Sunday, April 8, 2018

மரங்கள்

மரங்கள் ...
இன்னிக்கு நம்ம google doodle ஞாபகப் படுத்தின முக்கியமான நாள்.
45 th anniversary of chipko movement.
இது 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கினாலும், 1973 -74 ல் உத்தராகண்ட் மாநிலத்தில் பெண்கள் நடத்திய போராட்டம் மூலமே பலராலும்.அறியப்பட்டது.
மரங்களை வெட்ட ஆட்கள் வந்தபோது, பெண்கள் எல்லாரும் கைகோர்த்து மரத்தை சுற்றி நின்று,ஒரு தீவிரத்துடன் ஒளி படைத்தை கண்ணும் உறுதி கொண்ட நெஞ்சமும் கொண்டு , எங்களை கொன்றுவிட்டு இந்த மரங்களை வெட்டுங்கள் என்று அச்சம் பயம் எதுவுமின்றி எதிர்த்து நின்று, வெற்றியும் பெற்றனராம்.
நான் உத்தராகண்டில் இருந்த போது, அங்கு வீடு சிறுசோ,பெரிசோ..தோட்டம் அத்தனை பெரிசா அழகா எல்லார் விட்டிலும் இருக்கும்.
குழந்தைகள் மாதிரி அத்தனை வாஞ்சையுடன் பராமரிப்பார்கள்.
எத்தனை வகை மரங்கள் ,பூக்கள், கனிகள்.
பருவத்துக்கேற்றபடி அவை சொல்லித் தந்த பாடம்.

ஆயிரம் வசதிகள் இருந்தும்..அரை பரீட்சையோ மு பரீட்சை லீவு விட்டால் முதல்ல போக துடிக்கும் இடம் எது?
எங்கே மரம்,செடி,கொடி இருக்கோ அங்கே தானே?

கேபிள் ஒயருக்கு இடஞ்சலா இருக்கா..உடனே வெட்டு மரத்தை..
நாலு வழி,ஆறு வழி சாலை போடணுமா..சாய்த்து விடு மரத்தை
மெட்ரோ வரணுமா..மரத்தை வெட்டு..
இப்படி ஓங்கின கை இன்னும் ஓங்கியே இருக்க..
மழைக்கும் காற்றுக்கும் நீருக்கும் நாம் ஏங்கித் தவிக்கும் காலம் இப்போது..
தரு என்கிறொம்..
தரை மட்டமாக்குகிறோம்.

சோலைகளெல்லாம்..நெடுஞ்
சாலையா இப்போ மாறியாச்சு
கொடியும் செடியும் மரமுமிங்கே
கோடாலிக்கு இரையாச்சு
கான்க்ரீட் காலன் வந்ததுமே
காணாமல் போச்சே மரமெல்லாம்
அரச மரத்தடி அமர்ந்தோனே
அடுத்த தலைமுறை மக்களுக்கு
ஏட்டில் மட்டுந்தானா..
நெட்டை குட்டை மரமெல்லாம்..
மரம் வளர்ப்போம்.
மனிதம் காப்போம்.



No comments: