Thursday, December 29, 2022

என்_சமையலறை

 #ஸண்டே_ஸ்பெஷல்

#என்_சமையலறை


Shankar sir ..நிறைய டிப்ஸ் கேட்டிருந்தார் இந்த டாபிக்கில்.


அதெல்லாம்..எனக்கு தெரியாது.

ஏன்னு கேட்டால்..இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை ஊர் ஊரா திரிஞ்சு..இன்று வரை அதே நிலமைதான்.


கண்டது..கிச்சன்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.


ஒரு ஆள் மட்டுமே நிற்கக்கூடிய  கிச்சன்.. சதுர கிச்சான்.செவ்வக கிச்சன்..டெல்லி வீட்டில்..ரூம் எல்லாம் தாண்டி வெளியே இருக்கும் கிச்சன்...


நமக்கு ஏத்த மாதிரி இல்லனா என்ன?..நாம அதை நமக்கு ஏத்த மாதிரி  மாத்திடுவோம்னு இன்று வரை தொடரும் ..கிச்சன் வைபவங்கள்.


பாத்திரங்கள் எண்ணிக்கையை விட..எங்க கிச்சனில் சமைத்த பாத்திரங்கள் ..

அதாங்க characters ஏராளம்.😄😄😄


உங்க கிச்சனுக்குள்ள வரலாமானு யாரும் கேட்டுடக் கூடாது..🤣


இக்கட சூடு, அல்லி நோடு, உதர் தேகோ....இப்படி எல்லா சாமான்களையும் காண்பிச்சுவிட்டு

உன்னால் முடியும் தம்பி ..மனோரமா ஸ்டைலில்..me ..enjoy தான்.💪💪


" சமையலறை..எனக்கு மட்டும் சொந்தமா.?..நீயும் வந்து சமைத்து பாருனு" ..வரவங்களையும் இழுத்துப் போட்டுடுவோம்ல.


என்ன செய்யறது..நம்ம டிசைன் அப்படி..


கல்யாணம் முடிஞ்சு ,டெல்லிக்கு போனால்..அங்கே ஞாயிற்று கிழமைகளில் என் கிச்சன்..இவரோட ஃப்ரண்ட்ஸ் பேச்சிலர்கள் கையில் போக..நான் பேச்சு மூச்சு இல்லாம அவங்க அட்டகாசத்தை பார்த்து..மயங்கி விழாத குறைதான்.


ஒரே குக்கரில் ஓஹோ production செய்யும் ஒருத்தர்..

ஒண்ணு விடாம் எல்லாப் பாத்திரத்தை யும் அள்ளிப் போடும் ஒருத்தர்..

சமைத்தபடியே..துடைக்கும் ஒருத்தர்..( வேற யாரு எங்க அம்மா தான்)..

கப்பும் டம்ளரும் அடுக்குப் பாத்திரமும் ,டவராவும் ஸ்பூனும் அழகா பார்த்து பார்த்து அடுக்கும் ஒருத்தர்..( என் மாமியார் தான்)


எங்க வீட்டு கிச்சன் மேடைகள் ..எத்தனை பேரை ..master chef ஆக்கின புகழ்பெற்ற மேடைகள் தெரியுமா?..


இவரோட ஃப்ரண்ட்ஸ், என் பெண்கள், அவங்களோட ஃப்ரண்ட்ஸ் ,அவங்க அம்மாக்கள், மாமியார், அம்மா, அத்தை, சித்தி, நாத்தனார் ,கொழுந்தனார்னு எல்லாரையுமே அவங்க signature dish அரங்கேற உதவியது ..my super kitchen மேடை.


இப்போ லேட்டஸ்ட்டா என் வூட்டுக்காரரையும் நள பாகத்தில் இறக்கி, பெருமைப்படுத்திய மேடையாக்கும்..

இன்னும்..மாப்பிள்ளை மட்டும் வந்து ..அவர் திறமையைக் காட்டணும்..me ..waiting


அந்த அடுப்பு இருக்கே ..அடுப்பு..

அப்படியே மூளையில பொறி பறக்க வைக்கும் ஒரு creativity.


பாஸ்ட்டாக்கள்..வெறும் டோஸ்ட்டாக மாறினால்கூட..டேஸ்ட்டாக..பாஸ் மார்க்கு வாங்குமிடம்..

பிட்ஸாக்கள் ..best ஆ மாறுமிடம்

பக்கோடாக்கள்..பக்காவா கிடைக்குமிடம்..

தோசைகள்..உருமாறும்.


உப்மாக்களோ..உவகை தரும்..


பானி பூரிக்கள்..பூரித்து மகிழும்


சாட் ஐட்டமெல்லாம்..சகட்டு மேனிக்கு கிடைக்குமிடம்..


ஜவ்வரிசி கள் ..ஜாலம் காட்டுமிடம்..

வடையோ..தடையில்லாமல் கிடைக்கும்..


"வந்தவரெல்லாம் தங்கி விட்டால்..இந்த அகிலாவுக்கு கிச்சனில் வேலையேதுனு"...உங்க மை வாய்ஸ் கேக்கறது.😄


அப்போ நீ எப்போதான் சமையல் செய்வ..?..

கரெக்ட்டு தான்..

நிறைய செய்வேன்.நிறைவாகச் செய்வேன்.


துடைப்பது, அடுக்குவது, தூஸி தட்றது..

எல்லாமே..வலது கை செய்ய்றது இடதுகைக்கு தெரியாது.


புடிச்சது சுத்தம்..

இல்லாட்டி..வீட்ல சத்தம் தான்.


நம்ம சமையலறை என்பது..வெறும் மசாலாக்களும் பொடிகளும், பாத்திரமும் மட்டும் இருக்கும் இடமல்ல..நிறைய memories ம் இருக்குமிடம். 


வாணலியைப் பார்த்து...ஹலோ இன்னிக்கு உன்னைத்தான் போட்டு வறுக்கப் போறேன்னு சொல்லுவேன்..


குக்கரே..இன்று ..நோ மக்கர்னு சொல்லி ..வேலை ஆரம்பிப்பேன்..


பால் வழியும் பாத்திரமாகிடாதேனு..பால் பாத்திரத்துக்கு சொல்லிடுவேன்.


கட்டரே..வெட்டு நீ காயை மட்டும்னு caution செய்வேன்..


ஒரு positive vibration கொண்டு வந்ததால்..

என் சமையலறை ..மையல் கொள்ள வைக்கும் அறை..


ஒவ்வொரு shelf லும்..பல நினைவுப் பொக்கிஷங்கள் உண்டு..


இருந்த கிச்சன் , இருக்கும் கிச்சன் எல்லாம் பெரிசா ஒரு aesthetic sense இல்லாட்டாலும்..

இங்கே தான் "அகிலாஸ்..அசத்தல்" சமையல் நடக்கும்.


என் சமையலறை ..எங்கேயும் எப்போதும் இப்படித்தான்.


 இந்த போட்டோ எங்கம்மா வீட்டு கிச்சன்😄😄


No comments: