Sunday, April 8, 2018

ஆப்பு வைக்கும் app

ஆட்டோல போகும்ணும்் ..app வேணும்.
அரிசி வாங்க போகணும் ..app வேணும்..
எலக்ட்ரீஷுயன் வந்தா app வேணும்..
ஏதாவது கேட்கணுமா..app வேணும்..
வேற என்ன ..learn Kannada app தான்..
இன்னுமா இந்த வீட்டு வழக்கம் கத்துக்கலனு ..கல்யாணமான பொண்களை கலாய்க்கற மாதிரி..இன்னுமா..நீ..கன்னடம் கத்துக்கலை.. கரெக்ட்தானே..
 வந்து வருஷம் நாலாச்சு..வாழும் இடத்தின் மொழி கற்பது மிக அவசியமாச்சே..
ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு அழகு..
relate பண்ணி படிக்க ஆரம்பிக்க இந்திய மொழிகளும் ஒன்றுக்கொன்று பிணைந்து கிடக்கும் அற்புதம் புரிகிறது.
எங்க ஊர் செய்தித்தாளும்..நானும் இருக்க பயமேன்னு சொல்ல..
வார்த்தைகள்.. சின்ன sentence கத்துண்டாச்சு..
but எதிர்ல் யாராவது பிரவாகமா..பேசினால்..வாயிலிருந்து தெரிந்த..கற்ற வார்த்தை கூட..வர மாட்டேங்குறது..
ஜுனூன் பார்த்து கற்ற இந்தியுடன் வாழ்க்கை தொடங்க..குழந்தைகளோடு நானும் கற்றேன் பேச ..எழுத..
மீண்டும்..பாடம் துவக்கம்..
I loved this quote too
If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language, that goes to his heart.❞
‒Nelson Mandela..

Packing

கன்னம் கிள்ளும் மாமி..
காதைத் திருகும் மாமா..
............,.........
போனவுடன் கடிதம் போடு
புதினாவும் கீரையும் சேரு..
ஜோதிகா ் ஆடிக் கொண்டிருக்க..
ஆஹா..
கட்டுச்சாதைக் கூடை மணமணக்க ரெடி..
கண்ணீரும் கம்பலையுமா நான் அழ..அப்பா அம்மா அழ..
யார் டெல்ல்லிக்கு வந்தாலும் டப்பா டப்பாவா சாமான் ..தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் கொஞ்சம் தடம் புரண்டு போனாலும் என் பேர் அதில் மாட்டிக்கும்..பொடிகள், அப்பளம், நொறுக்குத் தீனி, அரிசி மாவு...அதைவிட..காய்ச்சிய நெய்..அஞ்சாறு சம்ப்டத்தை திறக்க அரைக் கிலோ நெய்..கவர் கட்டி, துணியால் கட்டி மாவடு, ஆவக்காய்.காப்பிப் பொடிக்கு ஒரு தனி பாக்கிங்...
.இப்படி ஒரு லிஸ்ட்..

டெல்லில எல்லாம் புடவை விலை ஜாஸ்தினு பண்டிகைக்கு புடவைகள்.மாட்ச்சிங் ப்ளவுஸ்..
ஃபோன் அடிக்கடி பேச முடியாது..ஒரு நிமிஷம் பேசினாலே 300 ரூபாய் சொளையா எடுத்து வெக்கணும்..ஒரு புடவைக்குள் பத்திரமா இருக்கிற மாதிரி அம்மா அப்பாவின் லெட்டர்ஸ்.. முதல்ல வேகமா படிச்சு முடிச்சுட்டு..திரும்பத் திரும்ப ஞாபகம் வரும்போதெல்லாம் எடுத்து படித்து..
இதே காலப் போக்கில் ஊர்கள் பழக..இதெல்லாம் அங்கெயே கிடைக்கிறதம்மா..ரெசிபி சொல்லு நானே ட்ரை பண்றேனு..கை காலை சுட்டபடி..கற்றுக் கொள்ள ஆரம்பித்து..பின் ஒவ்வொரு முறை பிறந்தகம் வரும்போதும் புதுசா கற்றுக் கொண்டதை டப்பாவில் கொண்டு வந்து கொடுத்து..வீடே மணக்க நான் சமைக்கிறேன் என்று அம்மாவை ஒரங்கட்டி..( சாமான் யத்தில கிச்சன் தர மாட்டா அம்மா..)
எத்தனை instant , ready to eat வந்தாலும்..இந்தப் பழக்கம் இன்னும் நம்மிடையே ஒட்டிக் கொண்டுதான் இருக்கு. இப்போ எல்லாம் அம்மா.. மாமியார் எல்லாரும் expert ..domestic ,international pack செய்து அனுப்புவதில்..
காலி டப்பாக்கள் கதை பல சொல்லும்..
வருஷம் போனாலென்ன..வயசும் ஆனாலென்ன..
இந்த tradition இன்னும் தொடர்கிறது..

போளியா..போதி மரமா

போளியா ...போதி மரமா.!!!

போகிப் பண்டிகை என்றாலே
போளியில்லாமல் உண்டோனு
புதுக்கோட்டை ராசா..(அட..என் அப்பாதான்)
போட்டாரே ஒரு போடு..
என்னடா இது..இந்த
அகிலாவுக்கு வந்த சோதனைனு..
அரண்டு போய் ஆரம்பிச்சேன்..
ஆண்டவனை வேண்டினேன்.

இளகலான மாவு..கொஞ்சம்
இறுகலான பூரணம்..
உள்ளங்கை மட்டுமே..
உற்ற துணை யிங்கே..
பதினொன்றே போதுமென்று
பாகம் பிரித்து உருண்டைகள்
எண்ணெயில் தோய்ந்த மைதா..
என்ன பாடு படுத்துதப்பா..
ஓட்டம் பிடிக்குதப்பா..
ஓட்டையும் விழுந்ததப்பா..
இரண்டாவது உருட்டி தட்ட
இரண்டாய் கிழிந்ததப்பா..
மூன்றாவது போளியோ..
மெத்தென்று இல்லாமல்
முறுகலாச்சு ஓரத்தில்..
நாலாவதோ ..
நான் வரலை விளையாட்டுக்கென
நடுங்கி ஒளிஞ்சதப்பா
அஞ்சாவது உருண்டையோ..
அஞ்சாதே என்னைக் கண்டு
அழகாய் உருட்டி..
அடைப்பாய் பூரணம்..
அமுதமாய் இனிப்பேன்
அனைவருக்கும் படைப்பாயென
ஆசியும் வழங்க..
அப்புற மென்ன..
ஆறு ..ஏழு..எட்டு.
அருமையாய் அடுக்கினேன்..
ஒன்பது..பத்து ..பதினொன்று...
ஒரு நொடியில் முடிக்க..

கை வண்ணம் காட்ட நினைக்கையில்
கைக்கொட்டி சிரித்தது காலியான பாத்திரம்.
போளி சொல்லும் பாடமாக
போதி மர ஞானியானேன்.

பாதி வாழ்க்கை போனபின்னே
பாதை தெரிய ஆரம்பிக்கும்..
பார்த்துடலாம் வாழ்ந்தென்று
பறக்க நினைக்கையிலே
படக்கென முடிந்துவிடும்..

பிறந்ததுமே கற்றறிய
பள்ளிக் கூடமிங்கேது
படபடப்பாய் கடக்கையிலே
பாடமாகும் வாழ்க்கையிங்கே..

படைத்தவன் தந்தான்..இந்தப்
பாத்திரம் (வாழ்க்கை)நாடகத்தில்
படைப்போமே சரித்திரம்..
போளி தந்த போதனை..
போலியில்லை..உண்மை..உண்மை.
























வல்லமை தாராயோ

மூட்டு வலி..முதுகு வலி
முணுமுணுப்பில் உறக்கம்
மறக்காமல் எழுப்பும் கடிகாரம்
முடிந்ததா இரவு..
விடிந்ததே விரைவிலென்று
வாரிச் சுருட்டி எழுச்சி..
"உனக்கென்ன ..
உபாதை ஒன்றுண்டா..
உரிய நேரத்தில் வந்து
உன் வேலை தொடங்குகிறாய்.."
சூரியனுக்கு சுளுக்கில்லை
சந்திரனுக்கு சளித் தொல்லையில்லை
நட்சத்திரத்துக்கு நரம்பு தளர்ச்சியில்லை
மேகத்துக்கு முதுகு வலியில்லை
அசதியுடன் விழித்தாலும்
அசத்தலாக்குகிறேன் என் நாளை
சூட்சுமம் அறிந்தேன்..
சுருங்கியவள் விரிந்தேன்.
மறையும் மதியும் மலரும் காலையும்
மறக்காமல்  சொல்லுமே சேதி
வலி கொடுத்த ஆண்டவன்..மன
வலிமையும் கொடுப்பான்
வழியும் திறப்பான்..
நாளைத் துவங்க..
நாளெல்லாம் திருநாளாக்க

திருமணம் ஒன்று...தீ'மண'த்துடன்

திருமணம் ஒன்று...தீ'மண'த்துடன்
jan 23 rd 2004..
மறக்கமுடியாமல் தவிக்கும் போது மார்க்கு மீண்டும் வந்து வந்து ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கார் முகநூலில்..

சீரங்கம்..
சீரங்கம்..
சோகத்தில் தத்தளித்த நாள்..
சீவிச் சிங்காரிச்சு சென்றவரில் சிலர்
சீறிய நெருப்பில்..
செத்து மடிந்த கோர நாள்..
ரங்கா..ரங்கா..ரங்கா..
கங்கும் தீயில் கதறினார் பலர்.
கல்யாணம் ஒன்று காரியத்தில் முடிவு..
பூ சரியா வெச்சிருக்கேனா..
புடவை இந்த கலர் சரியா.
புதுப் பெண்போல புறப்பட்டாள்..
பூகம்பம் காத்திருப்பது அறியாமலே
அலங்கரித்த மேடை..
அழகாய் மணமக்கள்..
அவசரமாய் போட்ட பந்தல்
அதில் வந்தான் எமன்..
வீடியோ பிடிக்க வந்தவனோ
விதியை மாற்ற வந்தவனோ..
சிறுபொறியை புறக்கணிக்க
சீரழிந்தது பலர் வாழ்வு..
சிறு வழி ஒன்றுதான்..
சிக்கிய பெருங்கூட்டம்..
தப்பிக்க வழியில்லை..
தலையில் விழுந்தது நெருப்பு
அமைதியாய் இருப்பவள்
அழுத குரல் கேட்கலையே..
அலறல்கள் வானைப் பிளக்க..
அரங்கனும் கலங்கியிருப்பானோ
புதுசாய் போட்ட மூக்குத்தி
பளிச்சென்று காட்டியது
போர்த்திய அவள் உடலை..

ஆண்டு பதினைன்ந்து ஆனாலும்..
ஆறாத காயம் நெஞ்சில்..
அன்பான என் சித்தி..
அவனடி சேர்ந்து விட்டாள்..

உயிர் பெற்று உற்சாகத்துடன்
உயிர் குடித்த மண்டபம்..
தெருவழியே நடந்த போது..
தாரையாய் கண்ணீர் ..தடுக்க முடியவில்லை..

தீயில் சுட்ட இந்தப் புண் ஆறவே மாட்டேங்கிறதே..
எத்தனை குடும்பங்கள்..இழந்தன சொந்தங்களை..
எந்த ஒரு function என்றாலும்..safety measures சரியாக இருக்கா என்று முதலில் பார்க்க..அரங்கன் கொடுத்த அலாரமோ..
















exam....நல்ல exam.

exam....நல்ல exam..
அப்ளிகேஷன் கொடுத்த என்னை ஏற இறங்க பார்த்தபடி..கவுண்டரில் இருந்தவர் .
மேடம்..அங்க study material கொடுப்பாங்க வாங்கிட்டு போங்க என்றார். ஒரு குட்டி booklet கொடுத்தாள் அங்கே இருந்த பணிப்பெண்.புரட்டி பார்த்தேன்.. அதான் எனக்கு தெரியுமேனு எப்பவும் போல மண்டைகனம்.
விழுந்து விழுந்து படிக்க நேரமில்லாததால் ஒரு ரவுண்டு அடிச்சு படிச்சேன்.
பரீட்சை நாள்..ஹாலுக்கு.போறதுக்கு முன்னாடி குச்சி ஒண்ணு கையில் வெச்சுண்டு குச்சியா ஒரு பைய(ன்)ர் revision கொடுத்தார். 15 க்கு 10  மார்க் வாங்கினாதான் பாஸ். எங்க reputation எல்லாரும் காப்பாத்தணும்னு வேற சொல்லிட்டு போய்ட்டார்.பரீட்சை ஹாலுக்கு போறதுக்கு முன்னாடி டாகுமெண்ட் சரி பார்த்தல். என் அப்ளிகேஷன் நம்பரப் போட்டதும் பளிச்சுனு நான்.. ஃபோட்டோஷாப்பில் அழகாக்கின ஃபோட்டோ வர..அடுத்ததாக..identity verification. aadhaar நம்பர் கொடுக்க..
அசமஞ்சம் மாதிரி ஒரு ஃபோட்டோ வர..அங்கே இருந்த கம்ப்யூட்டர் தூக்கில் தொங்கிடுத்து..அதான் hang ஆகிடுத்து.ஒரு பத்து நிமிஷம்..பாவம் அந்த BPO பைய்யன்..
ஒரு வழியா..நீயா..இது நீயானு அது பல தடவை மேல கீழ பார்த்துட்டு ஓகே பண்ண..
அங்கே இருந்த சிப்பந்தி..'நெக்ஸ்ட் பாட்ச்ல தான் போகணும் நீங்க..போய் உட்கார்ந்துக்கோங்க ' என்றாள். நானும் பொழுது போகாமல் வாட்ஸப்பில் மொக்கை போட..பக்கத்தில் ஒரு இளவயசுப் பையன் சீரியஸா mock test எழுதிண்டிருந்தான்..ஓஹோ..இதுக்கெல்லாம் கூட இப்படி வெப்சைட் இருக்கானு ஆச்சரியத்தில் நானும் .. உடனே கூகுள் search பண்ண..நிறைய உதவிக்கரமிருக்க..
உடனே ஆரம்பிச்சேன் நானும் ரிவிஷன். முதல் டெஸ்ட் 2 மார்க்கு..இரண்டாவதில் கொஞ்சம் முயற்சி பண்ண 5 மார்க்.
அப்போ அங்கே வந்த அந்த instructor பையர்..10 எடுத்தாதான் பாஸ்..இல்ல பூட்ட கேஸுனு என்ன பார்த்து கேலியா சிரிக்க..
அங்கே என் ரோல் நம்பர் கூ்ப்பிட உள்ளே போனேன். ரூம் பூரா கம்ப்யூட்டர்கள் என்னைப் பார்த்து கண்ண்டிச்சது..
login and password வாங்கிக்கோங்க..உங்களுக்கு ஒரு PC allot ஆகுமென்றார் invigilator.
இஷ்ட தெய்வமெல்லாம் வேண்டியாச்சு.
கொடுத்த கணினி முன் உட்கார்ந்தாச்சு..
ready steady po ..நான் திரு திருனு முழிக்க..பக்கத்தில் வந்து நின்ற invigilator.. டி..டி..டி..முணுமுனுக்க..நான் அவரை.. 'இது என்ன என்னை மரியாதையில்லாமல் டி.டி..நு சொல்றாரேனு ஒரு முரை  விட..
மேடம்..இதுக்கு option D answer..tick maadu நு என் தலையில் கொட்ட..ஐயோ நன்னி சாரேனு..சொல்றதுக்குள்ள..அடுத்த கேள்வி திரையில்..வேர்த்து விறுவிறுத்து கேள்வி படிக்க..எல்லா ஆப்ஷனுமே கரெக்டா இருக்கே..dip dip dip ..my blue ship போட்டு..பதிலை டிக்கடிக்க..என் score சென்னை வெயில் வேகத்தில் ஏறிடுத்து..ஆஹா..9 வாங்கியாச்சு..
இன்னும் ஒரே.கேள்வி.ஒரே கேள்வினு பாட்டு ஓட..ஆஹா.. பத்தாவது பதில் பட்டுனு தப்புனு சொல்லிடுத்து அந்த கம்ப்யூட்டர். பதினொன்று.. பன்னிரண்டு.. பதிமூணு..பதினாலு..பதினைஞ்சு..
ஆல் கரெக்ட்னு விடிலடிக்க..
14/15..ஆத்தா நான் பாஸாயிட்டேனு கூவ..என் மொபைலில் டொடங்னு வந்து விழுந்த மெசேஜ்..your learner's licence approved என்றபடி..
சாரதி வேலைக்கு..second innings..ஆரம்பம்.
அரைக் கிழம் ஆறு மாசம் கழிச்சுதான் ஆகப் போறேன்..அதுக்கு இப்பவே arrangement எல்லாம் ஆரம்பம்.
இன்னும் அடுத்தது ஓட்டிக் காண்பிச்சாதான் முழுசா லைசென்ஸ் கிடைக்கும்.
விசா வினாயகர் மாதிரி..லைசென்ஸ் வினாயகரை எங்கிருக்காரோ தெரில.அந்த தொப்பையுள்ள RTO officer தான் அருள் புரியணும்..இல்லனா.சுத்த வெச்சு சுளுக்கெடுப்பாராம்
எட்டு போட வெச்சு தட்டு தடுமாற வைப்பாராம்
இப்பவே விசாரிச்சு வெக்கணும்..அவருக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்னு..!!!

அட்மிஷன் வாங்கலையோ அட்மிஷன்.

அட்மிஷன் வாங்கலையோ அட்மிஷன்.
நவம்பரிலிருந்து ஆரம்பிச்சு ஏப்ரல் வரை நடக்கும் மேளா..இந்த அட்மிஷன் மேளா.
transfer ஆனவர்கள், பழைய ஸ்கூலிலிருந்து வேறு பள்ளிக்கு மாற விரும்புபவர்கள்..இப்படி பல வகை.
க்யூவில் நிற்கும் காலம் போய் இப்போது எல்லாம் கணினி மயமாயாச்சு.
ஒரு சில பள்ளிகள் மட்டும் கால் கடுக்க நிக்க வெச்சு அப்ளிகேஷன் தருகிறார்கள்.
என் பெண்களுக்காக 1995 லிருந்து பார்த்த பள்ளிகள் ஏராளம்..ஆனால் மாறாத சில விதிகள் மன உளைச்சலை தருகிறது.
LKG admission ..lottery system ல செலெக்ட் ஆனவர்  பெயர் வரும். அதற்கு பிறகு parents interview. அபியும் நானும் ப்ரகாஷ் ராஜும் ஐஷ்வர்யாக்கள் ஆவார்கள் அப்பா அம்மாக்கள். இது ஒரு லெவல்.
ஒரே பள்ளியில் பதிவு செய்து விட்டோம்னு சும்மா இருக்கமுடியாது. சுத்துப் பட்டு பதினெட்டு கிராமத்திலும் இருக்குற பள்ளிக்கு காசோலையுடன் பதிவு செய்யணும்.
பெரிய வகுப்புகளில் சேர்க்கணும் எனில் இன்னும் பல இடர்கள்.
தனித்தனி நாட்களில் பரீட்சை.
வேறு வேறு syllabus.
அதுவும் இந்த நுழைவுப் பரீட்சைகள் பள்ளி இறுதிப் பரீட்சை நேரத்தில் மோதுகிறது.
குழந்தைகள் எதைப் படிக்கும்?
for example - 10 ம் வகுப்பு model exam ம் practicals ம் நடக்கும் நேரத்தில் 11 th க்கான நுழைவு த் தேர்வு நடைபெறுகிறது. ஒரு பள்ளி அறிவியல், கணக்கு மற்றும் ஆங்கிலம். இதில் 9 th portion ம் அடங்கும். 10 ஆம் வகுப்பு படிக்கிற குழந்தைக்கு 9/ம் கிளாஸ் பாடம் தெரியாதா என்று கேட்போம்..ஆனால் அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு பெரும் pressure ஆக இருக்கிறது. மாணவர்களின் 3 அல்லது 4 வருடத்திய ரிப்போர்ட் கார்டு வைத்து பரிசீலனை செய்து இது போன்ற 10 ம் வகுப்பு மாணவ/மாணவியருக்கு நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கலாமே..
அடுத்தது முக்கியமாக result.
ஒரு பள்ளி .உடனே ரிசல்ட் வெளியிட்டு குறிப்பிட்ட தேதிக்குள் பணம் கட்டச் சொல்லி வற்புறுத்துகிறது.
சில பள்ளிகளில் முடிவு காலம் தாழ்த்தி வருகிறது.
இதனால் கிடைத்தை முதலில் பற்றிக் கொள்வோம்னு இதுக்கும் பணம் கட்டி, பிடித்த/காத்திருந்த பள்ளி முடிவு அறிவிக்கப்பட்டதும..் முன் கட்டிய பள்ளியில் பணத்தை forgo செய்ய வேண்டிய நிலை.
ஏன் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் இருக்கும் பள்ளிகளின் தலைமைகள் ஒரு unanimous decision எடுத்து , publication of results and payment of fees ல் ஒரு regulation கொண்டு வரக்கூடாது?
it gives a fair chance to the parents and children to choose the school they wish to study also இல்லையா?.
காலம் மாறும்..நம்பிக்கையில் இன்றும்

Use and throw

use and throw...
நேற்று போல் இன்று இல்லை..இன்று போல் நாளை இல்லை..
தாத்தா கொடுத்த இங்க் பேனா..ஒவ்வொரு பரீட்சையின் போதும் பெட்டியிலிருந்து எடுத்து அழகா அலம்பி துடைத்து நிப் போட்டு..உபயோகப்படுத்தி இருக்கோம்.
வருஷ ஆரம்பத்தில் வாங்கிய ஜியாமெட்ரி பாக்ஸ் ..கூர் சீவி கடைசி வரை உபயோகித்த பென்சில்..அழித்து எழுத சொல்லிக் கொடுக்காததால்..வேலையே இல்லாமல் வெள்ளையாய் தேயாமல் இருந்த ரப்பர்..கஷ்டப்பட்டு காசு சேர்த்து வாங்கிய பீரோ, மிக்ஸி, க்ரைண்டர் இத்யாதி.
இதுக்கு எப்போ விடுதலை கொடுக்கப் போகிறாய்னு என் பழைய மிக்ஸியை பார்த்து கேட்போர் ஏராளம். ஒன்று..அதிலுள்ள sentimental attachment..
இன்னொன்று..இதைப் போல sturdy இப்போது கிடைப்பதில்லை..அப்படியே ரிப்பேர் ஆனாலும் ..எப்படியோ தேடிப் பிடித்து அதை ஓட்ட வைப்பதில் ஒரு சந்தோஷம்..
ஆனால்..இந்த சந்தோஷம் வடிந்து ஓடும்..
எப்போது என்று கேட்கிறீர்களா..?
 எப்போது இந்த use and throw concept க்கு வந்தோமோ அப்போது..
உதாரணத்திற்கு..மார்க்கெட்டில் இருக்கும்  மொபைல் பற்றி வலையிலும் கடையிலும் விலைப் பட்டியல், quality, efficiency, reviews எல்லாம் படித்து நம் பட்ஜெட்டிற்கு ஒத்து வரும் அல்லது emi ல் கட்டும் வலையில் விழுறோம்.
வாங்கி ஒரு வருடம் ஒன்றரை வருடம்..பாட்டரி சார்ஜ் கம்மியாகும்..அடிக்கடி hang ஆகும். இன்ன பிற சிக்க்ல்கள். கடைக்கு ரிப்பேர் செய்ய எடுத்துப் போனால் இதுக்கு பார்ட்ஸ் இப்போ வரதில்லை என்று ஒரு பதில். கூடவே ..இன்னொரு best model வந்திருக்கு..இந்த பழசை வெச்சுட்டு எதுக்கு அல்லாடறீங்கனு .கடைக்காரர் புதுசை ் அணி வகுக்க.. பழசு மனதிலிருந்து பின்னோக்கி போகும்..நமக்கு புது செலவு..
இந்த நிலமை ..எல்லாப் பொருள்களிலும் இப்போது..
ரிப்பேர் செய்தால் சில நூறு ஆகும் விஷயம்.அவர்கள் காண்பிக்கும் exchange offer என்னும் carrot க்கு காலில் விழுகிறோம். காசைக் கரியாக்குறோம்.
இந்த வலையில் விழாமல் உங்கள் பொருள்களை பாதுகாக்கிறீர்கள் என்றால்..கண்டிப்பாக ஒரு கைத்தட்டல் உங்களுக்கு..


USE ..after that throw ..ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்..சில சமயம் ..இது இல்லாமல் இருக்கவே முடியாது என்று வாங்கும் பொருட்கள் ..
உபயோகித்து அனுபவிக்காமலே வீசி எறியப்படுவதும் நடப்பதனால்.
change and exchange are inevitable for life ..என்று முடிக்காமல் எந்த conversation ம் இப்போது இல்லை.
காலம் நம்மை இழுத்துப் போனாலும் ..நமக்கு  கிடைத்த சில முதல் பொருள்கள்..முதல் முதலாய் முதலிட்டு வாங்கிய பொருள்கள் ..வீட்டின் மூலையில் இல்லாவிட்டாலும்..மனதின் மூலையில் இருக்கும் என்றும்..





பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

உத்ராகண்டில் வாசம். யார் வந்தாலும் ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத் எல்லா இடத்துக்கும் tour guide ஆ கிளம்பிடுவேன்.ஒரு ஏக்கம் எப்போதும் உண்டு..kedarnath அடிவாரத்தில் வீட்டுக்காரர் வேலையில் இருந்த போதும்..ஏதோ காரணத்தால் இந்தப் பயணம் மட்டும் தட்டிக் கொண்டே போனது.
2009. கோயம்புத்தூர் சித்தி சித்தப்பா, மகன், நான் என் மகள்கள்..கிளம்பிட்டோம் யாத்ரா.
ஆகஸ்ட் மாதம்..அசகாய மழை பெய்யும். இப்ப போய் ரிஸ்க் எடுக்கறீர்களே என்று சொன்ன எல்லாருக்கும் ஒரு புன்னகை பதிலாக கொடுத்து விட்டு..மூட்டை கட்டியாச்சு..
gauri kund . just இன்னும் 14 km மலை ஏறிட்டால் ...அவனைக் காணலாம்.
குதிரை சவாரிகளின் பேரம்..palanquin கள் வரிசையில். நான் என் பெரியவள், சித்தி பையன் ..குதிரை யிலும்..சித்தி, சித்தப்பா, சின்னவள் palanquin யிலும் செல்ல முடிவாச்சு.
பணம் கட்டினதும் மூணு குதிரைகள் ..இது Champa..இது ்chameli..இது Kavitha..
குதிரைக்காரர் formal aa introduce செஞ்சு வெச்சார். ஹலோ நு நாங்கள் சொல்ல..நல்லா வேகமா தலையாட்டித்து. counter ல் இருந்த ஆள் குதிரைக்காரரின் licence ஐ எங்கள் கையில் கொடுத்தார்..ஓஹோ..இவர் குடுமி எங்க கையிலனு குதூகலிச்ச போது..உன் life ஏ என் கையில் இப்போ என்பது போல ஒரு சிரிப்பு சிரித்தார் அவர்.
குதிரை மேலபொரு வழியா வழுக்கி வழுக்கி ஏறியாச்சு. என்ன மாதிரி ஒரு அறிவாளி  குதிரைகள். Champa தான் அக்காகாரியாம்.அவள் முன்னாடி நடக்க..குறும்பு குட்டி கவிதா..அவளை தாண்டாமல்..என்ன ஒரு technical walk.. படியே இல்லாவிட்டாலும்..பார்த்து பார்த்து காலை வைத்துச் செல்லும் லாவகம்.உச்சா வருதுன்னு ஓரமா ஒதுங்கும் ஒரு ஒழுங்கு..
மலைத்தபடி..மலை ராணியையும் மந்தாகினி யையும் ரசித்த படி எங்கள் பயணம். செல்ஃபோனில் பேச முடிந்ததால் எல்லாருக்கும் எங்கள் சவாரி பற்றி சிலாகித்தபடி சென்றோம்.
கூட்டமே இல்லை கோயிலில். கேதார நாதனைக் கண்குளிரக் கண்டோம். அரை மணி நேரத்துக்கும் மேலே அசையாமல் அவனை நினைத்தபடி..அங்கேயே அமர்ந்திருந்தோம்.விட்டு வரவே மனமில்லை.அப்படி ஒரு ஆகர்ஷிக்கும் சன்னதி. ஜருகண்டி சொல்ல ஆளில்லாத ஜோ எனக் கொட்டும் மழைக்காலம்.மனசு நிறைய அவன் நாமம் சொல்லி..பிரகாரத்தில் உட்கார்ந்திருந்த அகோரர்களை ஆ வென பார்த்தபடி ..கீழே இறங்கத் துவங்கினோம்.
மத்தியான நேரம்..மந்தாகினி ஓசை..maggi மட்டும் கிடைக்க ..வயிறை ரொப்பினோம்.அக்கா தங்கைகள் வந்து நிற்க ..மீண்டும் குதிரை சவாரி.
திடீரென்று அப்படி ஒரு மேகம் . லேசான தூறலாய் ஆரம்பித்த மழை..சில நொடிகளில் கொட்டோ கொட்டென்று கொட்ட..கைக்கு அடங்காமல் குதிரைகள் ஓட்டமெடுத்தது..வலது பக்கம் மலையிலிருந்து கொட்டும் மழை..அதற்கு பயந்து குதிரைகள் ஓட நினைக்க.. இடது பக்கம் அதள பாதாளம். கைப்பிடி நழுவ கீழே விழ ஆரம்பித்தோம். குதிரைகள் ஒரு புறம் ஓட..கோடாவாலா..அதன் பின் ஓட..நாங்கள் நடுவழியில் அம்போ என்று விடப்பட்டோம்.ram bada வில் சாப்பிட்ட அத்தனை ஆலு பராட்டாவும் ஆவியாக..மொபைல் மழையில் நனைந்து மூச்சு நின்று போக.ஆள் நடமாட்டமில்லா வழியில் நாங்கள் மூவர்.( season இல்லாததால் ஆளே இல்லை).
இப்படி ஒரு திவ்ய தரிசனம் செய்து விட்டு வரும்போது இது என்ன சோதனை சிவபகவானே..palanquin ல் போன சின்ன மகள், சித்தியைப் பற்றி ஒரே கவலை..
வேறெதுவும் தோன்றவில்லை..சிவனே நீ தான் கதி..எங்களைக் காப்பாற்று..கண்ணில் தாரையாக நீர்.
வேறு வழியில்லை. நடக்க ஆரம்பித்தோம். ஒம் நமச் சிவாய..ஓம் நமச் சிவாய..என்றபடி.
மாஜி..மாஜி..யாரோ கூப்பிடும் குரல். திரும்பிப் பார்க்கவோ ,நிற்கவோ பயம். வெகு அருகில் அந்தக் குரல். தைரியம் வரவழைத்து..திரும்பினேன்..
மூன்று சின்ன குதிரைகளுடன் ஒரு நடுத்தர வயதுப் பையன். ' aavo maaji .ismein beto aap log' என்றான். nahi baiyya என்று மறுத்தேன்.
என் மனதில் ஓடியதைப் படித்த அவன்..' நான் உன் மகன் போல. நான் சொல்வதைக் கேள். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே கும்மிருட்டாகும். மிருக ஜந்துக்களின் நடமாட்டம் வரும். தயவு செய்து என்னை நம்பு. இதில் ஏறுங்கள்..நான் உங்களை பத்திரமா கொண்டு போய் விடறேன். காசு கேட்பேனு பயப்படாதே..எனக்கு அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ' என்றான். வேறு வழியே இல்லை..ஏறினோம். அவன் கதை அவன் அம்மாவை வருடத்தில் ஒரு முறை தான் பார்ப்பானாம். அவனுக்காக அவன் அம்மா  காத்திருக்கும் அழகை அவன் மொழியில் விவரித்தான்.28 கிமீ  தினமும் ஏறி இறங்கினாலும் ..கிடைக்கும் சம்பளம் மிகக் குறைவு என்று குறைப்பட்டான். கொட்டும் மழையில் அவன் கதை கேட்டபடி..அந்தக் கேதாரனைப் பிரார்த்தித்தபடி..மாலை ஆறரை மணிக்கு கீழே வந்து சேர..அங்கே முன்னமே வந்து சேர்ந்த சித்தியும் சித்தப்பாவும் எங்களை கட்டிக் கொண்டு அழ..
நன்றி..நன்றி என நூறு தடவை அந்தப் பையனுக்கு சொல்லி எங்கள் கையிலிருந்த காசையெல்லாம் திணிக்க..மூன்றே மூன்று நூறு ரூபாய் வாங்கிய அவன்..' meri maa ko ek sari Lena hai' என்றான்.
cloud burst என்று அடிக்கடி அங்கே பேப்பரில வரும்  செய்திகள்..
கண்ணெதிரில். பொத்துக் கொட்டும் மழை..ஜலப் பிரளயம்.
காசு...கைப்பேசி..எதுவும் உதவிக்கு வரவில்லை.. அடித்துச் செல்லப்பட்டு..ஆள் அடையாளம் காண முடியாது காணாமல் போயிருப்போம். எங்களைக் காக்க வந்தவன்..சாட்சாத் அந்த சிவனே ..சிவனே
அவன் தந்த உயிர்ப் பிச்சையில் நான் ..
எங்கே வெளியில் சென்றாலும் எப்போதும்  பகவானே ..எனக்கு யார் மூலமாவது நல்ல வழி காட்டு..அதே போல்..நானும் ஏதாவது வகையில் யாருக்கேனும் உதவியாய் இருக்கணும் என்று ஒரு வேண்டுதல் செய்வேன்.
வந்தான்..காத்தான்..ஜோதி மயமானவன்.







Valentine day

shopping நீ போகையிலே
stand ஆக நானிருப்பேன்..

talk time ம் போட்டுத் தந்து
தூக்கத்தை தியாகம் செய்வேன்

மெனுகார்டை நீ பார்க்கையிலே
மாவாட்டத் தயார் ஆவேன்.

சர்வரிடம் சைகையிலே
சகலமும் தராதே என்பேன்.

பீட்டர் நீ விடுகையிலே
புரிந்தது போல் நடிப்பேனே..!!

கலாய்க்கும் உன் தோழிகளுக்கு
கையில் கட்டுவேன் ராக்கியுமே

உன் பேரைக் கேட்டாலே
தீயாய் வேலை செய்வேன்

Valentine day இதிலே..என்
wallet ம் திவாலாச்சே..

சும்மாத்தான் சொல்றேன் புள்ள..
சீரியஸும் ஆகாதே..
வழக்கம் போல சந்திப்போம்..
Valentine முடிந்தாலும்..

வாக்காளர் அட்டையும்...( மத்யமர்)

வாக்காளர் அட்டையும்..வாயில்லாப் பூச்சி நானும்..
எதுக்கும் சும்மா வாங்கி வெச்சுக்கலாமேனு பல விஷயங்கள் நம்ம வீட்ட்ல இருக்கு.
அப்படித்தான்....இந்த வோட்டர் ஐடி கார்டும்.
கல்யாணம் ஆன புதுசுல டில்லி வாசம். ஜுனூன் ஹிந்தி தான் வாழ்வாதாரம்.கதவை திறக்கவே பயம்.யாராவது எதாவது ஹிந்தில கேட்டுட்டா என்ன பண்றதுனு ஒரே உதறல்.
ஒரு நாள்..என் உப்பரிகையில் நின்னு வேடிக்கை பார்த்தபடி இருந்தப்போ..ஒரு ஃபைலும் கையுமா ஒரு வாட்டசாட்டமா ஒரு ஆள் என் வீட்டை நோக்கி வந்தார். கீழே வீட்டுக்கார அம்மாவோடு ஏதோ பேசி விட்டு..படி ஏறி மேல வர ஆரம்பிக்க..என் லப்டப் அதிகரிக்க..வாக்காளர் அட்டை பதிவுக்கு வந்தேன் என்று புரிய வைத்தார்.
அவர் கேட்ட அத்தனையும் ஒன்று விடாமல் நான் ஆங்கிலத்தில் எழுதித் தந்தேன். குடும்ப விவரம் உட்பட. வந்தது அட்டை.
கால் கிழமான என் வயதை அநியாயம்.. சாளேஸ்வரம் வயது என காண்பித்த அட்டை.. ஒரு நொடி சுக்கு நூறான இதயத்தை கெட்டியாக பிடித்தேன்.
அடுத்த இடி..என் கணவர் பெயர் ராமசாமி. அவர் அப்பா பெயர் ராம் பகதூர்.
பொத்துக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கி..
எப்படி இப்படி ஒரு தப்பு செய்ய முடியும் என்றே யோசனை. சீனிவாசன் என்று எழுதியது எப்படி ் ராம் பகதூர் ஆனது.
million dollar question. அதுவும் அப்போது வாக்காளர் பட்டியலையும் அட்டையயும் ஒழுங்குப் படுத்திய சிம்ம சொப்பனம் பதவியில் இருந்த காலம்.
அந்த வோட்டர் ஐடியினால் பெரிதாக ஒரு பயனுமில்லை.
அதே சமயம் விடுமுறைக்காக சென்னை வந்தேன். அப்பா ஒரே டென்சனாக.."ஊருக்கு போறதுக்குள் வோட்டர் ஐடிக்கு formalities முடி என்றார்.
டெல்லியில் வாங்கிட்டேன்ப்பா என்றேன். காதிலே போட்டுக்கவில்லை.
அங்கேயும் போய் க்யூவில் நின்று அழுது வடிந்து ஃபோட்டோ எடுத்து..ஐடியும் வந்தது.
என் டெல்லி அட்டையை ஒருவரும் மதிக்கவில்லை. ' அது  அந்த ஊருக்கு சார்' கேட்டால் பதில் இப்படி.
நாடோடிகளான நாங்கள் அடுத்த ஊருக்கு மூட்டைக் கட்டினோம். டாடா நகர். அங்கேயும் இதே கதை. வோட்டர் ஐடி வாங்கியே ஆகணும் என்று.
நான் இந்தியாவில தானேப்பா இருக்கேன்னு நான் கேட்ட கேள்விக்கு..முரைப்பு த்கான் பதில்.
அடுத்த மூட்டை தேவ பூமி..Dehradun. அந்த வார்டு கவுன்சிலர் ( டம்மி மனைவி...தேவபூமி ராப்ரி தேவி)
அங்கே தேர்தல் வர..' அண்ணிக்கு உங்க வீட்டு ஓட்டு ..அவசியம் போடணுமென்றார்.
என் டெல்லி, தமிழ்நாடு வோட்டர் ஐடி செல்லாது..இங்கே நான் புதுசா ஒண்ணு இந்த வீட்டு முகவரியில் வாங்கித் தரேன் என்றார். அதே போல ஒரு சுபயோக தினத்தில் "akila 'வை ' akela' ஆக்கி ஒரு வாக்காளர் அட்டை வந்தது..
அந்த 'e ' ஐ' i' ஆக்கச் சொல்ல .. akhila
என்று ஒரு h ம் சேர்த்து..உஸ் அப்பாடா..
இப்பொழுது கர்நாடகா. அதே கதை. மீண்டும்.
அவள் ஒரு தொடர்கதை மாதிரி..

சீட்டுக் கட்டு விளையாடலாம் .இப்படி state to state போனால் .
one India..அப்படினா என்ன சார்?




பரீட்சைக்கு நேரமாச்சு..

பரீட்சைக்கு நேரமாச்சு..

பாசுரம்...போய் இப்போ படிப்புசுரம் பரவி இருக்கும் எல்லா வீடுகளிலும் இந்த மூன்று நான்கு மாதம்.
பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு  சுரம் மேள தாளத்துடன் தொடங்கியாச்சு.
படி படி என்று ் பாட்டு ஒரு பக்கம்..
பாரு பாரு பக்கத்து வீட்டுப் பையனைப் பாரென்று படுத்தல் மறுபுறம்.
அந்தக் காலத்தில் நாங்களெல்லாம் என்று சுயபுராணம் ..

பொதுத் தேர்வு வரும் பின்னே
போகும் நிம்மதி முன்னே..
பசங்களுக்கு அட்வைஸ் செய்வதில் சளைக்காத பெற்றோரே..உங்களுக்கும் சில டிப்ஸ்.

1. நீ தான் இந்த குடும்பத்துக்கே ஒரு bench mark fix பண்ணனும் என்று பயமுறுத்தாதீர்கள்.
2.compare செய்வதைக் கைவிடுவோம்.
அவர்கள் பலத்தை கண்டுபிடிப்போம்
பலவீனத்தை ஓரளவு சரி செய்ய உதவுவோம்.
3. என் பெண்/பைய்யன் இப்படித்தான் செய்தனர் என்ற வீட்டுக்கு வருவோர் போவோர் எல்லாரும் அறிவுரை அள்ளி வழங்கும் போது..அதையெல்லாம்  திணிக்காமல் நிதானமாகச் செயல்படுவோம்்.
4.வேலைக்கு போகும் பெற்றோர் எனில் , study leave சமயத்தில் விடுப்பு எடுத்து அவர்கள் தனிமையை விரட்டுவோம்.
5. time table போடுவதில் help செய்வோம். theory and practical சரி விகி்தத்தில் தினமும் படிக்கும்படி செய்வோம்.
6. every one hour eye exercise and simple hand and leg exercise செய்யச் சொல்வோம்.
7. காலையில் எழுந்ததும் உடம்பையும் மனத்தையும் ஒருமிக்கும் பயிற்சிகள் செய்ய உதவுவோம். நாமும் கூட செய்தால் அவர்கள் இன்னும் சந்தோஷமாக செய்வார்கள்.
8.படிக்க ஆரம்பிக்கும் போது ஒரு சின்ன prayer.
' நீ படிச்சதெல்லலாம் அப்படியே கேள்வியா வருமென்று நினைக்காதே.எந்தக் கேள்வி எந்த ரூபத்தில் வந்தாலும் I should be able to apply my wisdom and intelligence while writing my exams. give me the strength and courage 'என்று பிரார்த்தனை செய்ய சொல்லிக் கொடுப்போம்.
9. கடவுளுக்கு காணிக்கை செலுத்தறேன் என்று வேண்டும் முன், என் குழந்தை நல்ல உழைக்கணும்..படிக்கணும் என்ற பிரார்த்தனை முன் வைப்போம்.

10. healthy food is more important. especially say no to oil fried items.  salad, fruits , sprouts , dal எல்லாம் சேர்ந்த balance diet கொடுக்கணும். வெளிச் சாப்பாடு கொஞ்சம் தள்ளி வைக்கலாமே
11. குழந்தைகளிடம் ஏதாவது மாற்றம் தெரிந்தால்..சோர்ந்தோ..தூங்க முடியாமல் இருந்தாலோ அவர்கள் மன அழுத்தத்தை குறைக்க வழி வகுப்போம். அதற்காக எப்போது பார்த்தாலும் அறிவுரை வேண்டாம்..ஓடி விடுவார்கள்.
12. டீவி பார்க்காதே, வாட்ஸப் போகாதே, face book ஆ..கூடவே கூடாது என்று சொல்லி விட்டு..நாள் முழுவதும் நாம் அதில் மூழ்கி இருக்கலாமா?
13. சில குழந்தைகளுக்கு பாட்டு டான்ஸ் வரும், சிலர் படம் வரவர், சிலர்  வாத்தியம் இசைப்பர், சிலர் கதை படிப்பார்.stress reliever இவையெல்லாம்.சும்மா எதுக்கு டைம் வேஸ்ட் பண்றனு சிடுசிடுக்காமல் இருப்போம். பிடித்ததை செய்யும்போது மனம் கொஞ்சம் லேசாகும் அவர்களுக்கு.
14. குழந்தைகளுக்கு இருக்கும் பெரிய பயம் ..'என் பெற்றோரின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமே' என்பதுதான்.
பலமாய் இருப்போம் அவர்கள் பயம் நீக்கி.
15. எல்லாவற்றிற்கும் மேலே..ஆதரவாய் ஒரு hug ..அன்பாய் ஒரு pat on the back.
வேறென்ன எனர்ஜி தரும் இதைவிட..
உங்களுக்கு தோன்றுவதையும் பகிருங்கள்.
All the best to the parents and students.


விருந்தாளி ..எலி.

விருந்தாளி..

வாரம் ஒண்ணாச்சு..
விருந்தாளியாய் நீ வந்து

மசால் வடையில் மையலாமே
மணக்க மணக்க படையல்

பக்கோடாவுக்கு பரம விசிறியாமே
படைத்தேனே தட்டு நிறைய..

ஆனியன் பஜ்ஜிக்கும் அடிமையாமே
ஆசையாய் அடுக்கினேனே

வெளிச் சாப்பாடும் பிரியமாமே..
வெஜிடபிள் பஃப்பும் ் தந்தேனே

உளுந்து வடை உயிராமே.
சுளுவாய் சுட்டு வைத்தேனே

சப்பாத்தியும் உருளையும்
சப்புக் கொட்டித் தின்றாயே..

அடடா..ஆச்சரியம் எனக்கு
அதிதி உனக்கும் கூட..
அகிலா என் கைப்பக்குவம்
அருமையாய் ருசித்ததோ..?

ஆனாலும் ஓர் கவலை..

ஒரு வாரம் ஓடிப் போச்சே
ஒட்டாமல் நீ ஓடுவதேன்?

'எலிப்பேடும்' ஏளனமோ...?
ஏமாற்றும் எலியாரே..

ஓடி வருகையிலே
ஒட்டியும் விடுவாய் என்ற
திட்டமும்் தோற்றத்திங்கே
ஓட்டம் நீ பிடித்தாயே..

என்ன செய்து பிடிப்பேனோ
என் நிம்மதியும் போயேபோச்சே..

வக்கணையாகிப் போன
வாய் உனதை கட்டிப்போட
வழி ஒன்று கண்டேன்..
விருந்தெல்லாம் போதுமிப்போ
மருந்தொன்னு வைக்குமுன்
மறைந்து விடு
மாய எலியே..


























விருந்தாளி..

வாரம் ஒண்ணாச்சு..
விருந்தாளியாய் நீ வந்து

மசால் வடையில் மையலாமே
மணக்க மணக்க படையல்

பக்கோடாவுக்கு பரம விசிறியாமே
படைத்தேனே தட்டு நிறைய..

ஆனியன் பஜ்ஜிக்கும் அடிமையாமே
ஆசையாய் அடுக்கினேனே

வெளிச் சாப்பாடும் பிரியமாமே..
வெஜிடபிள் பஃப்பும் ் தந்தேனே

உளுந்து வடை உயிராமே.
சுளுவாய் சுட்டு வைத்தேனே

சப்பாத்தியும் உருளையும்
சப்புக் கொட்டித் தின்றாயே..

அடடா..ஆச்சரியம் எனக்கு
அதிதி உனக்கும் கூட..
அகிலா என் கைப்பக்குவம்
அருமையாய் ருசித்ததோ..?

ஆனாலும் ஓர் கவலை..

ஒரு வாரம் ஓடிப் போச்சே
ஒட்டாமல் நீ ஓடுவதேன்?

'எலிப்பேடும்' ஏளனமோ...?
ஏமாற்றும் எலியாரே..

ஓடி வருகையிலே
ஒட்டியும் விடுவாய் என்ற
திட்டமும்் தோற்றத்திங்கே
ஓட்டம் நீ பிடித்தாயே..

என்ன செய்து பிடிப்பேனோ
என் நிம்மதியும் போயேபோச்சே..

வக்கணையாகிப் போன
வாய் உனதை கட்டிப்போட
வழி ஒன்று கண்டேன்..
விருந்தெல்லாம் போதுமிப்போ
மருந்தொன்னு வைக்குமுன்
மறைந்து விடு
மாய எலியே..





































ஓட்டை போட்ட உளுந்து வடை












ஓட்டை போட்ட உளுந்து வடை


மனிதர்க்கு மொழியே தேவையில்லை

மனிதர்க்கு மொழியே தேவையில்லை..' மொழி படத்தில் வரும் பாட்டு...

இந்த பாட்டு..எப்போது கேட்டாலும் என் இதயம் போகும் பின்னோக்கி..
காவேரிக் கரையிலே வளர்ந்த சிறுபெண்.(அட நாந்தேன்்)..பட்டணம் பார்க்க கிளம்பினா..
மதராஸப் பட்டினம் அன்புடன் வரவேற்க..இன்னாமா எங்கே போவணும் ..என் ஆட்டோல குந்துனு ஆட்டோகாரர் அடம் பிடிக்க..மலங்க மலங்க சித்தியின் தலைப்பில் ஒளிந்தபடி செல்ல..வீடு வந்தது..சில்லறை தேட..இன்னாமா..காலங்காத்தால ..சரியான சாவு கிராக்கி...வசை பொழிய..(2 ரூபாய் சில்லரை சரியாக கொடுத்ததால் வந்த கோபம் )..இப்படியே மதராஸ் பாஷை....mother tongue ஆனது..படிப்பு முடிய வேலை கிடைக்க..அடுத்தது..கல்யாணந்தான்..Delhi பையன்.. ஐயோ சாமி.. prathmik exam.. எதோ fluke ல பாஸ் பண்ணோம்..இது என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை ஸ்டைலில் வடக்கு நோக்கிப் பயணம்... (அப்ப வேறு மெளன ராகம் படம் வந்த நேரம்..அந்த சர்தார்ஜி role எனக்கு ரொம்ப பிடிக்கும்)..கடைக்கு போகனும்னா..கைகால் உதறும்..கரோல்பாக் கடைத் தெருவில் , கடைக்காரன் 60 ரூபா சொல்வதை..பயங்கர ஹிந்தி பேசி 70 ரூபா வில் வாங்கி வெற்றிப் புன்னகை புரிய....ஏன் இவன் நம்முளப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்கிறானு..விவரம் புரியாம..ஐயோ பயங்கர bulb ..அடுத்து இந்த time சொல்றது ..ஹிந்தி ல 11/2 மணியை சாடே ஏக் நு (daid nu சொல்லனுமாம்)சொல்லி அது தனி bulb..இப்படி தட்டுத் தடுமாறி ஏ வகையறா ..ஓ வகையறானு சொல்லியே..காலம் ஓட  .. அடுத்த ஊர் மாற்றம்..நிமாடி பாஷை பேசும்,  நர்மதை நதியும், விந்திய மலையும்..அங்கங்கே கண்ணில் படும் ஓரிரண்டு மனிதர்களும்.. மண்டலேஷ்வர்..madhya pradesh ..(அலை பாயுதே movie  shooting  இங்கே தான்)
ஆத்தா சந்தைக்கு போயிருக்கு ஸ்டைலில்...நானும் வாரச் சந்தை போக..'காந்தா லோ காந்தா லோ'..நு ..என்னனு பார்த்தா..நம்மூர் வெங்காயம்..
வேலை செய்யற மன்னு பேசற ஒரு மண்ணும் முதல்ல பு்ரியல...வெறும் தலையாட்டல் தான் பதில்..ஆனால் ...இப்படி வாழ்க்கை ஓடம் போக..அடுத்த இட மாற்றம்.. west Bengal ல ஒரு குக்கிராமம்...ஊரே கடுகெண்ணையும்..மீன் வாசமும்..kothay, ki, Ami,bhalo..shundhar..இப்படி ஒரு நாலு வார்த்தை கத்துண்டு அலம்பல் பண்ணிய காலம்...இரண்டு வருஷம் ஓடிப்போச்சு..அடுத்து மாற்றம் இமயமலை அடிவாரம்,. dehradun..garhwali மொழி.. ஆனால் என் ஹிந்தி கொஞ்சம் செப்பனிடப்பட்ட இடம்..(ஆனாலும்... அந்த ka,kha சரியா இன்னும்  வரல..shah rukh khan..அவர்கள் அந்த kha  வை உபயோகப்படுத்தும் அழகே தனி..
எல்லாம் போக இப்பொ கன்னட பூமி..எப்படியாவது கன்னடத்தை கத்துக்கனும்னு முயற்சி.. (விக்கிரமாதித்தன் நினைப்பு)..
ஆட்டோ ல ஏறினேன் ஒரு நாள்..அந்த ஓட்டுனரிடம்...இல்லி ஹோகு..அல்லி பேட. .
கொத்தில்லா..எல்லாம் என் Kannada barathe.app சொல்லிக் கொடுக்க.. ஒரே வெற்றிப் புன்னகை..ஆட்டோ லேர்ந்து இறங்கும் போது அந்த டிரைவர்..madam..நான் தமிழுதான் என்றாரே பார்க்கணும். செம்ம bulb..விட்டேன் ஜூட்..

மன்னிப்பா..( மத்யமர்)

மன்னிப்பா..
(ஒரு ஜாலி போஸ்ட்)

மன்னிப்பா..என் அகராதியில.. இவங்களுக்கு கிடையவே கிடையாது.

1. உனக்கென்னப்பா ..housewife ..நீ எப்ப வேணாசமைக்கலாம்,சாப்பிடலாம்.தூங்கலாம், ஃபேஸ்புக்ல குடியிருக்கலாம்.

2. அதே முன்கூறியவர் அப்பப்பா..எப்படித்தான் எல்லா நேரமும் வீட்டில இருக்கீங்களோ..எனக்கு ஒரு நாள் தள்றதே பெரிய பாடா இருக்கு எனும்போது..

3. நாம் செய்ததை எல்லாம் மூக்கைப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு , அந்த பக்கத்து வீட்டு மாமி தந்த புளிக்கொழம்பு ஒரு ஸ்பூன் விடேன்னு சொல்லும்போது..

4. aunty நு எப்போதும் கூப்பிட்டு ஓடி வரும் அபார்ட்மென்ட் குட்டி, பாட்டினு திடீர்னு  கூப்பிடும். அவள் அம்மா நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி ' சாரிப்பா..நீங்க இந்த கண்ணாடில அசப்பில எங்க மாமியார் மாதிரியே இருக்கீங்க' சொல்லியபடி பின்பக்கம் இருக்கும் தோழிக்கு வெற்றிச் சின்னம் காட்டும்போது..

5. நல்ல தைப்பார் துணி எல்லாம் என்று தோழியை நம் ஆஸ்தான டைலருக்கு அறிமுகப்படுத்த..அவர் அவளுக்கு மட்டும் டிஸ்கவுண்ட் கொடுக்கும்போது..

6.நான் தான் எப்பவும் உங்க வீட்டுக்கு வரேன்.நீங்க ஒரு தடவை கூட வரதே இல்லைனு சொன்னதை நம்பிப் போனால்..டீவியில் கதறி அலறும் சீரியலோடு ஐக்கியமாகி..நீங்க பார்க்கறது இல்ல இந்த சீரியல்னு ஒரு கேள்வி கேட்பாங்க பாருங்க அவர்களை....

7. நம்ம கல்யாண ஃபோட்டோவை பார்த்துட்டு ' எப்படி இருந்த நீங்க ..இப்படி ஆகிட்டீங்கனு' மனசை பீஸ் பீஸா ஆக்குபவரை..
இந்த சின்ன மனசை பீஸ் பீஸாக்க எத்தனையோ பேர் காத்திருக்காங்க..
but going strong as always.
உங்களோடதையும் பகிருங்களேன்..

தண்ணீர்...தண்ணீர் (மத்யமர்)

தண்ணீர்..தண்ணீர்..

நாளைக்கு டாங்க் க்ளீனிங். முழு நாள் தண்ணீர் கிடையாதுனு அபார்ட்மென்ட் நோட்டீஸ் போர்டு பார்த்ததும்..அட ராமா என்று அலறி அடித்து வீட்டில் இருக்கும் சொப்பு சாமான்ல கூட தண்ணீர் ரொப்பி வெச்சேன். என்ன ஒரு நாள் தானே என்றாலும் ஒவ்வொரு சொட்டு தண்ணீர் செலவு பண்ணும்போதும் ஒரு அதீத டென்சன்.  காத்தும் மட்டும் குழாயில் வரும்போது கலக்கமும் கூட வந்தது.அப்போது பகீர்னு ஒரு பயம் தொற்றியது.
அதாங்க..day zero
 day zero is approaching in cape town.
dream ல் நினைச்சாலும் திகிலா இருக்கு.
 ஏகப்பட்ட விதிமுறைகள் தண்ணீரை உபயோகிக்க அங்கே.
இதை ஒரு அலாரமாக வைத்து நாமும் சேமிக்க துவங்கனும்..எப்படி?
காலையில் பல் தேய்க்கும்போது பைப்பை மூடி வைக்கணும்.
ஷவரில் குளிக்காமல் பக்கெட்டில் power bath எடுக்கணும்.
தோய்க்கிறேன் பேர்வழினு டாங்க் தண்ணீர் தீர்க்கக் கூடாது.
RO system இருந்தால் , வெளியேற்றும் தண்ணீரை சரியான முறையில் உபயோகிக்கணும்.
முக்கியமாக, நம்ம வீட்டு வலது கரத்துக்கு விளக்கமா சொல்லணும்.பைப்பை திறந்து விட்டு பாத்திரம் தேய்ப்பதில் அவர்கள் குஷியே தனி. ( ஆனா..handle with care. விவகாரம் பிடிச்ச அம்மானு வேலையை விட்டு ஓடிப் போய்டுவாங்க.)
வாட்டர் டாங்கர் எல்லாம் வழிய விடும் நீரை வாரம் பூரா உபயோகிக்கலாம். அங்கே கொஞ்சம் அவங்களை டைட் பண்ணனும்.
தோட்டம் துறவுமா இருக்கிற வீட்டுக்காரங்க..கொஞ்சம் பார்த்து செலவு பண்ணுங்கப்பா..
இன்னும் பெரிய லிஸ்ட்..அதையெல்லம் நீங்க சொல்லுங்க..

நீரின்றி அமையாது உலகு. இதை புரிந்து நடப்போம்.

திரவத் தங்கம்..இந்த தண்ணீர்.லாக்கரில் வைத்து பூட்ட முடியாது. என் லாக்கரில் 5 லிட்டர் தண்ணீர் வெச்சிருக்கேனு சொல்லும் காலமும் வருமோனு ஒரு பயமும் உண்டு.

அடுக்கு மாடிக் கட்டிடங்களும், ஆழ்கிணறுகளும் அசுர வேகத்தில் வளர்கிறது.
 உறிஞ்சி எடுத்தோம்..உருவாக்க முடியாது இந்தத் தண்ணீர் என்ற பயமின்றி..


வற்றாத கண்ணீரையும்
வாளியில் பிடித்துவை
வீணாக்கும் ஒரு சொட்டும்
விதி மாற்றும் நாளையுமே.

வரப்போகும் நாட்களிலே.
விஞ்ஞானம் வளரந்துவிடும்.
கண்ணீரும் இங்கேதான்
குடிதண்ணீரா மாறிவிடும்.

எச்சரிக்கை மணியதுவே
எங்கோ ஒலிக்குதப்பா
எனக்கென்ன மனக்கவலை
என் வீட்டில் கொட்டிடுதே
எல்லா நேரமும் தண்ணீரே.
எண்ண்மதை ஒழித்திடுவோம்

நீரைப் போலச் செலவென்பது
கானல் நீராப் போகுமிங்கே
தங்கமும் பிளாட்டினமும்
தாராளமாய்ச் சேமியுங்க..
தண்ணீரை மட்டும் கொஞ்சம்
சிக்கனமாய்ச் சேமியுங்க.
வருங்காலச் சந்ததிக்கு
வாட்டர் என்பதை காண்பிக்க..

நிறமே இல்லாத நீர் தான்..நம் வாழ்வை வண்ண மயமாக்கும்.
இன்னும் கொஞ்சம் தெளிவாகனும்னா..நிறைய YouTube ம் கூகுளாண்டவரும் நிறைய சொல்றாங்க.
படிச்சு பயன் பெறுங்கள்.
தண்ணீர், பானி, வெள்ளம்,நீரு..எல்லாம் நம்ம சந்ததியும் அனுபவிக்க இன்னிக்கே உங்க வேலையை ஆரம்பிங்க..


















மங்கையாராய் பிறப்பதற்கே. (மத்யமர்)

மங்கையாராய் பிறப்பதற்கே..

இவள் ஒரு time keeper.
அலாரத்துக்கே ஆப்பு வைப்பவள்.

இவள் ஒரு master chef.
மனு போடாமலே மெனு தயாராக்குபவள்.

இவள் ஒரு advisor
அருவியாய் அறிவுரை கொட்டுபவள்.

இவள் ஒரு engineer.
உறவுப் பாலம் கெட்டியாய் அமைப்பவள்.

இவள் ஒரு HR.
வலையில் தேடி பல க்ரூப்பில் இருப்பவள்.

இவள் ஒரு store keeper.
ஷெல்ஃபும் பரணியும் கைவசமாக்கியவள்.

இவள் ஒரு CBI officer.
ஆதாரத்தோடு அமுக்கி பிடிப்பவள்.

இவள் ஒரு finance minister
debit credit தெரியாமலே deficit காட்டுபவள்

இவள் ஒரு defence minister.
கராத்தே, குங்ஃபூ கற்காமலே குடும்பத்தைக்
காப்பவள்.

இவள் ஒரு சுறுசுறு transporter
சாரதி வேலையில் சலிக்காதவள்.

இவள் ஒரு saviour.
அஞ்சறைப் பெட்டியிலும் பதுக்கி urgent க்கு உதவுபவள்.

இவள் ஒரு நடமாடும் encyclopedia.
விரல் நுனியில் விவரங்கள் வைத்திருப்பவள்.


எல்லாவற்றுக்கும் மேல்..

இவள் ஒரு திறமையான artist.
வீட்டையே கோவிலாக மாற்றுபவள்.

வீட்டிலோ,வெளியிலோ, வேலையிலோ
 portfolio எதுவானாலும்
பின்னிப் பெடல் எடுக்கும்
பெண்மணிகள்..என்றும்
கண்மணிகள்...கண்ணின்..மணிகள்.
மகளிர் தின வாழ்த்துக்கள்.

கண்ணா நீ எழுந்திரடா...ஜாலி போஸ்ட் (மத்யமர்)

கண்ணா நீ .எழுந்திரடா..என்
கண்ணா நீ எழுந்திரடா..
படுக்கையும் மடிச்சுவெச்சு
பல்லையும் பளிச்சுனு தேச்சு
மூஞ்சியையும் முழுசா அலம்பி
முள்ளு முடியையும் ஒழுங்கா வார..
கண்ணா நீ .எழுந்திரடா..என்
கண்ணா நீ எழுந்திரடா..

சட்டையும் இங்கேருக்கு
செருப்பும் அங்கே இருக்கு
செவியும் சாய்த்திங்கே
சொல்ற பேச்சை கேட்டிடவே..
கண்ணா நீ .எழுந்திரடா..என்
கண்ணா நீ எழுந்திரடா..

புஸ்தகமும் எங்கிருக்கு.
பூஞ்ச காலம் புடிச்ச
டிஃபன் பாக்ஸும் எங்கேருக்கு
வீட்டுப் பாடம் நோட்டுமெங்கே.
வீடு முழுக்க தேடிடவே
கண்ணா நீ .எழுந்திரடா..என்
கண்ணா நீ எழுந்திரடா..

breakfast ம் ரெடியாயிருக்கு
பயில்வானாக நீ ஆக
விட்டமினும் தின்னனுமே
விட்டத்தை நீ தொட்டுடவே
கண்ணா நீ .எழுந்திரடா..என்
கண்ணா நீ எழுந்திரடா..

பல் டாக்டர் பார்க்கவேணும்
பொழுது சாயும் நேரத்திலே
பியானோ கிளாஸும் உண்டே
புடை புடைக்கும் வெய்யிலிலே
விளையாட நேரம் வேணும்
வேலையும் பல இருக்க..
கண்ணா நீ .எழுந்திரடா..என்
கண்ணா நீ எழுந்திரடா..

பஸ்ஸும் இப்போ வந்துடுமே
பசியோட கிளம்புவியே
பெட்டான பூனைக்கும்
பால் கொஞ்சம் தந்திடவே.
கண்ணா நீ .எழுந்திரடா..என்
கண்ணா நீ எழுந்திரடா..

அறையை சுத்த மாக்க வேணும்.
அழகாய் மடிச்சு வெக்கணுமே
அடுக்கியும் நீ வெச்சால்
ஆ வென்று நான் சொக்கிடவே
கண்ணா நீ .எழுந்திரடா..என்
கண்ணா நீ எழுந்திரடா..

இராப் பகலும்் தெரியாமலே
இண்டர்நெட் டில் குடியிருந்து
இழுத்து போர்த்தி நீயுமிங்கே
இடிவிழுந்தாலும் எழுந்திருக்காம..
இப்படியும் தூங்கறயே
கண்ணா நீ .எழுந்திரடா..என்
கண்ணா நீ எழுந்திரடா..

சொல்லிவிட்டுப் போறதில்ல..
சொல்ற பேச்சு கேட்கறதில்ல
சொப்பனமும் கண்டபடி
சொக்கி சொக்கி தூங்குறதேன்
கண்ணா நீ .எழுந்திரடா..என்
கண்ணா நீ எழுந்திரடா..

அம்மாவும் சொல்ல வந்தேன்
அறிவுரையும் கொஞ்சமிங்கே
அடப் போம்மானு சொல்லாமல்
அமைதியாக நீ கேளு கண்ணு

பொறுமையோடு இருக்க வேணும்
பதவிசா நடந்துக்கணும்
பகிர்ந்து வாழக் கத்துக்கணும்.
பொறுப்பா நீ நடந்துக்கணும்
வேலைக்கும் நீ போக வேணும்
வாழ்க்கையை அமைக்க வேணும்
ஆராய்ச்சி பல பண்ணி
ஆகாயத்தை தொட வேணும்.

கடைசியாய் ஒண்ணு சொல்வேன்.
கண்டிப்பாக கடை பிடிக்க வேணும்

அப்பா போல இருக்காதே
அப்பாவினு பேர் வாங்கி
அசடாட்டம் இல்லாமல்
அசத்தணும் நீ உலகத்தையே
அதனாலே எழுந்திரடா..

கண்ணா நீ .எழுந்திரடா..என்
கண்ணா நீ எழுந்திரடா..










toilet ek prem katha ( மத்யமர்)

toilet ek prem katha ..இல்லையில்லை..
toilet ek  பிரச்சனை கதை..

toilet ..ek prem katha நு ஒரு ஹிந்தி படம். தன் காதல் மனைவிக்காக தாஜ்மஹால் கட்டினது அந்தக் காலம். ஆனால் இதில் ஒரு கழிப்பறை கட்டித் தர படாத பாடுபட்டு ஜெயிக்கும் ஒரு கதை.
கல்யாணம் ஆன மறுநாள்..இருட்டு அப்பி இருக்கும் காலையில்..கையில் லோட்டாவுடன்.' கிளம்பு லோட்டா பார்ட்டிக்கு' என்று வெட்கத்துடன் சிரித்து அழைக்கும் கிராமத்துப் பெண்கள்..then the story goes on and on..
கிராமத்தில் இப்படி சீன் என்றால் நகரத்தில் இருந்தும் இல்லை போல இன்னும் பல சீன்கள்.

'ஏம்ப்பா..5.30 மணி பஸ் வந்திருக்கும்ல.இன்னும் இவளைக் காணுமே. பஸ் ஸ்டாப்பில் இருக்கும் அப்பா இவளைப் பார்த்தாரா இல்லையா..
அம்மா , புலம்பியபடி உள்ளுக்கும் வாசலுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.
வாசல் கேட் சத்தம் கேட்டு ஓடினாள். ' கண்ணு பஸ் லேட்டா..என்ற அவள் கேள்விக்கு ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்..நகரும்மா...
என்றபடியே வேகமாக ஓடினாள் பாத் ரூமை நோக்கி அவள் பெண். நேற்று சாயந்திரம் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தவள்.்..ஊர் வந்து சேருவதற்குள் அவஸ்தை. பின்ன nature's call முக்கியமா..மம்மி கேள்வி முக்கியமா?
ஊருக்கு கிளம்பும் நாளும், திரும்பும் நாளும் ,பஸ் பயணம் என்றால் பாதி பட்டினி தான் இங்கு பல பெண்களுக்கு.முக்கியமா தண்ணீர் குடிக்க ரொம்ப பயம்.

இதுதாங்க சீன்.
குஷன் சீட்டோ,குத்தற சீட்டோ பஸ் பயணம் என்றாலே முதலில் பயம் வருவது பாத் ரூமுக்கு என்ன செய்வோம்னு தான்.
வழியில் ஒரு பாடாவதி ஹோட்டலில் பஸ் நிற்கும். பாத் ரூம் எங்கே இருக்கு என்று கேட்டால்..' அதோ அந்தக் கோடியில கும்மிருட்டாய் இருக்கும் இடத்தை கை காட்டுவார்கள். அப்பாடா என்று நினைத்த மனம் ..ஐயோ இருட்டு என்று பின்வாங்கிடும்.குடும்பத்தோடு போகும் பெண்களுக்கு டார்ச் அடிக்க யாராவது நிற்பார்கள். தனியாகப் பயணம் செய்யும் பெண்கள்,யுவதிகள் படும் பாடு இருக்கே..
இவர்கள் யோசிப்பதற்குள் வண்டி விசிலடிக்க ஆரம்பிக்கும். சரி..சரி..அடுத்து ஏதாவது இரு டோல் இல்ல பெட்ரோல் பம்ப்ல நிக்க சொல்ல கேட்டுக்கலாம் என்று அடக்கி அமர்ந்து தொடரும் பயணம்.
அதுக்குள்ள நடுநிசி வந்துடும்.
நம்ம கஷ்டம் உணர்ந்து  டிரைவர் பெட்ரோல் பம்ப்பில் நிறுத்துவார்.
முக்கால் வாசிப் ப்யணிகள் குறட்டையில் இருப்பார்கள். அக்கம் பக்கம் பார்த்து இறங்க ,ட்யூட்டி முடிந்து அங்கேயே படுத்து தூங்கியபடி ஊழியர்கள். இவரகளையெல்லாம் தாண்டி அந்த ரெஸ்ட் ரூம் கண்டுபிடிப்பதற்குள் தொண்டை வரண்டு ஒரு அதீத பயம் கவ்வும்.
பாதி தூரம் போய்விட்டு ..' ஐயோ பயமா இருக்குனு திரும்பி வந்து..மீண்டும் தொடரும் அவஸ்தை.
இது போல அனுபவத்திற்கு பின் , என்ன ஆனாலும் சீட்டோட சீட்டா ஒரே பொசிஷன்ல உட்கார்ந்தே போய்டலாம்னு ஞானம் வந்துடும். பஸ் என்பது ஒரு part and parcel of life for many . அப்படி இருக்கும் போது ஏன் இன்னும் வசதிகள் அதுவும் குறிப்பாக பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் இல்லை?
( பஸ் பயணம் பிடிக்கும் எனக்கு. அதுவும் தனியாக சில ஊர்களுக்கு செல்ல பஸ்ஸே வசதி என்பதாலும். சில பஸ்கள் தான் பெரிய ரெஸ்டாரெண்ட் வாசலில் நிற்பார். என் அனுபவத்தில் அரசு மற்றும் சில ஆம்னி பஸ் நிறுத்தும் இடங்களெல்லாம் தண்ணீர் கூட குடிக்க முடியாது..)

இன்னொரு சீன்.
வெயில் காலமாயிருக்கு ..பெரிய water bottle எடுத்துண்டு போயேன் ..கண்ட தண்ணீ குடிச்சு பரீட்சை நேரத்தில் உடம்புக்கு வந்துடப் போறது..அம்மா சொல்வதை காதில் வாங்காமல் , பல சமயங்களில் எடுத்துச் சென்ற பாட்டிலும் பாதி அப்படியே கொண்டு வரப் படும்.
ஏனென்று கேட்டால்..பதில் இப்படி வரும்..
' கிடைக்க்றதே பத்து நிமிஷம் ப்ரேக்..சாப்பிடறதா .இல்ல போய் க்யூல வாஷ் ரூமுக்கு நிக்கறதா..அப்படியே போனாலும் தண்ணீர் பாதி நேரம் இருக்காது..என்ன பண்றது. ?
complaint பண்ண வேண்டியதுதானேனு கேட்டா..அதுக்கும் இன்ஸ்டண்ட் பதில் வரும்..'என்ன பெரிய நடக்கப் போகிறது. ரெண்டு நாள் சரியா இருக்கும். அதுக்கப்பறம் அதே பழைய் கதைதான்.
better not to use than getting infectionநு நச்னு ஒரு பதில் வரும்.
எல்லா institutions ம் அப்படினு நான் சாடலை. ஆனால் முக்கால் வாசிப் பேர் இதுக்கு முக்கியத்துவம் கொடுப்பத்தில்லை என்பதுதான் வருத்தம்.
சரி ..இப்போ மத்யமர் ல இதை போட்டு என்ன சாதிக்கப் போறீங்கனு ஒரு மைண்ட வாய்ஸ் கேட்டால்..
நான் செய்யும் சின்ன உதவி.
என்  கூட வரும் ..கஷ்டம் கண்ணில் தெரியும் யுவதிகளுக்கோ..சக பெண் பயணிக்கோ ..வாங்க சேர்ந்து போகலாம்னு உதவுவேன். ஆனால் அப்படி போகும்போது ஜாதகம் எல்லாம் கேட்டு குழந்தைகளை டென்சன் படுத்த கூடாது.  அப்பறம்.அவங்களுக்கு நாம நல்லவரா கெட்டவரானு நாயகன் ஸ்டைலில் கேள்வி உறுத்தும்.
ஸ்கூல் காலேஜில் கொஞ்சம் பெட்டிஷ்ன் பெரியநாயகி ஆவேன். PTA meeting ல் நான் இந்த topic ஆரம்பிக்க..என் பெண்கள் என்னை முறைக்க..ஆமாம் மேம்..ஆமாம்னு ஒரு அப்பா அம்மா கும்பல் சேர்ந்து கோரஸ் பாடுவர். கொஞ்ச நாளைக்கு விடிவு கிடைக்கும் குழந்தைகளுக்கு..
நிறைய குழந்தைகள் இப்போது தங்களின் பர்த்டே பார்ட்டிக்கு செலவு செய்வதை விட்டு இந்த மாதிரி கழிப்பறை கள் கட்டுவதற்கு உதவ முன் வருவது படிக்கும்போது..
நம்பிக்கையும் வருகிறது.
bathroom என்பது basic.. அதுக்காக கட்டியா தர முடியும்..முடியாதுதான்..
ஆனால்...கொஞ்சம் உதவி பண்ணலாம்..









வாங்க ..பழக்கலாம்.

வாங்க ..பழக்கலாம்..
நேற்று மதியம். டைலர் கடையில் அவரோட பொறுமையை ரொம்ப சோதிச்ச்சிண்டுருந்த நேரம்..பக்கத்தில் இருக்கும் ஸ்கூல் பரீட்சை நடப்பதால் சீக்கிரம் விட்டதால் கலகலனு குழந்தைகள் கூட்டம். திடீரென்று ஒரு குரல்..'Hei..she is puking 'yaa.நு பக்கத்தில் இருந்த பசங்கள் கொஞ்சம் பத்தடி நகர்ந்தனர்.. வாந்தி எடுத்தபடி ஒரு  சின்னப் பெண் கொஞ்சம் அவமானத்தில் தலை குனிந்தபடி.
உடனே அவளின் பைய்யை வாங்கி , வாட்டர் பாட்டில் தண்ணீர் கொடுத்து சுதாரிக்க வைத்தேன்.ஒரே ஒரு பொண்ணு மட்டும் பொறுப்பா என் கூட உதவி செய்தாள்.
ரொம்ப பிடிச்சது அந்தப் பெண்ணோட gesture. எல்லாரும் அசிங்கம்னு நகர்ந்தபோது முன்னாடி வந்து தன் கிளாஸ்ஸில் இல்லாத ஃப்ரெண்டுக்கு உதவி பண்ணின பெண் மனசில் நின்றாள்.
இது தானே நாமும் பழக்கமும் பசங்களுக்கு..தேவையில்லாத ப்ரச்சனையில் தலையிடாதே..ஆனால் தேவைப்படும் போது கண்டிப்பா கை கொடு என்று

(என்ன சாப்பிடேனு கேட்க எத்தனிப்பதற்குள் அங்கே புழு மாதிரி நெளிந்த maggi...அம்மாக்களே..வெயில் நேரத்தில் இந்த உணவு சரியாம்மா?)
சில உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு போறோம். பெல் அடிச்சதும் ஓடி வந்து குழந்தைகள் சில சமயம் திறக்கும். ஹலோனு சொல்லுமுன்னே அம்மா..அப்பா..aunty வந்திருக்காங்கனு உள்ளே ஓடிவிடுகின்றனர்.
பாதி வேலையிலிருந்தேனு கைப்பிடித் துணியோட வரும் அந்த வீட்டு எசமானி..' எம் புள்ள/பொண்ணு ரூம் விட்டே வரமாட்டாங்க. அவங்க உண்டு ..அவங்க படிப்பு, லாப்டாப்னு உள்ளதான் இருப்பாங்கனு பெருமை கொப்பளிக்க..
அம்மணி..stop.. stop.. கொஞ்சம் நல்லதும் பழக்குங்கமா..வருந்தி வருந்தி உபசரிக்க சொல்லிக் கொடுக்க வேணாம். ஒரு வாய் தண்ணீர் கொண்டு வந்து தர பழக்குவோமே.
தாத்தா பாட்டி சில வீட்டில் permanent ஆ இருப்பாங்க..சில வீட்டில் விஸிட்டராய் வருவாங்க.. ஒரு நாளில் ஒரு அஞ்சு நிமிஷம் போய் பேசச் சொல்லணும். பேரனோ பேத்தியோ வந்து பேசும் அந்த நொடிக்காக நாள் பூரா brisk ஆ காத்திருப்பார்கள் இவர்கள்.
ரோட்ல போகும்போது கண்டிப்பா ஒரு ஆம்புலன்ஸ் நம்மை cross பண்ணி போகும்.இந்த வண்டிக்குள்ள இருக்கும் நோயாளிக்கு நல்லதே நடக்கட்டும்னு pray பண்ணச் சொல்லி தரணும். நாம் மறந்தாலும் அவங்க ஞாபகப் படுத்தி விடுவாங்க..இதையும் பழக்கலாம் இல்ல..
குழந்தைகளுக்கு தூங்கும் போது கதை சொல்லறது எல்லாரும் செய்யும் ஒரு விஷயம். இதிகாசம் புராணம் சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது. நம்ம குடும்பத்தில் ஒருத்தர் வீரமா இருந்திருப்பார். ஒருத்தர் பொறுமையின் சிகரமா இருந்திருப்பார். இன்னொருத்தர் உழைச்சு உயர்ந்திருப்பார். அவர்கள் பற்றியெல்லாம் கதையா சொல்ல ,குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். ( என் பெண்கள் குட்டீஸா இருக்கும்போது ..அம்மா உன்னோட story சொல்லு..அப்பா..உன் story சொல்லுனு கேட்ட்டு மகிழ்வார்கள்)
நம்ம குடும்பம் நட்பு பற்றி சொல்லி வைக்கலாமே..
இன்னொரு விஷயம்..who is your role model என்று எல்லா க்ளாஸிலும் ஒரு கட்டுரை வரும். கூகிளைத் தேடிப் பிடிச்சு, பழைய  essay books எல்லாம் ஒரு ஆராய்ச்சி பண்ணி, இவரை எடுக்கலாமா அவரைப் பத்தி எழுதலாமானு toss போட்டு..
பார்க்காத ஒரு ஆளை உன் ரோல் மாடலா எழுதுனு படம் வெட்டி, ஒட்டி மார்க் வாங்க அனுப்பறோம்.if not specified..நம்ம வீட்டு மாடல் பத்தி எழுதப் பழக்குங்க..மார்க் மட்டுமல்ல..மனசும் நிரம்பி வழியும்.
சின்ன சின்ன விஷயங்கள் நீங்களும் நிறைய பழக்கி இருப்பீங்க..
பின்ன என்னங்க..
நாமதான் குரு குலம்..நாம்தான் coaching class.
அன்புடன்
அகிலானந்தமயி








Boon or bane this phone ( மத்யமர்)

ஒரே கூட்டம் கோவிலில். சுவாமிக்கு அருமையான அலங்காரம் .ஆராதனை.
இரண்டு பக்கமும் முட்டித் தள்ளியபடி எல்லாரும். ரோடு வரைக்கும் லைன்.
நம்ம ஒசரத்துக்கு ஒண்ணுமே தெரியல.
எட்டிப் பாக்கறேன்..இடுக்கில் தெரியுமானு பார்க்கிறேன்..
சுத்தம். பிள்ளையாரே..எப்புடிப் பா உங்களைப் பார்க்கிறதுனு கேட்க..
எனக்கு முன்னால் உயரமா இருந்தவர்
தன் செல்லை உயரத்தில் பிடித்து வீடியோ எடுத்தபடி இருக்க.. சாமியை க்ளோஸப்பில் பார்த்தபடி நின்ற சிலர் ..' எங்க வந்தாலும் ஒரு வீடியோவா..இந்த செல்ஃபோன் வந்ததுலேர்ந்து ஒரு விவஸ்தையே இல்லாமல் போச்சு என்றபடி..அர்ச்சனையும்.ஆரத்தியும் அருகில் நின்றும் பார்க்காமல்..புலம்பிக் கொண்டிருக்க..
இவர் எடுத்தபடி இருந்த வீடியோ வழியே..வலம்புரி வினாயகர் வரம் எங்களைப் போல பலருக்கு அருள் பாலித்தபடி..technology is so improved நு சிரிச்சபடி வெண்ணெய் அலங்காரத்தில்..
(points to be noted..இந்தக் கோயிலில் வீடியோ ஃபோட்டோ எடுப்பது தடையில்லை.
another thing we always presume .. எந்த ஃபோட்டோ வீடியோ எடுத்தாலும் அது Instagram post க்கோ..fb status update மீறி..வீட்டில் உள்ள பெரியவருக்கோ..வர இயலாதவருக்கோ காண்பிக்கவோ இருக்கலாம்.
நல்லதே நினைப்போம்..நல்லதே செய்வோம்.
அன்புடன்
அகிலானந்தமயி.
happy ugadi wishes to all my friends here

Monday to Friday ( மத்யமர்)

கிளியைப் பிடிச்சு கூண்டில் அடைச்சு
ஐயோ ..சனி ஞாயிறு எப்படிப் போச்சுனே தெரியல..எல்லாரும் புலம்புவது இது. திங்கள் கிழமை..ஆரம்பிக்கும் ஓட்டம்.
சும்மா ஒரு ஜாலி போஸ்ட்.
நீங்களும் உங்க வரிகளை எடுத்து விடுங்க..

weekend..ஆ....WEAKend..ஆ...
 வருவதும் தெரியாது
போறது தெரியாது..
வரிசையாய் செய்யணும்
விட்டுப் போன வேலையெல்லாம்.

மாவரைக்கணும்..துணி
மடிச்சு வெக்கணும்..
மளிகை வாங்கணும்..
'மாலு'க்கு போகணும்.

படிக்க வெக்கணும்
ப்ராஜக்ட் பண்ணனும்
 PTA போகணும்
progress reportம் வாங்கணும்.

பிடிச்சதை சமைக்கணும்
பில்லும் கட்டணும்.
பார்லரும் போகணும்.
ஃப்ளாட்டின் வம்பும் கேட்கணும்

குட்டித் தூக்கம் போடணும்
குழந்தைகளோட..
கொஞ்சி விளையாடணும்
கோயிலுக்கு போகணும்.

ஹோட்டலுக்கு போகணும்
ஹாய்யா இருக்கணும்..

இதுக்கு நடுவுல
ஈமெயிலும் பார்க்கணும்.
இன்ஸ்டண்ட் பதிலடிக்கணும்
இடித்தே உரைத்தாலும்
இடிச்ச புளியாட்டம் இருக்கணும்

அன்னபூரணி ..என்
கணினினு சொல்லணும்.

சனியும் ஞாயிறு
சட்டுனு ஓடிடும்.

 திங்களும் வந்திடும்
 சீக்கிரம் முழிக்கணும்.
சுறுசுறுப் பாகணும்.
சந்தோஷமா வரவேற்கணும்

அடுத்த weekend
அஞ்சு நாளில் வந்திடும்
அதுவரை கொஞ்சம்..
ஆபீஸும்..வீடும்
அழகாய்ப் பார்த்துக்கணும்..

 திங்கள் கிழமை வந்தால்..
சொங்கி போல இல்லாமல்
தங்கம் போல ஜொலிக்கணும்..
ஆமாம்..
தங்கம் போல ஜொலிக்கணும்..

happy Monday to friday.

ஓ..பாப்பா..லாலி..( மத்யமர்)

ஓ..பாப்பா..லாலி..

ஒரு ஃப்ரண்ட் வீட்டுக்குப் போனேன் சாயந்திரம். ஆபீஸிலிருந்து வந்தவள் ரொம்ப சோகமாக உட்கார்ந்திருக்க..அவள் மூணு வயது பைய்யன் அடங்காமல் அழுது கொண்டிருந்தான்.
கண்ணா..ஏன் செல்லம் அழறேனு கேட்டேன். அதுக்கு துடுக்குனு ஒரு பதில்..'aunty..டாட்டா.aunty ..டாட்டா' என்றான்.
என்ன நடக்கறது இங்கேனு அவளை விசாரிக்க..
அழுதுவிடும் நிலையில் என் தோழி..' நான் ஆபீஸ் போறதால ஒரு baby sitter இவனை பார்த்துக்க வருகிறாள். வீட்டில் மாமியார் இருந்தாலும் வயசானவர். அவரால் இவன் பின்னாடி ஓட முடியலை. ரொம்ப நல்ல பொண்ணு..ரொம்ப அன்பா இவனை கவனிக்கிறாள். ரொம்ப ஒட்டிக் கொண்டு விட்டான். அதனால் தினமும் அவள் சாயங்காலம் கிளம்பிப் போனதும் இப்படித்தான் அழுகை என்று அவளும் விசும்பினாள். என் கிட்ட கொஞ்ச நேரம் வரவே மாட்டான். அவன் சமாதானமாகும் போது தூங்கி விடுகிறான்.இப்படியே போனால் என்னையே யார்னு கேட்பானோனு பயமாயிருக்கு என்றாள் நியாயமான கவலையில்.

வேலை ..விட முடியாது..
ஆளை..விட முடியாது..
வேறு வழி?

இப்போது இதெல்லாம் ரொம்ப சகஜமாகி விட்ட போதிலும் ஏனோ மனது பாரமானது.

எப்போதோ எழுதியது மீண்டும் நினைவுக்கு வந்தது.


ஓ..பாப்பா..லாலி..

ஆயா(aunty) வந்ததும் தான்
அம்மாவுக்கு உயிரே வரும்
அவசர ஆணைகள் பிறப்பித்தே
அவளும் ஒப்படைப்பாள்..தன்
அன்புச் செல்லத்தை..
அலுவலகம் ஓடியபடி..

ஆயாம்மா..
பாலும் சோறும் தருவாள்
பாதி அவளும் தின்பாள்.
(தெம்பு வேணுமே)

பாப்பாவுக்கு பிடித்த தெல்லாம்
ஆயாவுக்கு ரொம்ப அத்துப்படி

'கவனிப்பாள்' தன் குழந்தைபோல
'கவனிப்பாள்' எசமானியு மென்றே
ஆட்டுவாள் தலை எப்போதும்
ஆட்டுவிக்கும் பாப்பாவின் பொம்மையாய்
பொழுதைக் கழிக்கும் வித்தையில்
பல்கலைக் கழக பட்டதாரியிவள்.

முள்ளும் ஆறைத் தாண்ட
முள் மேல் இருப்பாளே
மூச்சும் வந்திடுமே..எசமானி
முகம் கண்டேதுமே..

பையை எடுத்து புறப்பட்டு
'பை''பை' சொல்ல..அவள்
புடவைத் தலைப்பை இழுத்து
போகாதே..நானும் வரேன்னு
பிடிவாத அழுகையில்
படுத்துமே பாப்பாவும்..

பயமும் பிடித்ததே..
பதிக்கணுமே  மனதிலே
பாப்பாவின் அம்மா..
படுபாவி நானென்று.

அரை நேர அம்மாக்களாக
ஆயாக்கள் ஆனபிறகு..
அக்குழந்தைக்கு தெரிவதில்லை..
ஆறு வித்தியாசங்கள்..
ஆயாவுக்கும் அம்மாவுக்கும்..

மரங்கள்

மரங்கள் ...
இன்னிக்கு நம்ம google doodle ஞாபகப் படுத்தின முக்கியமான நாள்.
45 th anniversary of chipko movement.
இது 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கினாலும், 1973 -74 ல் உத்தராகண்ட் மாநிலத்தில் பெண்கள் நடத்திய போராட்டம் மூலமே பலராலும்.அறியப்பட்டது.
மரங்களை வெட்ட ஆட்கள் வந்தபோது, பெண்கள் எல்லாரும் கைகோர்த்து மரத்தை சுற்றி நின்று,ஒரு தீவிரத்துடன் ஒளி படைத்தை கண்ணும் உறுதி கொண்ட நெஞ்சமும் கொண்டு , எங்களை கொன்றுவிட்டு இந்த மரங்களை வெட்டுங்கள் என்று அச்சம் பயம் எதுவுமின்றி எதிர்த்து நின்று, வெற்றியும் பெற்றனராம்.
நான் உத்தராகண்டில் இருந்த போது, அங்கு வீடு சிறுசோ,பெரிசோ..தோட்டம் அத்தனை பெரிசா அழகா எல்லார் விட்டிலும் இருக்கும்.
குழந்தைகள் மாதிரி அத்தனை வாஞ்சையுடன் பராமரிப்பார்கள்.
எத்தனை வகை மரங்கள் ,பூக்கள், கனிகள்.
பருவத்துக்கேற்றபடி அவை சொல்லித் தந்த பாடம்.

ஆயிரம் வசதிகள் இருந்தும்..அரை பரீட்சையோ மு பரீட்சை லீவு விட்டால் முதல்ல போக துடிக்கும் இடம் எது?
எங்கே மரம்,செடி,கொடி இருக்கோ அங்கே தானே?

கேபிள் ஒயருக்கு இடஞ்சலா இருக்கா..உடனே வெட்டு மரத்தை..
நாலு வழி,ஆறு வழி சாலை போடணுமா..சாய்த்து விடு மரத்தை
மெட்ரோ வரணுமா..மரத்தை வெட்டு..
இப்படி ஓங்கின கை இன்னும் ஓங்கியே இருக்க..
மழைக்கும் காற்றுக்கும் நீருக்கும் நாம் ஏங்கித் தவிக்கும் காலம் இப்போது..
தரு என்கிறொம்..
தரை மட்டமாக்குகிறோம்.

சோலைகளெல்லாம்..நெடுஞ்
சாலையா இப்போ மாறியாச்சு
கொடியும் செடியும் மரமுமிங்கே
கோடாலிக்கு இரையாச்சு
கான்க்ரீட் காலன் வந்ததுமே
காணாமல் போச்சே மரமெல்லாம்
அரச மரத்தடி அமர்ந்தோனே
அடுத்த தலைமுறை மக்களுக்கு
ஏட்டில் மட்டுந்தானா..
நெட்டை குட்டை மரமெல்லாம்..
மரம் வளர்ப்போம்.
மனிதம் காப்போம்.



Fair & lovely

Fair & lovely..
இன்னிக்கு காலையில் அலாரம் அடிக்கும்போதே..on this day last year என்று என் google photos ஒரு சில ஃபோட்டோக்களை முன் வைத்தது. அதில் ஒரு படம் என்னை கொஞ்சம் flash back கூட்டிக் கொண்டு போச்சு.

கண்கொட்டாமல் பார்த்தேன் அந்தப் படத்தை..எத்தனை அழகு..கோலி குண்டு கண்..பிங்க் உடையில் சுத்தி சுத்தி வந்து என் மனசை கொள்ளையடிச்சியே..இப்போ நீ எப்படி இருக்கே..அதே துறு துறுனு..அதே வேகத்தோட ஓடியாடி உன் எசமானியை வேலை வாங்கிண்டு இருப்பியா ஐயோ..மறந்தே போய்ட்டேன்..இப்போ நீ என்ன கலர்ல இருக்க..உன்னைப் பார்க்க ஆசையே இருக்கேனு உன் எசமானிக்கு ஃபோன் போட்டேன்.. ஒரு மரியாதைக்கு அவளை நலம் விசாரிச்சேன்..அப்புறம் உன்னைப் பத்திதான் பேச்சு..உன் குறும்பு இப்போ ரொம்ப கூடிப் போச்சாமே..
தயங்கித் தயங்கி கேட்டேன்..' இப்போ பிங்க் கலரில இருக்கா.இல்ல மாத்திட்டீங்களானு'.
உன் எசமானிக்கு பிடிச்சு போச்சாம் உன்னோட பிங்க் கலர்..அதான் அப்படியே இருக்கட்டும்னு நிறத்தை மாத்தாமல் விட்டுட்டேன் என்றாள்.
'அப்போ..அந்த கலர் மாத்தற சாப்பாடு குடுக்கிறதில்லையானு கேட்டேன்..அதுக்கு அவள்..இல்ல இப்போ அதே கலர் இருக்கறதுக்கு நல்ல சாப்பாடு கொடுக்கிறேன் ' என்றாள்.
என்ன..எல்லாரையும் மண்டையை பிச்சுக்க வெச்சுட்டேனா..
இதுதாங்க போன வருஷம் நடந்தது.

ஒரு தோழி வீட்டுக்கு போய் இருந்தேன். எப்பவும் வரவேற்கும் அவள் வீட்டு fish tank. ஒரு giant size fish (angel fish நு சொன்னா) வேகமா விளையாடிண்டு இருந்தது.
Florence ..இங்கே வா..விரலால் கண்ணாடிக் கூண்டைத் தட்ட..வாயைப் பிளந்துண்டு ஓடி வந்தது..

Sudden ஆக strike ஆச்சு..
மூணு மாசம் முன்னாடி வந்தப்போ ஒரு black fish இருந்ததே அது என்னாச்சு .கவலையோட கேட்டேன்..நான் சற்றும் எதிர்பாராத பதில் சொன்னாள். ஐயோ அகிலா ..அதே fish தான் இது என்றாள்..கருப்பு எப்படி colorful ஆ மாறித்து..ஆச்சரியத்தில் நான்..
அதற்கு அவள் சொன்ன பதில் ..
கருப்பை பார்த்து போரடிச்சது.கடைக்காரன் ஒரு புது fish feed கொடுத்தான். அதை சாப்பிட ஆரம்பிச்சதில இது இப்படி அழகா மாறிடுத்து என்றாள்..

அடுத்தது beauty parlour கூட்டிப் போகும் உத்தேசமிருக்கா.
கிண்டலா கேட்டாலும்..கலங்கியது மனசு.

அடப் பாவிகளா.. 
மூவாயிரம் cream வித்து முழு லாபம் சம்பாதிச்சீங்கன்னா இப்போ இந்த வாயில்லா ஜீவனையும் இப்படி வதைக்கிறீங்களே..

மூஞ்சி எல்லாம் இப்போ முன்னோர் மாதிரி மாறிண்டு நாங்க படற கஷ்டம் போதாதா..?

அந்த feed அதுக்கு வேற என்ன கஷ்டம் கொடுக்கிறதோ தெரியலையே..இல்ல அதுக்கும் இந்த taste பிடிச்சு போச்சானு தெரியல..

தண்ணீரில் மீன் அழுதால்..
கண்ணீரை யார் அறிவார்..
நீங்க அழறீங்களா..சிரிக்கிறீங்களா..
ஒண்ணும் புரியலையே boss..
Totally confused..

(This was the first time i heard about a fish feed to make it fair and lovely. That's why i thought of sharing).
இப்போது  கூகிள் செய்து பார்த்தபோது இந்த மாதிரி உணவுகள் நல்லதா கிடைக்கிற மாதிரி போட்டு இருக்கு.
எதோ வாயில்லா ஜீவன் சந்தோசமா இருந்தா சரி.

எச to meena anand

எச பாடாவிடில் எப்படி Meena Anand
டீன் ஏஜ் காதல்
கடலை போடும்..
கன்னா பின்னாவென்று உளறும்.
நொடியும் யுகமாச்சென்று
நொந்தே போகும்.
மிடில் ஏஜ் காதல்..
ஜாடிக்கேத்த மூடியாய்
ஜோடியாய் அலையும்..
ஜோரெல்லாம் போனபின்
பேஜாரப்பா வாழ்க்கைனு
ஜோரா வசனம் சொல்லும்.
முதுமைக் காதல்.
முன்னே யார் போவோமென்றே
முள் மேல் நிற்கும்.
Home க்கு போகுமுன்
Heaven க்கு போகணும்னு
ஹோமமும் செய்யும்.

Home..sweet home

home ..sweet home

வீடு..அதுவும் வாடகை வீடு..
நுழையும் போது நூறு குற்றம் சொன்னாலும் , வருடம் செல்லச் செல்ல ஒரு நட்பும் அன்பும் அந்த வீட்டோடு உருவாகும்.

ஒவ்வொரு முறையும் ட்ரான்ஸ்ஃபர் ஆகி ,வேறு ஊருக்கு செல்லும்போது..கட்டிக் காத்து களித்திருந்த வீட்டை விட்டு வரும் போது மனசு ரொம்பவே கஷ்டப்படும்.

அந்த வீட்டு மரம் செடி கொடி , பாசமாய் வரும் பறவைகள், சுத்தி சுத்தி வரும் பூனைக்குட்டி  , குரல் கொடுத்ததும் எட்டிப் பார்க்கும் பக்கத்து வீட்டு பாட்டி..
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சாவிகள் கை மாறும். குடியிருந்தவருக்கு தெரிந்த பல விஷயம் வீட்டுச் சொந்தக் காரருக்கு கூட பல சமயம் தெரியாது.

எனக்கு மிகவும் பிடித்த தேஹ்ராடூன் வீட்டை காலி செய்தபோது எங்கள் வீட்டுச் சொந்தக்காரரிடம் அவர் வீட்டைப் பற்றி பல தகவல்கள் சொன்னேன்.

பெரிய பேர் தெரியாத மரம் என்று கண்பித்தார் நான் குடியேறியபோது..
கொஞ்ச நாளில் தோட்ட வேலை செய்பவர் இரண்டு மூன்று ருத்திராக்‌ஷம் கொண்டு வந்து கொடுத்தார் அந்த மரத்திலிருந்து.

குப்பையாக இருந்த பின் பக்கத்தை கிச்சன் கார்டனாக மாற்றி காரட், பட்டாணி, முள்ளங்கி , உருளை,வெங்காயம் என்று ஏகபோக  விளைச்சல் நிலமாக்கினேன்.

மூட்டை மூட்டையாக கொட்டும் மாமரம், சப்பு கொட்டும் லிட்சி மரம், வாழை மரம் இதெல்லாம் யார் சொன்னது மரங்கள் என்று.. என்னோடு பேசி சிரித்து தலையாட்டி என்னோட குழந்தைகள் மாதிரி ..என்னையும் குழந்தையாக்கி சந்தோஷம் தந்த செல்வங்கள்.

இருக்கிற இந்த வாடகை வீட்டை இப்படி எதுக்கு துடைத்து பெருக்கி பளபளப்பாக்கி ..நீ என்ன பெரிய மெடல் வாங்கப்போறியானு வரும் வலதுகரமெல்லாம் ஏசுவார் என்னை..

 வாடகை வீடு..
கான்க்ரீட் காட்டில் இருந்தாலும்..ஆசையா ய் வாழ்ந்து பார்த்தால் அந்த அன்னியோன்னியம் புரியும்.

வீட்டுச் சொந்தக்காரருக்கு நான் சொன்ன விஷயம் இதோ:

விதையே இருக்காது..
 காயே கனியாய் இனிக்கும்..
நான் வெச்ச கொய்யா மரம்..

இது என் பொண்ணு
நட்ட மாமரம்..
மல்கோவா ...சுவையோ சுவை..
மண்ணு நல்ல மண்ணு இது..

அளவில சிறிசுதானாலும்
அன்னாசிப் பழம்..
அருமையா இருக்கும்..

வாழை இலைக்கு..
வெளியே போறதே இல்லை

இந்த மரக் கிளை இருக்கே
மங்களத்தின் அடையாளம்..

இந்தப் பூச்செடி ..
புது வகையாக்கும்..
பார்க்கவே கொள்ளை அழகு..

பக்கத்து வீடு நல்லவங்க..
பக்க துணையா இருப்பாங்க..

சுவற்றில் தொங்கும் படம்..
சின்னப் பெண் வரைஞ்சது..

அணில் புறா மைனா எல்லாம்..
அடிக்கடி வந்து விளையாடும்..

தண்ணீர் வருகை பார்த்து
தவறாமல் மோட்டார் போடணும்..
இந்த குழாய் மட்டும்..
கொஞ்சம் தண்ணீ கம்மி வரும்..

திருட்டு பயமே இல்லையிங்கே..
தைரியமா இருக்கலாம்..

ராசியான வீடுங்க..
வரிசையாய்..விளக்கங்கள்

வீட்டுச் சாவியை
வீட்டுச் சொந்தக்காரர் கையில்
் கவலையுடன் கொடுத்தபடி.
பல ஆண்டாய்...
குடியிருந்தவர்..


வாடகை வீடானாலும்
வாழ்ந்த விட்டை
விட்டு வரும் வலி..
வலி ....வலி்தான்...


மனம் ஒரு குரங்கு

மனம் ஒரு குரங்கு..
( நீ செய்யும் வேலைக்கெல்லாம் பாவம் அது மேல ஏன் பழி போடறேனு மைண்ட் வாய்ஸ்)
ஒரு சின்ன incident.
கலிஃபோர்னியா லேர்ந்து ரொம்ப நாள் கழித்து ஒரு தோழி வந்திருக்கா.
நம்ம கும்பலோ பெரிசு. எப்போ யார் யார் எங்கே மீட் பண்ணப் போறோம்னு ஏற்கனவே வாட்சப்பில் ஒரு குரூப் form பண்ணி schedule போட்டாச்சு.
கிடைக்கும் கொஞ்ச நேரத்தை உற்ற தோழியுடன் எப்படி செலவழிக்கலாம்னு எல்லாரும் மாஸ்டர் ப்ளான் மல்லிகாவாக இருக்க..நாமதான் கொஞ்ச மு.கொ ஆச்சே..
அழகா கோடு கட்டம் போட்டு எல்லார் பேர், அட்ரஸ் , ரூட் மேப், டைம் , மெனு ....எல்லாம் க்ரூப்ல போட்டாச்சு ( அட தேவுடானு..நீங்க சொல்றது காதில் கொஞ்சமா விழறது..)
எப்பவும் போல முதல் ரவுண்டு வேலை முடிச்சதும் ஒரு குட்டி அரட்டை அடிக்கும் தோழியின் ஃபோன் வந்தது.
எப்போதும்போல் நான் குஷியா இந்த முனையில்..
மறுமுனையில் பெரிசா ஓங்கின குரலில் 'நீ உன் மனசில என்ன பெரிய ஆளுன்னு நினைப்பா..என்னமோ உனக்குத்தான் எல்லாம் தெரியும், உன்னாலதான் ப்ளான் பண்ண முடியும்னு ரொம்ப கிடந்து ஆடறியே..அவ என் வீட்டுக்குதான்  முதல்ல வரணும். ..ஆமாம்னு சிங்கம் போல கர்ஜனை. சரி..சரி..ஓகே..செஞ்சுடலாம்னு நான் சொல்ல..இன்னும் நிலைக்கு வராத அவள்..எதோ காலத்தில் போட்ட சின்ன சின்ன சண்டை, பூசல்  , திட்டினது வந்தது போனது எல்லாத்தையும் ஒண்ணு விடாம ஞாபகமா சொல்லி என்னை ஏச ஆரம்பித்தாள்.
சரி..அவ எதோ மனசு உளைச்சலில் இருப்பா ..நாமும் சேர்ந்து கத்தினா இன்னும் நிலமை மோசமாகும்னு நான் ஈனஸ்வரத்தில் பதில் கொடுத்தபடி இருந்தேன்.
ரொம்ப நேரம் பேசியதால் speaker on பண்ணிவிட்டுட்டேன்.

என்னம்மா ஆச்சுனு கேட்டு வந்த என் பெண் என் முகத்தைப் பார்த்து ' யார் ஃபோன்ல என்று சைகையில் கேட்டபடி என் கையிலிருந்து ஃபோனை வாங்கி speaker ஆன் செய்து ..ஓ..இந்த aunty aa.. என்ற பாவனையில் சென்று விட்டாள்.
ஒரே கோவம். எப்படி இப்படி பேசலாம். இனிமே உன் மூஞ்சில முழிக்க மாட்டேன்னு மங்கம்மா சபதம் வேற எடுத்தாச்சு.
பின்ன என்னங்க..செய்யாத தப்புக்கு யாராவது திட்டு வாங்குவீங்களா?
ஏதோ ஒழுங்கா plan செய்தால், வரும் தோழியுடன் எல்லாரும் நல்ல quality time spend செய்யலாமேனு தான் மண்டை உடைச்சு போட்ட திட்டமெல்லாம்..இப்படி தவிடு பொடி ஆக்குவாள்னு நினைச்சு கூட பார்க்கல.
இப்போதான கதையில ஒரு திருப்பம்.

சாயந்திரம் walking போகும்போது பாட்டு கேட்க ஆரம்பிக்க..பாட்டுக்கு நடுவில் அவள் பாட்டும்..அதான் அவ என்னை போட்டு தாளிச்ச வசனமெல்லாம் ரீப்ளே ஆக..ஐயோ இதெப்படி ..நான் குழம்ப..
speaker off பண்ணும்போதோ..இல்ல சுவாரசியமா சண்டை போட்டபோதோ record button  on ஆகிவிட்டது போல இருக்கு.(உண்மையா..நச்ன் வேணுமென்று செய்யலை..விரல் குண்டா இருக்குறதுனால் வர பிரச்சனை இது..!!!)

ஒரு நொடி..என் நல்ல மனசு சொல்லித்து..ஏய் இதை இப்பவே அழிச்சுடு..
இன்னொரு பக்கம்..' அப்படியே இருக்கட்டும். அழிக்காதே..நாளைக்கு அவள் ஏதாவது உல்டாவா பேசினால் prove பண்ண ஒரு evidence இருக்கும்.
இன்னொரு பக்கம்..சீ..சீ..என்ன கேவல புத்தி. இன்னிக்கு அடிச்சுப்போம்..நாளைக்கு சேர்ந்துப்போம். இதை முதல்ல அழி..தவறி ஆன ரெகார்டிங்..சுவடு தெரியாமல்
அழியட்டும்..
இந்த மனசு இருக்கே..என்னமா டபுள்,ட்ரிபிள் ரோலெல்லாம் செய்கிறது.

ஒரே ஒரு. delete button தட்டினேன். மொபைலிலும் மனசிலும் இருந்ததை அழிக்க..அழித்தேன்..இப்போ நிம்மதியா இருக்கேன்.

வயோதிகம்

முன்ன மாதிரி எல்லாம் இப்போ ஓடி ஆடி வேலை செய்ய முடியலை. மருந்துகள் வேற எக்கச்சக்கம். ஒண்ணு சாப்பிட்டா இன்னொரு கஷ்டம்.இப்படியே தான் வாழ்க்கை இனிமே ஒட்டணும்னு ..திடீரென்று இரு பிடிப்பே இல்லாமல் வயோதிகத்தை ஒரு வியாதி போல மனம் நினைக்க ஆரம்பிக்கும்

தூக்க மருந்து  தாலாட்டுமுன்
தூக்கிப் போடுமே இருமல்
என் லொக் லொக்  சத்தம்
கொர் கொர் குறட்டைக்காரரையும்
கூப்பிட்டு எழுப்புமே..
தலைகாணி உயரமாகும்..
தலை விதி நொந்து..
தாரையாய் கண்ணீர்..
.
கோழிக் கூவும் நேரம்..
கண்ணும் சொக்கும் தூக்கம்..
எட்டு மணி ட்ரெயின் பிடித்து
எட்டிப் பாய்ந்து பஸ் பிடித்து
ஓட்டமும் நடையுமாக..
ஓவர் டைமும் பார்த்த நாட்கள்..
ஓரமாய்..சின்ன நினைவாய்..
 விழிப்பும் ஒரு வழியாய் வர..
வேகத்தில் இயங்கும் வீடு..
பெண்ணும் பேத்தியும்..
பேச்சா..சண்டையா..??
புரியாத புதிராய் நான் முழிக்க..
சூடாக் குடித்த காபி..
சுட சுட செய்தியுடன் பேப்பர்
வெது வெது நீரில் குளியல்..
வேண்டுதல் நாளின் இனிமைக்கு..
பசித்து புசித்த காலம்..
பழங்கதையான ஏக்கம்..
மாத்திரைகள் பாதி உணவாக..
மருந்தாய் தோன்றும் சாப்பாடும்..
ஒற்றை வரியில் பேசிய நானோ
ஒன்றையே இரண்டு மூன்று முறை...!!
வலிகள் தரும் வேதனை..
விடுதலை வேண்டி ப்ராத்தனை..
கடந்தது எல்லாம் கனவாய்க் கலைய
நிகழும் காலம் நீளமாய்த் தெரிய
வரப்போகும் விடியல்..
விரட்டுமென் சோதனையென
விழித்தபடி படுத்திருக்கேன்..
விடிய இன்னும் நேரம் இருக்கே..
புரண்டு படுக்கையிலே..
புலப்பட்டத்து ஓர் ஒளி..
' நீ அவனில்லை..
நினைத்தை முடித்த..
நீ..அவனில்லை..'
நொடியில் மறைந்தது..
நிமிண்டிய அவ்வொளி..!!

சூரிய கிரணமும்..எனைச்
சுறுசுறுப்பாக்க..
"பழக்கம் எனக்குமுண்டு..
பழம் காய் வாங்க..
பக்கத்து கடைதானே..
பத்திரமாய் போய்வருவேன்"..
விக்கித்து நின்றாள் பெண்..
மோட்டுவளை பார்த்தவன்..
மீண்டெழுந்தேன்...
மீதமுள்ள நாட்களை..
மகிழ்ச்சியாய் கழிக்கும்..
மனத் திடத்துடனே..

ஒரு வாண்டுக் கூட்டமே...

ஒரு வாண்டுக் கூட்டமே...


leave விட்டாச்சு..
leisure time கிடைச்சாச்சு
lazy ஆ இருக்கலாமே.
லூட்டியும் அடிப்போமே...

வெறிச்சோடிய வராண்டாக்கள்
விழாக்கோலத்தில் இப்போ
விடுமுறை விட்டாச்சே..ஒரு
வழி பண்ணிடும் வாண்டுகள்.

பூங்காக்களில் பூத்தது
புத்தம்புது மழலைப் பூக்கள்.

ஓடிப் பிடித்து விளையாடி
ஒரு சிறு சிராய்ப்புக்காக
ஓவெனெ அழுது
ஊரைக் கூட்டிய குட்டீஸ்.

'பால்' பொறுக்கிப் போட்டா
'பாட்டிங்' உண்டு நாளையென
ஒட ஒட விரட்டிய
புதுசா மீசை முளைத்த
பந்தா பார்ட்டிகள்.

மாடிப்படி ஏறுகையில்
மறைஞ்சிருக்கேன் நானிங்கே
மாட்டி விட்டுடாதீங்கனு
மன்றாடிய மழலைகள்.

பாவனையாய் பெரியவன்
பின்னால் அமர
பறக்குது தன் சைக்கிளென்று
பரவசத்தில் தம்பிகள்.

கதவைத் தட்டி விட்டு
காணாமல் மறைந்து போன
குறும்புக் குட்டி வால்கள்.

ஐஸ் வாட்டர் கேட்டு
அலை பாயும் கண்கள்
அதோ இருக்கு சாக்லெட்டென
ஆசையாய் கேட்கும் குட்டீஸ்கள்.


வெய்யிலை வீணாக்காமல்
விளையாடுவோர் பலரிருக்க
வீடியோ கேம்ஸ் போதுமென்று
வீட்டுக்குள் ஒரு கூட்டம்.

பாட்டி வீடு அத்தை வீடு
பக்கத்தில் இருந்தாலும்
பழகின என் வீடே
படு சொர்க்கம் என்றாச்சு

நாள் முழுதும் நாடகம்
நடப்பதெல்லாம் பரவசம்..
நாளும் போனதிங்கே
நானும் குழந்தையாய்..
இவர்களில் ஒருவராய்..

#Happyholidays
leave விட்டாச்சு..
leisure time கிடைச்சாச்சு
lazy ஆ இருக்கலாமே.
லூட்டியும் அடிப்போமே...

வெறிச்சோடிய வராண்டாக்கள்
விழாக்கோலத்தில் இப்போ
விடுமுறை விட்டாச்சே..ஒரு
வழி பண்ணிடும் வாண்டுகள்.

பூங்காக்களில் பூத்தது
புத்தம்புது மழலைப் பூக்கள்.

ஓடிப் பிடித்து விளையாடி
ஒரு சிறு சிராய்ப்புக்காக
ஓவெனெ அழுது
ஊரைக் கூட்டிய குட்டீஸ்.

'பால்' பொறுக்கிப் போட்டா
'பாட்டிங்' உண்டு நாளையென
ஒட ஒட விரட்டிய
புதுசா மீசை முளைத்த
பந்தா பார்ட்டிகள்.

மாடிப்படி ஏறுகையில்
மறைஞ்சிருக்கேன் நானிங்கே
மாட்டி விட்டுடாதீங்கனு
மன்றாடிய மழலைகள்.

பாவனையாய் பெரியவன்
பின்னால் அமர
பறக்குது தன் சைக்கிளென்று
பரவசத்தில் தம்பிகள்.

கதவைத் தட்டி விட்டு
காணாமல் மறைந்து போன
குறும்புக் குட்டி வால்கள்.

ஐஸ் வாட்டர் கேட்டு
அலை பாயும் கண்கள்
அதோ இருக்கு சாக்லெட்டென
ஆசையாய் கேட்கும் குட்டீஸ்கள்.


வெய்யிலை வீணாக்காமல்
விளையாடுவோர் பலரிருக்க
வீடியோ கேம்ஸ் போதுமென்று
வீட்டுக்குள் ஒரு கூட்டம்.

பாட்டி வீடு அத்தை வீடு
பக்கத்தில் இருந்தாலும்
பழகின என் வீடே
படு சொர்க்கம் என்றாச்சு

நாள் முழுதும் நாடகம்
நடப்பதெல்லாம் பரவசம்..
நாளும் போனதிங்கே
நானும் குழந்தையாய்..
இவர்களில் ஒருவராய்..

#Happyholidays

பொட்டிக்கடை to boutique

பொட்டிக்கடை to boutique

சனிக்கிழமை வீதி உலா வரதுல எப்போதுமே ஒரு குஷி தான். நிறைய பேர் ஷாப்பிங் செய்யும் நாள்.
அதுவும் பேரம் பேசி ஒரு அஞ்சு ரூபா குறைச்சு கடைக்காரர்் தந்தார் என்றால் ஏதோ இமாலய வெற்றினு காலர் உசத்திப்போம்.
நானும் என் ஃப்ரண்டும் அப்படித்தான் நேத்திக்கு வீட்டில இருக்குற ஒட்டுப் போட வேண்டிய துணி ஒரு பையிலும் புதுசா தைக்க வேண்டியதெல்லாம் ஒரு பையிலும் எடுத்துண்டு கிளம்பியாச்சு.
மார்க்கெடல ஒரு சந்துக்குக்குள் ஒரு சின்ன டைலர் கடை. எந்த ஆல்ட்டரேஷனும் செய்யத் தயாராய் மண்டை ஆட்டினார். மொத்தமா அவர் கணக்கு சொல்ல பொங்கி எழுந்தா என் ஃப்ரண்ட். அவர் சொன்னதில் பாதி விலை தான் தருவேன்னு போராட்டம். இப்படியே பேசி ப் பேசி ஒரு வழியா தான் நினைச்சதை சாதிச்சா. வெளியே வந்ததும் விழுந்தது எனக்கு வசவு. ' கடைக்காரர் என்ன சொன்னாலும் தலையாட்டுவியா.பார் எப்படி நான் handle பண்ணேன்' என்றாள். பேசாமல் ஒரு ஸ்மைலிட்டேன். (நானும் பேரம் பேசுவேங்க..ரொம்ப நல்லவ எல்லாம் இல்லை..ஆனா..அடி மாடு பேரம் பேசினால் எந்ற வூட்டுக்காரரு முரைக்கிற frame கண் முன்னாடி வந்து பயமுறுத்தும்..ஆமாங்கறேன்)
அடுத்த கடை ..ஒரு designer boutique. அங்கே ஆங்கிலம் ஹிந்தியும் ,கன்னடமும் தமிழும் சரளமா பேசியபடி கடைக்காரரும் அவர் மனைவியும். இவளைப் பார்த்ததும் 'என்ன மேம் ரொம்ப நாள் ஆச்சு..வீட்டல எல்லாரும்..இப்படியே ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு ..இப்போ சொல்லுங்க..என்றார்.
இவள் கொண்டு சென்ற அத்தனை ப்ளவுஸுக்கும் இந்த ஸ்டைல், அந்த நெக், இதில் எம்பிராயிடரி பண்ணிடலாம்..இதுக்கு அழகா ஒரு பைப்பிங்..இந்த ப்ளவுஸுக்கு saree இலிருந்து கொஞ்சம் கட் பண்ணி க்ளாஸா தைத்துவிடலாம்னு அப்படி ஐடியா ஐயாக்கண்ணுவா சொல்லிண்டே போனார்.
என் தோழி அப்படியே மயங்கி ஹீராயின ்மாதிரி கொஞ்சம் கனவு சீன்ல போக..அவர் நீட்டின bill..கனவுலேர்ந்து straight ஆ 'கோமா'க்கு போய்ட்டா..
ஏம்ப்பா..எந்ற வூட்டுக்காரர் மாச சம்பளத்தையே கேக்குறீரேநு ..கண்ணீரும் கம்பலையுமா..ஆனா..இப்போ அந்த ப்ளவுஸோட கனவு வேற கண்டாச்சு..
எப்படி விட முடியும்.தலை கீழ நின்னு பார்த்தும் தம்படி கூட கம்மி பண்ண மாட்டேன்னுட்டார். தைச்சதுக்கு அப்புறம் சொல்வீங்கனு ..இது சார்ஜ் ஒன்னுமேயில்லைனு
பில்லை வாங்கிண்டு பானி பூரி கூட சாப்பிட மனசில்லாமல் ..நடையைக் கட்ட..
நமக்குத் தான் கேள்வி கேட்காட்டி ஜனகராஜ் மாதிரி மண்டை வீங்கிடுமே..
அது சரி..அந்த பொட்டிக்கடையில போடு போடுனு போட்ட..இந்த boutique ல பொட்டிப் பாம்பா அடங்கிட்டே..அங்கே பிடிச்சதுல பல மடங்கை இங்கே விட்டியே..என்ன சாதிச்ச..'
எங்களுடன் மெளனமும் கூட நடந்தது.
யோசிப்போம்... பேரம் பேசணும்..இல்லைனா..ஏமாளினு பட்டம் எல்லா இடத்திலும் கிடைக்கும். ஆனால் இப்படி நிறைய இடத்தில் முரண்பாடா இருக்கோமே..
அது வெறும் ஒட்டு போடற வேலை..இதுல வெட்டணும் ஒட்டணும் ஓவரா வேலை பண்ணனும்னு சமாதானம் சொன்னாலும்..

நானும் யோசிக்கிறேன்.

பண்டிகை நாள்..

பண்டிகை நாள்...

ஆசையா கேட்டேன்..பொண்ணு கிட்ட..
kheer பண்ணட்டுமா..?
calorie ஜாஸ்தி மா..
வடை..?
weight போடும்..
அவியல்..?
அது ஒரு சொதப்பல் டிஷ்..
பருப்பு உசிலி..?
பேரே சகிக்கல..
பிட்லை..?
இது என்ன லை..
puran போளி..?
பொறுமை சோதிக்காதேம்மா..

அரைமணி argument..
அமைதி ஒப்பந்தம்..

பகவானுக்கு ...
பாலும் பழமும்..
பக்தைக்கு..
பருப்பும் ரொட்டியும்..

கொஞ்ச நேரம் கழிச்சு..
கொஞ்சலுடன்..பெண் சொன்னாள்..
பிறந்த நாள் இன்று..
பிரியாத் தோழிக்கு..

இப்போ..
பார்ட்டிக்கு போகனும்..
பிட்சா சாப்பிடணும்
பெப்சி குடிக்கனும்..
பாப்கார்ன் கொறிக்கனும்..
விட்டதை பிடிக்க்
வேகமாய் கிளம்பல்..

அடப் பாவிகளா..
(விவேக் style ல் நான் ..)
மீந்த ரொட்டி..
மறுபடியுமா...
விட்டேன்..ஜூட்..