Saturday, May 30, 2020

கடிதம்

#எழுதுகிறேன் ஒர் கடிதம்- சீஸன் 3
2 வது கடிதம்

அன்புள்ள ஆனந்திக்கு

அம்மா எழுதுவது. புது ஊர் எப்படி இருக்கு?
கடையெல்லாம் பக்கத்தில் இருக்கா? குழந்தைகளுக்கு புது இடம் பிடிச்சிருக்கா?
ஸ்கூல் போய்ட்டு வருவது வசதியா இருக்கா?
அங்கே குளிர்காலம் முடியட்டும். நானும் அப்பாவும் வந்து கொஞ்ச நாள் இருக்கணும்னு ஆசையா இருக்கு.

நீ இருக்கிற ஊரில் தான் இப்போ நம்ம சுப்பு அத்தை இருக்கா. அங்கே புதுசா , நிறைய வசதியோட முதியோர் இல்லம் ஒண்ணு இருக்கே. அதிலதான் இப்போ இருக்கா. மணி,ரவி ரெண்டு பேரும் அமெரிக்காவில் செட்டில் ஆகியாச்சு. மீனா துபாய்ல் இருக்கா. அத்திம்பேர் தவறிப் போனப்பறம் பாவம் அத்தையை இங்கே பார்த்த்துக்க யாரும் இல்ல. பெரிய வீட்டில் தனியாவும் இருக்க முடியாது. அப்பா கூட இங்கே எங்களோட வந்து இருக்கச் சொன்னா. ஆனா..வீட்டை வித்து எல்லாரும் பங்கு போட்டு இப்போ அத்தையை உங்கூரில் அந்த இல்லத்தில் சேர்த்துட்டு போய் இருக்கா.

நீ அங்கே வந்ததை சொன்னப்போ அத்தை ரொம்ப சந்தோஷப்பட்டா.
உனக்கு இது பிடிக்காதுனு தெரியும். இன்னும் பழசையே நினைச்சு உறவுகளை ..அதுவும் வயசானவர்களை நாம உதாசீனப் படுத்த கூடாது.

அந்த நாள்ல எல்லாரும் அத்தையை சுத்தி இருந்த காலத்தில் உன்னை  'ஒத்தை பொண்ணு நீ..உறவெல்லாம் உனக்கென்ன தெரியும்'னு எதோ ஒரு வேகத்தில் சொன்னதை இன்னும் மனசில வெச்சுண்டு உழப்பிக்க கூடாது. அந்த வார்த்தை அவா சொன்னப்பறம் நீ அத்தை கூட பேசறத நிறுத்தி பல வருஷமாச்சுனு எனக்கு தெரியும்.

தள்ளாமையை விட தனிமை ரொம்ப கொடுமை ஆனந்தி.
பழசெல்லாம் மறந்துட்டு அத்தையை இந்த வாரம் போய் பார். வாய்க்கு பிடிச்சா மாதிரி எதாவது பண்ணி எடுத்துண்டு போ.
முடிஞ்ச போது ஒரு ரெண்டு மூணு நாள் கூட்டி கொண்டு வந்து உன்னோட வெச்சுக்கோ.
நீ போய் பார்த்துட்டு வந்த விவரத்திற்கு கடுதாசு போடு. மாப்பிள்ளையை விசாரித்தாக சொல்.
கண்டிப்பா நீ போவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
அன்புடன்
அம்மா.

Wednesday, May 27, 2020

Madhyamar ..decoction konjcam caution

#MMTUESDAYMEMORIES
#DECOCTION கொஞ்சம்..CAUTION.

எட்டாங்கிளாஸிலேர்ந்து..மேடையிலே எட்டி எட்டிப் பார்த்து சமைச்ச புள்ள நானுங்கோ.

அம்மா ஆபீஸிலேர்ந்து வரதுக்கு எட்டு மணியாகிடும்.
நம்ம டூட்டி அதனால் ராத்திரி குக்கர், ஏதாவது ஒரு காய் பண்ணனும்.

அம்மாவுக்கு சூடா காஃபி குடிக்கணும் . அதனால் டிகாக்‌ஷன் போட்டு வெக்கறதும் வேலை. அம்மாவுக்கு fresh decoction coffee தான் பிடிக்கும்.

அன்னிக்கும் அப்படித்தான்..

குக்கர் மக்கர் பண்ணாமல்
டக்கரா வேலை செய்ய..
சூப்பர் ஃபாஸ்ட்டில் சேனை ஃப்ரை.

டிகாக்‌ஷன் போட்டுட்டு....அதை மூடி போட்டு மூட மறந்தாச்சு.

ஒரு பர்னரில் குக்கர்..
இன்னொன்றில் காய்  ஃப்ரை ஆகிக் கொண்டிருந்தது.

வேகம் வேகம் போகும் போகும் குக்கிங் journey நு பாடிண்டே..
ஷெல்ஃபிலிருந்த காரப் பொடியை எடுக்க..
கை நழுவி டப்பா கீழே விழ..
'கண்டேன் எங்கும் ..காரப் பொடி நாட்டியம்னு'..

துடைக்க துடைக்க..
"அங்கும் இங்கும் பார்வை உண்டு..
இங்கு நீ எந்தப் பக்கம் உண்டுனு..'
பாட்டு மை.வாய்ஸில் ஓட..

தடயமெல்லாம் அழிக்க..நான் தரையோடு தரையாக தவக்களை போல ..குதிச்சு குதிச்சு துடைக்க..

காலிங் பெல் சத்தம்.
அம்மா வந்தாச்சு..
கை கால் அலம்பிண்டு வரதுக்குள்ள..
காஃபி போட்டு கொண்டு வந்தேன்..

காஃபி குடிக்க ஆரம்பிச்ச அம்மாவுக்கு ஒரே புரை ஏற ஆரம்பிச்சு..
மூக்குலேர்ந்தும் கண்லேர்ந்தும் ஒரே தண்ணி தண்ணியா வர..
காஃபி..காஃபி..
ஏன் இப்படி காரமா இருக்கு?..
அம்மா தவிக்க..

ஐயோ ராமா..
ஷெல்ஃபுலேர்ந்து விழுந்த காரப்பொடி டப்பா..
காஃபி டிகாக்‌ஷனிலும் விழுந்துடுத்து போல இருக்கே..

ஐஸ் க்யூப் எல்லாம் கொடுத்து.. மோர் கொடுத்து
அம்மாவை சரியாக்க..

காரப்பொடி decoction..இனிமேஇருப்போம்
Caution.. என்று ..

அன்று எடுத்த சபதம்..💪

Madhyamar..வேகம்

வர வர மணி ஏன் இப்படி வேகமா ஓடறது?
சீக்கிரம் வேலை முடிச்சாதான் இன்னியோட syllabus cover பண்ண முடியும். மூளை பரபரக்க..
மொபைல் அடியோ அடியென்று அடிக்க..இரு வரேன்..வர்..ரேன்னு ஓடி எடுக்க..மறுமுனையில் உயிர்த் தோழி..'ஏய் உயிரோட தான் இருக்கியாடி நீ.. நாலஞ்சு நாளாச்சு..Watsapp ல் நம்ம காலேஜ் க்ரூப்ல இருந்தாளே.மீரா..அவளைக் கண்டுபிடிச்சேன்னு ஃபோட்டோ போட்டு.. blue tick வரவேயில்லை..ஏய்..அப்பா ஓகே  தானே..non stop ஆ கேள்விக் கணைகள்..
கடகடனு அவளுக்கு பதில் சொல்லிட்டு ..
அப்புறம் பேசறேனு ஃபோனை வைத்து முடிக்க...அப்பாடா. சீக்கிரம் ..சீக்கிரம் ..மனசு வேகமா ஓட..வூட்டுக்காரர் மொபைலில் ... ம்ம்ம்ம்..சொல்லுப்பா ..அவசர கதியில் நான் கேட்க..'ஏம்மா..mail check பண்றதே இல்லையா..ஒரு excel sheet அனுப்பி இருக்கேன் பாரு..இந்த financial year ல எப்படி எகிறியிருக்கு செலவெல்லாம்னு ஒரு comparative analysis போட்டு இருக்கேன்.ரெட் கலர்ல highlight பண்ணது என்ன payment நு புரியல. என்னனு பார்த்து  சொல்லு.. அது என்ன டிசைனோ..நான் எந்த மெயில் அனுப்பினாலும் செக் பண்றதில்லனு சங்கல்பம் உனக்கு'.. பாவம் நல்லவரு வல்லவரு..டொக்குனு ஃபோனை வைக்காமல் சரி சரி ..டைம் கிடைக்கும்போது பாரு..என்றார்.
மீண்டும் பரபர ..இன்னும் இரண்டே வேலை..அப்பறம் free free freeனு fly பண்ண..காலிங் பெல் கூப்பிட்டது.. ' எதிர்த்த வீட்டு குட்டி பெண்ணும் அவள் அம்மாவும்..என்ன aunty ..திடீர்னு உங்க வீட்ல சத்தமே காணும்..ஊருக்கு போயிருக்கீங்களோனு நினச்சேன்.( அப்படியா சத்தம் போடறேனு ..கேட்கலை அவளிடம்) ஹி..ஹி..ஹி..கொஞ்சம் பிஸி..அதான்..என் அவசரத்தை உண்ர்ந்த மாதிரி.. ஓகே aunty..வேலை முடிச்சதும் சொல்லுங்க..அரட்டை அடிக்கலாம் ..
கிளம்பும் குட்டிக்கு ஒரு ஆப்பிள் கொடுத்து விட்டு..விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடர்ந்தேன்.
அப்பாடா..முடிச்சேன்..
பின்ன என்னங்க..மத்யமர் தளம் சுறுசுறுனு சூப்பரா போய்ட்டிருக்கு..யார் யார் என்னென்ன பதிவு..ஒரு ரவுண்டு கண்ணை சுழற்றி வருவதற்குள்..நேரம் ஓடிடுது..
காலேஜிலிருந்த வந்த மகளிடம் ஒவ்வொரு topic ஆ சொல்லி அதில் என்னமாதிரி views and comments எல்லாம் வந்திருக்குனு சொல்ல..all news at one place ..அதில் நானும் இருக்கேண்டா என்று பெருமையுடன்...
உன்னால் முடியும் தம்பி படம் பார்த்தோமே..அது மாதிரி ஒரு நல்ல movement ஆ வரணும்டா.. நீயும் சொல்லு உனக்கு தெரிஞ்சதை ..உன் view point ல ..சொல்லி முடிக்கும்போது..எதையோ சாதிக்கப் போறோம்னு ஒரு conviction.

அவள் ஆசையாய் கேட்ட babycorn capsicum curry செய்து தர..
"அம்மா..எப்பவும் போல உன்னோட சமையல் ரெசிபியை எங்கியாவது இதுல போட்டுடாதே...இந்த இடம் அதுக்கில்ல..ஞாபகம் வெச்சுக்கோ..தட்டை ஏந்தியபடி தன் வேலை பார்க்கச் சென்றாள்..
yes..sowing the seed in the minds of youth is more important. மத்யமர் குரல் இளைய தலைமுறையையும் போய்ச் சேரணும்.

Madhyamar..மத நல்லிணக்கம்

#மதநல்லிணக்கம்

"எல்லோரும் இப்போ இங்கே 'bhai..bhai' ..jai hind bolo'..

மாவாட்டும் பாட்டில் மத நல்லிணக்கத்தை நுழைத்த கவிஞரின் திறமை.
வாழ்க்கையில் இந்த நல்லிணக்கம் ..வர தடையாய் இருப்பது எது?

மதம் என்பது ஒரு நம்பிக்கை.
நம் கண்ணுக்குத் தெரியாத super power ஐ..சாமான்யன் தேடத் துவங்க சாமியாக ..சமயமாக மாறிய நம்பிக்கை.

"faith should be like a flowing river and not a burning fire."
இந்த லக்‌ஷ்மண் ரேகாவைத் தாண்டும்போது பிணக்கம்..

என்னடா இது 'இணக்கம்' பற்றி எழுது என்றால் , பிணக்கம் என்று புருவம் உயர்த்துகிறீர்கள் சரிதானே?

நம்மைச் சுற்றியுள்ளவரை இனம் மதம் மொழி இந்த அளவுகோல் எல்லாம் தாண்டி..மதிக்க ..மரியாதை செய்ய எடுக்கும் ஒரு சிறிய முயற்சி தான் ஒரு பெரிய மனப்பக்குவத்துக்கு முதல் படி..
மத நல்லிணக்கத்திற்கு மாபெரும் வெற்றிப்படி.

ஆசானாய், அடுத்த வீட்டுக்காரராய், ஆலோசகராய் ..நம் வாழ்க்கையில் இருந்து வெளியே வைத்து உள்ளத்தில் கொண்டாடி மத நல்லிணக்கம் போற்றுகிறோம்.

இதே நம் வீட்டு மருமகனாகவோ மருமகளாகவோ ஒரு முடிவு எடுக்கும் தருணம் வரும்போது தட்டிக் கழிப்போமா..கை தட்டி வரவேற்போமா..?

ஆள்பவர்கள்,அறிஞர்கள் ,அரசியல்வாதிகள் திசை திருப்புகிறார்கள் என்று கைக்காட்டும் வேளையில் ஒரு சாதாரண பிரஜையாக நம் பங்களிப்பு என்ன?

அடிக்கடி வீட்டில் பேச்சு வரும் பெண்களோடு.

நீங்களே பிள்ளை பார்த்துக் கொண்டாலும் பரவாயில்லை..
'பையன் நல்லவனா இருக்கணும்..
அவர்கள் குடும்பம் நல்லவராக இருக்கணும்.
இந்தியனாக இருக்கட்டும்.( இப்படி பெரிய எண்ணத்துடன் ஆரம்பிக்கும் பேச்சு...குறுகுவதை பாருங்கள்..)
முடிந்தால் vegetarian சாப்பிடும் குடும்பமாக இருக்கட்டும்.( அப்போது தானே நான் சமைச்சு போட முடியும்..என்ன சுயநலம்..?)
பழக்க வழக்கம் ஒன்றாக இருந்தால் தானே பிணக்கு வராமல் இருக்கும்.( அடுத்த சால்ஜாப்பு)

'இப்போ என்ன சொல்ல வர?.'
பேச்சு..கமாவோடு நின்று விடும்.

மனம் இணைந்தால் போதும் மதத்திற்கு என்ன வேலைனு சினிமாக்கள் பார்த்து புலம்பினாலும்..
எனக்கு என்று வரும்போது எப்படி அமைதியும் அன்பும் நிலைநாட்டப் போகிறேன் என்ற கேள்வியுடனே இந்தப் பதிவை எழுத எனக்கு லாயக்கு இருக்கிறதா என்ற யோசனையில் மூழ்கி..மனதில் உள்ளதை எழுத முடிவு செய்தேன்.
எழுதி முடிக்கும் வேளை..வாசலில் காலிங் பெல்
Zoya, hisham, Sara, Subhiksha என்று என் பெண்ணின்  நண்பர்கள்..
நானும் மாவாட்ட போறேன்..சாரி..மாவு பிசையப் போறேன்..மத நல்லிணக்கம் பற்றி அசை போட்டபடி..
( global level ல் யோசிக்க முடியாத ஒரு kitchen queen)

Madhyamar..morning with முடக்கத்தான்

#morning_with_முடக்கத்தான்
காலிங் பெல் சத்தம். காலங்கார்த்தால யார் என்று கதவை திறக்க..கையில் கவருடன் காய்கறிக்காரம்மா..

"என்ன aunty நு கேட்பதற்குள்.." இந்தா புடி..கால் வலி..கால் வலினு சொல்லுவியே கிராமத்திலேர்ந்து நேத்து கொண்டாந்தேன் இந்த முடக்கத்தான் கீரை.
கொஞ்சம் நீ லேட்டாக்கினா கூட அல்லாம் வித்து பூடும்.. அதான் வந்து கொடுத்துடலாம்நு'.

அம்பாள் பெயர் கொண்ட அன்பு இவளோ?
அவர்களுக்கு என்ன அவசியம் எனக்கு வந்து கொடுக்கணும்னு?

அன்பு..நம்ம சுற்றம் நட்புகள் அள்ளி வழங்கினாலும்..இது எனக்கு பெரிய bonus booster அன்(ம்)பு.

எவ்வளவு அள்ளிக் கொடுத்தாலும் குறையாத ஒன்று இந்த அன்பே.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..
 அதை லாக்கரில் பூட்டி வைத்து ..அழகு பார்க்காமல்..அள்ளி வீசுங்க..

 அப்புறம் பாருங்க.. .மனசு எப்போதுமே துள்ளி குதிச்சு விளையாட weight less ஆ இருக்கும்.

'ரா..ஜி..பாட்..டீ.. என்று கூவியபடி எங்க அபார்ட்மெண்ட் குழந்தை அவளைத் தேடி ஓடும் அர்த்தம்..எனக்குப் புரிந்தது. உங்களுக்கு?

மத்தாப்பு புன்னகையுடன் முடக்கத்தான் நோக்கி நான்..
முடக்கத்தான் ..அன்பையும் முடங்காமல் இருக்கச் செய்யட்டும்.
அன்புடன்
அகிலானந்தமயி😝

Madhyamar..போவோமா 2047

#ஸண்டே_ஸ்பெஷல்
#போவோமா_2047

' ஹாய்..பாட்டி..wazzup? ' பேரன் கேட்டதுமே பரவசமடையும் அகிலா பாட்டி.
மூட் அவுட்டில் இன்று.

 உர்ருனு உள்ளங்கையில் attach ஆகி இருக்கும் சோலார் எனர்ஜி ஆபரேடட் மொபைலை முறைத்தபடி இருந்தாள்.

பிள்ளையை திட்டியபடி உள்ளிருந்து வந்தாள் அகிலாவின் பெரிய பெண் மது.

" டேய்..டேய்..எல்லாத்துக்கும் காரணம் நீதாண்டா..இந்த hi tech மொபைல எதுக்குடா வாங்கி குடுத்த பாட்டிக்கு?'

அம்மா..பாட்டி always wants to get connected '
எப்பப்பாரு மொபைலும் கையுமா சுத்தறானு நீ கத்திண்டே இருந்தியா..i got an idea. அதான் பாட்டி palm ல் permanent ஆ அட்டாச் ஆகி இருக்கற மாதிரி வாங்கிக் கொடுத்தேன்.
 இதை பாட்டியோட palm size க்கு key board பண்றதுக்குள்ளே பட்ட பாடு எனக்கில தெரியும்?'

'அது சரி..அதுல ஒரு feature add பண்ணியிருக்கேனு சொன்னியா பாட்டிக்கு?
கடுப்பில் மது.

" yes. பாட்டிக்கு தெரியுமே.careful ஆ யூஸ் பண்ணுனு சொல்லிக் கொடுத்திருக்கேனே.  what's the problem now? '

'அதையேன் கேக்கற .
இன்னிக்கு பாட்டியோட மத்யமர் க்ரூப்ல யாரோ பால் காய்ச்சறது எப்படினு போஸ்ட் போட்டாளாம். 'இது ஒரு போஸ்ட் ..அதுக்கு ஒரு லைக்கு..அந்தக் காலத்துல நாங்கள்ளாம் ..பாட்டியோட மைண்ட் வாய்ஸை அது டைப் அடிச்சுடுத்தாம்'

"அப்புறம் என்னாச்சு?'

" எல்லாரும் பாட்டியை unfriend பண்ணிடப் போறாளோனு பயத்துல இருக்கா. கமெண்ட் டிலீட் பண்ணலாம்னா ..இங்கே இருக்கிற ஸ்னோஃபாலில்  சோலார்  மொபைலும் சார்ஜ் ஆகல..'

"தாத்தா..தாத்தா..why can't you help her. you know her life line is madhyamar'

இளையராஜா சிம்ஃபொனி கேட்டுக்கொண்டே தாத்தா ..ஒண்ணும் பண்ண முடிலனு ..ஒன்றரை மணி DD news கணக்கில் சைகை காட்டிட்டு..தலையாட்டலை continue பண்ண ஆரம்பிச்சுட்டார்.

'  கை வலிக்க ஒரு காலத்தில டைப் அடிச்சசேன்..அப்புறம் கரடியா கூகிள் வாய்ஸ்ல கத்தி கத்தி டைப் அடிச்ச்சேனு அன்னிக்கு கதை கதையா சொன்னா. அதான் செளகரியமா இருக்கட்டுமேனு மைண்ட்ல நினைக்கறதை அப்படியே டைப் ஆகும் புது டெக்னாலஜி இருக்கிறதை வாங்கிக் கொடுத்தேன் . இது இப்படி பிரச்சனை யில் கொண்டு போய் விட்டுடுத்தா?
"ok..I will take care '
என்று சொன்னபடி..
' பாட்டி உன்னோட ப்ராப்ளம் இப்போ சால்வ் பண்ணித் தரேன்..நீ போய்..உன் கையால..சுடச் சுட..

கூல் டவுன் ஆன பாட்டி..கிச்சனுக்குள் போக..

" அனிருத் வந்து சரி பண்ணித் தரேன்னுட்டாண்டி..இனிமே அம்மா நார்மல் ஆகிடுவா'..மது அவள் தங்கைக்கு status update செய்து கொண்டிருக்க..

காலிங் பெல் சத்தம்..

"அம்மா..யார் வந்திருக்கா பாரு..'

ஓடி வந்தவள் ..ஆச்சரியத்தில் திக்கு முக்காடிப் போனாள்..

அங்கே..அவள் மத்யமர் ஃப்ரண்ட்ஸ்..

" are you OK? ரெண்டு நாளா க்ரூப் பக்கமே நீ காணலை..அதான் கிளம்பி வந்துட்டோம்ப்பா உன்னைப் பார்க்க..'

அவர்கள் பேசப் பேச..ஆனந்தக் கண்ணீரில் அகிலா..

' இந்தாங்கோ..உங்க எல்லாரோட favourite .'

#உப்புமா தட்டை நீட்டியபடி அம்மாவின் உற்சாகத்தை ரசித்தபடி ..மகனுக்கு கண் ஜாடையில் நன்றி சொன்னாள் மது.

வருஷம் ஓடினாலும் மாறாதது..
#மணம்_மிகுந்த_மத்யமர்_நட்பும்..
#உப்புமாவும்.தான்..

'

Madhyamar..இரண்டு கைகள் நான்கானால்

#பெண்_ரொம்ப_பாவம்
எச to Shankar Rajarathnam

இரண்டு கைகள் நான்கானால்…

அப்பாடா.. ரெண்டு வண்டிய கிளப்பியாச்சு..இனிமே ஒரு walking..ஜோல்னா பையுடன் … வர வழியில் கிடைச்சதை வாங்கிப் போட்டு வந்தால்.. ஒரு பெரிய வேலை முடியும்.. சாமான் வாங்கி வந்துடலாம்.. அதை எடுத்து வைக்க ஒரு பெரிய பொறுமை வேணும்.. அரிசி பருப்பை டப்பால கொட்டணும்.. காய்கறி ஒண்ணொண்ணும் பார்த்து cover la போட்டு.. பச்சை மிளகாயை காம்பு கிள்ளி , கொத்தமல்லி , புதினா எல்லாம் ஆய்ந்து தனியா பிரிச்சு.. (இப்படி எடுத்து வைக்கலைனா என்னனு என் பெண்கள் கேட்கும் போது.. குல வழக்கம் டா.. குல வழக்கம்னு ஒரு dialogue விட்டு).

….ஒரு பக்கம் grinder.. இன்னொரு பக்கம் ரொம்ப பத்திரமா சேர்த்து வைச்ச பாலாடையை எடுத்து வெண்ணை எடுக்கல்.. ஐயோ மணியாச்சே.... cooker வைத்து, குழம்பு ஏற்றி…..இதுக்கு நடுவுல நமக்கு எப்பவும் துணையா இருக்கிற MSS ல ஆரம்பிச்சு..

 ராஜா ,ரஹ்மானோடு.. பாரதி பாஸ்கர் ,TTR speech, இவர்களை எல்லாம்  you tube தேடி..  FB ல என்ன update , watsapp ல என்ன profile pic போடலாம்னு ஒரு குழம்பு குழம்பும் வேளையில்.. ஒரு பக்கம் cooker விசிலோ விசிலாய் அடித்து என்னை கூவ.. அதற்குள் தொலைபேசி அழைக்க..”எவுரம்மா நீவு”னு ஒரு குரல்.. அம்மா பகவதி.. நீங்க தானே phone பண்ணிணீங்கனு.. நான் சொல்ல.. தேவுடானு.. நான் சொல்ல வேண்டியதை அந்த அம்மா சொல்லி இணைப்பைத் துண்டிக்க..
ரொம்ப நேரமா உன் ஃபோன் பிஸியாவே இருக்கே..

வூட்டுக்காரர் ஃபோன் வரும்.
அந்த OTP வந்திருக்கு பாரு..என் சம்பந்தப்பட்ட மெசேஜ் எதுவுமே உன் கண்ல படாதேனு ஒரு கோபமும் கவலையும் தோய்ந்த குரல்.
எந்த மொபைல்னு தேட..OTP time out நு சொல்ல..
சரி சரி..விடு என டொக் என துண்டிக்கபடும் லைன்.

 ஐயோ குக்கர்னு ஓடிப் போய் ஆஃப் பண்ண.. ..
 மாவு மாஆஆவாக..
இதோ வரேன் உன்னை கவனிக்கனு மாவை எடுக்க ஆரம்பிக்க.. சொல்லி வைத்தாற்போல  காலிங் பெல் அடிக்க.. வாசலில் ப்ரசன்னம்.. துணி இருக்கானு கேட்டு இஸ்திரி போடும் பெண்....

நாளைக்கு ப்ராஜக்ட் டே க்கு யூனிுஃபார்ம் ரெடி பண்ண சொல்ல..

 அப்போனு பார்த்து கையில் ஒட்டிய மாவு பாசமாய் என் கையை விட்டகல மறுக்க.. ஒரு வழியாய் அவளை வழியனுப்பி…கட கடனு மாவை டப்பால போட்டு, வர மறுத்த வெண்ணையை.. விடாப்பிடியா வரவழைத்து.. காய்ச்சி எடுத்து முடிச்சு.. final touch up கொடுத்து சமையல் முடித்து.. சாதம் பறிமாறி.. பாத்திரம் ஒழித்து..

 அப்பாடா … வேலை முடிஞ்சது… சோபாவில் சாய்ந்து … நிம்மதி பெருமூச்சு விட்ட வேளை.. ஒரு ஃபோன்கால்.. ஐயோ இப்பொ ஏன் கூப்பிடறா.. என்ன சொல்லப் போறாளோனு.. மனம் பதை பதைக்க.. என் ஆருயிர்.. என் உடன் பிறவா வின் குரல்..”madam.. aaj mein kaam pe nahi aa rahi hoon.. “ என் வலக்கரம்.. என் வீட்டு வேலைக்கு உதவும் நேபாளி சகோதரியின் குரல்.. அவளிடம் “koi baath nahi..”  சொல்லி விட்டு.. மீண்டும் நுழைந்தேன்.. விட்ட இடத்திலிருந்து வேலை தொடங்க..

 FM ரேடியோவைத் திருக..”வேலை இல்லாதவன் தான்.. வேலை தெரிஞ்சவந்தான்.. வீரமான வேலைக்காரன் “ பாட்டு timing ஆ வர.. அப்பறம் என்ன…
ஆவி புகுந்த வேகத்தில வேலை செஞ்சு முடிக்க…  என் வேலை பா “உனக்கென்னம்மா... ஜாலியா tv பார்த்துண்டு இருப்பேனு” லஞ்ச் டைமில் காத்து வாங்க வந்த வீட்டுக்காரர் சொல்ல..

இப்படியே..இப்படியே..இடியுடன்..

Madhyamar..வா..வா வசந்தமே

#ஸண்டே_ஸ்பெஷல்
#வா_வா_வசந்தமே..

உஸ் அப்பா..தாங்கல இந்த வெய்யிலுனு..
வெளிய சுத்தியபடி..வசை பாடும் நான்..
அதே வெய்யிலை என் ஜன்னல் கம்பிகளின் வழியே ரசிக்கிறேன்..

"சத்தமில்லாத உலகம் கேட்டேன்'னு பாடினது..இப்போ இருக்கு..

ஹாரன்களும் சைரன்களும் ..புழுதியும் குப்பையும் இல்லாத தெருக்கள்..

Top floor என்பதால், சம்மரில்  கொதிக்கும் என் வீடு..இந்த முறை குளுகுளுனு இருக்கு..

 என் கிச்சனில் என்னை கைதியாக்கி, சுதந்திரமாக சுற்றும் புறாக்கள்.. இப்போது ..வைரஸ் வந்தது தெரிந்து வாழுமிடம் மாற்றியதோ என்று... தேடுகிறேன்..
கா..கா..என்று நான் கரைந்ததும்..கணத்தில் பறந்து வரும்..
அண்டங்காக்கா எங்கே என்று காக்கா பார்வை பார்க்கிறேன்..

காலிங் பெல் ஓசை..
காதில் கேட்கவில்லை..

காபி பொடி இருக்கானு உள்ளே வந்து
கதை பேசும் எதிர்த்த வீட்டு மாமியைக் காணவில்லை.

கண்ணாமூச்சி ஆடும் வாண்டுகள்..
ஆண்ட்டி..என்னை காட்டிக் கொடுத்துடாதே என்று ..கண்ணை உருட்டும் அழகுச் செல்லங்கள்..செல்லுக்குள் இப்போ..

தம்பியை அழைத்து சென்று..
தப்பாமல் பொறுக்கி எடு ' பாலை ' என்று ..
அதிகாரத்தோடு ..அன்பு காட்டும் அண்ணன்கள் அறைக்குள்ளே..

வம்பா..நானா என்று சொல்லிக் கொண்டே..
" அப்புறம் என்னதான் ஆச்சு என்று ஆவலில் கேட்கும் கிசுகிசுக்கள் மிஸ்ஸிங்..

வலது கரம் இல்லையேல் வாழ்க்கை நிற்கவில்லை..
வாங்கினது போதும்..வாகாய் உபயோகிக்கணும் என்ற உறுதி..

வேகமா வாக்கிங் போய்ட்டு..வரும் வழியில்..கோயிலுக்குள் நுழைந்து உம்மாச்சி காப்பாத்துனு சொல்லி.
.ஓரக்கண்ணால் ..இன்னிக்கு என்ன ப்ரசாதம்னு பார்க்கும் தருணங்கள்....

டெய்லர் கடைக்கு போய் ..அங்க வருபவர் கொடுக்கும் டிசைனை பராக்கு பார்க்கறது...மறந்துடுமோ?

But..
My policy is to  live the present..
So..செய்யறது அதே வேலை தான் என்றாலும்..
ஜாலியா ..ஒரு டென்ஷனில்லாமல் செய்யறேன்..

பொண்ணும், வீட்டுக்காரரும் கை கொடுக்கும்போது..அடடே..போதும் போதும் நானே செஞ்சுக்கறேன்னு சொல்லத் தோணுகிறது.( இதெல்லாம் ..முதலில் சொல்லத் தோன்றாது.).

' ஏம்ப்பா..எல்லாரும் என்னவெல்லாமோ செய்யறாளே ..மக்களுக்கு..நான் ஒண்ணுமே செய்யலையேனு எங்க வூட்டுக்காரர் கிட்ட கேட்டால்..
' நீ சும்மா வீட்டில ஒழுங்கா இரு அதுவே பெரிய உதவினு ' ஒரு போடு போட்டார்.

சரி..என்னால் என்ன முடியும்..யோசிச்சேன்..

எந்த திக்கில் இருப்பவருக்கும் போய்ச் சேரக் கூடிய ஒன்று..

அதுதான்..என்னோட prayers.

காலையும் மாலையும் இர்ண்டு மணி நேரம் அமைதியாக உட்கார்ந்து..chanting, slokam எல்லாம் சொல்லிக் கொண்டு..
" வந்து அவதிப்படுபவர்களுக்கு right doctor, right medicine, complete cure கிடைக்கணும் என்றும்..
இனிமேல் வராமல் காப்பாற்று என்றும் ..
வேண்டிக் கொள்கிறேன்..

No prayer goes unanswered. I believe in that.

வயதான அப்பா இருப்பதால்..வெளியூர் ப்ளான் எதுவும் எப்போதுமே கிடையாது..
So ,not missing anything.

Curfew ல் கற்றது ஏராளம்..
கடைசி வரை மறக்காது..மறக்கவும் கூடாது..

வசந்தம் வரும்..
விதிகளை மீறாமல் இருப்போம்..
வதைபடாமல் இருப்போம்.
Spring வந்தாலும்..
Social distancing தொடர்வோம்..

Make your mask ..செய்யும் வேளையில்..
Mask in inner self தூக்கி எறிய வாய்ப்பு கிடைத்தது.

இயற்கை அன்னைக்கும் கொஞ்சம் இளைப்பாறல் தேவைதானே..
இந்த வசந்த காலத்துக்காக அவளும் எத்தனை ஏங்கி இருப்பாள்?

வளர்ச்சி என்ற பெயரில்.. வதைத்தோம்..
இந்த வசந்தகாலம் அவள் எடுத்துக் கொண்ட KitKat break என்று நினைப்போம்.
அவளை மதிப்போம்.

"இனி எல்லாம் சுகமே ' இந்த ராஜா சார் பாட்டை அடிக்கடி பாடிக் கொண்டிருக்கேன்..
அம்புட்டுதேன்.

கடைசியில்_அது_நடந்தே_விட்டது

#சும்மா_ஒரு_story😀

#கடைசியில்_அது_நடந்தே_விட்டது!!!??

' அம்மா.. அம்மா..இந்த ஃபோட்டோவை பாரும்மா'
பகீரென்றது பாகீரதிக்கு..
' என்னடா கருமம் இதெல்லாம்..'

" ஐயோ..நீ இன்னும் பழைய பஞ்சாங்கமாவே இரு..இதெல்லாம் இப்போ ரொம்ப சகஜம்னு எப்படி உனக்கு புரிய வைக்கறதுனு  தெரியலையே..! ஆண்டவா...எனக்கு இதை விட அம்சமா நீ தேடினால் கூட கிடைக்காதும்மா'
ரவி தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்றான்.

' போதும்டா ..உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா..வீடு ரெண்டாகிடும் வேண்டாம்டா இதெல்லாம்' கொஞ்சிக் கெஞ்சி அவனை வழிக்கு கொண்டு வர சற்றும் மனம்.தளராத விக்கிரமாத்தித்தன் ஆனாள் பாகீரதி.

" அப்பாவை நான் சமாளிச்சுக்கறேன். பாட்டியை பார்த்துக்க வேண்டியது மட்டும் உன் பொறுப்பு. தொண தொணனு ஏதாவது சொல்லிண்டே இருக்காமல் நீதான் காப்பாத்தணும்'

" எதுக்கும் இன்னொரு தடவை யோசிடா..நம்ம குடும்ப மானத்தை வாங்காதடா'..அழாத குறைதான்.

நோ..ம்மா..டோண்ட் வொரி..எனக்கு பர்ஃபக்ட் மேட்ச் தான்..'
பாகீரதியின்  பாச்சா பலிக்கலை.

பேசிப் பேசி அவள் தொண்டை தண்ணீர் வற்றியதை தவிர ஒண்ணும் அவனிடம் அவள் பேச்சு எடுபடலை.

அன்று..
வேலையெல்லாம் முடித்து விட்டு அக்கடா என்று டீ.வி சீரியலில் மூழ்கினாள் பாகீரதி.
காலிங் பெல் சத்தம் கேட்டு..போய்த் திறந்தவள்..
" டேய்..என்னடா ..இப்படி பண்ணிண்டு வந்து நிக்கற..?
அவளுக்கு கையும் ஓடலை காலும் ஓடலை..

ஆம்..அது நடந்தே விட்டது..

சொன்னதை செய்தே விட்டான் ரவி.

ஆம்..
தழையத் தழைய பட்டுப் புடவை டிசைனில் ஒட்டிக்கோ கட்டிக்கோ லுங்கி..அதற்கு மேட்சிங்காக..டிஸைனர் எம்பாய்டரி ப்ளவுஸ் ஸ்டைலில் ஒரு ஷர்ட்...

😀😀😀😀😀😀

Tuesday, May 26, 2020

பானிப்பூரித்துவம்

"போதுமாம்மா..இன்னும் எத்தனை ரவுண்டு?"
 கேட்டுக் கொண்டே பின்னால் ஓடிக் கொண்டிருந்த அந்த  வாண்டுக்கு ஒரே ஒரு  motivation..

ஒரே ஒரு motivation..

வேற என்ன?

பார்க் வாசலிலுள்ள பானிபூரி கடைதான்.😀😀

#பானிபூரித்துவம்

Saturday, May 16, 2020

எழுதுகிறேன் ஒரு கடிதம் சீசன் 3 கடிதம் 1

எழுதுகிறேன் ஒரு கடிதம் சீசன் 3
கடிதம் 1

அன்புள்ள பவித்ரா அக்காவுக்கு

ஷேமம்.ஷேமத்திற்கு பதில்.
அம்மா என் பக்கத்திலே உட்கார்ந்து சொல்ல சொல்ல எழுதறேன்.
அங்கு உன்னோட ஆபீஸ் வேலையெல்லாம் எப்படி இருக்கு? நீ கிளம்பினதும் வீடே வெறிச்சுனு போச்சு. குழந்தை ராத்திரி பூரா அழுதா..உன்னைத் தேடிண்டே இருந்தா.

 இப்பொ நாலு நாளா அழுகை கொஞ்சம் குறைஞ்சுருக்கு. அம்மாவோடயும் என்னோடயும்  பழகிட்டா. பவுடர் பால் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறா. உன்னை பத்தி தான் நினைப்பு அம்மாக்கு எப்போதும்.

உடம்பை ஒழுங்கா பார்த்துக்கோ. பளுவான வேலையெல்லாம் செய்யாம இருக்கச் சொன்னா..இன்னும் நீ பச்சை உடம்புக்காரிதான். இப்போ சரியா கவனிச்சுக்கலைனா பின்னாடி ரொம்பா வீக்காகிடுவேனு அம்மாக்கு கவலை.
அப்பா வார்த்தை க்கு வார்த்தை உன்னையே சொல்லிண்டு இருக்கா.
 குழந்தையப் பத்தி கவலைப் படாதே..இப்போ கூட இங்கேதான் என் மடியில் படுத்துண்டு தூங்கறா. உன் உடம்பைப் பார்த்துக்கோ.அத்திம்பேரைக் கேட்டதா சொல்லு.அடுத்த லீவு உனக்கு எப்போ?

அம்மா இப்போ எழுந்து போயாச்சு.
அக்கா..உனக்கு கண்டிப்பா ஞாபகம் இருக்கும்.அடுத்த வாரம் புதன்கிழமை க்குள்ள ஃபீஸ் கட்டணும்.இல்லனா பரீட்சை எழுத விடமாட்டா. இந்த லெட்டரை தந்தி போல பாவித்து மணியார்டர் அனுப்பிடுக்கா..போன வருஷத்துக்கு முந்தின வருஷம் வாங்கின இங்க் பேனா.ரொம்ப இங்க் கொட்டறது. அதுக்கும் சேர்த்து ஒரு அஞ்சு ரூபா அனுப்ப முடியுமாக்கா..
இங்கே எல்லாரும் செளக்கியம். குழந்தை சமத்தா இருக்கா. கவலைப்படாதே.
இப்படிக்கு
அன்புத் தங்கை
சுசீ

Thursday, May 14, 2020

Mother's day

happy mother's day maa..

பிறந்தநாள் உனக்கு
பாயசம் வெச்சியா என்றால்
பழக்கமே இல்லை என்பாள்.
எப்போது பேசினாலும்
எடுத்தவுடன் கேட்பாள்
சாப்பிட்டியா நீயென்பாள்
சாம்பார் பொடி இருக்கா
ரசப் பொடி காலியாயிருக்குமே
எங்கோ இருந்தபடி
எடை போடுவாள் எல்லாம்
குரல் வைத்தே கண்டுபிடிப்பாள்
கோபமா..குதூகலமா என்றே
அப்பறம் பேசறேன் என்பேன்
எப்போவுமே நீ இப்படி என்பாள்
உற்றார் உறவினர் கதையெல்லாம்
ஒன்று விடாமல் சொல்வாள்
பேத்திகளுக்கு பிடித்ததெல்லாம்
அத்துப்படி அவளுக்கென்றும்
பார்த்து பார்த்து செய்வதில்
பரம சந்தோஷம் அடைவாள்
அன்னையர் தினமெல்லாம்..
அவளும் கொண்டாடியதில்லை..
எடுத்துச் சொன்னாலும்
எதுக்கிந்த ஆரவாரமென்பாள்..
சண்டை பல பொழுது
சலிக்காமல் நடந்தாலும்
சமாதானக் கொடி பிடித்து
சரி சரி விடென்பாள்.
என்னை விட்டு நீ சென்றாலும்
எங்கம்மா இப்படித்தான் பண்ணுவானு
என்னை நான் நிலை நாட்டிக்க
அடிக்கடி வரும் உன் நினைவு
அன்னையர் தினத்தில்
மட்டும் தானா என்ன..?

Monday, May 11, 2020

தேர்தல்

Everywhere its election fever..
The drama is the same..with different actors..common man in a confused state..hoping for a better days..

தேர்தல்..
மன்னாராட்சி மறை'தல்'
மக்களாட்சி உதித்'தல்'...
உரிமை பெறு'தல்'...
உள்ளங்கள் நிறை'தல்'..

ஆனால் இப்போ..!!!

துருவங்கள் இணை'தல்'.
துட்டுக்கு வளை'தல்'..

சட்டங்கள் மீறு'தல்'.
திட்டங்கள் வீசு'தல்'..

சாதிபேரில் சாய்த்'தல்'..
சாமானியன் வீழ்'தல்'..

கட்டுக்கள் கடத்'தல்'..
பெட்டகங்கள் நிறைத்'தல்'..

உண்மை மறைத்'தல்'..
பொய்கள் இறைத்'தல்'..

வீரமாய் பேசு'தல்'..
வரம்பின்றி ஏசு'தல்'..

சீட்டுக்கு மோ'தல்'..
ஓட்டுக்கு அலை'தல்'..

சிங்கம்போல்  சீறு'தல்'
நரிவேடம் போடு'தல்'..

மக்களைப் போற்று'தல்'
மன்னராய் வணங்கு'தல்'..

மனங்களை மாற்று'தல்'..
மாயமாய் மறை'தல்'..

முதுகெலும்பின்றி வளை'தல்'..
சுயமரியாதை தொலைத்'தல்'..

கூழைக் கும்பிடு 'தல்'..
இதுதானா தேர்'தல்'?...

வாக்கு மழை பொழி'தல்'..
வென்றபின் ஓடு'தல்'..

நாடகம் நடித்'தல்'..
நன்றி மறத்'தல்'..

கஷ்டங்கள் சூழு'தல்'..
கனவுகள் கலை'தல்'..

எதிர்ப்பார்ப்புகள் சிதை'தல்'..
ஏமாற்றம் மிகு'தல்'..

தேர்தல் ...
கெடுதலா..????
நம்பிக்கை குறைதலால்..!!!

மக்கள் தேடும் மாறு'தல்'..
தருமா இந்த தேர்தல்..??

தத்துவம்

நேற்று கொட்டிய மழை
எங்கும் வெள்ளக்காடு
மரமெல்லாம் balance இல்லாமல் விழுந்தாச்சு.
Traffic jam..கேட்கணுமா..
கரெண்ட் கட்(தும்மல் போட்டாலே போய்டுமே)

இன்னிக்கு காலையில்..
எதுவுமே நடக்காத மாதிரி
எட்டிப் பார்க்கும் ☀️ சூரியன்
அழுக்கெல்லாம் போன சந்தோஷத்தில் தலை சிலுப்பும் மரங்கள்.
பளிச் பூக்கள்.
இயல்பாய் எல்லாம்.

. வாழ்க்கையோடு ஒப்பிடும்போது

ஏதோ பெரிய தத்துவம் அறிந்த நிலை

Friday, May 1, 2020

Curfew சமையல்

#curfew_சமையல்..
#மாத்தி_யோசி..


பிரிக்க முடியாத எது?
சேர்ந்தே இருப்பது எது..?
அகிலாவும் கிச்சனும் தான் ..வேறென்ன..?

நாளை ..நாளை ..நாளை என்று என்னை வெறுக்காதே..என்னை வெறுக்காதேனு.."
ரஹ்மான் பாட்டிலே..முட்டை கோஸ் முகாரி பாட..

இரு..மாத்தி யோசிக்கறேன்ப்பானு சொல்றதுக்குள்ள..


"என்னை கண்டாலும் தொடுவாரில்லைனு'
விஜயகுமாரி மாதிரி..விம்மி விம்மி  கோஸ் அழ ஆரம்பிச்சது..

"எனக்கொரு identity வேணுமடானு..' போர்க்கொடி தூக்க ஆரம்பிச்சது..

#மாத்தி_யோசி..
வந்தது ..மத்தாப்பாய் ஐடியா..

Curfew இருந்தாலும் இல்லாவிட்டாலும்..
கைகொடுக்கும் கோஸே..
கொடுப்பேன் உனக்கொரு அட்ரஸே..என்று அகிலா சூளுரைத்தேன்..

கோஸ்னு  சொன்னதுமே..
டோஸ் விழும் நமக்கு..

Cabbage நு சொன்னதுமே.
Baggage தூக்கி கிளம்பிடுவாங்க..

கோஸ் கறி இன்னிக்குனு சொன்னதுமே..
Cold war ஆரம்பிக்கும்..

கோஸா...கோச்சுண்டு..வெளினடப்பும் நடக்கும்..

சரி..#சூப் செஞ்சு கொடுத்தால்...பசியை அது கிளறிவிட்டு..பகாசுரனாகிடுவார்.

#பொரிச்ச_கூட்டு தட்டில் நீட்டும் முன்னே..
பொரிஞ்சு தள்ளுவார்.

#மோர்க்கூட்டு....#yeh _DIL_nahi_maange  more நு..போருக்கு ரெடியாவார்..

#Cabbage_rice நு பெயர் சூட்டி விழா எடுக்க..கொண்டா கொண்டானு காலியாகும்..

#Cabbage_வடை..தடையில்லாமல் உள்ளே தள்ளப்படும்..

#கோஸ் தயிர்_பச்சடி..இதுக்கு கொஞ்சம் அடிதடி உண்டு..

#கோஸ்_துவையல்..உப்பு,புளி, தேங்காய்..சொட்டு வெல்லம் வெச்சு அரைக்க...முட்டைக் கோஸ் மேல ஒரு மையல் வரும்..

 ஒரு புது முகவரி கிடைத்தது ..
 முட்டைக் கோஸுக்கு..

கோஸ்..நீளவாக்கில் நறுக்கி
Onion...நீள வாக்கில்
Carrot..நீளமா துருவி..

உப்பும் கொஞ்சம் சக்கரை மஞ்சப் பொடி போட்டு கலந்து வெச்சேன்.

அரை மணி நேரம் கழித்து..

1 spoon ..besan
Mirch powder, 1 spoon suji, (if you like ..add garam.masala, ginger paste)
Mix all these.
Now add the cabbage mix in this .

Then in non stick kadai..with less oil..you will get yummy sabzi.

அப்படியே சாப்பிடலாம்..you can eat with rice, chapathi, chapaththi roll..
or spread on dosai.
Stuff and make bonda.
So, கோஸ்னு ..சொன்னதும்..இப்போ பேஷ் பேஷ் தான்.

கோஸுக்கொரு மவுஸு வந்ததென்ன..!!
கொண்டா கொண்டானு சாப்பிட்டதென்ன?