Sunday, February 26, 2023

கார்' கட்டு

 Ganesh Bala sir.

நானும் முயன்றேன் இந்தப் படத்துக்கு ஒரு கதை.


'கார்' கட்டு


...(சிறுகதை)


' லோகு..எங்கடி போய்த் தொலைஞ்சான் உன் புள்ளையாண்டான் இன்னிக்கும்? மாப்பிளை அழைப்புக்கு இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு ' சாமிநாதன் போட்ட சத்தம்  கேட்டு ஓடிவந்தாள் பட்டு மாமி 

' 'வந்துடுவாண்ணா.. ரோகு என்கிட்ட சொல்லிட்டு தான் போயிருக்கான்.ஏன் இப்படி கத்தி ஊரைக் கூட்டறேள்னு ' மாமா வாயை அடைத்தாள்.


" ஆமாம்டி..அவன் சரியான 'ரோகு' தான். மாமாவின் கோபம் தலைக்கேறியது.


மாமிக்கு 'ல' வராது. "எர்ராமே"..சாரி..சாரி..எல்லாமே "ர' தான்.


லோகு என்ற லோகநாதன் தன் அத்தை பெண்ணு சுதாவுடன் கடைசி நிமிஷ மேக்கப்புக்காக பார்லர் போயிருந்தான். 

வெளியே வந்து சுதாவைத் தேடியவனை நாலு குண்டர்கள் அலாக்காக தூக்கி...சுதாவுடைய சிவப்பு நிறக் காரின் ரூஃபில் போட்டு கட்ட ஆரம்பித்தனர்.

"என்னடா நடக்குது இங்கே..சுதா.. சுதா ..எங்கே இருக்கே..என்னை காப்பாத்து..காப்பாத்துனு அவன் கத்தலை காரின் ஸ்டியரிங்கில் ஸ்டைலாக உட்கார்ந்தபடி ரசித்துக் கொண்டிரருந்தாள் சுதா..


கார் மெதுவாக நகர ஆரம்பித்தது. பஸ்ஸிலும் பைக்கிலும் போவோர் வருவோர் எல்லாம் ஃபோட்டோ எடுக்க, லோகு ஒரு லோக்கல் ஹீரோ போல ஊர்வலம் வந்து கொண்டிருந்தான்.


' ஜானவாச கார்ல போக வேண்டியவனை இப்படி ஊர்வலமா இழுத்துண்டு போறியே ..சுதா நீ நன்னா இருப்பியா என்று அவன் குரல் ஹாரன்கள் சத்தத்தில் யாருக்கும் கேட்கவே இல்லை.


பஸ்ஸிலேர்ந்து இந்தக் கண்றாவியைப் பார்த்த.சாமிநாதனின் ஒண்ணு விட்ட மாது மாமா..' டேய் சாமிநாதா....உன் பிள்ளையாண்டான் ஜானவாசம் இப்படி நடத்தப் போறேனு சொல்லவே இல்லையேனு ஃபோனில் விஷயத்தை சொல்ல..

ட்ராஃபிக்கில் மாட்டி இருந்த காரை நோக்கி கொஞ்ச நேரத்தில் சாமிநாதன் பட்டு மாமி , விச்சு சித்தப்பா, அங்கிச்சி சித்தினு படையே கிளம்பி வந்து ரோட் ரோக்கோ பண்ண ஆரம்பித்தார்கள்.


"ஏண்டி சுதா..இப்படி செய்ய எப்படிடி உனக்கு மனசு வந்தது..உங்கம்மா ஸ்தானத்திலேர்ந்து பார்த்துக்கற எனக்கு ..நீ செய்யற உபகாரமா இது' ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள் பட்டு மாமி.

 '  ஸ்டாப் ஸ்டாப்..நான் என்ன மாமி தப்பு பண்ணேன்..நீங்க தானே ரோகுக்கு ' 'கார்'கட்டு போட்டா எல்லாம் சரியாகிடும்னு சொன்னேள்..அதான் அவன் கல்யாணத்துக்கு முன்னாடி உங்க ஆசையை நிறைவேத்திடலாம்னு மாஸ்டர் ப்ளான் போட்டு .உஸ் அப்பா....அவள் தொடரவும்..


சுற்றியிருந்த எல்லாரும் கொல்லென்று சிரித்தே விட்டார்கள்..

பின்ன என்ன '#கால்கட்டு போட்டா சரியாகிடும்னு சொல்ல வேண்டியதை 'ல' வராத பட்டு மாமி #கார்_கட்டு போட்டா சரியாகிடும்னு சொன்னால்..பாவம் சுதா என்ன செய்வாள்.


அவள் வெகுளித்தனத்தை சொல்லிச் சிரித்தபடி கும்பல் கல்யாண மண்டபத்தை நோக்கி கலைய ஆரம்பித்தது. 

கட்டை அவிழ்த்து வெளியே வந்து சுதாவை ஒரு லுக்  விட்டபடி உள்ளே போனான் லோகு.


 ' ஆசை வார்த்தை காட்டி என்னை ஏமாத்தி இப்போ பெரிய இடம் கிடைச்சுதுனு வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கபோறயா நீ....

'ரோகு' ..உன் அம்மா உன்னை கூப்பிடறது சரிதாண்டா..என் ப்ளான் சக்ஸஸ்.

நடுத்தெருவில உன்னை கட்டிப் போட்டு.இழுத்துண்டு வந்தேன் பாரு..உனக்கு கண்டிப்பா புரிஞ்சிருக்கும்.


மண்டபத்தின் உள்ளே நுழைந்தவளின் கன்னத்தை கிள்ளி.பலரும் நமுட்டுச் சிரிப்புடன் வரவேற்றனர் #அசடு_அசடு ' என்று.

காந்தி தாத்தா..

 ப்ராஜக்ட்  மக்களோடு..

படபடக்கும் குரலில்

பீட்டர் விட்டபடி.. ஒருத்தர்.


போகாதே..அங்கே..

பொழுது போகலையா உனக்குனு

பிள்ளையை விரட்டும் 

பெங்காலி அம்மணி..


வடா பாவ் இல்லாமல் 

வயிறு ரொம்புமா..

வடையாம்..வடை..

வெடிக்கிறார் ..மும்பைக்காரர்..


தண்ணியாக் குடுத்தாலும்..

தரமாக் கொடுக்கலாமே..

தமிழ்நாட்டுக் காரி நான்..


ஏதேதோ புலம்பல்கள்..


எதுவும் எனக்கில்லை என்று..


விளம்பரத்தில் ..அவர் வார்த்தைகளோடு

வெள்ளந்தியாய் சிரித்துக் கொண்டு..


காந்தி தாத்தா..

Saturday, February 25, 2023

அம்மா கை மணம்..சும்மாவா😂

 "நான் எவ்வளவு try பண்ணாலும் .நீ பண்ற டேஸ்ட் வர மாட்டேங்கறது ம்மா.."😁


பொண்ணு இப்படி சொல்லும் போது..

சொக்கிப் போகாத அம்மா உண்டா..?


அதான். ..ரவா உப்புமா பண்ணிக் கொடுத்துட்டேன்..


அம்மா கை மணம்..சும்மாவா😂

Wednesday, February 22, 2023

ஒரு சின்ன மூடியா..நம் mood ஐ ஆஃப் செய்வது?

 ஒரு சின்ன மூடியா..நம் mood ஐ ஆஃப் செய்வது?


வேலையெல்லாம் முடிச்சு கதவை சாத்திட்டு வந்த நேரம் ..காலிங் பெல் கூப்பிட்டது.

எதிர்த்த வீட்டு மாமி தான். 

" வாங்க உள்ளே ' நான் சொல்ல..

ஒண்ணுமில்லை நேத்திக்கு ஒரு " veg cutter ' வாஙிண்டு வந்தேன் .எங்க சரஸு சொன்னாள்  உன் கிட்டயும் இதே மாடல் தான் இருக்காமே .எப்படி use பண்றதுனு கொஞ்சம்.சொல்லேன் என்றார்.


ஆமாம் same தான். சொல்லிட்டு டெமொ செய்து காண்பிக்க ஆரம்பித்தேன்.

"இது கதக்கு..இது பரத நாட்டியம்'னு சலங்கை ஒலி ஸ்டைலில் சொல்லிக் கொடுத்து முடிச்சாச்சு.


காய் கட் பண்ற blade , தயிர் கடையறது இருக்கு..ஒரு மூடி இருக்குமே எங்கனு கேட்டேன்.


மூடியா..அப்படி ஒண்ணு இருக்கறதையே மூடி மறைச்சுட்டானே அந்த கடைக்காரன்னு  மாமி ஒரே டென்சன்.


எதுக்கும் அதோட டப்பாவில் இருக்கும் செக் பண்ணுங்கோனு சொல்லி மாமி check out ஆனப்பறம் வந்து தூங்கிட்டேன்.


விடிகாலையில் பால் கவரை எடுக்க கதவை திறந்த்போது கோலம் போட்டுக் கொண்டிருந்த மாமி..' அதையேன் கேக்கற போ..மூடி இல்லவே இல்லை இந்த மாடலுக்கு' என்று சொல்லவும் எனக்கு முதலில் தலையும் புரியல வாலும் புரியல.

பையெல்லாம் கூட தேடிப் பார்த்துட்டேன் ..என்று சொல்லிட்டு 'தூங்காத கண்ணென்று ஒன்று' நு ராத்திரி முழுதும் மூடியை தேடிய களைப்போடு மாமி உள்ளே போக..


அட ராமா..ஒருத்தரோட நிம்மதியான ராத்தூக்கம் கெடுத்த பாவி ஆகிட்டேனோனு மனசுக்கு கொஞ்சம் ஆகிவிட்டது..


நான் நல்லவ தான்ப்பா ..moment

Wednesday, February 15, 2023

காது_கொடுத்துக்_கேட்டேன்_ஆஹா_ஹலோ_ஹலோ_சத்தம்

 #காது_கொடுத்துக்_கேட்டேன்_ஆஹா_ஹலோ_ஹலோ_சத்தம்..


ஹலோ டாடி ..எப்போ வருவீங்க..உங்க பாஸ் ஏன் லீவு தரலை.. இழுத்து இழுத்து பேசும் குட்டிப் பொண்ணு..

ஃபோனை பிடுங்கியபடி 

ஹலோ என்னங்க அந்த தயிர் வெளியே இருக்கு . ஃப்ரிஜ்ல வெச்சுடுங்க.. அவள் அம்மா


ஹலோ...ஹலோ..மத்யானம் விசாகா ஹரி கேட்டு முடிச்சுட்டு கிளம்பியாச்சு..என்னமா பிச்சு உதறா

தாத்தா ஒருத்தர் .


ஹலோ..ஹலோ...என் லாப்டாப்பில் கீ போர்டு வேல பண்ணலை சார். so எல்லாமே வாட்ஸப்பு மெசஞ்சர் தான்.. ஒரு tech savvy.


ஹலோ..ஹலோ..40 பேர் target. இன்னிவரைக்குமே 167 பேர் ஆன்லைன் payment பண்ணிட்டாங்க..

சக்ஸஸ் ..சக்ஸஸ் ..சீட்டு கம்பெனி காரர் போலருக்கு..


ஹலோ..சொல்றதைக் கேளு ராத்திரிக்கு சாப்பாடு வெக்க வேணாம்.

வீட்டு சாப்பாட்டில் விடுதலை ஆன ஒரு மாமா..


ஹலோ ..ஹலோ...நான் சொல்ற steps எல்லாம் நோட் பண்ணிக்கோ அப்போதான் இந்த sum solve பண்ண முடியும்.. பையன் பரீட்சைக்கு on the wheels இலும் கருமமே கண்ணான அப்பா..


ஹலோ..ஹலோ..லக்‌ஷ்மி..நான் தான் பேசறேன்.

நாளைலேர்ந்து வேலைக்கு வந்துடு ..

வலது கரத்துக்கு ரிமைண்டர் கொடுக்கும் என்னை மாதிரி ஒரு பெண்..


இரண்டு மணி நேரமா..இதே மாதிரி ஹலோ ஹலோ ஹலோனு ..என்னை சுத்தி..

earphone போட்டுக்காமல் travel செய்யணும் என்கிற என் பாலிஸி ..

இன்று பல ஹலோக்கள் கேட்கணும்னு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கோ?

Monday, February 13, 2023

சமகாலப்_பாடல்கள்

 #செல்லமே_புதுயுக_சிறுவர்_இலக்கியம்

#சமகாலப்_பாடல்கள்


#தீராத_விளையாட்டுப்_பிள்ளை..

இந்தப் பாடல் பிடிக்காதவர்களே யாரும் கிடையாது.

இந்தப் பாடலை வைத்து ..ஒரு negative ..

ஒரு positive பாடல் எழுதினேன்.


என் பெண் அதைப் படித்துவிட்டு சொன்னாள்..

Negative is the reality..

Positive shows your quality.

So always positivity is eternity..


எழுதியதை..பாட்டாவே படிச்சுட்டயானு உங்க மை.வா கேட்கிறது..


இதோ பாடல்..


தேடினாலும் கிடைக்காத பிள்ளை..

கண்ணன்

குடும்பத்தில் எல்லார்க்கும்  மிகசெல்லப் பிள்ளை.(2)


தின்ன பிஸ்கட் ஒன்று கேட்பான்..பாதி 

பங்கை பிரித்து தன்  தம்பிக்குத் தருவான்..


என்னுலகம் என் குடும்பம் என்பான்..(2)

வீட்டுப்பெரியோரை 

என்றுமே மதித்து  நடப்பான்..(தேடினாலும்)


ஆப்பிலே கேம்ஸை இறக்கி.

.செல்லை.அழ அழச் செய்துமே

பாட்டரியை கரையான்..

ப்ளே ஸ்டேஷன் வேண்டுமென்று கேளான்..(2)

ப்ளே கிரவுண்டில் விளையாட  அடமும் பிடிப்பான்.. (தேடினாலும்)


வாட்ஸப்பில் ஹோம்வொர்க்கும் கேளான்.(2)

தனக்கு தெரிந்ததை முடித்து கைத்தட்டல் பெறுவான்..


பாடங்களை ஒழுங்காகப் படிப்பான்..அவன்

நண்பருக்கும் நாலுமே சொல்லித் தருவான்..(தேடினாலும்)


பள்ளியிலும் செல்லப் பிள்ளை அவன் தான்..(2)

அவன் பண்போடும் பணிவோடும்..

பேரெடுத்து..சிறந்தான்..


 ..நெஞ்சிலே இடமும் பிடிப்பான்....

 நெஞ்சிலே இடமும் பிடிப்பான்..

 துணிவோடு தப்பை தட்டியும் கேட்பான்..

( தேடினாலும்)

அன்புடன்

Akila Ramasami

Wednesday, February 8, 2023

namma_bengaluru_traffic

 #namma_bengaluru_traffic


ஆட்டோ,activa, Audi எல்லாம் ஹாரன் அடித்தபடி நிற்க..

அடிப் பிரதக்ஷணத்தில்

அரைமணியில் வீடு வந்தாச்சு.

Bike க்கு  bye bye ம்

காருக்கு farewellம் கொடுக்கும் காலம்..

தூரமில்லை..வெகு தூரமில்லை..


ரெண்டு,நாலு காலை நம்பறதை விட..

நம்ம கால் தான் நமக்குதவி

சரிதானே

காலம் மாறுமா..நம் வாழ்வு மாறுமா..

 காலம் மாறுமா..நம் வாழ்வு மாறுமா..


வேலைக்குப் போன அம்மாக்கள்

விவரம் தெரியாத பிள்ளைகள்

விளையாடிக் கழிக்குமே அடுத்தவீட்டில்

வினையேதும் ஆனதில்லை அப்போது..

தலைகீழ் எல்லாமாச்சு இப்போது..


முகமூடித் திருடர் போல்

மூடர்கள் வெறிக்கு பயந்து

முகத்தை துணியால் மறைத்தும்

மறைத்தே வீசும் அமிலத்தால்

மங்கிய வாழ்விங்கு ஏராளம்.


ஊருக்கு கிளம்புகிறாள் பெண்ணென்றால்

உள்ளூர பயமும் தொற்றிடுதே

உதறல் எடுத்தே உயிர் போய் வருதே

பேருந்து பயணம் இரவிலென்றால்

அருந்துவதில்லையே தண்ணீரும் இங்கே

அரை வயிற்று உண்வோடு

அடக்கியே செல்லணுமே வீடுவரையில்.


ஊருக்குள் இருக்கையிலே

காருக்குள் போகையிலே

பேசத் துவங்கிடுவாள் அம்மா

பிடுங்கிப் பேசிடுவார் அப்பா

வழித்துணையாய் உரையாடல்

வீடு வந்து இறங்கி்யதும்

விடுவாரே நிம்மதிப் பெருமூச்சு


வயிற்றில் ஓர் நெருப்பு

வயதுப் பெண்...

்வீட்டிலிருந்தால்.

வெளியே சென்றால்..


வருமா ஒரு காலம்..

வெறிச்சென்ற தெருவிலும்

வெளிச்ச மில்லா வீதியிலும்

அச்சமின்றி இவள் நடக்க..

timing

 பள்ளிப் பேருந்து ஓட்டுனருடன் ஒரு பெரிய விவாதம்.

ஏம்ப்பா..'அழைச்சிண்டு' போவேன்னு சொல்லிட்டு இப்படி 'அடைச்சிண்டு' போறியே..

உங்களுக்கு சரியா காதுல விழலனா நானா பொறுப்பு..

#timing

Monday, February 6, 2023

காதல்

 #காதல்

காதல் வந்ததும்..கலாய்க்க ஒரு நண்பர் கூட்டம் இருந்தே ஆகணும்..😃😃😃


நண்பன்1:

கல்லாய் இருந்த எனக்கு

காலும் முளைத்ததே..

❤️ காதலொன்று வந்தபின்னே..❤️😃😃😃😃


எப்படி..கவிதை... கவிதை💪💪💪💪


நண்பன்2;   டேய்..பாட்டில் தொடங்கி..

Battle நடந்து..

"பா"ட்டில்ல முடியாம பார்த்துக்கோப்பா..😄😄😄😄😄😄


#நண்பேன்டா💪💪💪💪💪

Wednesday, February 1, 2023

துணுக்குகள்

 #துணுக்குகள்

மேடை ஏறி முழங்கத் துவங்கின நேரம்

மேடையில் மூட மறந்த மோர் பாத்திரம் நினைவுக்கு வந்ததே..அவளுக்கு..

budget

 budget ..budget..budget..

படுத்துது இன்னிக்கு முழுக்க..

இதுதான் 'உனக்கு எனக்கு 'வரிசையில் என் கடைசி பதிவு.( அப்பாடா..ஆளை விடு)


பட்ஜெட் நானுனக்கு

deficit  நீ எனக்கு


சம்பளக் கவர் நானுனக்கு

பிக்பாக்கெட் நீ யெனக்கு


லைசென்ஸ் நானுனக்கு

life tax நீயெனக்கு


 விதிவிலக்கு(exemption) நானுனக்கு

வரி ஏய்ப்பு (evasion )நீயெனக்கு

 


பொருளா..தாரம்..?என்பவனில்லை நீ

பொருளாதாரம் உயர்த்துபவன் நீ


ஆதாயம் தேடாத பந்தம்

ஆதாரம் வேண்டுமோ என்றும்?

(last line senti)

கண்ணாடி

 போன வருஷம் எழுதினது ...புரட்டிப் பார்க்கிறேன்..


கண்ணாடி


புறக் கண்ணாடி முன் நின்ற வேளை

அகக் கண்ணாடி அழைப்பில்லாமல் 

அங்கே  ஆஜர் ஆகியது..


புறக்கண்ணாடி: நரையும் வந்ததே.. நன்றாக இல்லையே..?

அகக்கண்ணாடி: மனக் கறைகள் மறைவதை அது எடுத்துச் சொல்லுதே..


புறக் கண்ணாடி: கருவளையம் கண்ணில்..??

அகக்கண்ணாடி: கண்மணி களுக்காக  நீ விழித்த கதை சொல்லுமே.


புறக்கண்ணாடி: சுருக்கம் ஏனோ..?

அகக்கண்னாடி: சுருங்கி.. பின் விரிவதே வாழ்க்கை ..சுருக்கங்கள்..சுவடுகள்.


புறக்கண்ணாடி: பல்லெல்லாம் போச்சே..

அகக்கண்ணாடி: பேசினால் இனிமே காற்று மட்டும் வரட்டும் . கடுஞ்சொல் வேண்டாமே..!


புறக்கண்ணாடி: பெருத்த தொப்பையும் தொந்தியும் ..இதுக்கென்ன பதில்..

அகக்கண்ணாடி: வறுத்தினாயே..இந்த சின்னவயிற்றை .அபாயச்சங்கிது அடங்கலனா..ஊதிடுவேன் உண்மையிலே..


புறமும் அகமும் பட்டிமன்றம் நடத்த..

புரியணும் ஓர் உண்மை.

வயது ஏற..

ஒளி வருமே..

கண்ணில் ..வருமொளி

கருத்தில் தெளிவிருந்தால்..

முகத்திலே ..வருமொளி

முதிர்ச்சியின் ரேகைகளால்..


செயல் சொல் எண்ணம்

செப்பிடனும் சிறப்பாக..

அக அழகு ஆட்சியிலமர

புற அழகு கூடும் என்றும்.

exam....நல்ல exam..

 exam....நல்ல exam..


அப்ளிகேஷன் கொடுத்த என்னை ஏற இறங்க பார்த்தபடி..கவுண்டரில் இருந்தவர் .

மேடம்..அங்க study material கொடுப்பாங்க வாங்கிட்டு போங்க என்றார். ஒரு குட்டி booklet கொடுத்தாள் அங்கே இருந்த பணிப்பெண்.புரட்டி பார்த்தேன்.. அதான் எனக்கு தெரியுமேனு எப்பவும் போல மண்டைகனம்.

விழுந்து விழுந்து படிக்க நேரமில்லாததால் ஒரு ரவுண்டு அடிச்சு படிச்சேன்.

பரீட்சை நாள்..ஹாலுக்கு.போறதுக்கு முன்னாடி குச்சி ஒண்ணு கையில் வெச்சுண்டு குச்சியா ஒரு பைய(ன்)ர் revision கொடுத்தார். 15 க்கு 10  மார்க் வாங்கினாதான் பாஸ். எங்க reputation எல்லாரும் காப்பாத்தணும்னு வேற சொல்லிட்டு போய்ட்டார்.பரீட்சை ஹாலுக்கு போறதுக்கு முன்னாடி டாகுமெண்ட் சரி பார்த்தல். என் அப்ளிகேஷன் நம்பரப் போட்டதும் பளிச்சுனு நான்.. ஃபோட்டோஷாப்பில் அழகாக்கின ஃபோட்டோ வர..அடுத்ததாக..identity verification. aadhaar நம்பர் கொடுக்க..

அசமஞ்சம் மாதிரி ஒரு ஃபோட்டோ வர..அங்கே இருந்த கம்ப்யூட்டர் தூக்கில் தொங்கிடுத்து..அதான் hang ஆகிடுத்து.ஒரு பத்து நிமிஷம்..பாவம் அந்த BPO பைய்யன்..

ஒரு வழியா..நீயா..இது நீயானு அது பல தடவை மேல கீழ பார்த்துட்டு ஓகே பண்ண..

அங்கே இருந்த சிப்பந்தி..'நெக்ஸ்ட் பாட்ச்ல தான் போகணும் நீங்க..போய் உட்கார்ந்துக்கோங்க ' என்றாள். நானும் பொழுது போகாமல் வாட்ஸப்பில் மொக்கை போட..பக்கத்தில் ஒரு இளவயசுப் பையன் சீரியஸா mock test எழுதிண்டிருந்தான்..ஓஹோ..இதுக்கெல்லாம் கூட இப்படி வெப்சைட் இருக்கானு ஆச்சரியத்தில் நானும் .. உடனே கூகுள் search பண்ண..நிறைய உதவிக்கரமிருக்க..

உடனே ஆரம்பிச்சேன் நானும் ரிவிஷன். முதல் டெஸ்ட் 2 மார்க்கு..இரண்டாவதில் கொஞ்சம் முயற்சி பண்ண 5 மார்க்.

அப்போ அங்கே வந்த அந்த instructor பையர்..10 எடுத்தாதான் பாஸ்..இல்ல பூட்ட கேஸுனு என்ன பார்த்து கேலியா சிரிக்க..அங்கே என் ரோல் நம்பர் கூ்ப்பிட உள்ளே போனேன். ரூம் பூரா கம்ப்யூட்டர்கள் என்னைப் பார்த்து கண்ண்டிச்சது.. login and password வாங்கிக்கோங்க..உங்களுக்கு ஒரு PC allot ஆகுமென்றார் invigilator.

இஷ்ட தெய்வமெல்லாம் வேண்டியாச்சு.

கொடுத்த கணினி முன் உட்கார்ந்தாச்சு..

ready steady po ..நான் திரு திருனு முழிக்க..பக்கத்தில் வந்து நின்ற invigilator.. டி..டி..டி..முணுமுனுக்க..நான் அவரை.. 'இது என்ன என்னை மரியாதையில்லாமல் டி.டி..நு சொல்றாரேனு ஒரு முரை  விட..

மேடம்..இதுக்கு option D answer..tick maadu நு என் தலையில் கொட்ட..ஐயோ நன்னி சாரேனுசொல்றதுக்குள்ள.அடுத்த கேள்வி திரையில்..வேர்த்து விறுவிறுத்து கேள்வி படிக்க..எல்லா ஆப்ஷனுமே கரெக்டா இருக்கே..dip dip dip ..my blue ship போட்டு..பதிலை டிக்கடிக்க..என் score சென்னை வெயில் வேகத்தில் ஏறிடுத்து..ஆஹா..9 வாங்கியாச்சு..

இன்னும் ஒரே.கேள்வி.ஒரே கேள்வினு பாட்டு ஓட..ஆஹா.. பத்தாவது பதில் பட்டுனு தப்புனு சொல்லிடுத்து அந்த கம்ப்யூட்டர். பதினொன்று.. பன்னிரண்டு..பதிமூணு..பதினாலு..பதினைஞ்சு..ஆல் கரெக்ட்னு விடிலடிக்க..

14/15..ஆத்தா நான் பாஸாயிட்டேனு கூவ..என் மொபைலில் டொடங்னு வந்து விழுந்த மெசேஜ்..your learner's licence approved என்றபடி..

சாரதி வேலைக்கு. secondinnings..ஆரம்பம்.

அரைக் கிழம் ஆறு மாசம் கழிச்சுதான் ஆகப் போறேன்..அதுக்கு இப்பவே arrangement எல்லாம் ஆரம்பம்.

முதல்ல வாங்கின லைசென்ஸ் பீகாரில் என் cousin என்னோட ஒரே ஃபோட்டோவை வெச்சு வாங்கினான்..

இரண்டாவது மத்யப்ரதேசத்தில் காரும் ஓட்டணும்னு..வண்டியும் இல்லாம ஓட்டியும் காண்பிக்காம..வாங்கினது..

இப்போ..காலம் மாறிப் போச்சு..கறார் இப்போ எல்லாரும்.( renew பண்ண்லாம்னா no objection certificate  வேணுமாம். அதுக்கு புதுசே வாங்கிடுனு அட்வைஸ் கிடைக்க..

அரசாங்கமே..எங்க மாதிரி நாடோடிகளுக்கு கொஞ்சம் நல்ல வழி காட்டுப்பானு ப்ராத்தனையோடு..)

 அடுத்தது ஓட்டிக் காண்பிச்சாதான் முழுசா லைசென்ஸ் கிடைக்கும். 

விசா வினாயகர் மாதிரி..லைசென்ஸ் வினாயகரை எங்கிருக்காரோ தெரில.அந்த தொப்பையுள்ள RTO officer தான் அருள் புரியணும்..இல்லனா.சுத்த வெச்சு சுளுக்கெடுப்பாராம்

எட்டு போட வெச்சு தட்டு தடுமாற வைப்பாராம்..

இப்பவே விசாரிச்சு வெக்கணும்..அவருக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்னு..!!!

Contrast ..attracts..

 சாமந்திப்பூ ஒரு டப்பாவில்..

🌹 ரோஜாக்கள் ஒரு டப்பாவில்..


சாமந்தி மேல்  ஒரு ரோஜாவையும்..

ரோஜாவின் மேல் ஒரு சாமந்தியும் வைக்க..


இன்னும் அழகு கூடியது..


Contrast ..attracts..


இந்தக் கலரில் புடவை...ஆஹா..😄😄😄😄