Sunday, April 8, 2018

மனம் ஒரு குரங்கு

மனம் ஒரு குரங்கு..
( நீ செய்யும் வேலைக்கெல்லாம் பாவம் அது மேல ஏன் பழி போடறேனு மைண்ட் வாய்ஸ்)
ஒரு சின்ன incident.
கலிஃபோர்னியா லேர்ந்து ரொம்ப நாள் கழித்து ஒரு தோழி வந்திருக்கா.
நம்ம கும்பலோ பெரிசு. எப்போ யார் யார் எங்கே மீட் பண்ணப் போறோம்னு ஏற்கனவே வாட்சப்பில் ஒரு குரூப் form பண்ணி schedule போட்டாச்சு.
கிடைக்கும் கொஞ்ச நேரத்தை உற்ற தோழியுடன் எப்படி செலவழிக்கலாம்னு எல்லாரும் மாஸ்டர் ப்ளான் மல்லிகாவாக இருக்க..நாமதான் கொஞ்ச மு.கொ ஆச்சே..
அழகா கோடு கட்டம் போட்டு எல்லார் பேர், அட்ரஸ் , ரூட் மேப், டைம் , மெனு ....எல்லாம் க்ரூப்ல போட்டாச்சு ( அட தேவுடானு..நீங்க சொல்றது காதில் கொஞ்சமா விழறது..)
எப்பவும் போல முதல் ரவுண்டு வேலை முடிச்சதும் ஒரு குட்டி அரட்டை அடிக்கும் தோழியின் ஃபோன் வந்தது.
எப்போதும்போல் நான் குஷியா இந்த முனையில்..
மறுமுனையில் பெரிசா ஓங்கின குரலில் 'நீ உன் மனசில என்ன பெரிய ஆளுன்னு நினைப்பா..என்னமோ உனக்குத்தான் எல்லாம் தெரியும், உன்னாலதான் ப்ளான் பண்ண முடியும்னு ரொம்ப கிடந்து ஆடறியே..அவ என் வீட்டுக்குதான்  முதல்ல வரணும். ..ஆமாம்னு சிங்கம் போல கர்ஜனை. சரி..சரி..ஓகே..செஞ்சுடலாம்னு நான் சொல்ல..இன்னும் நிலைக்கு வராத அவள்..எதோ காலத்தில் போட்ட சின்ன சின்ன சண்டை, பூசல்  , திட்டினது வந்தது போனது எல்லாத்தையும் ஒண்ணு விடாம ஞாபகமா சொல்லி என்னை ஏச ஆரம்பித்தாள்.
சரி..அவ எதோ மனசு உளைச்சலில் இருப்பா ..நாமும் சேர்ந்து கத்தினா இன்னும் நிலமை மோசமாகும்னு நான் ஈனஸ்வரத்தில் பதில் கொடுத்தபடி இருந்தேன்.
ரொம்ப நேரம் பேசியதால் speaker on பண்ணிவிட்டுட்டேன்.

என்னம்மா ஆச்சுனு கேட்டு வந்த என் பெண் என் முகத்தைப் பார்த்து ' யார் ஃபோன்ல என்று சைகையில் கேட்டபடி என் கையிலிருந்து ஃபோனை வாங்கி speaker ஆன் செய்து ..ஓ..இந்த aunty aa.. என்ற பாவனையில் சென்று விட்டாள்.
ஒரே கோவம். எப்படி இப்படி பேசலாம். இனிமே உன் மூஞ்சில முழிக்க மாட்டேன்னு மங்கம்மா சபதம் வேற எடுத்தாச்சு.
பின்ன என்னங்க..செய்யாத தப்புக்கு யாராவது திட்டு வாங்குவீங்களா?
ஏதோ ஒழுங்கா plan செய்தால், வரும் தோழியுடன் எல்லாரும் நல்ல quality time spend செய்யலாமேனு தான் மண்டை உடைச்சு போட்ட திட்டமெல்லாம்..இப்படி தவிடு பொடி ஆக்குவாள்னு நினைச்சு கூட பார்க்கல.
இப்போதான கதையில ஒரு திருப்பம்.

சாயந்திரம் walking போகும்போது பாட்டு கேட்க ஆரம்பிக்க..பாட்டுக்கு நடுவில் அவள் பாட்டும்..அதான் அவ என்னை போட்டு தாளிச்ச வசனமெல்லாம் ரீப்ளே ஆக..ஐயோ இதெப்படி ..நான் குழம்ப..
speaker off பண்ணும்போதோ..இல்ல சுவாரசியமா சண்டை போட்டபோதோ record button  on ஆகிவிட்டது போல இருக்கு.(உண்மையா..நச்ன் வேணுமென்று செய்யலை..விரல் குண்டா இருக்குறதுனால் வர பிரச்சனை இது..!!!)

ஒரு நொடி..என் நல்ல மனசு சொல்லித்து..ஏய் இதை இப்பவே அழிச்சுடு..
இன்னொரு பக்கம்..' அப்படியே இருக்கட்டும். அழிக்காதே..நாளைக்கு அவள் ஏதாவது உல்டாவா பேசினால் prove பண்ண ஒரு evidence இருக்கும்.
இன்னொரு பக்கம்..சீ..சீ..என்ன கேவல புத்தி. இன்னிக்கு அடிச்சுப்போம்..நாளைக்கு சேர்ந்துப்போம். இதை முதல்ல அழி..தவறி ஆன ரெகார்டிங்..சுவடு தெரியாமல்
அழியட்டும்..
இந்த மனசு இருக்கே..என்னமா டபுள்,ட்ரிபிள் ரோலெல்லாம் செய்கிறது.

ஒரே ஒரு. delete button தட்டினேன். மொபைலிலும் மனசிலும் இருந்ததை அழிக்க..அழித்தேன்..இப்போ நிம்மதியா இருக்கேன்.

No comments: