Wednesday, July 14, 2021

விடுகதை

 விடுகதையாய்  வாழ்க்கை ஒட

கவிதை என்ன நான் எழுத?


பதைக்கும் நிலை இருக்க..

கதை என்ன நான் சொல்ல?


ரசமில்லா வாழ்க்கை ஓட

ரெசிபி என்ன நான் செய்ய?


உப்பு சப்பில்லா வாழ்க்கையுடன்

உறவாட பழகி விட்டேன்..


எல்லாம் இருந்தும்.. 

இல்லை எதுவுமென்றான பின்னே..


இயக்கமது குறைந்த பின்னே..

இயந்திர கதி வாழ்க்கை போய்..


இல்லமே..எல்லாமுமாக..

இயங்கக் கற்றேனிங்கே..


கத்தலில்லை..கூச்சலில்லை..

கற்றேன்..

அமைதி..அன்பு..கூடி வாழ்தல்..


கற்க இன்னும் 

கடலளவு இருக்க..


கற்றதை நடைமுறையாக்க..

கொடு..நீயும்..ஒரு வாய்ப்பு..

கொடூர நோயை விரட்டு..மனித

குலத்தை நீ காப்பாற்று..🙏


No comments: