Sunday, April 8, 2018

வயோதிகம்

முன்ன மாதிரி எல்லாம் இப்போ ஓடி ஆடி வேலை செய்ய முடியலை. மருந்துகள் வேற எக்கச்சக்கம். ஒண்ணு சாப்பிட்டா இன்னொரு கஷ்டம்.இப்படியே தான் வாழ்க்கை இனிமே ஒட்டணும்னு ..திடீரென்று இரு பிடிப்பே இல்லாமல் வயோதிகத்தை ஒரு வியாதி போல மனம் நினைக்க ஆரம்பிக்கும்

தூக்க மருந்து  தாலாட்டுமுன்
தூக்கிப் போடுமே இருமல்
என் லொக் லொக்  சத்தம்
கொர் கொர் குறட்டைக்காரரையும்
கூப்பிட்டு எழுப்புமே..
தலைகாணி உயரமாகும்..
தலை விதி நொந்து..
தாரையாய் கண்ணீர்..
.
கோழிக் கூவும் நேரம்..
கண்ணும் சொக்கும் தூக்கம்..
எட்டு மணி ட்ரெயின் பிடித்து
எட்டிப் பாய்ந்து பஸ் பிடித்து
ஓட்டமும் நடையுமாக..
ஓவர் டைமும் பார்த்த நாட்கள்..
ஓரமாய்..சின்ன நினைவாய்..
 விழிப்பும் ஒரு வழியாய் வர..
வேகத்தில் இயங்கும் வீடு..
பெண்ணும் பேத்தியும்..
பேச்சா..சண்டையா..??
புரியாத புதிராய் நான் முழிக்க..
சூடாக் குடித்த காபி..
சுட சுட செய்தியுடன் பேப்பர்
வெது வெது நீரில் குளியல்..
வேண்டுதல் நாளின் இனிமைக்கு..
பசித்து புசித்த காலம்..
பழங்கதையான ஏக்கம்..
மாத்திரைகள் பாதி உணவாக..
மருந்தாய் தோன்றும் சாப்பாடும்..
ஒற்றை வரியில் பேசிய நானோ
ஒன்றையே இரண்டு மூன்று முறை...!!
வலிகள் தரும் வேதனை..
விடுதலை வேண்டி ப்ராத்தனை..
கடந்தது எல்லாம் கனவாய்க் கலைய
நிகழும் காலம் நீளமாய்த் தெரிய
வரப்போகும் விடியல்..
விரட்டுமென் சோதனையென
விழித்தபடி படுத்திருக்கேன்..
விடிய இன்னும் நேரம் இருக்கே..
புரண்டு படுக்கையிலே..
புலப்பட்டத்து ஓர் ஒளி..
' நீ அவனில்லை..
நினைத்தை முடித்த..
நீ..அவனில்லை..'
நொடியில் மறைந்தது..
நிமிண்டிய அவ்வொளி..!!

சூரிய கிரணமும்..எனைச்
சுறுசுறுப்பாக்க..
"பழக்கம் எனக்குமுண்டு..
பழம் காய் வாங்க..
பக்கத்து கடைதானே..
பத்திரமாய் போய்வருவேன்"..
விக்கித்து நின்றாள் பெண்..
மோட்டுவளை பார்த்தவன்..
மீண்டெழுந்தேன்...
மீதமுள்ள நாட்களை..
மகிழ்ச்சியாய் கழிக்கும்..
மனத் திடத்துடனே..

No comments: