நேத்திக்கு என் ஃப்ரண்டோட ஃப்ரண்ட் ஆஷ்னா வீட்டுக்கு போனேன்.
ஜாலியா பேசி அரட்டை எல்லாம் நடக்க..
அவங்க வீட்டு இன்னொரு ரூமிலிருந்து வெளியே வந்தார்கள்..ஒரு நடுத்தர வயது பெண்மணி..
என் ஃப்ரண்டு ..' இவங்கதான் ஆஷ்னாவோட "mom in law " என்று அறிமுகப்படுத்த..
அமைதியா ..அந்த அம்மா சொன்னாங்க..
' I am not her mom in law..
I am her #mom_in_love.
ஆஹா..மண்டையில் நறுக்குனு யாரோ குட்ற சத்தம்..
எத்தனை அழகான வார்த்தை..
சொல்லிச் சொல்லி பார்த்துக் கொண்டே திரும்பும்போது..
" I love you maa' என்று என் மாமியாரை கட்டிக் கொள்ளும்போது..
" ஐயோ..எனக்கு வெக்கமா இருக்கு' என்று அவள் முகம் சிவந்த ஞாபகம் ஏனோ இன்னும் மனதில் ஓடிக் கொண்டிருக்கு..
#அன்பு_சூழ்_உலகு...
No comments:
Post a Comment