எங்கே செல்லும் இந்தப் பாதை...
'address ஞாபகமா எடுத்துண்டு போம்மா' ..school கிளம்பும் அவசரத்திலும் என் பெண் சொல்லிட்டு போக..வேலையெல்லாம் முடித்து பையும் பர்சோடயும் முக்கியமா address ம் எடுத்துண்டு என்னோட TN registration Scooty துணை வர..( எந்த எடத்தில நிறுத்தினாலும்..'aap chinnai(சென்னையை இப்படித்தான் சொல்வார் கள்) se ho kya..udhar ka masala dosa...mmmmm'
இப்படியே எல்லாக் கடையும் ஏறி இறங்கி பையை ரொப்பி..சரி சரி...இப்பொ கிளம்பினா சரியா இருக்கும்....நாற்புறமும் பிரியும் சாலை..எந்த வழியா வந்தேன்..ஒரே குழப்பம்..ஊருக்கு புதுசு வேற..கையில் இருந்த address ஐ வேகமா போய்ண்டிருந்த ஒருத்தரை நிறுத்தி.. bhaiyya..bhaiyya..வழி சொல்லேன் என்று கேட்க..அவரும் दाएं ,बाएं நு என்னை குழப்ப..correct ஆ தப்பான வழியில் என் செல்ல Scooty ஐ செலுத்த..சுத்தி சுத்தி வந்தீக..மாதிரி எத்தனை எட்டு போட்டும் நான் தேடும் address இல்லவே இல்லை..இப்படியே ஊருக்குள் இருக்கும் சந்து பொந்தெல்லாம் வர..ஐயோ இப்படி இருக்காதே.. அகலமான ரோட் ஆச்சே..வீட்டு வாசலில் பெரிய lawn ..அகலமா ஒரு gate..ஒரு வெள்ளை ஊஞ்சல் எல்லாம் இருக்குமே..ஐயோ ..கண்டுபிடிக்க முடியலையே.
ஊர் எல்லைக்கே வந்துட்டோமோனு கவலை வர..எனக்கு வழி சொன்ன ஆள் மீண்டும் என் எதிரில் தென்பட..
behanji..aap.. idhar ..??..us tharaf jaana tha aap ko..(நமக்கு இந்த tha,thi masculine feminine gender Hindi ல இன்னி வரைக்கும் புரியல..தவறிருந்தால் பொறுக்கவும்)
மீண்டும் அவர் வழி காட்ட.சில கிலோமீட்டர் கடந்த பிறகு..ஆஹ்ஹா..வந்துட்டமோ...இதோ இருக்கே அந்த பெரிய சாக்கடை..வழி நெடுக யூகலிப்டஸ் மரமா இருக்கே..அதோ பாபு கடை..அதே அதே..வந்தாச்சு..
சந்தோஷத்தில் Scooty பறக்க..
அம்மா..அம்மா..என்று என் பெண் குரல்.......sudden break போட்டு scooty ஐ நிறுத்த..எங்கே போற...இவ்வளவு நேரம்..காத்து காத்து காலெல்லாம் வலிக்கிறது....அடடே..நம்ம வீடு வந்தாச்சு..'கண்டு பிடிச்சேன் கண்டுபிடிச்சேன்..கடைசியாய் என் வீட்டைக் கண்டுபிடிச்சேனு rajini style ல மனம் துள்ள..
எந்த புது ஊரில் குடி போனாலும் நடக்கும் தேடல் விழா..'bharat ek khoj' இது தானோ
( google map எல்லாம் அப்போ இல்லை..அப்படியே இருந்தாலும் இந்த மர மண்டையில் அது ஏறினதில்லை)..
அதுவும் Bangalore கேட்கவே வேண்டாம்..கண்டிப்பா எல்லா சிக்னல் மேலே இருக்கும் name board மேல மரக்கிளை ஒன்று படர்ந்து மறைச்சிருக்கும்..இன்னொரு பயம்..போகும் போது இருக்கிற வழி,திரும்பும்போது one way ஆகிடும்..அப்பறம் என்ன..என் வீட்டை..நானே..கஷ்டப்பட்டு தேடி வருவேன்..
அப்போ எல்லாம் தோணும்..அட்ரசஸ் கிடையாது..land mark கிடையாது..paint கிடையாது..இந்த குட்டிப் பறவை எல்லாம். எப்படி அழகா..வழி கேட்காமல் தன் கூட்டை வந்தடையுது என்று...
அதிசயம் தான் அவன் படைப்பு..