Wednesday, May 27, 2020

Madhyamar..இரண்டு கைகள் நான்கானால்

#பெண்_ரொம்ப_பாவம்
எச to Shankar Rajarathnam

இரண்டு கைகள் நான்கானால்…

அப்பாடா.. ரெண்டு வண்டிய கிளப்பியாச்சு..இனிமே ஒரு walking..ஜோல்னா பையுடன் … வர வழியில் கிடைச்சதை வாங்கிப் போட்டு வந்தால்.. ஒரு பெரிய வேலை முடியும்.. சாமான் வாங்கி வந்துடலாம்.. அதை எடுத்து வைக்க ஒரு பெரிய பொறுமை வேணும்.. அரிசி பருப்பை டப்பால கொட்டணும்.. காய்கறி ஒண்ணொண்ணும் பார்த்து cover la போட்டு.. பச்சை மிளகாயை காம்பு கிள்ளி , கொத்தமல்லி , புதினா எல்லாம் ஆய்ந்து தனியா பிரிச்சு.. (இப்படி எடுத்து வைக்கலைனா என்னனு என் பெண்கள் கேட்கும் போது.. குல வழக்கம் டா.. குல வழக்கம்னு ஒரு dialogue விட்டு).

….ஒரு பக்கம் grinder.. இன்னொரு பக்கம் ரொம்ப பத்திரமா சேர்த்து வைச்ச பாலாடையை எடுத்து வெண்ணை எடுக்கல்.. ஐயோ மணியாச்சே.... cooker வைத்து, குழம்பு ஏற்றி…..இதுக்கு நடுவுல நமக்கு எப்பவும் துணையா இருக்கிற MSS ல ஆரம்பிச்சு..

 ராஜா ,ரஹ்மானோடு.. பாரதி பாஸ்கர் ,TTR speech, இவர்களை எல்லாம்  you tube தேடி..  FB ல என்ன update , watsapp ல என்ன profile pic போடலாம்னு ஒரு குழம்பு குழம்பும் வேளையில்.. ஒரு பக்கம் cooker விசிலோ விசிலாய் அடித்து என்னை கூவ.. அதற்குள் தொலைபேசி அழைக்க..”எவுரம்மா நீவு”னு ஒரு குரல்.. அம்மா பகவதி.. நீங்க தானே phone பண்ணிணீங்கனு.. நான் சொல்ல.. தேவுடானு.. நான் சொல்ல வேண்டியதை அந்த அம்மா சொல்லி இணைப்பைத் துண்டிக்க..
ரொம்ப நேரமா உன் ஃபோன் பிஸியாவே இருக்கே..

வூட்டுக்காரர் ஃபோன் வரும்.
அந்த OTP வந்திருக்கு பாரு..என் சம்பந்தப்பட்ட மெசேஜ் எதுவுமே உன் கண்ல படாதேனு ஒரு கோபமும் கவலையும் தோய்ந்த குரல்.
எந்த மொபைல்னு தேட..OTP time out நு சொல்ல..
சரி சரி..விடு என டொக் என துண்டிக்கபடும் லைன்.

 ஐயோ குக்கர்னு ஓடிப் போய் ஆஃப் பண்ண.. ..
 மாவு மாஆஆவாக..
இதோ வரேன் உன்னை கவனிக்கனு மாவை எடுக்க ஆரம்பிக்க.. சொல்லி வைத்தாற்போல  காலிங் பெல் அடிக்க.. வாசலில் ப்ரசன்னம்.. துணி இருக்கானு கேட்டு இஸ்திரி போடும் பெண்....

நாளைக்கு ப்ராஜக்ட் டே க்கு யூனிுஃபார்ம் ரெடி பண்ண சொல்ல..

 அப்போனு பார்த்து கையில் ஒட்டிய மாவு பாசமாய் என் கையை விட்டகல மறுக்க.. ஒரு வழியாய் அவளை வழியனுப்பி…கட கடனு மாவை டப்பால போட்டு, வர மறுத்த வெண்ணையை.. விடாப்பிடியா வரவழைத்து.. காய்ச்சி எடுத்து முடிச்சு.. final touch up கொடுத்து சமையல் முடித்து.. சாதம் பறிமாறி.. பாத்திரம் ஒழித்து..

 அப்பாடா … வேலை முடிஞ்சது… சோபாவில் சாய்ந்து … நிம்மதி பெருமூச்சு விட்ட வேளை.. ஒரு ஃபோன்கால்.. ஐயோ இப்பொ ஏன் கூப்பிடறா.. என்ன சொல்லப் போறாளோனு.. மனம் பதை பதைக்க.. என் ஆருயிர்.. என் உடன் பிறவா வின் குரல்..”madam.. aaj mein kaam pe nahi aa rahi hoon.. “ என் வலக்கரம்.. என் வீட்டு வேலைக்கு உதவும் நேபாளி சகோதரியின் குரல்.. அவளிடம் “koi baath nahi..”  சொல்லி விட்டு.. மீண்டும் நுழைந்தேன்.. விட்ட இடத்திலிருந்து வேலை தொடங்க..

 FM ரேடியோவைத் திருக..”வேலை இல்லாதவன் தான்.. வேலை தெரிஞ்சவந்தான்.. வீரமான வேலைக்காரன் “ பாட்டு timing ஆ வர.. அப்பறம் என்ன…
ஆவி புகுந்த வேகத்தில வேலை செஞ்சு முடிக்க…  என் வேலை பா “உனக்கென்னம்மா... ஜாலியா tv பார்த்துண்டு இருப்பேனு” லஞ்ச் டைமில் காத்து வாங்க வந்த வீட்டுக்காரர் சொல்ல..

இப்படியே..இப்படியே..இடியுடன்..

No comments: