#செல்லமே_புதுயுக_சிறுவர்_இலக்கியம்
#சமகாலப்_பாடல்கள்
#தீராத_விளையாட்டுப்_பிள்ளை..
இந்தப் பாடல் பிடிக்காதவர்களே யாரும் கிடையாது.
இந்தப் பாடலை வைத்து ..ஒரு negative ..
ஒரு positive பாடல் எழுதினேன்.
என் பெண் அதைப் படித்துவிட்டு சொன்னாள்..
Negative is the reality..
Positive shows your quality.
So always positivity is eternity..
எழுதியதை..பாட்டாவே படிச்சுட்டயானு உங்க மை.வா கேட்கிறது..
இதோ பாடல்..
தேடினாலும் கிடைக்காத பிள்ளை..
கண்ணன்
குடும்பத்தில் எல்லார்க்கும் மிகசெல்லப் பிள்ளை.(2)
தின்ன பிஸ்கட் ஒன்று கேட்பான்..பாதி
பங்கை பிரித்து தன் தம்பிக்குத் தருவான்..
என்னுலகம் என் குடும்பம் என்பான்..(2)
வீட்டுப்பெரியோரை
என்றுமே மதித்து நடப்பான்..(தேடினாலும்)
ஆப்பிலே கேம்ஸை இறக்கி.
.செல்லை.அழ அழச் செய்துமே
பாட்டரியை கரையான்..
ப்ளே ஸ்டேஷன் வேண்டுமென்று கேளான்..(2)
ப்ளே கிரவுண்டில் விளையாட அடமும் பிடிப்பான்.. (தேடினாலும்)
வாட்ஸப்பில் ஹோம்வொர்க்கும் கேளான்.(2)
தனக்கு தெரிந்ததை முடித்து கைத்தட்டல் பெறுவான்..
பாடங்களை ஒழுங்காகப் படிப்பான்..அவன்
நண்பருக்கும் நாலுமே சொல்லித் தருவான்..(தேடினாலும்)
பள்ளியிலும் செல்லப் பிள்ளை அவன் தான்..(2)
அவன் பண்போடும் பணிவோடும்..
பேரெடுத்து..சிறந்தான்..
..நெஞ்சிலே இடமும் பிடிப்பான்....
நெஞ்சிலே இடமும் பிடிப்பான்..
துணிவோடு தப்பை தட்டியும் கேட்பான்..
( தேடினாலும்)
அன்புடன்
Akila Ramasami
No comments:
Post a Comment