Sunday, July 18, 2021

Tunnel_thoughts

 #Tunnel_thoughts



பயணங்கள் எப்பவும் சுகம் தான்..

அதுவும் மலையும் நதியும் சூழ..குளிர் காற்று நம் கூந்தலை கலைக்க..

ஜன்னல் வழி ..ஒரு காமிராக் கண்களுடன் பயணம் அலாதி தான்.


" ஏறி இறங்கி ,சாலையின் விளிம்பில் ஓடும் வண்டிகள்..

பயம் கவ்வும்..

" இப்போ ஒரு மூணு கிமீ..tunnel க்குள்ளே போகப்போறோம்..' 

வீட்டுக்காரர் சொன்னதும்.. முதல்ல .

ஒரு ஃபோட்டோ..


அப்புறம் தான் entry.


Tunnel உள்ளே நுழைய..

கீற்று வெளிச்சம் குறைய..

கலங்க ஆரம்பித்தது மனம்..

கும்மிருட்டில் ..

கார்கள் வெளிச்சத்தில்..


'இன்னும் எவ்வளவு தூரம்ப்பா?'

கண்ணை மூடிக் கொண்டு கேட்டேன்..


இருட்டை எதிர்கொள்ள ஏனிந்த பயம்?

இமைப் பொழுதில் முடியாதா..

இந்த குகைக்குள் பயணம்?


ஆயிரம் கேள்விகள்?


இந்த tunnel வழி சென்றால் தான் ..

இயற்கை அழகு கொஞ்சும்..இடங்களைப் பார்க்க முடியும்..

பொறுமை..பொறுமை..


அவர் சொல்லச் சொல்ல..

லேசாக வெளிச்சக் கீற்று ..

ஊ..ல..லா..பாடி வர..

உயிரே வந்தது..

ஊரும் வந்தது..


இப்போதும் அப்படித்தான் இருக்கிறோமோ..?

விடியலும் வரும்..

வெளிச்சமும் வரும்..


அதே வழியில் திரும்பி வந்தேன்..

அப்போது பயமில்லை..

அங்கு வேலை செய்பவர்களையும், திறமையாக எங்களுக்கு காரோட்டி வந்தவரையும் பார்த்து நன்றி சொன்னேன்..


இருட்டு..நிரந்தரமல்ல.

அன்புடன்

.....

No comments: