#jog_with_joy
ஜில்லுனு காத்து முகத்தை ஜவ்வுனு இழுக்கும் வேளையிலே..ஜக்கு அதான் ஜகதீசன் மாமா ஜாகிங் போவார் தினமும் ஜவ்வாது செண்ட்டோட லெதர் ஜாக்கெட்டோட ..
லிஃப்ட் கிட்ட என்னைப் பார்த்ததும்.
'ஜோல்னா எடுத்துண்டு எங்கே கிளம்பிட்டே' என்றார்.
' ஜோலி ஏகத்துக்கு இருக்கே மாமா' நு நான் சொன்னேன்
ஜாலியா ஜாகிங் பண்ணு..அப்போதான் ஜிம் போகாம ஜம்முனு இருக்க முடியும்நு சொல்லிண்டே..
' இந்த மெட்ரோ வேலை நடக்கறதுனால் வர வர ஜன்னல் கூட திறக்க முடியலை .ஜெயில்ல இருக்கற மாதிரி இருக்கு.
ஜனங்களுக்கு எத்தனை கஷ்டம்..அதுசரி
அந்த நாலாம் நம்பர் ஜாகைக்கு இன்னும் யாரும் வரலையா இன்னும்..பூட்டியே கிடந்தா ஜகன் மோகினி வந்துடுவாளே' நு கவலையா இருக்ககுனு பொலம்பல்.
ஜக்கு மாமா மூக்கு நுழைக்காத ஜகாவே கிடையாது.
ஜாம் ஆகாமல் எங்க லிஃப்ட் அதிசயமா திறக்க..இவரைப் பார்த்ததும் ஜம்ப் பண்ணி ஓடினான் புதுசா வந்த 'ஜம்ப்பர்' சாரி..சாரி..'ப்ளம்பர்'
' ஜிங்க் டீக் கர்னே கே லியே ஜரூர் ஆவூங்கா'னு ஜூட் விட்டான் ஜாம்ஷெட்பூர் ஜா (jha)
படி வழியா இறங்கி வந்தார் ஜரிகை வேட்டி ஜம்பு மாமா . சாயங்கால ஜானவாசம் attend பண்ண..ஜனசந்தடிக்கு பயந்து ஜல்தியாவே கிளம்பினவர் நம்ம ஜக்கு மாமாவைப் பார்த்து ஜகா வாங்கினார்.
'என்னைப் பார்த்தாலே ஜன்னி வந்தவன் மாதிரி ஏன் இப்படி ஓடறார்' நான் என்ன ஜங்கிள் லேர்ந்தா வந்தேன்.. ரொம்பத்தான் ஜம்பம் . அவனுக்கு ஜெம்மாட்டம் ஒரு பையன்னு எனக்கென்ன jealousy ஆ.. பேசிண்டே வந்தவர் தன்னோட ஜாகிங் ஜோடியைப் பார்த்து விட்டார்.
'சொல்ல மறந்துட்டேன்..ஒரு முழம் ஜாதி மல்லி வாங்கி மாமி கிட்ட கொடுத்துடுன்னார்.
சரி மாமானு சொல்லி ஜல்லி போட்ட ரோடில் ஜாக்கிரதையா நடந்து ஜாமான் எல்லாம் வாங்கும் போது தான் ' ஊறப்போட்ட ஜவ்வரிசி 'ஜவ்' வரிசியாகிடுமே..அப்பறம் ஜாம் கூட செய்ய முடியாதேனு ஓட ஆரம்பிச்சேன்.
ஜக்கு மாமா ஜக் நிறைய MTR Grand ல் காஃபி குடிச்சுட்டு வருவதற்குள்
மாமி ஜுவல்லரி ஷாப்புக்கு 'ஜனவரி வருதே..ஜனவரி.வருதே' நு. பாடிண்டு..ஜலஜாவோட கிளம்பிட்டா..காலண்டர் வாங்கறதுக்கு..
ஜாகிங் போய் வரதுக்கள்ள மாமி ஒரு ஜாலி ரைடு போய்டறாடீமா..ஒரு டம்ளர் ஜலம் கொடுனு சாவிக்காக வந்து நினார்.
இருந்தாலும் ரெண்டு பேரும் நல்ல ஜோடினு பேர் வாங்கினவா..அதானே முக்கியம்.
அந்தாக்ஷரி என்ன..பாட்டு வெச்சு தான் விளையாடணுமா..பதிவுலும் விளையாடலாம்.
Mahadevan Srinivasan sir ' சா' போஸ்ட் எனக்கு inspiration
.நான் 'ஜா'..
அப்போ நீங்க?
No comments:
Post a Comment