Rains..Refresh..relive...
சின்னச் சின்ன தூறல் என்ன..
மழை தூறல் போல இருக்கே..குடை எடுத்திண்டியா..extra socks ஒன்னு bag ல இருக்கா..ஈரக் காலோட இருக்காதே...
கொசு கடிச்சுட போறது..என் friend க்கு 4 th type dengue ..careful ஆ இரு..(school கிளம்பிய பெண்னுக்கு advice மழை..எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்..!!.)
மழை நாட்கள்..சின்ன சின்ன இன்பங்கள் அனுபவங்கள்..
சின்னச் சின்ன தூறல்..
சின்ன சின்ன சந்தோஷம்
சின்னதாய் குளம் கட்டும்..(பத்து germs பத்தி பாடம் சொல்லாத அம்மா..dengue கொசு ..அப்படினா என்னனே தெரியாது)
சீறிப் பாயும்..கப்பலும்..கத்திக் கப்பலும்..
கரையேர முயற்சிக்கும்..கை தட்டி competition..
கொஞ்சம் வளர்ந்த நேரம்..படிப்பு சுமை ஏற ஆரம்பிச்ச நேரம்..maths test லேர்ந்து தப்ப..மழை வேண்டி மனு... கண்டிப்பா...தள்ளுபடியாகிடும்..
மொறு மொறுனு வடாம் காயணும்..அம்மா வேண்டிப்பா..
மொட மொடனு கஞ்சி போட்ட ஆர்கண்டி புடவை காயணும்..சித்தி வேண்டுதல்..(காய்ஞ்ச புடவை மடித்து எடுத்துவைக்கிற வேலை நம்முது..எங்கேயானும் ஒடஞ்சிடுமோனு ஒரே tension ஆகிடும்..தப்பித் தவறி மழை வந்ததோ...ஊருக்கே கூழ் ஊத்தலாம்..)..
மழை வந்தா..lending library காரன் இன்னியொட விகடன் தரமாட்டானே...ஐயோ வருண பகவானே..கொஞ்சம் கருணை காட்டுப்பா..பாட்டி வேண்டிப்பா..
ஒருவழியா ஒரு நாள் மழை வரும்.புக் நனையாமல் அதுக்கு கவர் போட்டு...rain coat ஐ மழையில் ஒரு நனை நனைச்சு...பத்தரமா உள்ள வைச்சுட்டு..சொட்ட சொட்ட நனைஞ்ச நாட்கள்...(அடுத்த நாள் தொண்டை வலியுடன் சரவணன் டாக்டர் கிளினிக்கில் முனகும் நேரம்..உண்மைவிளம்பி தோழி ஒருத்தி பத்த வைப்பாள்...aunty aunty..இவ என்ன பண்ணா தெரியுமோனு...வெந்த புண்ணுல வேல்..வரேன் இரு மவளே..கருவிக் கொண்டே நான்...'அதான் விஷயமா..ஆத்துக்கு வா..இருக்கு உனக்கு... மீதி வெள்ளித்திரையில்.).நினைக்க நினைக்க சுகம்..
அப்பறம் சைக்கிள் கத்துண்ட கொழுப்பில்..உயிர்த் தோழியுடன் ஒரு கை விட்டு..ஒஹோ..மேகம் வந்ததோ பாடி மழையில் ஊர் சுற்றி (பெரிய ரேவதினு நினைப்பு)...
நினைவலையில் இருந்து வெளி வரச் சொன்னது ...வாசல் calling bell..
சொட்ட சொட்ட மழையில் நனைந்த என் பெண்..
ஐயோ ...நாந்தான் குடை எடுத்துண்டு கீழ வறேனே..அதுக்குள்ள..ஏண்டா நனைஞ்சிண்டு வந்தே..
it was fun maa..
ஒன்றும் பேசாமல் உதவினேன்..