Monday, July 26, 2021

ஆடிக் கிருத்திகை

 ஆடிக் கிருத்திகை


ஆடிக் கிருத்திகை இன்று

அழகன் முருகன் நாளின்று..

ஆறுமுகா என்றழைக்க

ஆனந்தமாய் வந்திடுவான்

கந்தா என்று கூவ

வந்தேன் என்பான் அவன்..

குமரா என்று கும்பிட

குறைகள் தீர்ப்பான் அவன்

வேலா என்று விளம்ப

வினைகள் விலக்குவான் அவன்

கடம்பா என்று கதற

கைப்பிடித்து நடத்துவான் அவன்..


"கந்த சஷ்டி கவசம்" சொல்ல

களைவான் கவலைகள்.

"வேல் மாறல் " படிக்க

விலகுமே வருந்துன்பம்

" சர்வ சத்ரு சம்ஹார வேல் பதிகம்'

சகல பயமும் நீக்கும்..

'சரவணபவ ' எனும் சந்தம்

சரளமாய் நாவில் சொல்ல

சங்கடங்கள் நீங்கும்

சகல செளபாக்கியம் கிட்டும்.


கவசங்கள் பல  அணிந்து 

காட்சி தரும் அவனை

கவசம் படித்தழைக்க

காக்கவே ஓடி வந்திடுவான்

கருணை மழை பொழிந்திடுவான்.

காருண்ய நாதனாய்

கவலைகள் தீர்த்திடுவான்.


வேலும் மயிலும் துணை.

வேலும் மயிலும் துணை.

No comments: