Ganesh Bala sir.
நானும் முயன்றேன் இந்தப் படத்துக்கு ஒரு கதை.
'கார்' கட்டு
...(சிறுகதை)
' லோகு..எங்கடி போய்த் தொலைஞ்சான் உன் புள்ளையாண்டான் இன்னிக்கும்? மாப்பிளை அழைப்புக்கு இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு ' சாமிநாதன் போட்ட சத்தம் கேட்டு ஓடிவந்தாள் பட்டு மாமி
' 'வந்துடுவாண்ணா.. ரோகு என்கிட்ட சொல்லிட்டு தான் போயிருக்கான்.ஏன் இப்படி கத்தி ஊரைக் கூட்டறேள்னு ' மாமா வாயை அடைத்தாள்.
" ஆமாம்டி..அவன் சரியான 'ரோகு' தான். மாமாவின் கோபம் தலைக்கேறியது.
மாமிக்கு 'ல' வராது. "எர்ராமே"..சாரி..சாரி..எல்லாமே "ர' தான்.
லோகு என்ற லோகநாதன் தன் அத்தை பெண்ணு சுதாவுடன் கடைசி நிமிஷ மேக்கப்புக்காக பார்லர் போயிருந்தான்.
வெளியே வந்து சுதாவைத் தேடியவனை நாலு குண்டர்கள் அலாக்காக தூக்கி...சுதாவுடைய சிவப்பு நிறக் காரின் ரூஃபில் போட்டு கட்ட ஆரம்பித்தனர்.
"என்னடா நடக்குது இங்கே..சுதா.. சுதா ..எங்கே இருக்கே..என்னை காப்பாத்து..காப்பாத்துனு அவன் கத்தலை காரின் ஸ்டியரிங்கில் ஸ்டைலாக உட்கார்ந்தபடி ரசித்துக் கொண்டிரருந்தாள் சுதா..
கார் மெதுவாக நகர ஆரம்பித்தது. பஸ்ஸிலும் பைக்கிலும் போவோர் வருவோர் எல்லாம் ஃபோட்டோ எடுக்க, லோகு ஒரு லோக்கல் ஹீரோ போல ஊர்வலம் வந்து கொண்டிருந்தான்.
' ஜானவாச கார்ல போக வேண்டியவனை இப்படி ஊர்வலமா இழுத்துண்டு போறியே ..சுதா நீ நன்னா இருப்பியா என்று அவன் குரல் ஹாரன்கள் சத்தத்தில் யாருக்கும் கேட்கவே இல்லை.
பஸ்ஸிலேர்ந்து இந்தக் கண்றாவியைப் பார்த்த.சாமிநாதனின் ஒண்ணு விட்ட மாது மாமா..' டேய் சாமிநாதா....உன் பிள்ளையாண்டான் ஜானவாசம் இப்படி நடத்தப் போறேனு சொல்லவே இல்லையேனு ஃபோனில் விஷயத்தை சொல்ல..
ட்ராஃபிக்கில் மாட்டி இருந்த காரை நோக்கி கொஞ்ச நேரத்தில் சாமிநாதன் பட்டு மாமி , விச்சு சித்தப்பா, அங்கிச்சி சித்தினு படையே கிளம்பி வந்து ரோட் ரோக்கோ பண்ண ஆரம்பித்தார்கள்.
"ஏண்டி சுதா..இப்படி செய்ய எப்படிடி உனக்கு மனசு வந்தது..உங்கம்மா ஸ்தானத்திலேர்ந்து பார்த்துக்கற எனக்கு ..நீ செய்யற உபகாரமா இது' ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள் பட்டு மாமி.
' ஸ்டாப் ஸ்டாப்..நான் என்ன மாமி தப்பு பண்ணேன்..நீங்க தானே ரோகுக்கு ' 'கார்'கட்டு போட்டா எல்லாம் சரியாகிடும்னு சொன்னேள்..அதான் அவன் கல்யாணத்துக்கு முன்னாடி உங்க ஆசையை நிறைவேத்திடலாம்னு மாஸ்டர் ப்ளான் போட்டு .உஸ் அப்பா....அவள் தொடரவும்..
சுற்றியிருந்த எல்லாரும் கொல்லென்று சிரித்தே விட்டார்கள்..
பின்ன என்ன '#கால்கட்டு போட்டா சரியாகிடும்னு சொல்ல வேண்டியதை 'ல' வராத பட்டு மாமி #கார்_கட்டு போட்டா சரியாகிடும்னு சொன்னால்..பாவம் சுதா என்ன செய்வாள்.
அவள் வெகுளித்தனத்தை சொல்லிச் சிரித்தபடி கும்பல் கல்யாண மண்டபத்தை நோக்கி கலைய ஆரம்பித்தது.
கட்டை அவிழ்த்து வெளியே வந்து சுதாவை ஒரு லுக் விட்டபடி உள்ளே போனான் லோகு.
' ஆசை வார்த்தை காட்டி என்னை ஏமாத்தி இப்போ பெரிய இடம் கிடைச்சுதுனு வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கபோறயா நீ....
'ரோகு' ..உன் அம்மா உன்னை கூப்பிடறது சரிதாண்டா..என் ப்ளான் சக்ஸஸ்.
நடுத்தெருவில உன்னை கட்டிப் போட்டு.இழுத்துண்டு வந்தேன் பாரு..உனக்கு கண்டிப்பா புரிஞ்சிருக்கும்.
மண்டபத்தின் உள்ளே நுழைந்தவளின் கன்னத்தை கிள்ளி.பலரும் நமுட்டுச் சிரிப்புடன் வரவேற்றனர் #அசடு_அசடு ' என்று.
No comments:
Post a Comment