Monday, July 12, 2021

சுட்ட வாழைப்பொடியும் பச்சை மோர்க்குழம்பும்.



 வாங்க  சாப்பிடலாம்..


வா(ழ்)ழைக்காய் ஜிங்கலாலா..


#பாரம்பரியஉணவுஅல்ல ..அல்ல.

அதைவிட..புனிதமானது..புனிதமானது..

எங்க புதுக் கோட்டை உணவு.

எல்லா வீட்டிலும் ஒரு குடும்ப பாட்டு இருக்கோ..இல்லையோ..கண்டிப்பா ஒரு குடும்ப பண்டம் ஒண்ணு இருக்கும்.

அதுதான் இது.


சுட்ட வாழைப்பொடியும் பச்சை மோர்க்குழம்பும்.

----------------++++--+++++++++--------------++++-+-++++---

வாழைக்காய் ..பெயரைப் பார்த்ததும்..வாயு என்று விழுந்தடித்து ஓடத் துடிக்கும் மக்களே

stop stop..


பல நாள் கழித்து சகோதர சகோதரிகள் ஒண்ணா சேரும்போது ..அரட்டைக்கு நடுவில் கொஞ்சம் அடுக்களையும் பார்ப்பார்கள் இல்லையா?

' நம்ம அம்மா செய்வாங்களே..இந்த டிஷ்..எத்தனை டேஸ்ட்டா இருக்குமநு நினைவலைகள் பின்னோக்கி கூட்டிப் போகுமா இல்லையா?

அதேதான்..எங்க அப்பா,பெரியப்பா அத்தை ஒண்ணா சேரும்போது கண்டிப்பா இந்த ஐட்டம் உண்டு.

செய்முறை

சுட்ட வாழைக்காய் பொடி

வாழைக்காய் -1 (3 பேருக்கு)

து.பருப்பு 1 ஸ்பூன்

க்.பருப்பு 1 ஸ்பூன்

உ.பருப்பு 1/2 ஸ்பூன்.

புளி கொஞ்சம்

மிளகாய் வத்தல் 5 or 6

பெருங்காயம் .

எல்லாத்தையும் எண்ணெயில் போட்டு வறுக்கனும். மிக்ஸியில் பவுடர் பண்ணிக்கணும். 

வாழைக்காயை அலம்பிவிட்டு , எண்ணெய் தடவி அடுப்பில் தீயாமல் சுட்டு எடுக்கணும்.

ஆறினபிறகு தோலை உரிச்சுடுவேன்னு உரிச்சு..காரட் துரு்வலில் துருவி..அரைத்து வைத்த பொடியோடு உப்பு ,சொட்டு வெல்லம் சேர்த்து கலக்கணும்.. very simple.


பச்சை மோர்க்குழம்பு

------------------------------------------

1ஸ்பூன் கடுகு..எண்ணெயில்லாமல் லேசா வறுக்கணும். அதோட ரெண்டு பச்சை மிளகாய் கொஞ்சம் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் கிர்ரணும்.

இதை தயிரில் கலக்கணும். மேலே கருவேப்பிலை தூவணும்.

அவ்வளவுதான். ஒரு ஜீரக ரசம் வைத்து விட்டு..மீண்டும் அரட்டை continue செய்யலாம்.


டப்பாவில் இந்த பொடியை போட்டு வைக்க..என்னை மாதிரி multi cuisine எல்லாருக்கும் செய்து கொடுத்து விட்டு மோர் சாதத்துக்கு செட்டில் ஆகும் அம்மாக்களுக்கு இது அமிர்தம்.


ஒரே ஒரு டிப்பு தரேன்.

எதைச் சாப்பிட்டாலும் லார்ட் லபக் தாஸாக முழுங்காமல்.பகவான் கொடுத்த 32 பல்லையும் உபயோகித்து நன்றாக அரைத்து saliva வுடன் சேர்த்து சாப்பிடும் போது உணவின் சத்தெல்லாம் சரியாக இரத்ததில் போய் சேரும்.

வாழைக்காய் வறுவல், பொரியல்,கூட்டு, பொடிமாஸ்..இதோட இதையும் செஞ்சு பாருங்க..

சந்தோஷமா இருங்க.

No comments: