Wednesday, May 27, 2020

Madhyamar..மத நல்லிணக்கம்

#மதநல்லிணக்கம்

"எல்லோரும் இப்போ இங்கே 'bhai..bhai' ..jai hind bolo'..

மாவாட்டும் பாட்டில் மத நல்லிணக்கத்தை நுழைத்த கவிஞரின் திறமை.
வாழ்க்கையில் இந்த நல்லிணக்கம் ..வர தடையாய் இருப்பது எது?

மதம் என்பது ஒரு நம்பிக்கை.
நம் கண்ணுக்குத் தெரியாத super power ஐ..சாமான்யன் தேடத் துவங்க சாமியாக ..சமயமாக மாறிய நம்பிக்கை.

"faith should be like a flowing river and not a burning fire."
இந்த லக்‌ஷ்மண் ரேகாவைத் தாண்டும்போது பிணக்கம்..

என்னடா இது 'இணக்கம்' பற்றி எழுது என்றால் , பிணக்கம் என்று புருவம் உயர்த்துகிறீர்கள் சரிதானே?

நம்மைச் சுற்றியுள்ளவரை இனம் மதம் மொழி இந்த அளவுகோல் எல்லாம் தாண்டி..மதிக்க ..மரியாதை செய்ய எடுக்கும் ஒரு சிறிய முயற்சி தான் ஒரு பெரிய மனப்பக்குவத்துக்கு முதல் படி..
மத நல்லிணக்கத்திற்கு மாபெரும் வெற்றிப்படி.

ஆசானாய், அடுத்த வீட்டுக்காரராய், ஆலோசகராய் ..நம் வாழ்க்கையில் இருந்து வெளியே வைத்து உள்ளத்தில் கொண்டாடி மத நல்லிணக்கம் போற்றுகிறோம்.

இதே நம் வீட்டு மருமகனாகவோ மருமகளாகவோ ஒரு முடிவு எடுக்கும் தருணம் வரும்போது தட்டிக் கழிப்போமா..கை தட்டி வரவேற்போமா..?

ஆள்பவர்கள்,அறிஞர்கள் ,அரசியல்வாதிகள் திசை திருப்புகிறார்கள் என்று கைக்காட்டும் வேளையில் ஒரு சாதாரண பிரஜையாக நம் பங்களிப்பு என்ன?

அடிக்கடி வீட்டில் பேச்சு வரும் பெண்களோடு.

நீங்களே பிள்ளை பார்த்துக் கொண்டாலும் பரவாயில்லை..
'பையன் நல்லவனா இருக்கணும்..
அவர்கள் குடும்பம் நல்லவராக இருக்கணும்.
இந்தியனாக இருக்கட்டும்.( இப்படி பெரிய எண்ணத்துடன் ஆரம்பிக்கும் பேச்சு...குறுகுவதை பாருங்கள்..)
முடிந்தால் vegetarian சாப்பிடும் குடும்பமாக இருக்கட்டும்.( அப்போது தானே நான் சமைச்சு போட முடியும்..என்ன சுயநலம்..?)
பழக்க வழக்கம் ஒன்றாக இருந்தால் தானே பிணக்கு வராமல் இருக்கும்.( அடுத்த சால்ஜாப்பு)

'இப்போ என்ன சொல்ல வர?.'
பேச்சு..கமாவோடு நின்று விடும்.

மனம் இணைந்தால் போதும் மதத்திற்கு என்ன வேலைனு சினிமாக்கள் பார்த்து புலம்பினாலும்..
எனக்கு என்று வரும்போது எப்படி அமைதியும் அன்பும் நிலைநாட்டப் போகிறேன் என்ற கேள்வியுடனே இந்தப் பதிவை எழுத எனக்கு லாயக்கு இருக்கிறதா என்ற யோசனையில் மூழ்கி..மனதில் உள்ளதை எழுத முடிவு செய்தேன்.
எழுதி முடிக்கும் வேளை..வாசலில் காலிங் பெல்
Zoya, hisham, Sara, Subhiksha என்று என் பெண்ணின்  நண்பர்கள்..
நானும் மாவாட்ட போறேன்..சாரி..மாவு பிசையப் போறேன்..மத நல்லிணக்கம் பற்றி அசை போட்டபடி..
( global level ல் யோசிக்க முடியாத ஒரு kitchen queen)

No comments: