காலம் மாறுமா..நம் வாழ்வு மாறுமா..
வேலைக்குப் போன அம்மாக்கள்
விவரம் தெரியாத பிள்ளைகள்
விளையாடிக் கழிக்குமே அடுத்தவீட்டில்
வினையேதும் ஆனதில்லை அப்போது..
தலைகீழ் எல்லாமாச்சு இப்போது..
முகமூடித் திருடர் போல்
மூடர்கள் வெறிக்கு பயந்து
முகத்தை துணியால் மறைத்தும்
மறைத்தே வீசும் அமிலத்தால்
மங்கிய வாழ்விங்கு ஏராளம்.
ஊருக்கு கிளம்புகிறாள் பெண்ணென்றால்
உள்ளூர பயமும் தொற்றிடுதே
உதறல் எடுத்தே உயிர் போய் வருதே
பேருந்து பயணம் இரவிலென்றால்
அருந்துவதில்லையே தண்ணீரும் இங்கே
அரை வயிற்று உண்வோடு
அடக்கியே செல்லணுமே வீடுவரையில்.
ஊருக்குள் இருக்கையிலே
காருக்குள் போகையிலே
பேசத் துவங்கிடுவாள் அம்மா
பிடுங்கிப் பேசிடுவார் அப்பா
வழித்துணையாய் உரையாடல்
வீடு வந்து இறங்கி்யதும்
விடுவாரே நிம்மதிப் பெருமூச்சு
வயிற்றில் ஓர் நெருப்பு
வயதுப் பெண்...
்வீட்டிலிருந்தால்.
வெளியே சென்றால்..
வருமா ஒரு காலம்..
வெறிச்சென்ற தெருவிலும்
வெளிச்ச மில்லா வீதியிலும்
அச்சமின்றி இவள் நடக்க..
No comments:
Post a Comment