Saturday, February 11, 2017

எச

budget ..budget..budget..
படுத்துது இன்னிக்கு முழுக்க..
இதுதான் 'உனக்கு எனக்கு 'வரிசையில் என் கடைசி பதிவு

பட்ஜெட் நானுனக்கு
deficit  நீ எனக்கு

சம்பளக் கவர் நானுனக்கு
பிக்பாக்கெட் நீ யெனக்கு

லைசென்ஸ் நானுனக்கு
life tax நீயெனக்கு

 விதிவிலக்கு(exemption) நானுனக்கு
வரி ஏய்ப்பு (evasion )நீயெனக்கு


பொருளா..தாரம்..?என்பவனில்லை நீ
பொருளாதாரம் உயர்த்துபவன் நீ

ஆதாயம் தேடாத பந்தம்
ஆதாரம் வேண்டுமோ என்றும்?
(last line senti)

Thursday, February 9, 2017

காலம் ..

வேலைக்குப் போன அம்மாக்கள்
விவரம் தெரியாத பிள்ளைகள்
விளையாடிக் கழிக்குமே அடுத்தவீட்டில்
வினையேதும் ஆனதில்லை அப்போது..
தலைகீழ் எல்லாமாச்சு இப்போது
முகமூடித் திருடர் போல்
மூடர்கள் வெறிக்கு பயந்து
முகத்தை துணியால் மறைத்தும்
மறைத்தே வீசும் அமிலத்தால்
மங்கிய வாழ்விங்கு ஏராளம்.
ஊருக்கு கிளம்புகிறாள் பெண்ணென்றால்
உள்ளூர பயமும் தொற்றிடுதே
உதறல் எடுத்தே உயிர் போய் வருதே
பேருந்து பயணம் இரவிலென்றால்
அருந்துவதில்லையே தண்ணீரும் இங்கே
அரை வயிற்று உண்வோடு
அடக்கியே செல்லணுமே வீடுவரையில்

ஊருக்குள் இருக்கையிலே
காருக்குள் போகையிலே
பேசத் துவங்கிடுவாள் அம்மா
பிடுங்கிப் பேசிடுவார் அப்பா
வழித்துணையாய் உரையாடல்
வீடு வந்து இறங்கி்யதும்
விடுவாரே நிம்மதிப் பெருமூச்சு
வயிற்றில் ஓர் நெருப்பு
வயதுப் பெண்...
்வீட்டிலிருந்தால்.
வெளியே சென்றால்..

வருமா ஒரு காலம்..
வெறிச்சென்ற தெருவிலும்
வெளிச்ச மில்லா வீதியிலும்
அச்சமின்றி இவள் நடக்க..

யாதுமாகி

யாதுமாகி..

அரைப்பான் ..அவிப்பான்.
துடைப்பான் ..துவைப்பான்..
 வறுப்பான்.. தேய்ப்பான்
சுடுவான் ..குளிர்ப்பான்..
எந்திரம் இவையெல்லாம்
என் திறன் முன் எம்மாத்திரம்
அடக்கினாய் உன்னுள்ளே..அது
அந்தக் காலம்..

அடுக்கினாய் வகைக்கொன்றாய்
அடுக்களையில் அட்டத்தில்..
அடக்கினாய் ஒரு தட்டலால்
அது இந்தக் காலம்.

அப்போதோ..இப்போதோ..
அவளன்றி அசையாது..
அணு கூட எப்போதும்.
இயங்கினாள்..இயக்கினாள்..
இயந்திரங்களையும் மந்திரத்தால்..
இல்லாள்..இவளிலையே..
இயங்காது ஏதுமிங்கே.

Wednesday, February 1, 2017

பிரியாவிடை

பசுமை நிறைந்த பள்ளி வாழ்வு
பிரியா விடையுடன் ..
பாடித் திரிந்த பறவைகள்..அவரவர்
பாட்டைப் பார்க்க பறக்கும் நேரம்..

ஆசையாய் வளர்த்த கிளிகள்
அடுத்த நாள் முதல்
அங்கு வராது போகுமேனு
அள்ளித் தந்த அன்புடனும்
ஆசி வழங்கிய ஆசிரியரும்..
வாட்சப் வழியே..என்
வணக்கமும் உண்டு..
வினாத்தாளும்் உண்டு..
விளக்கமும் உண்டு..
வெற்றி பெற உதவுவேன்
வாஞ்சையுடன் வழியனுப்பல்

அருமைத் தோழமை..
அழுகையும் தேற்றலும்
அங்கே காணலையே..
கண்ணில் ஒளியோடு
கையில் சுடரோடு
கம்பீர் வலம் வந்த
கண்மணிகள்் கண்டேனே..
பள்ளிச் சினேகிதம்..
கொள்ளை இன்பமே.

ஊடகம் இருக்கு..
உனக்கென எப்போதும்..
நானிருக்கேன் என..
நண்பர்கள் நல்மனம்..
சிரிப்பும் கேலியுடன்..
செல்ஃபி செல்லங்கள்..

மணி அடிக்கும் முன்னே
மண மணக்கும்..
மஞ்சூரியனும்..
மசாலா தோசையும்..
மாய்ந்து பாய்ந்து
மடக் மடக்கென..
முடித்த காலமது
மறுபடி எப்போ..
கடைசி பெஞ்சில்
கலாட்டாக் கதைகள்
கண்ணு சொக்கிப்போய்
கையும் களவுமாய்
கிளாஸை விட்டு வெளியேறி..
காண்டீனில் காத்திருந்த
காலம் வருமா..
சோக கீதம்  ..
சொல்ப நேரம்
சிட்டாய்ப் பறந்தனர்..
சிரித்து மகிழ்ந்தனர்..
வரப்போகும் நாளுக்கு
வரவேற்பு ..
வருங்காலம் வளமாய்..
வாழ்த்து மழையுமங்கே..
ஆடுங்கள்..
பாடுங்களென..
அரங்கம் அங்கே..
அவர்களுக்காக..
பிரியத்துடன்..ஒரு
பிரியா விடை..

குருவே

அனுஷத்தில் அவதரித்த
அமைதியின் உருவே..
அன்பருளம் அதையறிந்து
அருள் பொழிந்த கடலே..
ஆசி தரும் அற்புதமே
ஆசை துறந்த மாமணியே
காஞ்சி மகானிவரின்
கண்கள் சுடரொளியே
கண்டு வணங்குவோரின்
கவலைகள் யாவையுமே
கரைந்ததே கற்பூரமாய்..
கண்டதில்லை உம்மை..
களித்தோம் தெய்வத்தின் குரலை..
கரம் குவித்து வணங்கிடுவேன்..
காமகோடி குரு உனையே..

நம்பிக்கை

புதரின் நடுவில் நான்..
பிழைக்கத் தெரியும் எனக்கு..
பிடிவாதத் தேடலில் அன்று
பிடிபட்டது ..பிடிமானம் ஒன்று..
சாளர வழியுடன் கூட
சூரிய ஒளியும் சேர்த்து.

துவண்ட நிலையோ
தோல்விக்கு வித்து
துவளல் தூரந்தள்ளி
துணிந்தெழு நீயும்
தோன்றுமே புதுவழி
துடிப்புடன் கடன்செய்
தேடிவரும் வெற்றியுமேந

எண்ணங்கள்

சைக்கிளில் போற மாதிரி
slow motion எண்ணங்க்ள்
ஸ்கூட்டியில் போற மாதிரி
பிரேக் போடும் எண்ணங்கள்
காரில் போற மாதிரி
கியர்போடும் எண்ணங்கள்
ர்யிலில் போற மாதிரி
தடக் தடக் எண்ணங்கள்
பஸ்ஸில் போற மாதிரி
விசிலக்கும் எண்ணங்கள்
விண்ணில் பறக்கிற மாதிரி
வினோத எண்ணங்கள்..
இந்த போக்குவரத்து நெரிசல்
இருப்பதாலே என்றும்..
இனிக்குதிங்கே வாழ்க்கையே
இனியும் சலிக்காதீர்..
என்னதான் சிந்தனையோ...இந்த
சின்ன மூளைக்கென்று...
முடுக்கி விடாமல் போனால்..
முடங்கிப் போவோமே நாமும்.

கண்ணாடி

புறக் கண்ணாடி முன் நின்ற வேளை
அகக் கண்ணாடி அழைப்பில்லாமல்
அங்கே  ஆஜர் ஆகியது..
புறக்கண்ணாடி: நரையும் வந்ததே.. நன்றாக இல்லையே..?
அகக்கண்ணாடி: மனக் கறைகள் மறைவதை அது எடுத்துச் சொல்லுதே..
புறக் கண்ணாடி: கருவளையம் கண்ணில்..??
அகக்கண்ணாடி: கண்மணி களுக்காக  நீ விழித்த கதை சொல்லுமே
புறக்கண்ணாடி: சுருக்கம் ஏனோ..?
அகக்கண்னாடி: சுருங்கி.. பின் விரிவதே வாழ்க்கை ..சுருக்கங்கள்..சுவடுகள்
புறக்கண்ணாடி: பல்லெல்லாம் போச்சே..
அகக்கண்ணாடி: பேசினால் இனிமே காற்று மட்டும் வரட்டும் . கடுஞ்சொல் வேண்டாமே..!
புறக்கண்ணாடி: பெருத்த தொப்பையும் தொந்தியும் ..இதுக்கென்ன பதில்..
அகக்கண்ணாடி: வறுத்தினாயே..இந்த சின்ன வயிற்றை..அபாயச்சங்கிது..அடங்கலனா..ஊதிடுவேன் உண்மையிலே..
புறமும் அகமும் பட்டிமன்றம் நடத்த..
புரியணும் ஓர் உண்மை.
வயது ஏற..
ஒளி வருமே..
கண்ணில் ..வருமொளி
கருத்தில் தெளிவிருந்தால்
முகத்திலே ..வருமொளி
முதிர்ச்சியின் ரேகைகளால்
செயல் சொல் எண்ணம்
செப்பிடனும் சிறப்பாக..
அக அழகு ஆட்சியிலமர
புற அழகு கூடும் என்றும்.

மரங்கள்

சோலைகளெல்லாம்..நெடுஞ்
சாலையா இப்போ மாறியாச்சு
கொடியும் செடியும் மரமுமிங்கே
கோடாலிக்கு இரையாச்சு
கான்க்ரீட் காலன் வந்ததுமே
காணாமல் போச்சே மரமெல்லாம்
அரச மரத்தடி அமர்ந்தோனே
அடுத்த தலைமுறை மக்களுக்கு
ஏட்டில் மட்டுந்தானா..
நெட்டை குட்டை மரமெல்லாம்..

காலம்

பல்லு வெளுக்க
பல்பொடி கோபாலு
வழவழ முகத்துக்கு
கொழகொழனு கலந்த
கடலை மாவு தயிரு
கண்ணெறியும் சீயக்காய்
கண்டிப்பாக குளியல்
சிட்டாய்ப் பறக்க
சீட்டிப் பாவாடை..
தலைவாரிப் பூச்சூடி
தழையத் தழையப் பின்னல்..
கத்திரி வெண்டையும்..
காலத்தில் கிடைக்கும் பழமும்
வீட்டில் செய்த பணியாரம்..
வஞ்சம் இல்லை வயிற்றுக்கும்..
எளிமை வாழ்க்கைனு
என்கதை சொன்னால்..
என்ன இதெல்லாம்..
எள்ளி நகையாடுதே..
இளைய சமுதாயமும்..
அசைபோடும் உள்ளம்..
அவ்வப்ப்போது துள்ளும்.