Sunday, April 8, 2018

வாங்க ..பழக்கலாம்.

வாங்க ..பழக்கலாம்..
நேற்று மதியம். டைலர் கடையில் அவரோட பொறுமையை ரொம்ப சோதிச்ச்சிண்டுருந்த நேரம்..பக்கத்தில் இருக்கும் ஸ்கூல் பரீட்சை நடப்பதால் சீக்கிரம் விட்டதால் கலகலனு குழந்தைகள் கூட்டம். திடீரென்று ஒரு குரல்..'Hei..she is puking 'yaa.நு பக்கத்தில் இருந்த பசங்கள் கொஞ்சம் பத்தடி நகர்ந்தனர்.. வாந்தி எடுத்தபடி ஒரு  சின்னப் பெண் கொஞ்சம் அவமானத்தில் தலை குனிந்தபடி.
உடனே அவளின் பைய்யை வாங்கி , வாட்டர் பாட்டில் தண்ணீர் கொடுத்து சுதாரிக்க வைத்தேன்.ஒரே ஒரு பொண்ணு மட்டும் பொறுப்பா என் கூட உதவி செய்தாள்.
ரொம்ப பிடிச்சது அந்தப் பெண்ணோட gesture. எல்லாரும் அசிங்கம்னு நகர்ந்தபோது முன்னாடி வந்து தன் கிளாஸ்ஸில் இல்லாத ஃப்ரெண்டுக்கு உதவி பண்ணின பெண் மனசில் நின்றாள்.
இது தானே நாமும் பழக்கமும் பசங்களுக்கு..தேவையில்லாத ப்ரச்சனையில் தலையிடாதே..ஆனால் தேவைப்படும் போது கண்டிப்பா கை கொடு என்று

(என்ன சாப்பிடேனு கேட்க எத்தனிப்பதற்குள் அங்கே புழு மாதிரி நெளிந்த maggi...அம்மாக்களே..வெயில் நேரத்தில் இந்த உணவு சரியாம்மா?)
சில உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு போறோம். பெல் அடிச்சதும் ஓடி வந்து குழந்தைகள் சில சமயம் திறக்கும். ஹலோனு சொல்லுமுன்னே அம்மா..அப்பா..aunty வந்திருக்காங்கனு உள்ளே ஓடிவிடுகின்றனர்.
பாதி வேலையிலிருந்தேனு கைப்பிடித் துணியோட வரும் அந்த வீட்டு எசமானி..' எம் புள்ள/பொண்ணு ரூம் விட்டே வரமாட்டாங்க. அவங்க உண்டு ..அவங்க படிப்பு, லாப்டாப்னு உள்ளதான் இருப்பாங்கனு பெருமை கொப்பளிக்க..
அம்மணி..stop.. stop.. கொஞ்சம் நல்லதும் பழக்குங்கமா..வருந்தி வருந்தி உபசரிக்க சொல்லிக் கொடுக்க வேணாம். ஒரு வாய் தண்ணீர் கொண்டு வந்து தர பழக்குவோமே.
தாத்தா பாட்டி சில வீட்டில் permanent ஆ இருப்பாங்க..சில வீட்டில் விஸிட்டராய் வருவாங்க.. ஒரு நாளில் ஒரு அஞ்சு நிமிஷம் போய் பேசச் சொல்லணும். பேரனோ பேத்தியோ வந்து பேசும் அந்த நொடிக்காக நாள் பூரா brisk ஆ காத்திருப்பார்கள் இவர்கள்.
ரோட்ல போகும்போது கண்டிப்பா ஒரு ஆம்புலன்ஸ் நம்மை cross பண்ணி போகும்.இந்த வண்டிக்குள்ள இருக்கும் நோயாளிக்கு நல்லதே நடக்கட்டும்னு pray பண்ணச் சொல்லி தரணும். நாம் மறந்தாலும் அவங்க ஞாபகப் படுத்தி விடுவாங்க..இதையும் பழக்கலாம் இல்ல..
குழந்தைகளுக்கு தூங்கும் போது கதை சொல்லறது எல்லாரும் செய்யும் ஒரு விஷயம். இதிகாசம் புராணம் சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது. நம்ம குடும்பத்தில் ஒருத்தர் வீரமா இருந்திருப்பார். ஒருத்தர் பொறுமையின் சிகரமா இருந்திருப்பார். இன்னொருத்தர் உழைச்சு உயர்ந்திருப்பார். அவர்கள் பற்றியெல்லாம் கதையா சொல்ல ,குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். ( என் பெண்கள் குட்டீஸா இருக்கும்போது ..அம்மா உன்னோட story சொல்லு..அப்பா..உன் story சொல்லுனு கேட்ட்டு மகிழ்வார்கள்)
நம்ம குடும்பம் நட்பு பற்றி சொல்லி வைக்கலாமே..
இன்னொரு விஷயம்..who is your role model என்று எல்லா க்ளாஸிலும் ஒரு கட்டுரை வரும். கூகிளைத் தேடிப் பிடிச்சு, பழைய  essay books எல்லாம் ஒரு ஆராய்ச்சி பண்ணி, இவரை எடுக்கலாமா அவரைப் பத்தி எழுதலாமானு toss போட்டு..
பார்க்காத ஒரு ஆளை உன் ரோல் மாடலா எழுதுனு படம் வெட்டி, ஒட்டி மார்க் வாங்க அனுப்பறோம்.if not specified..நம்ம வீட்டு மாடல் பத்தி எழுதப் பழக்குங்க..மார்க் மட்டுமல்ல..மனசும் நிரம்பி வழியும்.
சின்ன சின்ன விஷயங்கள் நீங்களும் நிறைய பழக்கி இருப்பீங்க..
பின்ன என்னங்க..
நாமதான் குரு குலம்..நாம்தான் coaching class.
அன்புடன்
அகிலானந்தமயி








No comments: