Monday, July 19, 2021

Windows_வழி_வாழ்க்கை

 #Windows_வழி_வாழ்க்கை..


அட..நானு கம்ப்யூட்டர் விண்டோஸ் சொல்லலைங்க..நம்ம வீட்டு ஜன்னல் தான்  சொல்றேன்..


சிறைக்கைதியாய்..கம்பிகளுக்கு பின் நான்..

சிறகடித்து பறந்த வெண்புறாக்கள்..

சீட்டுப் பிரச்சனை அங்கேயுமா?


என்ன தான் செய்யப் போறாங்கனு..

ஆசையா பார்த்துக் கொண்டிருந்தேன்..


படபடக்கும் பறவையை 

படமும் பிடித்தேன்..


அடடா. என்ன அழகு..


"அங்கே தான் அவ்வளவு இடம் இருக்கே..

இங்கே ஏன் வந்து நடுவுல நுழையற..?'


"இல்ல..இல்ல..இங்கே தான் எனக்கு வேணும் இடம் ..'

சுத்தி சுத்தி வந்தது..ஒரு புறா..


விடா முயற்சி..

விடவே இல்லை..


என்ன தோணித்தோ..மற்ற புறாக்களுக்கு..


' வா..வந்து உட்காரு..உன் தொல்லை தாங்க முடியலை' 


இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் நகர்ந்து..இடம் கொடுக்க..


அப்பறம்..அவங்க அரட்டை கச்சேரி .


ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..


இப்படித்தான்..


தோழிகள் எல்லாரும் மாடிப்படியில் உட்கார்ந்து அரட்டை அடிக்கும்போது...

புதுசா யாராவது வந்தால் ..

இடம் கொடுக்கலாமா..வேண்டாமானு கண்ணால் பேசிப்போம்😀


ஒரு சின்ன நாடகம் ..சத்தமே இல்லாமல் அங்கேயும்  நடந்தது ..


ரசித்தேன்..அவை கலைந்து போகும்வரை..


No comments: