ஒவ்வொரு shelf லும்..பல நினைவுப் பொக்கிஷங்கள் உண்டு..


இருந்த கிச்சன் , இருக்கும் கிச்சன் எல்லாம் பெரிசா ஒரு aesthetic sense இல்லாட்டாலும்..

இங்கே தான் "அகிலாஸ்..அசத்தல்" சமையல் நடக்கும்.


என் சமையலறை ..எங்கேயும் எப்போதும் இப்படித்தான்.


 இந்த போட்டோ எங்கம்மா வீட்டு கிச்சன்😄😄


Wednesday, December 28, 2022

முருகனை நினை மனமே..

 முருகனை நினை மனமே..



ஆமாம்..இன்னிக்கு வருஷத்தின் கடைசி சஷ்டி விரதம்..


என்ன கோலம் போடலாம்னு யோசனை..


ஆஹா..

madhubani..

மாக்கோலத்தில் வருமா?..


சரி. சரி..அவன் பெயர் சொல்லி போட ஆரம்பிக்க..

அவனே கொடுத்தான் ஐடியா..


மயிலிறகை..வேல் போல் வரை என்று..


முருகா..முடிஞ்ச அளவு முயற்சிக்கிறேன்னு...


வண்ணம் நிரப்ப..நிரப்ப..

வாசலில் வந்தாடியது அழகு மயில்..


தோகைகள் வேல் போல விரிய..

வேலுண்டு..வினையில்லை..

மயிலுண்டு ..

மனக்கவலையில்லை..


முருகா..முடியப் போகும் வருடம்..

முழுமையாய் வாழ்ந்தேனா தெரியவில்லை..


மலரப் போகும் வருடம்..

மாந்தர்க்கெல்லாம் மகிழ்ச்சி தரட்டும் என்ற பிரார்த்தனை யுடன்..


இந்த நாள் இனிய நாள்


ரங்கோலியிலும் எனை நினைக்க..

அங்கே வந்து மகிழ்வேன் என்றான்..


அவன் தத்துவம்

Monday, December 26, 2022

Sikku kolam..கம்பி கோலம்..

 Sikku kolam..கம்பி கோலம்..


#சிக்குத்துவம்


இதுக்குள்ள சிக்கினா நமக்கு வெளியே வரத் தெரியாதுனு..எப்பவும் ஒரு பயம்..


அன்பு வலையில் சிக்கற ஆளு நாம..

கம்பி கோலத்துக்குள் எப்படி போறது..


ஆரம்பித்தால் கை எடுக்காம போடணும்..

அங்கிங்கு கவனம் போச்சோ..

அம்புட்டுதேன்..

ஆட்டம் close...

Adjust எல்லாம் பண்ண முடியாது..


எத்தனை பாடம் இந்த கோலத்துக்குள்..


Mallika Ponnusamy  mam..போடும் கோலம்.பார்த்து ..

மலைத்துப் போவேன் நான்..


#inspiration அவங்க தான்..


Ration இல்லாம கிடைக்கும் ஒன்று..

நம்மை வளர்க்கும் ஒன்று..இந்த

Inspiration தாங்க..


முயற்சி இருந்தால்..

மாமலையும் ஓர் கடுகாம்..

.

அதுதான்..

குட்டிக் கோலத்தில் ஆரம்பம்..( இந்த தம்மாத்தூண்டு கோலத்துக்கு..

இம்மாம் பெரிய அலப்பறையா?..

உங்க மை.வாய்ஸ் கேட்குதே😃😃😃😃)


அம்மா..சொன்னது நினைவில் வந்தது..

தோசை வார்க்குமுன் குட்டி தோசையில் ஆரம்பிக்கணும்..

சிறுகக் கட்டி பெருக வாழ்..

எப்போதும் சொல்வாள்..


இப்படி தத்துவத்தில் சிக்க வைத்ததே .

இந்த..

Sikku kolam😃😃😃😃


அன்புடன்😃😃


கோலக்கதைத்துவம்

 #கோலக்கதைத்துவம்


இந்த ரங்கோலி மனசில் வந்ததும்..ஒரு குட்டிக் கதையும் எழுதலாமானு தோணித்து..😄😄


Bird 1- அந்த மரம் எத்தனை அழகா இருக்குல்ல..வாயேன் அங்கே போகலாம்.🐦🐦


Bird -2 : no.. no..என் dress எல்லாம் அழுக்காகிடும். அந்த மரம் ஒரே colorful aa இருக்கே🕊️🕊️

Bird -1: அட பைத்தியமே..கலர் போய் ஒட்டுமா..அழகழகா பூவும் பழமும் இருக்கே..போகலாமே..( கெஞ்சலுடன்)


Bird -2: சொன்னால் புரியாதா..இந்த மாதிரி மரத்தில தான்  வேடர்கள் வலை விரிச்சிருப்பாங்களாம்..

நான் வரலைப்பா..👀


Bird-1 : ஐயோ..அப்படியா..ஆனால் எனக்கு ஆசையா இருக்கே..


Bird-2: ஆசைப்படறது சில சமயம் ஆபத்தில் முடியும்னு தெரியும் தானே உனக்கு...வேணும்னா..

அங்கே கீழே விழுந்திருக்கே..அதை எடுத்து சாப்பிடு..🍋🍋🍋


Bird-2: ரிஸ்க் எடுக்காம எப்படி ரஸ்க் சாப்பிடறதாம்..நீ போ.நான் ஜாலியா இந்த மரத்தில் enjoy பண்ணிட்டு வரேன்..😄😄😄


Bird -2 : அடிபட்டால் தான் உனக்கு புத்தி வரும்னு நினைக்கிறேன்..bye..bye.🙏🙏


Bird 1 ..சந்தோஷமா பறந்து அந்த மரத்தில் உட்கார்ந்து தான் நினைச்சதை சாதித்ததா??

இல்ல..bird 2 சொன்னது போல வேடன் கிட்ட மாட்டிண்டதா..


எப்புடி கண்டுபிடிக்கறது..??


நம்ம வாழ்க்கையிலும் இப்படித்தானே..


தூரத்தில் இருந்து பார்த்து judge பண்ணி ..

சிலவற்றை கோட்டை விடறோம்..


கோடு தாண்டலாம் வான்னு போகும்போது ..கோட்டைக்குள் சிக்கிக்கறோம்..


வாழ்க்கையே ஒரு நாடகம்..

அதில் wisdom தான் முக்கிய பாத்திரம்..


சரியா..😄😄😄


Happy birthday Mythili aunty

 Happy birthday Mythili aunty


Mythili aunty..என்

மனம் கவர் aunty.

மனசில் இருப்பதை சொல்வாள்

மனதில் என்றும் நிற்பாள்.


மகளும் பேத்தியும் சகலமுமென்றாலும்

மத்யமரில் மாபெரும் உலகம் கண்டாள்.

மதிப்பிற்குரிய இடம் பிடித்தாள்..

மேடம்..மாமி என உறவானாள்..


Spring..samosa..sunset..savoury..

the S(ess)ence of her life..

 potato and rice..her

forever choice..


 waves of a beach and 

wind of the himalayas

wander she wishes..

with a book in hand..


albums of her grand daughter

all time her pastime..

humor she likes..

honesty she salutes..


plunging into her bookshelf..

passionate about her writing..

Living the present 

Munching the past

Inspiring everyone..


உபாதைகள் பல இருந்தபோதும்..

உறுதி மட்டும் விடாதவள்..

ஊக்குவிப்பாள் தன் பதிவால்..என்

உள்ளத்திற்கு என்றும் அருகிலிருப்பாள்..


முகநூலில் மின்னும் நட்சத்திரம் 🌟

Mythili எனும் நட்சத்திரம்.


வாழ்த்த வயதில்லை..

வணங்குகிறேன் மேம்..


அன்புடன்

Akila


Happy birthday Mythili Varadarajan  mam


நானறிந்த சூப்பர் சீனியர் சிட்டிஸன்களிலே ..இவரைப் போல சூப்பர் பெண்மணியைக் கண்டதில்லை.


எதையுமே ஒரு தராசில் வைத்து 

தரமான கருத்துக்கள் ..

Positive ஊக்கம் தரும் 

அற்புதப் பெண்ணிவர்.


என்னை ' அகிலா எப்போ வர என்னைப் பார்க்க ? ' உரிமையுடன் அன்புடன் கேட்கும் அன்பு வட்டத்தில் முக்கியமானவர்.


பட்டென்று மனதில் இருப்பதை சொல்லக்கூடிய இவரின் straight forwardness எனக்கு மிகவும் பிடிக்கும்.



விரைவில் இந்த வைரஸ் பயம் ஒழிந்து..

வயதானவர்கள் எல்லாரையும் சென்று பார்க்கணும்..


மீட்..ஸ்வீட்டு, ஸ்நாக்ஸ்...


Love you mam.

Happy birthday to you.🎊🎉🎂💐🎁

எனக்கு ரொம்ப பிடிச்ச ஃபோட்டோ இது😄



Saturday, December 24, 2022

முதுமையின் சில அடையாளங்கள்

 முதுமையின் சில அடையாளங்கள் என Mythili Varadarajan mam பதிவுக்கு..என் பதில்..என் அப்பாவின் மன நிலையிலிருந்து..


தூக்க மருந்து  தாலாட்டுமுன்

தூக்கிப் போடுமே இருமல்

என் லொக் லொக்  சத்தம்

கொர் கொர் குறட்டைக்காரரையும்

கூப்பிட்டு எழுப்புமே..

தலைகாணி உயரமாகும்..

தலை விதி நொந்து..

தாரையாய் கண்ணீர் அருவி..

.

கோழிக் கூவும் நேரம்..

கண்ணும் சொக்கும் தூக்கம்..

எட்டு மணி ட்ரெயின் பிடித்து

எட்டிப் பாய்ந்து பஸ் பிடித்து

ஓட்டமும் நடையுமாக..

ஓவர் டைமும் பார்த்த நாட்கள்..

ஓரமாய்..சின்ன நினைவாய்..

 விழிப்பும் ஒரு வழியாய் வர..

வேகத்தில் இயங்கும் வீடு..

பெண்ணும் பேத்தியும்..

பேச்சா..சண்டையா..??

புரியாத புதிராய் நான் முழிக்க..

சூடாக் குடித்த காபி..

சுட சுட செய்தியுடன் பேப்பர்

வெது வெது நீரில் குளியல்..

வேண்டுதல் நாளின் இனிமைக்கு..

பசித்து புசித்த காலம்..

பழங்கதையான ஏக்கம்..

மாத்திரைகள் பாதி உணவாக..

மருந்தாய் தோன்றும் சாப்பாடும்..

ஒற்றை வரியில் பேசிய நானோ

ஒன்றையே இரண்டு மூன்று முறை...!!

வலிகள் தரும் வேதனை..

விடுதலை வேண்டி ப்ராத்தனை..

கடந்தது எல்லாம் கனவாய்க் கலைய

நிகழும் காலம் நீளமாய்த் தெரிய

வரப்போகும் விடியல்..

விரட்டுமென் சோதனையென

விழித்தபடி படுத்திருக்கேன்..

விடிய இன்னும் நேரம் இருக்கே..


I feel women are more positive and energetic to surpass the ageing.

Thanks Mythili Varadarajan mam for kindling my thoughts.

Happy 60 Vaijayanthy Srinivasan MANNI.

 Happy 60  Vaijayanthy Srinivasan MANNI.

You don't look like i swear.


வைஜயந்தி மன்னிக்கு ஒரு வாழ்த்து


மன்னிக்கு ஒரு வாழ்த்து..அன்பு 

மன்னிக்கு  ஒரு வாழ்த்து..

வாழ்வில்  நல்லவை அமைவதற்கு..நான்

சொல்லும் தமிழ் பாட்டு.


நெய்வேலியில் பூத்த தங்கப்பூ..இவளை

நினைத்தாலே மனசில் தித்திப்பு.


ஓடி வந்து உதவுவதைப் பார்க்க..

எனக்குத் தோன்றும் திகைப்பு..


சுரங்கத்திலிருந்து வந்ததனால்..வற்றாது

சுரக்கும் எப்போதும் அன்பு.


நீல நிறம் இவள் பிடிப்பு

பிடிக்காது இவளுக்கு நடிப்பு.


 உறவு என்ற போதிலும்..அதைவிட

வேண்டும் என்றும் இவள் நட்பு.


எல்லைகள் தாண்டியும்

வைத்திப்ருப்பாள் தொடர்பு.


தகவல் களஞ்சியத்தின் கோப்பு

தருவாள் அள்ளி குறிப்பு.


#just_dial_Jayanthi என 

ஜோக்காய் எங்கள் அழைப்பு


உனக்கு..

அறுபது என்றால்..

ஆச்சரியரம் எனக்கு..


போட மாட்டாயே மேக்கப்பு

உன்னோடிருந்தால் கலகலப்பு


என்றும் இளமை காப்பு

அந்த secret எனக்கு செப்பு ..


கொடுங்க எங்களுக்கு டிப்பு

நீங்க எப்பவுமே டாப்பூ..


உனக்கு ஒரு அன்பளிப்பு..இந்தச்

சின்னதா ஒரு கவிதைப்பூ..🎁🎂🌹🌺

3D kolam

 3D kolam


போடேன் ..

Friend சொன்னாள்..


அதுக்கெல்லாம் ஞானம் வேணும்..ஞானம் வேண்டும் டோய் ..கரெக்டா😃😃😃


நமக்கு புடிச்ச.. 3D..


Determination 

Dedication

Devotion....


இதிலேர்ந்து deviation இல்லாமல் dynamic ஆ கொஞ்சம் denomination கூட இருக்க..

வாழ்க்கை சொர்க்கம்தான்..


கரெக்டா😃😃😃😃


அன்புடன்😃😃

Friday, December 23, 2022

எளியமனிதர்கள்

 #எளியமனிதர்கள்


"உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லே யா..அரே ஹோயானு ரஜினி பாட்டு பாடிண்டே பதிவெல்லாம் படிக்கலாம்..ஹே யா..அரே ஹோயா..


சிலிண்டர் சுப்பையா..


(rhyming க்காக இல்லை இந்தப் பெயர்)


'கவலையேப் படாதீங்க ம்மா..காலைல 8.10 க்கு நீ வூடு பூட்டறதுக்கு முன்னால நான் முதோ லோட்ல உங்களுக்கு கொண்டாந்து போட்டு போயிர்ரேன்..

சொன்னபடி .ஏஜன்சியில் லோட் வந்ததும் ஒரு மெரி மிரிச்சு எங்கத் தெருவில வேலைக்கு போகும் அம்மாக்களுக்கு சிிலிண்டர் வந்து இறக்கிட்டுப் போகும் சுப்பையா அண்ணா.

5 ரூவா கொடுத்தாலே ஏதோ லட்சம் கிடைத்த திருப்தி..


சிலிண்டரை செக் பண்ணிட்டு 'அம்மா..அடுப்பு துடைக்க ஞாயிற்றுக்கிழமை வந்துடறேன்.

சுத்தமா கெரசின் போட்டு ஓட்டையெல்லாம் அடைப்பை சரி செஞ்சு பளபளக்க வைப்பார்.


பாவம் ..ஞாயிறு கிடைக்கும் அரை நாள் லீவிலும் இதேப் போல எல்லார் விட்டிலும் வேலை. 

ஒரு நாள் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகோயேன் ப்பானு அப்பா சொல்லும்போது..' இன்னா சார் பண்றது ..ரெண்டு பிள்ளைகளை படிக்க வெக்கணுமே..என்னை மாதிரி அவங்களும் ஆகிடக் கூடாது..அதான் சார்.


மிகக் குறைந்த ஆட்களுடன் இயங்கிய அந்த ஏஜென்சியில் ஒரு நாள் எத்தனை ட்ரிப் அடிப்பார் என்பது ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.


சில வருடங்களுக்கு பின்..

டெல்லிலேர்ந்து வந்து சூறாவளிச் சுற்றுப் பயணத்தில்  இருந்தேன். திருச்சியில் இருந்து ட்ரெயினில் வர..அப்பா ஃபோன் செய்தார். ஸ்டேஷனுக்கு சுப்பையா வருவார். நீ அவரோட வீட்டுக்கு வந்துடுனு சொல்லி டொக்குனு ் லைன் கட்.


தாம்பரம் ஸ்டேஷனில் இறங்கியதும் என் கோச் வாசலில் வரவேற்ற சுப்பையா அண்ணா..'அப்பாவுக்கு பாவம் அவசர வேலை..அதான் என்னை அனுப்பிச்சாரு.. நடந்துகொண்டே பேசியவர்..பளபளக்கும் ஆட்டோவை காண்பித்து ..

' குந்தும்மா..நம்ம வண்டிதான்..மூணு சக்கர வண்டி மெரிச்சு முட்டிக்காலெல்லாம் வீங்க ஆரம்பிச்சது..கடனை உடனை வாங்கி இந்த ஆட்டோ வாங்கி ஓட்டறேன். வருமானம் பரவாயில்ல..என் பையனுக்கு மெரிட்ல சீட் கிடைச்சு காரைக்குடில படிக்கிறான்மா..

வாயைப் பிளந்தபடி அவர் கதையை கேட்டு வந்தேன்.


விடிகாலம் வண்டி எடுத்தேன்னா..வூடு போய் சேரும்போது நடுநிசி ஆகிடுதும்மா என்றார். அண்ணா உங்க உடம்பையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க என்றேன்.


அப்பா அம்மாவுக்கு ஆஸ்பிட்டல் போறது, கடைத்தெரு ,பாங்க் எல்லா இடமும் கூட்டிக் கொண்டு போக ஒரு நம்பிக்கையான ஆள். எங்க காலனிக்கேனு சொல்லலாம்.


அடுத்த வருடம் போனபோது..' சின்னதா ஒரு கிரவுண்ட் வாங்கி ஒரு ரூம் கட்டிட்டேன்மா' என்றார். அதுகொஞ்சம் கடன் இருக்கு இப்போ..அடுத்த வருசம் புள்ளைக்கு காம்பஸ்ல வேலை கிடைச்சா கொஞ்சம் காசு சேர்த்து பொண்ணை ஒரு நல்ல எடத்தில புடிச்சி கொடுக்கணும்..


அதெல்லாம் உங்களுக்கு அருமையா கிடைக்கும்ண்ணா என்றேன்.


எப்போதும்போல உலக விஷயம் ஒலிபரப்பும் அம்மா ஒரு நாள் சொன்னாள்.' 'சொல்ல மறந்துட்டேனே்..நம்ம சுப்பையா பையனுக்கு நல்ல வேலை கிடைச்சு இப்போ US போறானாம்.பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டான்.


அவன் கனவும் உழைப்பும் வீண் போகலை..

ஆனா..என்ன ..இன்னும் முடிஞ்ச வரைக்கும் ஆட்டோ ஓட்டி சம்பாரிக்கறேங்கறான்.


அம்மா இறந்தபோது கூடமாட உதவிக்கு வந்த சுப்பையா அண்ணா சொன்னார்..

' வாழ்க்கையில் இப்படி ஒரு நல்ல நிலைக்கு வருவேன்னு நினைச்சு கூட பார்த்ததில்லை கண்ணு..எனக்கு தெரிஞ்சதெல்லாம் உண்மையா இருக்கணும்..ஓடாத் தேஞ்சாலும் உழைக்கணும்.

பக்கத்தில் நின்றிருந்த அவர் மனைவி கண்ணில் ஒரு பெருமிதம்.

Thursday, December 22, 2022

மார்கழி

 ஒரே மரத்தில் பூத்தாலும்.

ஒவ்வொரு பூவுக்கும் ஒரு 

தனி அழகுண்டு..


இறைவன் படைத்த தோட்டத்து

அழகுப் பூக்கள் நாம்..


இந்த வாழ்க்கை வரமே..

வரங்களைக் கொண்டாடுவோம்..

வலிகளை 💪 வலிமைகளாக மாற்றுவோம்..


( எல்லா பூவும் ஒரே அளவில் வராவிட்டாலும்..

அட்வைஸ் வந்துடுத்தே..😃😃😃😃)


நான் escapeuuuuu😃😃😃😃😃😃


அன்புடன்😃😃


ஸில்


கதை_எழுதலாம்_வாங்க_5

 #கதை_எழுதலாம்_வாங்க_5


#முள்வேலி


"ரேணு..ரேணு..இப்ப நான் சொல்றதை கேட்கப் போறியா இல்லையா?"

கோபத்தின் உச்சஸ்தாயியில் கத்தினான் சந்துரு.

"நீங்க கொடுக்கற மருந்தை நான் சாப்பிட மாட்டேன்.. என்னை கொல்லலாம்னு பார்க்கறீங்களா இந்த மருந்தை கொடுத்து..???"வெறி பிடித்துக் கத்தினாள் ரேணு.


"ரேணு..உனக்கு ஏன் புரிய மாட்டேங்கிறது. இந்த மருந்து நீ டயத்துக்கு எடுத்துக்கலை என்றால் உன் உயிருக்கே ஆபத்துனு டாக்டர் சொன்னது உனக்கு ஞாபகமில்லையா?.."

கெஞ்சலும் அதட்டலுமாக அவன் அவளை விடாமல் தொடர்ந்தான்.


டாக்டர் கண்டிப்பாகச் சொல்லி இருக்கிறார். ஒரு மாதத்திற்கு  இரவில் டிப்ரஷனுக்காக கொடுத்த மாத்திரைகள் ரேணு சாப்பிட்டே ஆகணும் என்று.

இன்று அடம் கொஞ்சம் அதிகமாகவே பிடித்தாள். 


"அவளோட சந்தோஷமா இருந்துட்டு வந்துட்டு எனக்கு மருந்து கொடுத்து கொல்லப் பாக்கறீங்களா?'..அவள் கத்த..கத்த..இழுத்து பிடித்து அவளை உட்கார வைக்க முயல..ரேணு திமிறினாள்..


"மாட்டேன் மாட்டேன்..என்னை விட்டுடுங்க...என்னை விட்டுடுங்க..'

அவள் கத்திக் கொண்டிருந்த  நேரம் ....

ரேணுவின் அலறல் கேட்டு வாசல் கதவின் பக்கம் செருப்புகள் போட இருந்த சிமிண்ட் ஸ்லாபில் ஏறி..ஜன்னல் வழியே பார்த்தாள் பக்கத்து வீட்டுக்கு புதிதாகக் குடி வந்திருந்த சுஜா..

கலங்கிப் போனாள். 

"என்ன நடக்கிறது இங்கே?'

" ஐயோ இப்படி ஒரு முரடனா?'.பயந்து போனவள் வாய் திறக்காமல் வந்து வீட்டின் கதவை தாழிட்டாள். 

"பெண்டாட்டியை இப்படி கொடுமைப் படுத்தறானே?..

போலீஸ்ல சொல்லலாமா?"

 வீட்டுக்கு வந்து கணவனிடம் சொல்ல.." "அவங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ?..நீ எதுக்கு இப்போ தலையை நுழைச்சுக்கிட்டு' வெடுக்கென்று பேசி விட்டுச் சென்றான்.


அடுத்த நாள் காலை..


சந்துரு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். ரேணு ஓடி வந்து..

"இந்தாங்க இன்னிக்கு உங்களுக்கு பிடிச்ச புலவ் ரைஸ் வெச்சிருக்கேன். இன்னிக்கு ஈவினிங் ஷோ புக் பண்ணி இருக்கோம் .ஞாபகம் இருக்குல்ல..சீக்கிரம் வந்துடுங்க'..அவள் பேசுவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சுஜா..


 மண்டையே சுற்றியது..

நேத்து ராத்திரி எதுவுமே நடக்காதது போல ..எப்படி இப்படி இருக்கறா இவள்? '..


என்னமோ போ என்று நினைத்தபடி உள்ளே சென்று விட்டாள்.


அன்று மார்க்கெட்டுக்கு போன சுஜா...ரேணுவின் அம்மாவைப் பார்த்தாள்.


நலம் விசாரித்து முடித்த பின்..

" வாம்மா..வீட்டுக்கு வந்து ஒரு காபி குடிச்சுட்டு போயேன்' 

ஒத்துக் கொண்டாள் சுஜா. 


பேச்சு எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருக்க ..மனசில் அரித்துக் கொண்டிருக்கும் அந்த விஷயத்தை கேட்டு விடலாமா ? தயக்கம் தடை போட்டது..


" உங்க வீட்டுக்காரர் என்ன வேலை பாக்கறாரு? ..என்று ஆரம்பித்த ரேணுவின் அம்மா..' என் மாப்பிள்ளை சொக்கத் தங்கம். என் பொண்ணுக்கு இப்படி ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைப்பாருனு நாங்க கனவில கூட நினைக்கலை..'..


அவள் பேசிக் கொண்டே போக..சுஜாவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை..


" இது அவங்க ரெண்டு பேருக்குமே இரண்டாவது கல்யாணம்ம்மா..

ரேணுவுக்கு முதல் கல்யாணம் ரொம்ப விமரிசையாச் செஞ்சோம். யார் கண்ணு பட்டதோ..மாப்பிள்ளை மூணே மாசத்தில் ஒரு கார் ஆக்ஸ்டெண்ட்டில் இறந்துட்டார்.

ரேணுவுக்கு கொஞ்சம் மாறுதல் கிடைக்கட்டுமேனு  அவங்க அத்தை வீட்டுக்கு அனுப்பி வெச்சோம். 

என் நாத்தனார் பையன் தான்  சந்துரு.


"ஏன் மாமா ..ரேணுவுக்கு சம்மதம்னா நான் அவளைக் கல்யாணம் செஞ்சுக்க தயார்னு அவன் சொன்னபோது எங்களுக்கு கிடைச்ச சந்தோஷம் இருக்கு பாரு....".

ஆனால்..

ஆனால் ..ஆனால்..என்ன? ஆர்வத்தில் சுஜா கேட்க..

" சந்துருவுக்கு ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து ஆனவன். அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒத்தே போகவில்லை. பிரியறது தான் உசிதம்னு டைவோர்ஸ் வாங்கிட்டாங்க..

எங்களுக்குத் தான் பயம்..இது சரிப்படுமானு..


" அதெல்லாம் ஒண்ணும் இல்லை மாமா. எதிர்காலம் தான்  முக்கியம். போனதை நினைப்பதில் என்ன பிரயோசனம்?.. சந்துரு எங்க எல்லாரையும் சம்மதிக்க வைச்சான். 


எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது. ரேணு அப்ப மாசமா இருந்தா.. அப்படித் தாங்குவான் சந்துரு. எங்களைக் கூட எதுவும் செய்ய விட மாட்டான்.


ஆனால் எங்க கெட்ட நேரம் ..குழந்தை இறந்தே பொறந்தது. '


அழ ஆரம்பித்தாள் ரேணுவின் அம்மா..

" அப்பலேர்ந்து பிரமை புடிச்ச மாறி ஆகிட்டா ரேணு. போகாத கோயில் இல்ல..பார்க்காத வைத்தியமில்ல.. அவ எப்போ நல்லா இருப்பா..எப்போ கத்துவானு யாருக்குமே புரியலை..ஆனால் சும்மா சொல்லக் கூடாது என் மாப்பிள்ளை.. அவளைக் குழந்தை மாறிப் பாத்துக்கறாரு..நாங்க செஞ்ச புண்ணியம் ம்ம்மா அது..' விக்கி விக்கி அவள் அழுதபடி

" அந்தக் குழந்தை அவ கை விட்டுப் போனதிலேர்ந்து அவ மனசுக்குள் சந்தேகப் பேயும் வந்து உட்கார்ந்துடுச்சு..'..


ஒரு நாள் என் மாப்பிள்ளை ஆபீஸிலேர்ந்து லேட்டா வந்தாலும்..அவனோட முதப் பொண்ட்டாடியோட இருந்துட்டு வரியானு..மல்லுக்கு நிக்கறா..அதுவும் இப்போ கொஞ்ச நாளா ..ரொம்ப அதிகமாக் கத்தி அமர்க்களம். 

எங்க பார்த்தாலும் சந்துருவின் முதல் மனைவி முகம் தான் தெரியுதாம். 


" இங்கேயே தான்ம்மா இருக்கா அவ..எங்களை விட்டு போகலைம்மா..இந்த ரூம்ல என் படுக்கைல இருக்கா ம்மா..இவரு அவளோடயும் குடும்பம் நடத்தறாரும்மா..'இப்படியேத்தான்ம்மா புலம்பல்.


டாக்டர் கொடுக்கற மருந்தை அவளுக்கு கொடுக்கறதுக்குள்ள அவர் படற பாடு இருக்கே..தெய்வம் ஏன் தான் இப்படி எங்களை சோதனை பண்ணுதோ தெரியல..'..தன் மனசின் பெரிய பாரத்தை இறக்கினாள் ரேணுவின் அம்மா.


ச்சே..ஒரு நல்ல மனுஷனை தப்பா நினைச்சிட்டோமே என்று எண்ணியபடி சுஜா கிளம்பினாள்.

மனசெல்லாம் அதே நினைப்பாக இருந்தது.


அன்று இரவும் 

'என் புடவையைக் கட்டிட்டு இருக்கா பாரு உன் முதல் பொண்டாட்டி..எப்படி தலை விரிச்சுப் போட்டு என்னைப் முரைக்கறா பாரு " ..ரேணுவின் அலறல் சத்தம்.


சுஜாவிற்கு பாவமாக இருந்தது. 


அவள் வீட்டிக்கு பக்கத்தில் இருந்த கோவிலுக்குச் சென்று ரேணுவுக்காக வேண்டிக் கொண்டாள். 

அங்கே இருந்த பூசாரிக்கும் ரேணுவைப் பற்றித் தெரியும்.


" சாமி..ரேணுவுக்கு குணமாகற வழி இருந்தால் சொல்லுங்களேன்..அந்தக் குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்கணும்' ..சுஜா கேட்க..

கொஞ்ச நேரம் கண் மூடி தியானத்தில் இருந்தவர்..' நம்மூரு எல்லையில சுடுகாட்டுக்கு பக்கத்திலே ஒரு காளி கோயில் இருக்கு. அங்கே யாரும் போகறதில்ல..ஒரு பூசாரி மட்டும் இருக்காரு. அவருக்கிட்ட சொல்லி ..அந்த உக்கிரக் காளிக்கு ஒரு பூசை பண்ணச் சொல்லுங்க..எல்லாம் அவ பார்த்துப்பா..என்ன முடியுமோ அதை காணிக்கையா அவருகிட்ட கொடுங்க போதும்..'..


பூசாரி சொன்னதை ரேணுவின் அம்மாவிடம் ஃபோன் செய்து சொன்னாள்..


ஆபீஸில் சந்துருவின் லஞ்ச் டைம்.

ஃபோன் அடிக்க..மறுமுனையில் ரேணுவின் அம்மா.

மாப்பிள்ளை.. இதை மட்டும் செஞ்சு பார்க்கலாமா? ..தயங்கித் தயங்கி சுஜா சொன்னதைச் சொன்னாள்.


" அவ்வளவுதானே..செய்யறேன்ம்மா'..

மறுபேச்சு பேசவில்லை..


ஞாயிற்றுக்கிழமை மாலை.

" கிளம்பு ரேணு..கார்ல ஒரு ரவுண்ட் போய்ட்டு வரலாம்..அப்படியே ரெஸ்டாரெண்டல் டின்னர் முடிச்சுடலாம்'..

கண் சிமிட்டினான்..

குழந்தை இறந்து மூன்று மாதமாகி..இன்றுதான் ரேணு அவனுடன் வெளியே வரச் சம்மதித்து இருக்கிறாள்.


ஒரு லாங் ட்ரைவ் போகலாம்..


' ஒரு நாள் உன்னோடு ஒருநாள்'..ஜானகியின் குரல் எஃப்.எம்மில் ஒலிக்க..

" என்ன ..சார் இன்னிக்கு செம்ம மூட்ல இருக்கப்போல இருக்கு'..

ரேணு கேட்க..

தலையாட்டிக் கொண்டே வண்டியை ஓட்டியவன்..ஊர் எல்லையில் இருந்த அந்த சுடுகாட்டின் பக்கத்தில் காரை நிறுத்தினான்.

" ஒரு நிமிஷம் உள்ளே உட்கார்ந்திரு..இதோ வந்திடறேன்'...

இறங்கி...அங்கிருந்த காளி கோயில் நோக்கி நடக்க..

ஓடி வந்தார் பூசாரி..

" இந்தக் கோயிலிலுக்கு இனிமேல் மாசா மாசம் விளக்கேற்ற எண்ணெய்க்கு ஆகும் செலவை நான் ஏத்துக்கறேன்..இந்தாங்க ..இரண்டு மாசத்துக்குரிய பணம் இதில் இருக்கு..'..

அவன் அவர் கையில் பணத்தைக் கொடுக்க..

" எங்கடி இங்கே வந்தே..என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா நீ'??.

காரின் கதவைத் திறந்து கொண்டு..

வானத்தைப் பார்த்தபடி..

' பாருங்க..நான் சொன்னா நம்ப மாட்டேங்கறீங்களே..அதோ .தலை விரி கோலமாய்..கண்ல வெறியோடு..உங்களை என்கிட்டேர்ந்து பிரிக்க வரா பாருங்க'..அடங்காமல் ஓட ஆரம்பித்தாள்.

ஒருவழியாக அவளைச் சமாதானப்படுத்தி காரில் அமர்த்தி..ஆசுவாசப்படுத்தியவன்..

ஏதோ தோன்றியது போல காரை வேகமாகச் செலுத்தினான்.

' நிதானத்துக்கு வந்தவள்..' நான் ஏன் இப்படி இருக்கேன்னு..என்னை மன்னிச்சுடுங்க' ..அவள் பேசியது எதுவுமே காதில் விழவில்லை அவனுக்கு..


கார் ..கிரீச் என்ற சத்தமிட்டு ஒரு வீட்டின் முன் நின்றது.

காரை விட்டு இறங்கியவன்..

வெளியே வா..ரேணு என்றான்..

ஒன்றும் புரியாமல் திருதிருனு அவள் முழித்த வேளை..


"வாங்க சந்துரு..வாங்க..எப்படி இருக்கீங்க? இது தான் உங்க வைஃபா..? 

வாட் எ ப்ளஸண்ட் சர்ப்ரைஸ் ..!! 

வேறு யாருமல்ல..சந்துருவின் முதல் மனைவி ரம்யா..

இவளை ஃபோட்டோவில் மட்டுமே பார்த்திருக்கிறாள் ரேணு. 


"ஏங்க ..யாரு வந்திருக்காங்கனு பாருங்க..'

என்று கூப்பிட...

வெளியே வந்தான் மிடுக்கான அவள் கணவன்.

 "ஐ ஆம் குமரன்' ..அறிமுகப்படுத்திக் கொண்டவன்..

மிக ஜாலியாகப் பேச ஆரம்பித்தான்.


"இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க..இங்கேயே நாம எல்லாரும்.ஒண்ணா சாப்பிடலாமே..அரை மணியில் ரெடி செய்யறேன் ' கிச்சனுக்குள் நுழைந்த ரம்யாவின் பின்னால் .." நானும் உதவறேன் வாங்க' சகஜமாக உள்ளே நுழைந்தாள் ரேணு.


பேச்சும் அரட்டையும் முடிந்து பை சொல்லி விட்டு கிளம்பும்போது..

' சில விஷயங்கள் நம் கை விட்டுப் போறதும் நல்லதுக்குத்தான். அது ஒரு புது ஆரம்பத்துக்கும் வழி காட்டலாம். பிடிக்கலை..ஒத்துப் போகலைனு பிரிஞ்சோம். ..ஆனா..நாம நல்ல நண்பர்களாக இருக்கலாம் இல்ல?'..

ரம்யா சொன்னபோது....


தன்னைச் சுற்றி அமைத்துக் கொண்டிருந்த ஒரு முள்வேலியிருந்து வெளியே வந்து..

தன் கணவன் சந்துருவைக் காதலுடன் பார்த்தாள் ரேணு..


'இனி எலாம் சுகமே'..எஃப் எம்மில் ராஜாவின் பாட்டு ..


அடுத்த நாள் முதல்..அந்த வீட்டிலிருந்து எந்த சத்தமும் இல்லை..


" நாம சொன்னது..இவங்களுக்கு நல்லதாப் போச்சு என்று சுஜா நினைக்க..


சந்துரு....தன் ஐடியா ஜெயித்தது என்று நினைக்க..


என்னவாக இருந்தால் என்ன...?

அவர்கள் வாழ்வில் இனி ஆனந்த ராகம் தான்.


Monday, December 19, 2022

Happy birthday Radha Sriram ஐம்பது காணும் ..

 Happy birthday Radha Sriram 

ஐம்பது காணும் ..

அன்பு ராதாவுக்கு..

அள்ளி அள்ளி வழங்குவோம்..

அன்பு வாழ்த்துக்கள்.💐💐💐💐💐


தத்துவம் சொல்லுவாள்..

தெறிக்கும் அரசியல் பேசுவாள்..

தைரிய லக்ஷ்மி இவள்..

தட்டிக்கேட்பாள் ..தவறுகளை..


பதிவுகள்..

சில

பட்டாசாய் ..சில

பாசமாய்..சில

பண்டங்களாய்..சில

பரபரப்பாய்..சில

படிப்போருக்கு..m

புரியாதததாய்

( just kidding radha)..😄😄😄


உள்ளத்தில் இருப்பதை வடிகட்டாமல் சொல்லும்...

உண்மை நட்புக்கு இலக்கணம்.

 குஜராத்தின் கர்ஜிக்கும் குரல்..

 கொண்டாடும் பிறந்தநாள் ..🎁🎂🎉🎉🎉🎊🌟

 இன்பங்கள் சேர்க்கட்டும்..

 இனிமையால் நிரம்பட்டும்..

 வாழ்த்திடுவோம் நாமே..

 வாழிய பல்லாண்டு என்று..⭐⭐💐💐💐

Thursday, December 15, 2022

என்னை மறந்ததேன்...???

 என்னை மறந்ததேன்...??? 


நன்னா தேடு...அந்த புஸ்தக மூட்டைக்குள்ளே இருக்கா பாருடா..அதுலதான் இருக்கு அந்த  பழைய டைரி கடுப்பில ஏணியில் ஊஞ்சல் ஆடிண்டு இருந்த பையன்...அதே எல்லாம் எப்பவோ எடைக்கு போட்டு அம்மா mug வாங்கிட்டாப்பா..இப்போ எதுக்கு என்னை ஏத்தி வைச்சு உயிர வாங்கற...ஏணியில் இருந்து குதித்து மகன் ஓட..டேய்..அவசரமா ஒரு நம்பர் வேணும்டா....அங்கு வந்த தர்மபத்தினி.. க்கும்..செல்லுல எல்லாம் இருக்கும்போது..எதுக்கு இந்த லொள்ளு உங்களுக்குனு வசைபாட..ஐயோ..செத்துப் போன செல்லே..உயிர் உடனே வந்த Bsnl வழியா பேசக்கூட..இப்போ நீ வேண்டியிருக்கே....


காசு இல்லாம இருக்கலாம்..ஆனா..கைப்பேசி இல்லனா  ..technology க்கு salute செய்தாலும்..ரொம்ப அடிமையாகிட்டோமோ...எண்ணம் அப்பப்போ வரும்.

ஒரு flash back..

ரொம்ப கஷ்ட்டப்பட்டு ஆளைப் பிடிச்சு Bsnl connection வாங்கி..அதுக்கு ஒரு opening and closing password போட்டு பூட்டிப் பூட்டி..பில்லுக்கு பயந்து பேசிய காலம்..

எல்லாரோட டெலிஃபோன் நம்பரும் alphabetical order ல அழகா..அட்ரஸும் சேர்த்து எழுதி இருக்கும்.. புது வருஷ டைரி வந்ததும் அச்சு பிசகாம அதை copy வேற பண்ணி, பழைய டைரியயும் தூக்கிப் போடாம reference வெச்சுண்டு வாழ்ந்த நாட்கள்..

எல்லா நம்பர்களும் மனப்பாடம்..இப்போ மாதிரி வீட்டு நம்பரே செல் பார்த்து சொன்னதில்ல..

என் அம்மாவுக்கு ஆசையா வாங்கி கொடுத்தேன் ஒரு Nokia..அதை நோக்கியதே இல்லை அவள்..

அம்மா..இந்த landline phobia வை விடேன் என்றால்..இது தான் செளகரியம்...cost effective என்பாள்.அம்மா grow up என்பேன்..நான் தான் வளரல

எத்தனை digit ஆ இருந்தாலும் மூச்சு விடாம சொன்ன அம்மா எங்கே.. அந்த நம்பர் 23 ல முடியுமோ..இல்ல இல்ல..94 னு ஆரம்பிக்கும்....சட்டுனு ஞாபகத்துக்கு வர மாட்டேங்கிறது..அந்த செல்லைக் கொண்டா..சொல்லிடறேன்.. அந்த செல்லில் உள்ள contact list ஐ google ல வேற save பண்ணி இருக்கேன்..என்ன ப்ரயோசனம்..

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்...


மின்சாரம் இல்லாத போதும்..முழுமுச்சில் வேலை செய்யும் மூளையே..இன்னும் உன்னைக் கொஞ்சம் உபயோகிச்சு இருக்கலாமோனு தோணறது..


பழையன் கழிதலும்..புதியன புகுதலும் ஆனாலும்..இன்னும் என் அம்மா வீட்டில் அந்த ஃபோன் stand அதில் இருக்கும் telephone directory ம் அவள் கையெழுத்தில் எழுதப்பட்ட systematic telephone டைரியும்..nostalgic தான்.

Table manners ..

 Table manners ..

திருதிருனு ..நான் முழிக்கையில்..


Tension விடு..

சிதறிச் செல்..

சில வெண்மணிகளை..


சேதி சொல்ல வந்ததோ..?


பக்கத்து டேபிளில்...

பந்தி முடிந்ததைக் கண்டு

பறந்து வந்த..

.சிட்டுக்குருவி..


Monday, December 12, 2022

use and throw...

 use and throw...

நேற்று போல் இன்று இல்லை..இன்று போல் நாளை இல்லை..

தாத்தா கொடுத்த இங்க் பேனா..ஒவ்வொரு பரீட்சையின் போதும் பெட்டியிலிருந்து எடுத்து அழகா அலம்பி துடைத்து நிப் போட்டு..உபயோகப்படுத்தி இருக்கோம்.


வருஷ ஆரம்பத்தில் வாங்கிய ஜியாமெட்ரி பாக்ஸ் ..கூர் சீவி கடைசி வரை உபயோகித்த பென்சில்..அழித்து எழுத சொல்லிக் கொடுக்காததால் வேலையே இல்லாமல் வெள்ளையாய் தேயாமல் இருந்த ரப்பர்..கஷ்டப்பட்டு காசு சேர்த்து வாங்கிய பீரோ, மிக்ஸி, க்ரைண்டர் இத்யாதி.


இதுக்கு எப்போ விடுதலை கொடுக்கப் போகிறாய்னு என் பழைய மிக்ஸியை பார்த்து கேட்போர் ஏராளம். ஒன்று..அதிலுள்ள sentimental attachment..இன்னொன்று..இதைப் போல sturdy இப்போது கிடைப்பதில்லை..அப்படியே ரிப்பேர் ஆனாலும் ..எப்படியோ தேடிப் பிடித்து அதை ஓட்ட வைப்பதில் ஒரு சந்தோஷம்..

ஆனால்..இந்த சந்தோஷம் வடிந்து ஓடும்..

எப்போது என்று கேட்கிறீர்களா..?

 

எப்போது இந்த use and throw concept க்கு வந்தோமோ அப்போது..

உதாரணத்திற்கு..மார்க்கெட்டில் இருக்கும்  மொபைல் பற்றி வலையிலும் கடையிலும் விலைப் பட்டியல், quality, efficiency, reviews எல்லாம் படித்து நம் பட்ஜெட்டிற்கு ஒத்து வரும் அல்லது emi ல் கட்டும் வலையில் விழுறோம்.

வாங்கி ஒரு வருடம் ஒன்றரை வருடம்..பாட்டரி சார்ஜ் கம்மியாகும்..அடிக்கடி hang ஆகும். இன்ன பிற சிக்க்ல்கள். கடைக்கு ரிப்பேர் செய்ய எடுத்துப் போனால் இதுக்கு பார்ட்ஸ் இப்போ வரதில்லை என்று ஒரு பதில். கூடவே ..இன்னொரு best model வந்திருக்கு..இந்த பழசை வெச்சுட்டு எதுக்கு அல்லாடறீங்கனு .கடைக்காரர் புதுசை ் அணி வகுக்க.. பழசு மனதிலிருந்து பின்னோக்கி போகும்..நமக்கு புது செலவு..

இந்த நிலமை ..எல்லாப் பொருள்களிலும் இப்போது..

ரிப்பேர் செய்தால் சில நூறு ஆகும் விஷயம்.அவர்கள் காண்பிக்கும் exchange offer என்னும் carrot க்கு காலில் விழுகிறோம். காசைக் கரியாக்குறோம்.

இந்த வலையில் விழாமல் உங்கள் பொருள்களை பாதுகாக்கிறீர்கள் என்றால்..கண்டிப்பாக ஒரு கைத்தட்டல் உங்களுக்கு..


USE ..after that throw ..ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்..சில சமயம் ..இது இல்லாமல் இருக்கவே முடியாது என்று வாங்கும் பொருட்கள் ..

உபயோகித்து அனுபவிக்காமலே வீசி எறியப்படுவதும் நடப்பதனால்.

change and exchange are inevitable for life ..என்று முடிக்காமல் எந்த conversation ம் இப்போது இல்லை.

காலம் நம்மை இழுத்துப் போனாலும் ..நமக்கு  கிடைத்த சில முதல் பொருள்கள்..முதல் முதலாய் முதலிட்டு வாங்கிய பொருள்கள் ..வீட்டின் மூலையில் இல்லாவிட்டாலும்..மனதின் மூலையில் இருக்கும் என்றும்

தப்புக்கணக்கு

 #Sunday_topic

#தப்புக்கணக்கு..


அதை ஏன் கேக்கறீங்க..என் சோகக் கதையை..😭😭😭


3 idiots ல வரும் அப்பா அம்மா மாதிரி..என் பிஞ்சு முகத்தை பார்த்ததுமே..பெரிய பாடகியா வருவானு அப்பா போட்ட தப்புக் கணக்கு..இவ பெரிய ஆபிஸரா வருவானு அம்மா போட்ட தப்புக் கணக்கு...😀😀


என்ன செய்யறது..அவங்க ரெண்டு பேரும் கணக்கர்களாக பணியாற்றியும் எனக்குனு போட்ட கணக்கு..ரொம்ப தப்பா போச்சு..


சரி..சரி..அடுத்த லிஸ்ட்டுக்கு போவோம்..


அடடே..இந்தக் க்யூவில ஆளு கம்மியா இருக்கேனு போய் நின்னா..நம்ம கணக்கு தப்பாகி..

பக்கத்து லைன் வேகமா நகரும் போது..மனசு நொறுங்கும் பாருங்க..😄😄


எப்பவும் ஏறு முகம் தான் இந்த ஷேர்னு வாங்க..ஸ்டாக் மார்க்கெட்டே சரியும் பாருங்க..

நம்ம கணக்கு..தப்பு கணக்குனு..

கொட்டும் மழைக் காலம்..உப்பு விற்க போனேன்னு..BGM ஓடும்🤦🤦


பக்கத்து வீட்ல நல்லா உழைக்குதுனு சொன்ன பொருளை ..நமக்கும் அப்படியே நிறைய நாள் உழைக்கும்கற தப்பு கணக்கு  இருக்கே....

பக்கத்து வீட்டு பெருமையை பார்க்கும்போது பெருமூச்சு வரும்..🤦🤦


அட..இதென்ன பெரிய விஷயம்..

Mallika Ponnusamy  தான் கோலம் போடுவாங்களா நானும் போடுவேனேனு ஆரம்பிக்க..

முதல் சிக்குல ஆரம்பிச்ச சிக்கல்..நம்ம கணக்கு தப்பு..கோலத்தில் மட்டுமல்லனு..மண்டைல அடிக்கும்..


"நீ என்ன என்னை கேள்வி கேட்கறது?..நானே எல்லாத்தையும் உளறிக் கொட்டிடறேன்னு".

 அப்பாவியா.. எல்லா உண்மையும் சொல்ல..இதெல்லாம் எனக்கெதுக்கு சொல்றனு..எதிராளி பார்க்கற பார்வை இருக்கே..நம்ம கணக்கு ரொம்ப தப்புனு ..தப் தப்னு கன்னத்தில போட்டு....


எப்படியும் கோயிலுக்கு போனால் ப்ரசாதம் கிடைக்கும்னு ,ஜொள்ளு விட்டுக் கொண்டு போக..அங்கே வெறும் திராட்சைப் பழம் கொடுக்கும்போது." தப்பிப் போச்சே கணக்குனு...துக்கமா போகும்..🤤🤤🤤🤤


இதோ பக்கத்து தெருவுல இருக்கற கடைக்கு போய்ட்டு பத்தே நிமிஷத்தில் வந்துடுடலாம்னு தப்பு கணக்கு போட்டு..பெங்களூர் டிராஃபிக்கில் முழி பிதுங்கி..இப்போ ரொம்ப தெளிவு..🤣🤣🤣


"நீதான் accounts person ஆச்சே..உனக்கு தெரியாத பட்ஜெட்டா?..வீட்டுக்காரர் பாவம்..ஜெட் வேகத்தில் டப்பு செலவழியும்போது...கேட்க

 "ஐயா..என்னப் பத்தி தப்பு கணக்கு போட்டீரே..நானே எதோ க்ளாஸ் எல்லாம் கட் பண்ணினாலும்.."ஆத்தா நான் பாஸாயிட்டேன் " லெவல் தான்னு.....🥁🥁🥁🥁


அதெல்லாம் விட ..தினமும் போடும் தப்பு கணக்கு..திருந்தவே முடியாத ஒண்ணு இருக்கு.


என்ன ..தெரியுமா?


சமைக்கற பாத்திரம்..அதுலேர்ந்து டேபிளுக்கு கொண்டு வைக்க பாத்திரம்.மாற்றல்..

கடைசி..கடைசியா ..ஃப்ரிட்ஜுக்குள் தள்ள எடுக்கும் பாத்திரம்..

என் தப்புக்கணக்கின் height சொல்லும். ஒண்ணா ரொம்பி வழியும்.. இல்லனா..ரொம்ப பெரிசா இருக்கும்..😄😄😄🤦


நாம இந்த வேலையை செய்யாட்டி ..வீடே நின்னுடும்..🌏 உலகமே ஸ்தம்பிக்கும்னு தப்பு கணக்கு மட்டுமே போடவே கூடாது என்று நான் கற்றேன்.

For example..நமக்கு ஒரு போஸ்ட் எழுத ஐடியா வரும்..எதோ வேலையில் இருப்போம்..இப்போ நான் இதைச் செய்யலைனா என்ன நடக்கும்னு த.கணக்கு போட்டு...

அப்புறமென்ன..நாம ஆடிப் பாடி எழுத உட்காரும்போது..காத்து தான் வருதுனு ...அடுத்த ஐடியாவுக்கு காத்து இருக்கணும்..😄😄😄


இதெல்லாம் சகஜமப்பானு மனசு சொன்னாலும்..ஒரே ஒரு ஆறாத தப்புக்கணக்கு ஒண்ணு..இன்னும் உறுத்தல் தான்.

எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனு பெங்களூர் கூட்டி வந்துவிட்டேன். 

குழந்தை மாதிரி சென்னைக்கு போகணும் ..சென்னைக்கு போகணும்னு சொல்வா.

இரும்மா..இவ quarterly exam முடியட்டும் ..ஒரு வாரம் போய் உன் வீட்ல இருனு சொன்னேன்..

ஆனா..நான் போட்ட கணக்கு ..கடவுளுக்கே பொறுக்கலை..அம்மாவை உயிரோடு அங்கே கூட்டிப் போகமுடியலை. 😭😭


எல்லா கணக்கும் கரெக்ட்டாவே போட்டால்..ஒரு த்ரில் இருக்குமா வாழ்க்கையில்?


தப்பா கணக்கு போடும்போது தான் ..மண்டை குடையும்..எந்த ஸ்டெப்பில் தப்பு நடந்ததுனு analyse செய்ய வைக்கும்..

அடி எங்க பலமா விழும்னு நம்மள உஷாராக்கும்..


ஆதலால்..

தப்பு கணக்கு ..நல்லதே..💪💪💪💪