Saturday, July 10, 2021

Thanks giving


 நன்றி..நன்றி..நன்றி


பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு..

பக்கம் பக்கமாய்  எழுத ஆசை.. நன்றி நவிலல்..'பா"..


அதற்கு பதில் சமர்ப்பித்தேன்..

நாவில் ஊறி..கரையும் "பா'


அளவான இனிப்பு சேர்த்து..

அளவில்லா அன்பு சேர்த்து.

ஆசையாகக் கிண்டிய 'பா'..

அகிலாவின் 'பா'..இது

அடுக்களைப் ...'பா'


கரைந்த அன்பில் உருவான "பா"..

கரைந்து காணாமல் போகும் என் "பா.".

கடையில் வாங்கியதில்ல இந்தப் "பா"..

கை வலிக்க கிளறிய "பா"..

என் வீட்டு "மைசூர்ப்பா"..


எடுங்க ஒரு ஸ்லைஸப்பா..

இதுவே என் ஸ்டைலப்பா..


என் வீட்டு சம்படத்தின்

மைசூர்ப்பா எல்லாம்  கேட்டுப் பார்..

என் நட்பூஸ் பேர் சொல்லுமே..


Thanks so much my friends for making my day so special🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments: