Wednesday, February 1, 2023

exam....நல்ல exam..

 exam....நல்ல exam..


அப்ளிகேஷன் கொடுத்த என்னை ஏற இறங்க பார்த்தபடி..கவுண்டரில் இருந்தவர் .

மேடம்..அங்க study material கொடுப்பாங்க வாங்கிட்டு போங்க என்றார். ஒரு குட்டி booklet கொடுத்தாள் அங்கே இருந்த பணிப்பெண்.புரட்டி பார்த்தேன்.. அதான் எனக்கு தெரியுமேனு எப்பவும் போல மண்டைகனம்.

விழுந்து விழுந்து படிக்க நேரமில்லாததால் ஒரு ரவுண்டு அடிச்சு படிச்சேன்.

பரீட்சை நாள்..ஹாலுக்கு.போறதுக்கு முன்னாடி குச்சி ஒண்ணு கையில் வெச்சுண்டு குச்சியா ஒரு பைய(ன்)ர் revision கொடுத்தார். 15 க்கு 10  மார்க் வாங்கினாதான் பாஸ். எங்க reputation எல்லாரும் காப்பாத்தணும்னு வேற சொல்லிட்டு போய்ட்டார்.பரீட்சை ஹாலுக்கு போறதுக்கு முன்னாடி டாகுமெண்ட் சரி பார்த்தல். என் அப்ளிகேஷன் நம்பரப் போட்டதும் பளிச்சுனு நான்.. ஃபோட்டோஷாப்பில் அழகாக்கின ஃபோட்டோ வர..அடுத்ததாக..identity verification. aadhaar நம்பர் கொடுக்க..

அசமஞ்சம் மாதிரி ஒரு ஃபோட்டோ வர..அங்கே இருந்த கம்ப்யூட்டர் தூக்கில் தொங்கிடுத்து..அதான் hang ஆகிடுத்து.ஒரு பத்து நிமிஷம்..பாவம் அந்த BPO பைய்யன்..

ஒரு வழியா..நீயா..இது நீயானு அது பல தடவை மேல கீழ பார்த்துட்டு ஓகே பண்ண..

அங்கே இருந்த சிப்பந்தி..'நெக்ஸ்ட் பாட்ச்ல தான் போகணும் நீங்க..போய் உட்கார்ந்துக்கோங்க ' என்றாள். நானும் பொழுது போகாமல் வாட்ஸப்பில் மொக்கை போட..பக்கத்தில் ஒரு இளவயசுப் பையன் சீரியஸா mock test எழுதிண்டிருந்தான்..ஓஹோ..இதுக்கெல்லாம் கூட இப்படி வெப்சைட் இருக்கானு ஆச்சரியத்தில் நானும் .. உடனே கூகுள் search பண்ண..நிறைய உதவிக்கரமிருக்க..

உடனே ஆரம்பிச்சேன் நானும் ரிவிஷன். முதல் டெஸ்ட் 2 மார்க்கு..இரண்டாவதில் கொஞ்சம் முயற்சி பண்ண 5 மார்க்.

அப்போ அங்கே வந்த அந்த instructor பையர்..10 எடுத்தாதான் பாஸ்..இல்ல பூட்ட கேஸுனு என்ன பார்த்து கேலியா சிரிக்க..அங்கே என் ரோல் நம்பர் கூ்ப்பிட உள்ளே போனேன். ரூம் பூரா கம்ப்யூட்டர்கள் என்னைப் பார்த்து கண்ண்டிச்சது.. login and password வாங்கிக்கோங்க..உங்களுக்கு ஒரு PC allot ஆகுமென்றார் invigilator.

இஷ்ட தெய்வமெல்லாம் வேண்டியாச்சு.

கொடுத்த கணினி முன் உட்கார்ந்தாச்சு..

ready steady po ..நான் திரு திருனு முழிக்க..பக்கத்தில் வந்து நின்ற invigilator.. டி..டி..டி..முணுமுனுக்க..நான் அவரை.. 'இது என்ன என்னை மரியாதையில்லாமல் டி.டி..நு சொல்றாரேனு ஒரு முரை  விட..

மேடம்..இதுக்கு option D answer..tick maadu நு என் தலையில் கொட்ட..ஐயோ நன்னி சாரேனுசொல்றதுக்குள்ள.அடுத்த கேள்வி திரையில்..வேர்த்து விறுவிறுத்து கேள்வி படிக்க..எல்லா ஆப்ஷனுமே கரெக்டா இருக்கே..dip dip dip ..my blue ship போட்டு..பதிலை டிக்கடிக்க..என் score சென்னை வெயில் வேகத்தில் ஏறிடுத்து..ஆஹா..9 வாங்கியாச்சு..

இன்னும் ஒரே.கேள்வி.ஒரே கேள்வினு பாட்டு ஓட..ஆஹா.. பத்தாவது பதில் பட்டுனு தப்புனு சொல்லிடுத்து அந்த கம்ப்யூட்டர். பதினொன்று.. பன்னிரண்டு..பதிமூணு..பதினாலு..பதினைஞ்சு..ஆல் கரெக்ட்னு விடிலடிக்க..

14/15..ஆத்தா நான் பாஸாயிட்டேனு கூவ..என் மொபைலில் டொடங்னு வந்து விழுந்த மெசேஜ்..your learner's licence approved என்றபடி..

சாரதி வேலைக்கு. secondinnings..ஆரம்பம்.

அரைக் கிழம் ஆறு மாசம் கழிச்சுதான் ஆகப் போறேன்..அதுக்கு இப்பவே arrangement எல்லாம் ஆரம்பம்.

முதல்ல வாங்கின லைசென்ஸ் பீகாரில் என் cousin என்னோட ஒரே ஃபோட்டோவை வெச்சு வாங்கினான்..

இரண்டாவது மத்யப்ரதேசத்தில் காரும் ஓட்டணும்னு..வண்டியும் இல்லாம ஓட்டியும் காண்பிக்காம..வாங்கினது..

இப்போ..காலம் மாறிப் போச்சு..கறார் இப்போ எல்லாரும்.( renew பண்ண்லாம்னா no objection certificate  வேணுமாம். அதுக்கு புதுசே வாங்கிடுனு அட்வைஸ் கிடைக்க..

அரசாங்கமே..எங்க மாதிரி நாடோடிகளுக்கு கொஞ்சம் நல்ல வழி காட்டுப்பானு ப்ராத்தனையோடு..)

 அடுத்தது ஓட்டிக் காண்பிச்சாதான் முழுசா லைசென்ஸ் கிடைக்கும். 

விசா வினாயகர் மாதிரி..லைசென்ஸ் வினாயகரை எங்கிருக்காரோ தெரில.அந்த தொப்பையுள்ள RTO officer தான் அருள் புரியணும்..இல்லனா.சுத்த வெச்சு சுளுக்கெடுப்பாராம்

எட்டு போட வெச்சு தட்டு தடுமாற வைப்பாராம்..

இப்பவே விசாரிச்சு வெக்கணும்..அவருக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்னு..!!!

No comments: