Tuesday, December 17, 2019

சொர்கத்தின் வாசப்படி..

சொர்கத்தின் வாசப்படி..

என்ன அப்பு..ராத்திரி நன்னா தூங்கினியா..
நான் போட்ட சூடான சுவையான hatti kaapi உறிஞ்சியபடி ஊரிலிருந்து வந்த அத்தை தன் அண்ணாவைப் பார்த்து கேட்க..
எங்க இப்போ எல்லாம் ..எத்தனை mg dosage ஏத்தினாலும் தூக்கம் மட்டும் வரமாட்டேங்கிறது.
போறாததுக்கு இந்த வயித்து பிரச்சினை வேற..பசியே இல்ல..சாப்பிடணுமேனு இருக்கு..
இதுக்கு நடுவுல பொட்டாசியம் ஜாஸ்தியாச்சு. சோடியம் ஒரேடியா இறங்கிடுத்து..BP யும் கூட சேர்த்து ஏறிக்கிடக்கு..அத விடு..உன்னோட சக்கரை என்ன சொல்றது..report வந்தாச்சா..
பதில் சொல்ல ரெடியாய் இருந்த அத்தை Eveready போல charge ஆனா..
அதை ஏன் கேட்கிற அப்பு..ஒரு சமயம் 100,200,250,300..ஏதோ கிரிக்கெட் score போல சொல்லத் துவங்கினாள். எலை தழை சாப்பிடுங்கறா சில பேர்..சாதமே கூடாதுங்கறா..பழம் பக்கமே போக முடியறதில்ல.இந்த மாத்திரை மருந்து இல்லாட்டி எப்பவோ டிக்கட் வாங்கியிருக்கணும்..ம்ம்ம்.
என்னத்த செய்ய..இப்படித்தான் காலத்தை ஓட்டணும்னு தலை எழுத்து.. .குழந்தைகளுக்கு சிரமத்தை கொடுத்துண்டு..
.கிச்சனிலிருந்து கரண்டியும் கையுமா இவாளை இந்தச் சோகக் கடலிலிருந்து காப்பாற்ற நான் ஓடி வந்தேன்.
அன்ணனும் தங்கையும் அந்த காலத்து விஷயத்தை..புதுக்கோட்டை பொக்கிஷங்களை எடுத்து விடுவேள்னு பார்த்தா..இப்படி சந்தோஷமில்லா சம்பாஷணையா..
அலோபதியும் ஆயுர்வேதமும் பேசவா இப்படி ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி ஓடோடி வந்தே அத்தை..நான் வீர வசனம் பேச..
அப்பறம் தோணித்து ..எத்தனை சுலபமா சொல்லிட்டேன்..
வலிகள்.. உடல் மன ரீதியாக வயதான காலத்தில் இவர்கள் படும் அவஸ்தை..நாம் நம் குழந்தை களுக்கு பாரமாகி விட்டோமோ என்கிற ஒரு உறுத்தும் உணர்வு..
அவர்கள் இன்றைய கவலை..நாளை எனக்கும் வரும்..
மனதளவில் தயார் படுத்திக் கொள்ள பள்ளிப்பாடம் எதுவுமில்லை.. மனத்தை பக்குவப்படுத்த கத்துக்கணும்..
Prayers for the dignity at the end of life for the elders and for myself too.

No comments: