Late 'ஆகுமுன் ஒரு letter.
அன்புள்ள அகிலா..
நலம் நலமறிய ஆவல்னு எழுதக் கூட நேரமில்லை இப்போது என்னிடம்.
உன்னை விட்டு போகற சமயம் வந்தாச்சு..
என் முடிவை யாராலும் தடுக்கமுடியாது..
பிரிவு கொடுமைதான்..ஆனால்..
விதியின் வழியை யார் மாற்ற முடியும்?
உன் கூட இருந்த கணங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாது..மறக்க வே முடியாது.
எத்தனை பல்பு நான் வாங்க வெச்சாலும்..
பயில்வான் போல...பலம் காட்டுவாய் நீ.
தத்துவம் பேசுவே..தாங்க முடியாது எனக்கு.
தத்துபித்துனு உளறுவ..தலை தெறிக்க ஓடி இருக்கேன்.
தத்தளிச்சு நின்னாலும்..தன்னம்பிக்கை விட மாட்டாய் நீ..
கைகோர்த்து ஒவ்வொரு நாளும் ..கல்லும் முள்ளும் கூட காலுக்கு இதமான cotton ஆக இருக்க..நாம் நடந்த பாதைகள்..
எல்லாத்தையும் விடு..உன் கை மணத்தில் கட்டிப் போட்ட நாட்கள் இருக்கே..!! ஆஹா..
உன்னை எப்படி பிரிவேன்?
.எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கம்மியா வாழ்க்கை கொடுத்தான் இந்தக் கடவுள்..
இப்படி மனசு கிடந்து அடித்துக் கொள்(ல்)கிறது.
ஆனா..ஒண்ணு.. உன்னோட இருந்த நாட்கள் என்னிக்கும் பசுமையாய் இருக்கும்..
ஒரே ஒரு request..
நான் இல்லைனு சோர்ந்து போகாதே..
அடுத்த கட்டத்துக்கு அடி எடுத்து வைக்க..
சில இழப்புகள் கண்டிப்பாகத் தேவை..நம் வாழ்க்கையில்..
அதனால்..மனசை திடப் படுத்திக் கொள்..
இது முடிவல்ல..உன் வாழ்வின் அடுத்த கட்டத்தின் ஆரம்பம்னு நினைத்துக் கொள்.
உன்னை விட்டு போனாலும்..மீண்டும் வேறு பிறப்பாய் உன்னை எப்படியும் வந்து சந்திக்கணும்னு ஆசை.
உன்னை ஆட்டிப் படைச்சிருக்கேன்..
ஆறுதலாகவும் இருந்திருக்கேன்..
அட்டகாசம் செய்திருக்கேன்..
"இதுவும் கடந்து போகும்னு ' நம்பிக்கை என்ற ஒரே ஒரு அஸ்திரத்தை கெட்டியா பிடித்துக் கொண்ட உனக்கு..
என் வாழ்த்துக்கள்..
பிரிய மனமில்லாமல்..
#இப்படிக்கு
உன்..
...
..
...
...
....
....
...
....
....
...
2019
No comments:
Post a Comment