Wednesday, May 27, 2020

Madhyamar ..decoction konjcam caution

#MMTUESDAYMEMORIES
#DECOCTION கொஞ்சம்..CAUTION.

எட்டாங்கிளாஸிலேர்ந்து..மேடையிலே எட்டி எட்டிப் பார்த்து சமைச்ச புள்ள நானுங்கோ.

அம்மா ஆபீஸிலேர்ந்து வரதுக்கு எட்டு மணியாகிடும்.
நம்ம டூட்டி அதனால் ராத்திரி குக்கர், ஏதாவது ஒரு காய் பண்ணனும்.

அம்மாவுக்கு சூடா காஃபி குடிக்கணும் . அதனால் டிகாக்‌ஷன் போட்டு வெக்கறதும் வேலை. அம்மாவுக்கு fresh decoction coffee தான் பிடிக்கும்.

அன்னிக்கும் அப்படித்தான்..

குக்கர் மக்கர் பண்ணாமல்
டக்கரா வேலை செய்ய..
சூப்பர் ஃபாஸ்ட்டில் சேனை ஃப்ரை.

டிகாக்‌ஷன் போட்டுட்டு....அதை மூடி போட்டு மூட மறந்தாச்சு.

ஒரு பர்னரில் குக்கர்..
இன்னொன்றில் காய்  ஃப்ரை ஆகிக் கொண்டிருந்தது.

வேகம் வேகம் போகும் போகும் குக்கிங் journey நு பாடிண்டே..
ஷெல்ஃபிலிருந்த காரப் பொடியை எடுக்க..
கை நழுவி டப்பா கீழே விழ..
'கண்டேன் எங்கும் ..காரப் பொடி நாட்டியம்னு'..

துடைக்க துடைக்க..
"அங்கும் இங்கும் பார்வை உண்டு..
இங்கு நீ எந்தப் பக்கம் உண்டுனு..'
பாட்டு மை.வாய்ஸில் ஓட..

தடயமெல்லாம் அழிக்க..நான் தரையோடு தரையாக தவக்களை போல ..குதிச்சு குதிச்சு துடைக்க..

காலிங் பெல் சத்தம்.
அம்மா வந்தாச்சு..
கை கால் அலம்பிண்டு வரதுக்குள்ள..
காஃபி போட்டு கொண்டு வந்தேன்..

காஃபி குடிக்க ஆரம்பிச்ச அம்மாவுக்கு ஒரே புரை ஏற ஆரம்பிச்சு..
மூக்குலேர்ந்தும் கண்லேர்ந்தும் ஒரே தண்ணி தண்ணியா வர..
காஃபி..காஃபி..
ஏன் இப்படி காரமா இருக்கு?..
அம்மா தவிக்க..

ஐயோ ராமா..
ஷெல்ஃபுலேர்ந்து விழுந்த காரப்பொடி டப்பா..
காஃபி டிகாக்‌ஷனிலும் விழுந்துடுத்து போல இருக்கே..

ஐஸ் க்யூப் எல்லாம் கொடுத்து.. மோர் கொடுத்து
அம்மாவை சரியாக்க..

காரப்பொடி decoction..இனிமேஇருப்போம்
Caution.. என்று ..

அன்று எடுத்த சபதம்..💪

No comments: