Friday, July 9, 2021

வரம் தந்த சாமிக்கு..

 வரம் தந்த சாமிக்கு..


'நர்ஸ்..நர்ஸ்..மணி என்னாச்சு இப்போ..இன்னிக்கு திங்கட்கிழமை.. ராகுகாலம் ஏழரைக்கு ஆரம்புச்சுடும் அதுக்குள்ள எனக்கு டெலிவரி ஆகணும்..ப்ளீஸ்..ப்ளீஸ்..'

வலி தந்த ஈனச் சுவரத்தில் செவிலியிடம் முறையிட்டபடி அந்த அம்மா ..

ஆங்கிலோ இந்தியனான எமிலியா என்ற நர்ஸ் ..what.. raagu..இன்னா சொல்றே man..ஒண்ணு ம் புரில..அவள் விரட்ட..

தாயைப் பிரிய மனம் வராது அந்த சிசு நழுவி ஓட..நான் இங்கேயே இருக்கேனே..எதுக்கு வெளியே போகணும்னு திமிற..

ஒரு வயதான பாட்டியின் குரல்..' அம்மானு கத்தாதேடி..அப்பறம் குழந்தை உனக்கு மட்டும் உன் அம்மா வேணும்..நான் மட்டும் உன்னை வுட்டு வெளியே வரணுமானு உள்ளயே இருக்கும்..சுவாமியை நினச்சுக்கோ' 

அந்த சிசுவின் ஜனனம் நெருங்க ..கடவுள் வந்து அதன் காதில் கிசுகிசுத்தார்..' புது உலகு காணப் புறப்படு குழந்தாய்..உனக்கு எல்லாம் ரெடியா காத்திருக்கு..உயிராய் உனை காக்க அம்மா அப்பா, ஊட்டி வளர்க்க தாத்தா பாட்டி, தங்கத் தட்டில் தாங்க உடன்பிறப்புகள், பாதி சொர்க்கமாய்ப் புகுந்த வீடு, சுற்றம் நட்பு....எல்லாம் எல்லாம் ..


சந்தோஷங்களோடு சவால்கள் பலவும் சரமாரியாகக் காத்திருக்கு. சிந்தையில் எனைக் கொண்டு  சிறப்பாய் எதிர் கொள்வாய். அன்பு எனும் அட்சயப் பாத்திரம் உனது. அகிலத்துக்கும் வழங்கு . அன்பால் உலகை ஆள் நீயும்.

கடைசியாய் ஒன்று.. அள்ளித் தருபவன் நான். அதைத் தா..இதைத்தா எனக் கேட்டு அளவுகோல் இடாதே..நேரம் வந்தாச்சு. வெளியே போ..தள்ளப்பட்ட சிசு வெளியே..வீறிட்டு அழுதபடி.

அரை மயக்கத்திலும் அம்மா..' ராகு காலம் இன்னும் வரலையே ..என்ன குழந்தை எனக்கு பிறந்திருக்கு என்று கேட்க...ஆஸ்பத்திரி வராண்டாவில் ஆரவாரத்துடன் குழந்தையின் தாய் மாமன், சந்தோஷச் செய்தி பரப்பிக் கொண்டிருந்தான்..'அக்காக்கு ரோஜாப்பு மாதிரி ஒரு பொண்ணு பிறந்திருக்கு'.


deep from my heart i am thanking each and everyone who all made my day so special and memorable. Thanks  a ton my dear friends

No comments: