Wednesday, May 27, 2020

கடைசியில்_அது_நடந்தே_விட்டது

#சும்மா_ஒரு_story😀

#கடைசியில்_அது_நடந்தே_விட்டது!!!??

' அம்மா.. அம்மா..இந்த ஃபோட்டோவை பாரும்மா'
பகீரென்றது பாகீரதிக்கு..
' என்னடா கருமம் இதெல்லாம்..'

" ஐயோ..நீ இன்னும் பழைய பஞ்சாங்கமாவே இரு..இதெல்லாம் இப்போ ரொம்ப சகஜம்னு எப்படி உனக்கு புரிய வைக்கறதுனு  தெரியலையே..! ஆண்டவா...எனக்கு இதை விட அம்சமா நீ தேடினால் கூட கிடைக்காதும்மா'
ரவி தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்றான்.

' போதும்டா ..உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா..வீடு ரெண்டாகிடும் வேண்டாம்டா இதெல்லாம்' கொஞ்சிக் கெஞ்சி அவனை வழிக்கு கொண்டு வர சற்றும் மனம்.தளராத விக்கிரமாத்தித்தன் ஆனாள் பாகீரதி.

" அப்பாவை நான் சமாளிச்சுக்கறேன். பாட்டியை பார்த்துக்க வேண்டியது மட்டும் உன் பொறுப்பு. தொண தொணனு ஏதாவது சொல்லிண்டே இருக்காமல் நீதான் காப்பாத்தணும்'

" எதுக்கும் இன்னொரு தடவை யோசிடா..நம்ம குடும்ப மானத்தை வாங்காதடா'..அழாத குறைதான்.

நோ..ம்மா..டோண்ட் வொரி..எனக்கு பர்ஃபக்ட் மேட்ச் தான்..'
பாகீரதியின்  பாச்சா பலிக்கலை.

பேசிப் பேசி அவள் தொண்டை தண்ணீர் வற்றியதை தவிர ஒண்ணும் அவனிடம் அவள் பேச்சு எடுபடலை.

அன்று..
வேலையெல்லாம் முடித்து விட்டு அக்கடா என்று டீ.வி சீரியலில் மூழ்கினாள் பாகீரதி.
காலிங் பெல் சத்தம் கேட்டு..போய்த் திறந்தவள்..
" டேய்..என்னடா ..இப்படி பண்ணிண்டு வந்து நிக்கற..?
அவளுக்கு கையும் ஓடலை காலும் ஓடலை..

ஆம்..அது நடந்தே விட்டது..

சொன்னதை செய்தே விட்டான் ரவி.

ஆம்..
தழையத் தழைய பட்டுப் புடவை டிசைனில் ஒட்டிக்கோ கட்டிக்கோ லுங்கி..அதற்கு மேட்சிங்காக..டிஸைனர் எம்பாய்டரி ப்ளவுஸ் ஸ்டைலில் ஒரு ஷர்ட்...

😀😀😀😀😀😀

No comments: