#பத்து_வரிக்_கதை.
'
#மாத்தி_யோசி' ..இந்த concept எனக்கு கத்துக் கொடுத்தது bala Hari
அவரோட இன்றைய ' பத்து வரியில் படம் பார்த்து அவர் எழுதிய கதைக்கு'
என் எச.
மன்னிச்சு மக்களே..🙏🙏
#பிக்சர்_பர்ஃபக்ட்..
எப்போதுமே கிளிசரின் போட்ட கண்கள், கழுத்தும் கையும் நகை ஸ்டாண்டாக..பாத்திரம் கழுவும்போதும் பட்டுப் புடவையில் பளபளக்கும்..சீரியல் நடிகை ரோனிலா..
" மேடம்..இந்த ரோல் பண்ணிப் பாருங்க..இண்டஸ்ட்ரில உங்க இமேஜே மாறிடும்' ..காரட் காட்டினார் டைரக்டர் காத்தமுத்து..
" சார்..எதுக்கு சார் இந்த விஷப் பரீட்சை ..என்னை இந்த மாதிரி ஆடியன்ஸ் ஒத்துக்க மாட்டாங்க சார்' கெஞ்சி கூத்தாடியும் மசியவில்லை டைரக்டர்..
பின்னி பூ வெச்ச கூந்தல்.. இப்போதுகோல்டன் ப்ரவுன் ஹேர் டையில் மினுமினுக்க..லிப் க்ளாஸ் சுண்டியிழுக்க,கசகசனு அந்த கோட் மட்டும் கெட்டியாக அவளைப் போட்டு இறுக்கியது .
கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்ட அவளுக்கு..'ஓ..மை காட்..நானா இது..இவ்வளவு நாள் எங்கே இருந்தது இந்த அழகு..'
அவள் யோசனையைக் கலைத்த டைரக்டர்.." மேடம்..இந்தாங்க ..இந்த பிஸ்டலைப் பிடிங்க..லாவகமா அந்த ஓட்டைக்குள் கை விட்டு உங்க கண்ணில் ஒரு குரூரம் , ஒரு கொலை வெறி தெரியணும்..காத்தமுத்து பேசப் பேச..
காந்தக் கண்களுடன் ..கூந்தல் ஒருப்பக்கம் கண்ணில் விழ, நடுங்கும் கைகளுடன் துப்பாக்கியை முதல் முதலாக வாழ்க்கையில் தொட்ட நேரம்..
"மேடம்..அப்படியே இருங்க..ப்ரமோவுக்கு இந்த ஷாட் அற்புதமா இருக்கும்' லைட் ,காமெரா ஆக்ஷன் அவர் ஆணைக்காக முழு யூனிட்டும் காத்திருக்க..
"டைரக்டர் சார்.. நிறுத்துங்க ..எல்லாம் கச்சிதமா இருக்க, என் நெயில் பெயிண்ட்டை மாத்தாமல் இப்படி விட்டுட்டீங்களே..ஷாட்ல என் கைவிரல் கூட க்ரைம் க்கு தகுந்த மாதிரி இருக்க வேண்டாமா?' ..
ரோனிலாவின் குரல்..முழு யூனிட்டும் ஸ்தம்பிக்க வைத்தது.
துப்பாக்கி ..நல்லவேளை டைரக்டர் கையில் இல்லை
No comments:
Post a Comment