Sunday, July 4, 2021

கோவில் பிரசாதம்..

 Morning walking combined with temple 

Visit is a bliss in Bangalore.

The silence amidst chantings is a divine experience.

And above all,the prasadham they offer 

Is truly awesome..so tasty

Namma bengaluru..


கோவில் பிரசாதம்..


வாக்கிங் போகும்வழி..

வருமே சிவன் கோவில்..

வலமாய்ச் சுற்றி வந்து..

வரமே வேண்டி நின்று..

வெளியே வரும் வேளை..

வழியும் நெய்யோடு

வாரியிறைத்த முந்திரியுடன்..

வட்டில் வெண்பொங்கல்....

வழங்கி மகிழ்ந்தாரே..


எரித்த கொழுப்பெல்லாம்..

ஏளனமாய் பார்த்திடுமே..


சொர்க்கம் காட்டி நீயும்..

சோதனையே செய்தாலும்..

சொக்கிட மாட்டேனே..

சொக்க நாதாவே..!!!


பொட்டல த்தில் கட்டியுமே..

விட்ட நடைத் தொடர்ந்தேனே

வீட்டுக்கு போய் அங்கே..

பொதுவாய் பங்கிட்டுண்ண..


கனவாய்ப் போனதே..

கையில் கிடைக்கும் பிரசாதம்..


அந்த நாளும் வந்திடாதோ..

ஆவலுடன் நானிருக்கேன்..

அலங்காரத்தில் உன்னை ரசிக்க..

ஏங்கிடுமே என் மனதும்..🙏

No comments: