Thursday, October 5, 2023

Madhyamar-ஒட்டி..#எட்டி

 #sunday topic

#ஒட்டி..#எட்டி 10-02-22


பாட்டியோடு ஒட்டிக் கொண்டு..அவள் புடவைத் தலைப்பில் ஒளிந்து..எட்டி பார்க்கும் குட்டிப் பெண் அகிலா கண் முன் வந்தாள்.


' வாடா கண்ணா..நான் உன் அத்தை..நான் உன் மாமி"..

இப்படி உறவுகள் கை நீட்ட..


ஒரு கையை பாட்டியின் கையோடு இணைத்து..

மறுகையை மட்டும் நீட்டிய குட்டிப் பெண்..


"ஒட்ட மாட்டோளோ எங்க கிட்ட எல்லாம்.."..

வந்தவர்கள் சொன்னதுமே..

வருந்துவாள் பாட்டி.


" ரெண்டு நாள் எங்களோட அனுப்புங்கோ..அவளும் பழகுவா"..அங்கே குழந்தைகள் நிறைய இருக்கா..

பையில் துணி அடுக்கப்படும்.


அங்கே போய் இறங்கினதும் கொஞ்சம் கொஞ்சமாக புரியும்..

ஏற்கனவே அங்கே gang form ஆகி இருப்பது..

"இவளையும் சேர்த்துக்கோங்கோ..விளையாட்டுக்கு'...

ஆணை பிறப்பித்து அடுக்களைக்குள் போவாள் அத்தை..


பந்து பொறுக்கி போடவும்..செருப்பை பார்த்துக்கவும் எப்பவுமே புதுசா சேருபவருக்கு ட்யூட்டி தானே..


அவர்களாலும் ..திடீர்னு குதித்த என்னோட ஒட்ட முடியாது.

நான் ஒட்ட நினைத்தாலும்..எதோ அவர்கள் குழுமத்தை பிரிக்க வந்தது போல எட்டி ஓடுவார்கள்..


இது ஒரு சைக்காலஜி. நம்ம டீம் லேர்ந்து எங்கியாவது அணி மாற்றம் நடந்துடுமோனு ஒரு கவலை.


கடைசியில்..

அவ ஒத்தையோனோடி..

அதான் அப்படி இருக்கா".

அத்தையின் மாமியார் ...என் பிஞ்சு காது பட சொல்லுவாள்.

அத்தை என் சப்போர்ட்டுக்கு வருவாள்.


என் காலத்தில் ஆரம்பிச்சாச்சு nuclear family. 

Very clear families.

நீ செளக்கியமா..நான் செளக்கியமா?அந்த லெவலுக்கு கொஞ்சம் மேலே..கூடிக் குலாவுவோம்


பண்டிகையா..நல்லதா கெட்டதா ..

ஒண்ணா கூடுவோம். கொண்டாடுவோம்.

அப்புறம் ..அவரவர் கூடு தேடி பறந்து விடும் நிலைதான்.


ஒட்டி ..பின் எட்டிச் சென்ற ஒரு சந்ததி கண்டேன்.


ஒட்டி..ஒட்டியே மட்டும் இருக்கும் என் பெற்றோரின் உடன்பிறப்புகளின் பிணைப்பு கண்டேன்.


எட்டி..எட்டி செல்பவர் கண்டேன்


ஒட்டி..எட்டி..பின் ..ஒட்டிக் கொள்பவர் கண்டேன்.


ஒட்டி வாழ்ந்து ஒற்றுமையைக் காட்டியது ஒரு சந்ததி என்றால்..


எட்டி வாழ்ந்தும் ..

ஒற்றுமையைக் காக்க முனைவது இந்த சந்ததி.


"எனக்குப் பிறகு ..உனக்கு யாராவது வேணுமே.."

அந்த எண்ணம் தானோ.

நம்மை இன்னும் பிணைப்பில் இருக்கச் செய்கிறது .


ஒட்டி வாழ்ந்த அந்தக் காலத்தில் ..ஒரு dependency இருந்தது. அது சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.


For example..

அஞ்சு விரலும் ஒன்றில்லையே..

Economic constraints in a way helped them not to cut the chain of relationships.


ஆனால்..இப்போ..

"In" dependence'...இல்லா வாழ்க்கைத் தரம் உயர..


கற்றுக் கொண்டோம்...

ஒட்டி இருந்துதான் இருக்கணும் என்றில்லை..


எட்டி இருந்தாலும்..

' உனக்கு நானிருக்கேனு".. ஒரு ஒடி வந்து physically, mentally and psychologically தரும் support இருக்கே.

அது மலையை விடப் பெரிது.


So..

நம்ம குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தரப் போறோம்?


நாம் ஒருவரைப் பற்றி judgemental ஆக பேசுவது ..அவர்கள் மனதின் ஆழத்தில் பதிந்து விடுகிறது.


அப்புறம் ..நாம..எத்தனை தான் ஒட்டு ..ஒட்டுனு சொன்னாலும்.

எட்டி எகிறி குதித்து ஓடிடுவாங்க.


காட்டிக் கொடுப்போம் ..in a positive way ..how relationships are built and maintained.


எனக்கு ஒட்டி இருப்பதுதான் பிடிக்கும் என்றாலும்..

என் எதிர் நிற்பவரின் மனதைப் படிப்பேன்.💪💪


Bulb ஒண்ணு எரியும்.💡💡


பாதை தெரியும்..

ஒட்டணுமா?..எட்டி ஓடணுமா? என்று.😃😃


Many times..

நம்மளோட முடிவுகள் எடுக்க..

..எதிராளியின் reaction அதிகளவு உதவி செய்யும் என்று நம்புபவள் நான்.


வாழ்க்கையே ஒரு விளையாட்டுத் திடல் தானே..

பாத்திரம் பல ஏற்கும்போது

Escape ஆ..?

Sellotape ஆ..?

சொல்லிக் கொடுக்கப்படும் தானே???

Madhyamar- சித்திரம்_பேசுதடி

 #சித்திரம்_பேசுதடி 09-07-22


மாமா: இன்னிக்கு மத்யமர் பார்த்தியோன்னோ?..நம்ம படத்தை வரைஞ்சு ஒரு கலக்கு கலக்கிட்டா ரேவதி பாலாஜி..என்னமா எல்லாரும் அதைப் பார்த்து எழுதிண்டு இருக்கா தெரியுமோ?..ஒரே ஒரு மணி நேரம் தான் நம்மாத்ல இருந்தா..நம்ம expressions எப்படி வரஞ்சு இருக்கா பாரு..she is awesome. .


மாமி: இங்க கொண்டாங்கோ நான் பாக்கறேன்..


பார்த்த மாமி...உடனே..

ஃபோனைப் போடுங்கோ..ஃபோனைப் போடுங்கோ சொல்றேன்..

முதல்ல எனக்கு இப்போ ரேவதி கிட்ட பேசணும்...


மாமா; (மை.வா..) ஆண்டவா ..இவ இப்போ அம்பியா..ரெமோவா..??ரேவதி உன்னை அந்த பாலாஜி தான் காப்பாத்தணும்..


 Call connected

 ரேவதி: சொல்லுங்கோ மாமா..

 

மாமி: மாமா ..இல்ல..மாமிதான் பேசறேன்..ஏண்டிமா...உனக்கு எங்கேர்ந்து இப்படி ஒரு புடவை கலர் காம்பினேஷன் கிடைச்சுது ..??!!!


ரேவதி:..மாமி.....அதுவந்து...எனக்கு இந்த கலர் ரொம்ப பிடிக்கும் ..அதுதான் ..உங்களுக்கு ரொம்ப எடுப்பா இருக்குமேனு.....

ஸாரி மாமி..ஆனா..நீங்க அன்னிக்கு ஒரு light combination கட்டிண்டு இருந்தேள்...


Other side ல்..ஒரு விசும்பல்..


மாமி:...அதையேன் கேக்கற..இந்தக் குடும்பத்துக்கு வாக்கப்பட்டு வந்த நாளிலேர்ந்து ஒரே லைட் கலர் புடவ தான்..ஒரு அழுது வடியற பிஸ்கட் கலர்..இல்லாட்ட ஒரு coffee brown..

குடும்பக் கலர்னு ..அந்தக் கொடுமையை எங்க போய் சொல்ல..


ரேவதி👀👀👀👀 (மாமி என்ன சொல்ல வரா..!!!!)


மாமி:..நீ மகராசியா இருக்கணும்..பளிச்னு ஒரு மஜந்தா கலரில் பச்சை பார்டர் புடவை..எனக்கு எத்தனை அம்சமா இருக்கு தெரியுமோனோ..அதுக்கு thanks சொல்லத்தான் phone பண்ணினேண்டியம்மா..

(சைடில் திரும்பி)..ஏண்ணா..இந்த drawing அப்படியே ஒரு frame பண்ணி நம்மாத்து கூடத்துல மாட்டுங்கோ..


மாமா:..by order..

செஞ்சுடறேன்..

செஞ்சுடறேன்..

ரேவதி....எனக்கும் ஒரு சின்ன ஆசை..

ஹி..ஹி..ஹி...அப்பிடியே எனக்கும் ஒரு மயில் கண் வேஷ்டியா வரைஞ்சு கொடுத்துட்டேள்னா..

இன்னும் ஜோரா இருக்குமோல்யோ..????


ரேவதி: 😩😩😩😩😩 இந்த public demand ரொம்ப ஜாஸ்தியா போயிண்டிருக்கே..🤣🤣🤣🤣

Madhyamar-கனவு_வேலை


 #sunday_topic

#கனவு_வேலை Nov 2022


" எப்படித்தான் நாள் பூரா வீட்ல இருக்கீங்களோ..?"..

கனவு நிஜமாகி..

கைப்பையைத் தூக்கிக் கொண்டு வேலைக்கு செல்பவர்கள்....கரண்டியும் கையுமா இருக்கும் இந்த அகிலாவைப் பார்த்து அடிக்கடி கேட்கும் கேள்வி..

' நானும் தான் வேலைக்கு போயிருக்கேன்'..நான் சொல்வது காதில் விழாத மாதிரி நகரும் கூட்டத்துக்குள் ...


என்ன செய்வது?..


என் குழந்தை இஞ்சினியர் ஆகணும் ..டாக்டர் ஆகணும்னு ..பிறக்கும் போதே முத்திரை குத்தும் கனவுத் தொழிற்சாலையில் பிரசவமாகாத product நான்.


அப்பாவும் அம்மாவும் தங்கள் குடும்பத்துக்காக ஓடிய ஓட்டத்தைப் பார்த்து..நான் பின் தங்கி விட்டேனோனு..அடிக்கடி எண்ணம் வரும்.


என் கனவும் பலிக்காமல் இல்லை..ஆனால், பாதியில் நின்று போச்சு..அவ்வளவுதான்.


இப்படி ஆகலாமா..அப்படி ஆகலாமா?..

அகலாமல் தொடர்ந்த கேள்விக்கு விடை தேடி..

ஓடினேன்..ஓடினேன்..

Accounts ,audit ,finance ...ரொம்ப பிடிக்கும்..


பரிட்சை பல எழுதினேன்..என் பலம் காட்ட முடியவில்லை..

இண்டர்வியூ ..இடைவிடாமல் சந்தித்தேன்..இன்ன காரணம் என்று புரியாமலே நிராகரிக்கப்பட்டேன்..


நேரம் சரியில்லை..நகர்ந்து வழி விடும் என்று நினைத்து..

கிடைத்த ஒரு சின்ன வேலையைப் பிடித்துக் கொண்டு..திறமை காட்டினேன்..


சித்தி..பாங்க் உத்தியோகத்தில் கிளார்க்காக கலகலப்பா இருந்தது பார்த்து கனா கண்டேன்.அவள் உயர்ந்தபோது..மீண்டும் கனவு கண்டேன்.

அம்மாவை..அதிகாரியின் நாற்காலியில் பார்த்தபோது ..கனவு கண்டேன்..


நானும் கிளார்க்காக சேர்ந்து..குறுகிய காலத்தில் accounts department ல் கிடுகிடுனு பதவி உயர்வு பெற்றேன்...அந்த நிறுவனத்தில். 


.சுழல் நாற்காலியில் அமர்ந்து எங்களை பம்பரமாக சுழல வைத்த சீனியரைப் பார்த்து கனவு கண்டேன்..

"இன்னும் கொஞ்சம் தூரம் தான் வா.."என்று கையைப் பிடித்து தூக்க நினைத்த அவரின் அன்புக்கரத்தை விட்டேன்..வீட்டில் ஆசையாய் முதல் பெண் பிறந்தபோது..


எட்டாக்கனியாகும் இனி வேலை என்பது புரியாமல்..அவர் அட்வைஸை..அப்புறம் எடுத்துக்கொள்ளலாம் என்று விட்டேத்தியாய் வீடே உலகம் என்று ஆனேன். ( அங்கே தான் தடுமாற்றம் started)


அப்புறம் என்ன..?

விட்டதை புடிக்க முடியல..


களம் இறங்க நினைத்தபோது..காலம் ஓடிப்போச்சு.


உங்க resume ல இவ்வளவு இடைவெளி இருக்கேனு...வேலை தேட மீண்டும் ஆரம்பித்தபோது..

உள்ளே நுழைய இடமில்லை..


காலச்சக்கரம் ஓட..

என் கனவைத் துரத்துவது இருக்கட்டும்னு...

குழந்தைகள் கனவுக்கு ..கை கொடுத்தேன்..


எல்லாரும் சொல்ற மாதிரி..என்ன இது பெரிய தியாகமா..it shows your incompetency ....


ஏச்சுகளை காதில் போட நேரமில்லாமல்....ஓடினேன்..

அம்மாவாய், தோழியாய்,டீச்சராய், சாரதியாய். ...எத்தனை வேலை செஞ்சேன்..


சரி..நமக்கு..வருமானம் வரும் வேலைதான் ராசியில்லை..


வாலண்டியரா சில நிறுவனங்களுடன் இணைந்தேன். 

மாற்றுத் திறனாளி குழந்தைகளிடம்  நிறைய  கற்றேன்.

இவர் ஸைட்டில் இருந்த ஸ்கூலுக்கு இங்கிலீஷ் டீச்சராக ஜாலியா என் ரெண்டாவ்து பெண்ணை கைக் குழந்தையாய் தூக்கிக் கொண்டு சென்றேன்.


இப்போ கொஞ்சம் மீண்டும் ப்ரேக்.

அப்பாவை தனியா நீயே சாப்பாடு போட்டுக்கோ..நான் ஓடறேன்னு சொல்ல மனசில்ல. So, எனக்கு பிடிச்சதை செய்து..me happy.


இப்படியாக சின்னச் சின்ன கனவுகளுடன் என் பயணம்..

அதில் கிடைக்கும் களிப்பும் அலாதி. இப்படி எழுத்து, drawing ,keyboard, பாராயணம், ஊர் சுற்றல் ..இப்படினு life is moving.


தூக்கத்தில பாதி முழிச்சதும்..காணும் கனவு தொடருவதில்லை..அதே போலத்தான் ..தொடராக் கனவு..


அப்பப்போ..GM finance ஆ ஆகியிருப்பேனா..அதுக்கும் மேலேயும் போயிருப்பேன் இல்லனு என் பெண் கிட்ட கேட்டு..செம்ம டோஸ் வாங்குவேன்.


கடைசியா..ஒரே ஒரு திருப்தி..


டேபிள் எட்டாத வயசில் வேலைக்குச் சேர்ந்து..எட்டா உயரம் போகணும்னு நினைத்து ...சாதித்த என் அம்மாவுக்கு .....அவள் கனவு மெய்ப்பட கை கொடுத்தேன்..


என் பசங்களின் கனவோடு ..இன்றும்..அவர்களுக்கு support ஆ இருக்கேன்.


பலமாக..பாலமாக..என் அன்புக்குரியவர்களுக்கு இருப்பது..நான் கனவிலும் நினைக்காத ஒன்று.


அத்ற்கு எப்போதும் என் நன்றியை சாமிக்கிட்ட சொல்லுவேன்...


So no regrets..me ..always happy

Madhyamar-திருமணம்

 #Sunday_topic


திருமணம் பெண்ணின் வாழ்க்கையை முழுமையாக்குகிறதா?


இமை போல் குடும்பத்தை காத்தால்..முழுமை..


ஊமை மாதிரி சமயத்துக்கேறாற் போல்  நடந்தால் ..முழுமை


கடமைகளை ..கடமையேனு செய்யாம இருந்தால் முழுமை.


அட..இதெல்லாம் ஒரு சுமையானு..யோசிக்காம இருந்தா ..முழுமை.


பொறுமையோடு இருந்தால் ..முழுமை..


பொறாமை தள்ளி வைத்தால்..முழுமை.


நன்மை மட்டும் நினைத்தால் முழுமை..

தீமை வருமுன் காத்தால் ..முழுமை..


நம்மை மட்டுமே யோசிக்காதது..முழுமை.


பதுமைகள்...புதுமைப் பெண்ணானால் முழுமை.


தோழமை பாராட்டினால் முழுமை.

பகைமை விரட்டினால் முழுமை.


வலிமை காட்டினால் முழுமை

வலிகளை 

எளிமை வாழ்வு முழுமை.


உரிமை கோருவதும் முழுமை

தலைமை ஏற்பதும் முழுமை.


திறமையான நிர்வாகம்..முழுமை

பழமைக்கும் புதுமைக்கும் பாலம் ..முழுமை


ஒற்றுமைக்கு உழைப்பது முழுமை

நடுநிலை காப்பது முழுமை.


Honestly speaking , இப்படி பல ' "மை" கள்..மைல்கற்கள்..

..added with little pinch of " மையல்"..

திருமணத்திற்கு பின் ,பெண்ணின் வாழ்வை முழுமையாக்குவது உண்மையே..


Adventure செய்ய உதவும்...

அடடா..நானா செய்தேன்னு ..

அப்ளாஸ் நமக்கே நாம் கொடுக்க உதவும்..


That moment of self satisfaction..கண்டிப்பா திருமணத்தின் மூலம் முழுமை கிடைக்கச் செய்யும்.


' எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று..ஏதோ ..அது எதோ..உன்னிடம் இருக்கிறது..இருக்கிறதுனு.."..


கணவர் மட்டுமல்ல..

குடும்பமும் சொல்லும்போது..

கண்டிப்பா..முழுமை கிடைக்கிறது.


அம்மா கிட்ட கற்றுக் கொண்ட பாடத்தை..

Theory to practical ஆ செய்து காட்டும் போது..

முழுமை ..முழுமை..


ஆனா..அந்த முழுமை கிடைக்க..

கிடைக்கறதுக்குள்ள..

போராட்டம் தான்.


ஜெயிக்கவும்..ஜெயிக்க வைக்கவும் ..பிறந்தவர்கள் நாம் தானே..


முழுமை வாழ்வை நோக்கி..அழகான பயணம் மேற்கொள்வோம்..

Madhyamar-தேடாமல் வந்த செல்வம்

 #Sunday_topic

தேடாமல் வந்த செல்வம்


"இப்படியே ஒரே இடத்தில நின்னுண்டே இருந்தா எப்படி?

கிளம்பு ..கிளம்பு."


"இந்தா..இந்த பையை மாட்டிக்கோ..சாமான்கள் ரொப்ப வசதியா இருக்கும்."


"போய்ட்டு, வேலை முடிச்சதும் திரும்ப கொஞ்சம் நேரம் ஆகலாம். பசிக்கறதா இப்பவே சொல்லிடு..

பாதி வேலைல உன்னை அங்கியும் இங்கியும் இழுத்துண்டு போகமுடியாது."


"என் செல்லமாச்சே நீ..நான் எங்க வெயிட் பண்ண சொல்றேனோ அங்கே சமத்தா ..நிக்கணும்..

எங்க சுத்தினாலும் உன் கிட்ட நான் வந்துடுவேன். சரியா?"


Instructions எல்லாம் முடித்து..


 "சரி..கிளம்பலாமா? நான் கேட்க..

 "ஒரு லாங் டிரைவ் போலாமே..ஒரு longing voice .."

 

 "அதுக்கென்ன ..போகலாம் போகலாம்..ஜாலியா போகலாம்" ...நான் க்ரீன் சிக்னல் கொடுக்க...

 

 ஆனா.....

 எதிர் சைடில் ஸ்வரம் கொஞ்சம்  குறைய..

 

 "நீ மட்டும் பப்பு மம்மு சாப்ட்டு வந்தாச்ச்சு..

 இந்த பெப்பு எனக்கு பெட்ரோல் ⛽⛽⛽ஊத்தும்மா..

 ஊரெல்லாம் அப்புறம்  சுத்தலாம்னு..' உர்ருனு என்னை முரைச்சு பார்த்தது ..


 வேற யாரு..நான் தேடாமலே..

என்னை வந்து நாடிய செல்வம்..

 என் செல்ல ஸ்கூட்டி பெப் தான். 

 

 பெண் ஓட்டிய இருசக்கர வாகனம்...

அம்மா எனக்கு வந்தது..

தேடாமலே என் வாழ்வில் வந்த செல்வமாச்சே..


 அது ஒரு ஜடமில்லை..

என்னைப் பொறுத்தவரை ஒரு ஜீவனுள்ள 

என்னோட ஆத்மார்த்த தோழி..

சொன்னபடி கேளு..மக்கர் பண்ணாதேனு..திட்டினாலும் ,உதைத்தாலும்..நான் எப்போ வருவேன்..வெளியே அழைத்துக் கொண்டு போவேன்னு..

 காத்திருக்கும் என்

  purple beauty.🛵🛵🛵🛵🛵


கவிதையும் பாடும் சமயத்தில்...


மைல்கல்  உன் மகள்கள் கடக்க..

மைல் கணக்காய் ஓடினேன்.

(டயர் )தேய்ந்து தேய்ந்து..

🔥 தீயாய்.. வேலை செய்தேன்..

Indicator தந்து..இன்னல்கள் போக்கினேன்..

Overtake நீ செய்ய..overjoy கிடைத்தாலும்..ஒழுங்கா வீடு போகணுமே என்று..

நடுங்கிக் கிடப்பேன்..

Speed breaker நீ காணாத பொழுது..

நம்ம உறவு break up ஆகாமல் இருக்கணுமேனு வேண்டுவேன்..

பஞ்ச்சரால் நான் படுத்துக் கிடந்தால்..

பஞ்சாய்ப் பறக்குமே உன் ப்ளான் எல்லாம்.

ஆக்ஸிலேட்டர் நீ கொடுக்கையிலே...

ஆகாயம் கூட சென்று வருவேன்..

பேச்சுத் துணைக்கு நானிருக்க..

போவோமே ஊர்கோலம் தான்..


இந்த பந்தம் தொடரணும்..

நானும் நீயும் சுற்றணும்..

நீ ...தேடாது வந்த செல்வம் நான்..

சென்றே மகிழ்வோமே ரைடும் தான்...


சரி சரி..ரொம்ப செண்ட்டி போடாதே.... 

செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு..


Ready steady ..po..po..

என் செல்லமே..என் செல்வமே😄😄💪🛵🛵🛵🛵

Madhyamar-சித்திரம்_பேசுதடி

 #சித்திரம்_பேசுதடி..June 2022



என் கேள்விக்கென்ன பதில்.


(இந்த ஓவியத்தை ..எங்க வூட்டுக்காரர் கிட்டயும்..எங்கப்பா கிட்டயும்  காண்பிச்சால் இப்படித்தான் கதை கதையா சொல்லுவாங்களோ..)


கல்யாணம் ஆகி வந்த நாளிலிருந்து இப்படித்தான்..


பல் தேய்த்து வந்ததுமே..

" "ஏங்க..காஃபியா..டீயா..ஹார்லிக்ஸா ..எது கலக்கட்டும்? '


" ஏம்மா..தினமும் இதே கேள்வியா?..சரி..இன்னிக்கு காஃபியே கொடுத்துடு..'..

ஈஸியா இருக்கும் உனக்கு..


'ம்ம்ம்ம்.. காஃபி டிகாக்‌ஷன் போட லேட்டாகும்.. உங்களுக்கு ஹார்லிக்ஸே சுறுக்க கலந்து கொடுத்துடறேன்..ஒகே தானே..


ஙே....


அதுக்கு எதுக்கு பின்ன option இத்தனை கொடுக்கற்மா..


கேட்க முடியுமா?..😄😄😄


இதோ இதோ..

ஹார்லிக்ஸை ஆத்திண்டே என் பக்கத்தில வரா..வரா..


அடுத்து செட் கேள்விக் கணைகள் தொடுப்பாள் பாருங்க..


' இட்லிக்கு வெங்காய சட்னியா.???

.🍅 சட்னியா.. இல்ல தக்காளி வெங்காயச் சட்னியா?


"தக்காளி வெங்காயச் சட்னியே பண்ணிடுமா.."


"அதுல அப்படியே நாலு வேர்க்கடலை போடட்டும்மா..?


"சரிம்மா..பேஷா இருக்குமே.."


" சிவப்பு மிளகாவா..பச்சை மிளகாவா?...


"காரமே இல்லாம..

அரைச்சுடு..போதும்மா..."


" சரிங்க..இந்த சட்னி ..நாளைக்கு செய்யறேன்..இன்னிக்கு மிளகாய்ப் பொடியும் தயிரும் போட்டு சாப்பிடுங்க..ஓகே தானே..


" அதுக்கு எதுக்கும்மா இத்தனை கேள்வி...கேட்டுட முடியுமா?


ஒரு வழியா ..டிஃபன் கடை முடிந்து ..சாப்பாடு ஆரம்பிக்கும் நேரம்..


' ஏங்க..ரசம் தெளிவா விடவா..கலக்கி விடவா..கலக்கித் தெளிவா விடவா..?..🤣🤣🤔


தேவுடா...நான் கலங்கி நிற்க..🤔🤔


' என் கேள்விக்கென்ன பதில்னு ..கரண்டியும் கையுமா நிற்பா..


சரிம்மா..சாயந்தரம் குழந்தையும் நீயிம் ரெடியா இருங்கோ..கடைத்தெருவுக்கு போய்ட்டு..உன்னோட பிறந்தநாளுக்கு புடவை வாங்கிண்டு வந்துடலாம்..


கடையா..கடலலையா..

அலை மோதும் கூட்டத்தில்..

குழந்தைக்கு காவலாக நான் இருக்க..


' நீ போய் ..உனக்கு பிடிச்ச ஒரு நாலு புடவை எடுத்துண்டு வாம்மா..அதுல ஒண்ணு நான் செலக்ட் செய்யறேன்னு..


அவளை உள்ளே அனுப்பிவிட..


இரண்டு மணி நேரம் கழித்து..நாலைந்து புடவையுடன் பிரசன்னமாவாள்.


' இதில் எது நல்லாயிருக்குனு சொல்லுங்க..


அந்த ப்ளூ ..டெம்ப்பிள் டிசைன் சூப்பர் மா..💪💪


' நல்லாயிருக்கா..ஆனா இப்போ தான் ஞாபகம் வரது .இதே கலர்ல ..உங்க சித்தியோட பேரன் பூணலுக்கு எனக்கு வெச்சு கொடுத்தா..இது வேணாம்ப்பா..


" உன் வலது கையில் இருக்கே ..அந்த மஸ்டர்ட் கலர் சூப்பர்மா..


" ஐயோ..இது mustard ஆ..உள்ளே வேற yellow aa தெரிஞ்சுதே..அப்ப இது வேணாம்ப்பா'..


இருப்பதோ..இன்னும் இரண்டு புடவை..

நான் என்ன செய்வேன்னு..நான் சிவாஜியாக..


" இந்த பிங்க்கே எடுத்துக்கறேன்.."..


' அம்மா..ஏகப்பட்ட பிங்க்க் இருக்கே உன்கிட்ட..'..


" இது different shade ப்பா'..🤔🤔🤔


முடிவு எடுக்கப்படும்..


என்னிக்காவது ஒரு நாள் ...


" ஏன்மா..நீயே எல்லாம் முடிவு பண்ணிட்டு என்னை ஏன் ம்மா..

எல்லாத்துலயும் consult பண்ற மாதிரி பில்டப் கொடுக்கற..


அவள் என்ன பதில் சொல்வாள்..???!!!


அதுவரை இப்படித்தான் ..நான் ..ஙேனு முழிச்சுண்டு நிப்பேன்..🤣🤣


அதுவும் ஒரு சுகம் தானுங்கோ..💪💪💪


அருமை யான ஓவியத்திற்கு நன்றி  திருமதி jayalakshmi kumar mam.


இந்தப் பதிவு  என் வீட்டு இரு தகப்பன்களுக்கு அர்ப்பணம்.


Happy father's day💐💐💐

-பத்து_பத்தா_நம்ம_வாழ்க்கை_பிரிச்சுக்கோ

 #மிட்_வீக்_டாபிக்

#பத்து_பத்தா_நம்ம_வாழ்க்கை_பிரிச்சுக்கோ



அடித்த ஃபோன் கால் எல்லாம் அன்று எனக்கு வாழ்த்து மழை பொழிந்தது.

யோசிக்கவே ஆச்சரியமா இருந்தது..

"எங்க அகிலாவுக்கு அதுக்குள்ள நாற்பது வயசா..? இப்போதான் உன்னை ஆஸ்பத்திரியில் பார்த்த மாதிரி இருக்கு"..மலரும் நினைவுகளுடன். வாழ்த்துக்கள்.


அப்பா வந்தார் லைனில்..

Happy birthday என்றெல்லாம் formal வார்த்தைகள் இல்லை.

Straight ஆ பாய்ண்ட்டுக்கு வந்தார்.


"அம்மாடி..இனிமேதான் கண்ணா..உன் லைஃப்ல ஒரு புது chapter ஆரம்பிக்கப்போறது'..

நாப்பதாவது வயசை எட்டியாச்சு..

" (அப்பா..ஏன்ப்பா இப்ப்டி வயசை சொல்லி டென்ஷனாக்கற?)

"நிறைய பொறுப்புகள் கூடும் நேரம்.

நயமா பேசணும்..

நல்ல சொல்,நல்ல  எண்ணம்  எல்லாம் நம்ம மனசுக்குள் practice பண்ணனும்.

இல்லனா தறி கெட்டு ஓடிடும். அப்புறம் பிடிக்கவே முடியாது.

நல்ல காரியம் செய்ய எதாவது சான்ஸ் கிடைச்சா..விட்டுடாதே.."💪💪


'குழந்தைகளோட நியாயமான கோரிக்கைகளை காது கொடுத்து கேளு.."( அப்பா..நீங்களா..மை.வாய்ஸ்)🤔


அப்பா அட்வைஸ் அடுக்கிக் கொண்டே போக..


புதுப்புடவை  வீட்டுக்காரர் என்ன வாங்கிக் கொடுத்தார்?

குழந்தைகள் எப்படி கொண்டாடினார்கள்..

இப்படி கேள்விகளுடன் பலர் பேச..


அப்பாவுடன் பேசிய அந்த pep talk..இன்னிவரைக்கும் என்னை இயக்கும் ஒரு சக்தியாகும்.🙏


ஃபோன் கட் ஆனாலும்..background ல் அப்பா பேசியது அவ்வப்போது ஒலிபரப்பாகும்.


காரணமே இல்லாம வள்னு விழும்போது..அடராமா..இது என்ன வயசுக் கோளாறானு..

வயிற்றைக் கலக்கும்.😄😄


நிதானம் ..நிதானம்னு மனசு சொன்னாலும்..

வாயும் கையும் பர பரனு எதோ செய்யும்...வயசாறதோனோ..

அப்படித்தான் இருக்கும்னு...யாரோ இடிக்கற மாதிரி இருக்கும்.😄😄


ஆனால்..40 to 50 தான் எனக்கு 

பொன்னான வருடங்கள்.

(அடுத்த பத்து முடிவதற்கு காத்திருக்கணும் இன்னும்..)


உறவு , நட்பு என்று..

அழகான புரிதலில் ..வட்டம் விரிந்தது.

பெண்களின் பெயரோடு அம்மா என்ற பட்டத்தை இணைத்து..

பட்டத்து ராணியாக என்னை பவனி வரச் செய்த என் கண்கள்.

என் இரு பெண்கள்.

நீங்க..அவ அம்மாதானே..

கேட்கும்போதே காலர் உயர்த்திய தருணங்கள்


என் அம்மாவுக்கு கம்யூட்டர் சொல்லித் தந்தது..கை கொடுத்தது அவளுக்கு..வாய் பேச முடியாத நிலை வந்தபோது..


தனக்கென எதுவுமே கேட்காத மாமியாருக்கு..

அவள் கவிதைகளை எல்லாம் திரட்டி..வேற்று மொழி பேசும் மாநிலத்தில் அவள் புத்தகம் வெளியிட்ட போது...சந்தோஷத்தின் எல்லை.


காடும் மலையும் நீரும் நிலமும் என்று.. பூகோளப் பாடத்தை கண் முன் நிறுத்திய ப்ராஜக்ட் வாழ்க்கை..


" இந்த ரொட்டியும் டாலும் பாஸ்மதியும் தின்னு நாக்கே செத்து போச்சேனு ...ஊரு விட்டு ஊர் வரும் டூரிஸ்ட் உறவுக்கும் நட்புக்கும் வாய்க்கு ருசியா ( note the point) வித விதமா சமைத்து கொடுத்த காலம்..😄


'உன் பொண்ணு எங்க உன்னை வந்து பார்த்துப்பா.".அம்மாவிடம் சொன்னவர்கள் ஏராளம்..


"உங்க மாட்டுப்பொண் எங்கேயோ இருக்காளேனு" ..

மாமியாரிடம் பேசியவர்கள்  பலர்.

இந்த இரண்டு ஜீவன்களின் கடைசிக் காலத்தில் என்னை அவர்களிடம் கூட்டி வந்து சேர்த்து ..அவர்களைப் பார்த்துக் கொள்ள வைத்த ..அந்தக் கடவுள் வரம் தந்த வருடங்கள்.


சேவை நிறுவனங்களுடன் கை கோர்த்து ..அகமகிழ்ந்த நாட்கள் ..


Fine tune செய்ய வேண்டிய வயது .இந்த forty என்று புரிய வைத்த அப்பாவின் அட்வைஸ்...


பத்தில்...பந்தாடிய குறும்பும்..

இருபதில்..இளமையின் துடிப்பும்

முப்பதில்..maturity கொஞ்சம் எட்டிப் பார்த்தலும்..

என்று வயது ஓடும் போது..


என் வாழ்க்கையில்..

மூத்த பத்துகளில் கற்றவைகளோடு..

களமிறங்கி.

Left right centre என்று சிக்ஸர் அடித்த 40 to 50.


Retired hurt ஆகி..குமைந்த நொடிகள்.


எல்லாம் அனுபவங்களும் சேர்த்து..புடம் போட வைத்து நாற்பது..


ஒரு பக்கம் என் அப்பாவும்..இன்னொரு பக்கம் என் பெண்களின் அப்பாவும் ..தாங்கிப் பிடிக்க.

அரை சதப் பத்தில்..ஆன்மிக தேடலும் சேர...

அன்பு மயமானது இந்த உலகம்..


எப்படி  பிரித்து பார்த்தாலும்..

போனது போனது தான்..

வருங்காலம் நிரந்தரமில்லை..

இன்றைய நாளே..இனிமை..

So live the present என்றிருந்தால்..


ஒவ்வொரு நாளும் முக்கியம் தான்.

Madhyamar-தப்பிச்சேண்டா_சாமி

 #Sunday_topic

#தப்பிச்சேண்டா_சாமி


Dehradun ல் இருந்த சமயம்.

ஏதாவது உதவி வேண்டுமென்றால் ஒடி வந்து செய்யும் ஒரு குடும்பம். அங்கேயே  மத்திய அரசுப் பணியில் பெரும் பதவியில் இருந்தவரின் மனைவி எனக்கு friend.


எல்லாம் நல்லாத்தான் போய்க் கொண்டிருந்தது.


ஃபோனில் அடிக்கடி பேசுவதும்..அவங்க வீட்டுக்கு நானும் ..எங்க வீட்டுக்கு அவங்களும் போக வர இருந்த சமயம்.


' மதும்மா..(நான் தான்)..நான் சொன்ன விஷயத்தைப் பற்றி சார் கிட்ட பேசினீங்களா?..

' இல்லங்க..இதெல்லாம் அவரு ஒத்துக்க மாட்டாரு..அதுவும் தவிர அவர் ஸைட்லேர்ந்து பேசறதுனால்..முக்கியமான விஷயம் மட்டும் தான் பேசுவேன்"..

இப்படி சொல்லி நான் ஒவ்வொரு டைமும் தப்பிச்சு..


Anti climax ..ஒரு முறை இவர் ஊரிலிருந்து வந்தபோது , அவங்களும் வூட்டுக்கு வர..

" சார்..இப்படி உங்க வைஃப்..நீங்க போடற கோட்டை தாண்ட மாட்டேங்கறாங்களே.."..

வீட்டுக்காரர் திருதிருனு முழிக்க..

" ஒரு 11000 ரூபாய் தான் சார். ஆன்லைன் சர்வேக்கு . ஒவ்வொரு வாரம் புதன் கிழமை login ஆகணும்.. கேட்கற கேள்விக்கு டிக் அடிக்கணும்.எட்டு சர்வே முடிஞ்சா ஒரு குறிப்பிட்ட தொகை உன் அக்கெளண்ட்டுக்கு வரும். இது ஒரு பெரிய விஷயமா சார்..உங்க வைஃபுக்கு'...

இதைக் கேட்ட என் வீட்டுக்காரர்..

"உழைக்காம கிடைக்கற காசு..என்னிக்குமே ஒட்டாது..அதுதான் எங்க பாலிஸி..இது வேண்டாமே'..இவர் முற்றுப்புள்ளி வெச்சுட்டுதா நான் நினைக்க.

அவங்க விடாது கருப்பா..என்னைத் தொடர..

வேறு வழியே இல்லாமல்..ஒரு நல்ல நாளில்..குருவியாய் சேமிச்சு வெச்ச பணத்தை எண்ணி எண்ணி அவங்க கையில் கொடுத்தபோது...ஏனோ மனசில் ஒரு கலக்கம்.

ஆஹா..இந்த காசில இரண்டு பவுன் வாங்கலாமே..

Bank account open செய்து...இனிமே பண மழை பொழியப் போறது பாருங்கனு அவங்க சொன்னதை ரசிக்க முடியாமல்..ஒரு சங்கடம்.


முதல் புதன்கிழமை..

" சீக்கிரம் login ஆகி , சர்வே முடிங்க. நம்மூர் நெட்டை நம்ப முடியாது. "அவங்க சொன்னதும்..

அந்த சர்வே முடிச்சேன். 

"ச்சே..இதெல்லாம் ஒரு சர்வே..இதுக்கு காசா..??

பிடிக்கலை..


அடுத்த குண்டு..கொஞ்ச நேரத்தில..

இன்னொரு ஃப்ரண்ட் ஃபோன்.

" அகிலா..நீ கூட இப்படியா?..நீ மட்டும் ஏதோ சர்வே பண்ண பணம் கட்டி இருக்கியாமே..எங்களுக்கும் சொன்னால் ..நாங்களும் வீட்ட்லேர்ந்தே விரலசைப்பில் சம்பாதிப்போம் இல்ல..."..


என் எந்த சமாதான வார்த்தைகளும் அவர்களை convince பண்ணலை.

நான் எதோ துரோகம் பண்ணிட்டா மாதிரி புலம்பல்.


" wait..நான் இந்த மாசம் முடிச்சு , பணம் எதாவது வருதா பார்க்கலாம். Then you subscribe'..

But அவங்க ஒரே restless.

இதே நேரம்


" உங்க ஃப்ரண்ட்ஸ் சேர்றேன்னு சொன்னவங்களை நீங்க தடுத்து இருக்கீங்களாமே..

அவங்க இந்த மாசமே சேர்ந்தால்..நம்ம ரெண்டு பேருக்கும் incentive வருமே..'..


இந்தம்மா pressure.

பாருங்க..போன முறை நான் target முடிச்சதில..எங்க வீட்டுக்கு இந்த பொருள் வாங்கினேன்..'..கேரட் காண்பித்தும்..I was Strong that ..என் மத்த ரெண்டு ஃப்ரண்ட்ஸும் இதுல மாட்டக்கூடாதுனு...

உள் மனசு சொல்றதைக் கேட்டேன்.


மூன்றாவது வாரம்.

Login ஆக முடியல..

" அங்கே எதோ server problem"...நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க.."..


எத்தனை முறை log in முயற்சி செய்தும்..locked தான்..


" இதெல்லாம் இப்படித்தான்..நான் என்ன செய்ய முடியும்னு'....உங்க லக் அவ்வளவுதான் ..'..

அப்படினு கண்டுக்காமல்..


அடுத்த வலை விரிக்க ஆரம்பிச்சாங்க.' 

' இங்க காலனியில் நிறைய பேர் சேர்ந்து ..dehradun ஒதுக்குப் புறத்தில் ஒரு ப்ளாட் வாங்கி இருக்கோம்.. நீங்களும்..!!!

ஐயா..இது என்ன சோதனை நு அந்த நட்புக்கு ஒரு பெரிய தடா போட்டேன்..


#தப்பிச்சேண்டா_சாமி..

moment ..


அதான் மாட்டிக் கொண்டியே..இதில் தப்பிச்சேண்டா moment எங்கேனு கேட்கலாம்.


நாம விழுந்தது போறாதுனு..

நம்ம நட்பூஸையும் இழுத்து விடாம..இருக்க..கடவுள் கொஞ்சம் புத்தி  கொடுத்தாரே..


என்னை துக்கம் விசாரிச்ச அந்த தோழிகள்..நிம்மதி பெருமூச்சு என் காதில் விழாமலில்லை.


Multi level marketing..

பேசு..ஆசியா பேசுனு..

பலரின் face ல் கரி பூசிய ஆசாமிகளே..

நல்லா இருங்கப்பா..


இது போல MLM ல் 🏆 வெற்றி பெற்றோர் இங்கே பலர் இருக்கலாம்.


நம்ம நேரம்..ஆனாலும் கொஞ்சம் நல்ல நேரம்..

Escapeuuu..

Madhyamar-மத்யமர்_விளம்பரம்

 #மத்யமர்_விளம்பரம்..


விளம்பரம் ஏதுமின்றி..

வேரூன்றி..

விழுதுகள் பரப்பி..

வளர்ந்து கொண்டிருக்கும்..நம் தளம்..

மத்யமர் தளம்..


☀️ சூரியனுக்கே 🔦 டார்ச்லைட்டா..😄😄😄


வேண்டாம் தான்..


ஆனால் ..நம்ம தல சொல்லிட்டார்..

நாங்க செஞ்சிடுவோம்ல..💪💪


காலம் மாறலாம்..

மாற்றங்கள் 😃 மகிழ்ச்சியை கொடுக்குமென்றால் ..

இரட்டிப்பு மகிழ்ச்சிதான்..😀😀


விளம்பரப்படம்  செய்யலாமா என்று கேட்டதுமே..

மைனஸ் குளிரையும் பொருட்படுத்தாது..

பாஸிட்டிவாய் Raghupathy N uncle👌👌👌


Simple and sweet Gopalan Sankaran  uncle👌👌👌


எனர்ஜியின் இருப்பிடம் Revathy Janakiraman  mam💃


பாசக்கார Bhanu Ram 😊


 உற்சாக ஊற்று.   Uma Swaminathan 👌


சர வெடி Sujatha Ganesh 💪


இவங்க எல்லாருடனும் ..

#நான்.. என் பார்ட்டும்..😀😀😀

#video_editing செய்யும் பெரும் பேறு🙏🙏🙏🙏🙏


இத்தனை உற்சாகம் சந்தோஷம் எங்கும் கண்டதில்லை..

#இந்த_பந்தம்_உறுதியானது'..👍💪💪💪💪


பார்த்துட்டு சொல்லுங்க..


நீங்களும் அப்படித்தானே...👍👍

Madhyamar-கலங்காதே_மனமே

 #PPAP-2

#அந்தாதி_பாடல்-1

#கலங்காதே_மனமே



ஊரிலே பெரியகடை

உடையணியும் பொம்மையுமே..

பொம்மைக்கும் பெருமைதான்

பொறுத்தமான உடையாலே..


உடையவர் செல்வாரிங்கு

உடுப்புகள் வாங்கிடவே..

வாங்கியது கிழிந்தாலே

வாழ்வு வருமெனக்கு..


எனக்கும் பிடிக்குமே

புதுத்துணி வாசமுமே..

வாசனைக்கு ஏங்கியே

வாசலில் நின்றேனே..!!


நிற்காதே போவென்றே

மிரட்டலுடன் உருட்டலும்..

உருளுமே காலமிது

உரிமையாக்குவேனே இக்கடையை...💪💪💪


Akila Ramasami

Madhyamar-எங்க_வீட்டு_தங்கத்தேரு

 #Sunday_topic 25-05-22

#எங்க_வீட்டு_தங்கத்தேரு


"ஓரம் போ..ஓரம் போ ..அகிலா பொண்ணு சைக்கிள் 🚴 வருது.."


ஆமாங்கோ....ஸ்டேஷன் கிட்ட இருந்த வாடகை வீட்லேர்ந்து ..சொந்த வீடு போலாம்னு ...ஊருக்கு ஒதுக்குப்புறமா போனதும்..முதல் வேலையாக் கத்துண்டது இந்த சைக்கிள்.


" அக்கம் பக்கம் பார்க்காதே..

ஆளைக் கண்டு மிரளாதேனு"confidence கொடுத்து ..நாளே நாளில் குரங்கு பெடல்லேர்ந்து கும்முனு உட்கார்ந்து ஓட்ட வெச்ச எங்க அண்ணனுக்கு ஜே..💪💪💪


சத்தியாகிரகம் பண்ணி சைக்கிள் வாங்கி.." காத்து வாங்கப் போறேன்..உனக்கு கடுகு வாங்கி வந்ததேன்"னு..அம்மா கொடுத்த வேலையெல்லாம் ஓ(ட்)டி ஓ(ட்) டி உழைச்சு வாங்கிக் கொடுப்பேன்.🚲🚲🚲


சைக்கிள்.. தான்...அதுல

அகிலா பாட்டுதான்..


"ரெக்கை கட்டி பறக்குதிந்த அகிலாவோட சைக்கிள்னு" எங்க புது ஏரியா பொண்ணுக எல்லாம் பொறாமையா பார்க்க ஆரம்பிக்க


"இந்த வாழ்வினிலே ஆனந்தம்..இந்த சைக்கிள் தரும் இன்பம்னு'....எல்லரையும் ஏங்க வைக்க...


"ஊரைத் தெரிஞ்சிகிட்டேன்..

உலகம் புருஞ்சிகிட்டேன்னு..'

துள்ளித் திரிய ஆரம்பிச்ச போது..

கவலை ஒண்ணு எட்டி பார்த்தது.


சிங்கிளா சைக்கிள்ள போனால் சுகமா இல்லையே..சைக்கிள் கூட்டணி அமைத்து ..அதில் ஒரு பேரணி  நடத்த ஆசை தோன்ற....

காலனியில் ஒவ்வொரு ஃப்ரண்ட் அம்மா கிட்டயும் போய்..

சைக்கிள் ஓட்டுவதன் சைக்காலஜி  பேச ஆரம்பிச்சேன்.


என் வீட்டு ஹீரோவின் ( சைக்கிளின்) டயர் எல்லாம் கேட்டுப் பார்..நான் சுத்திய கதை சொல்லுமேனு தோழிகளை உசுப்பேத்த..


அப்புறம் என்ன?..


"எட்டு  போடு..எட்டு போடு..நம் சைக்கிள் கொடுத்த மகிழ்ச்சிக்கில்லை தட்டுப்பாடு..

எத்தனை சந்தும் கண்டோம்

எத்தனை எத்தனை பொந்தும் கண்டோம்

அத்தனையும் சுத்தி வந்தோம்..கூட்டம் போட்டு'...


ஆள் அரவரமில்லாத ரோட்டில தான்..நம்ம ஆராய்ச்சி எல்லாம்.


சைக்கிள் ரேஸ் .பாய்ஸ் செக்‌ஷனல உண்டு.


தியாகம் படம் சிவாஜி கணேசன் மாதிரி ' 'நல்லவர்க்கெல்லாம் ..

சாட்சிகள் ரெண்டு..ஒண்ணு ..

மனசாட்சி.."..

மிதி..மிதினு ..அவர்கள் வியர்வை சொந்த

நாங்க cheer girls .💃💃💃💃


இப்பொ ஒரு விரல்ல செல்ஃபோன் டைப்பிங் மாதிரி..

ஒரு கை விட்டு சைக்கிள் ஓட்டி..

' ஓஹோ..மேகம் வந்ததோனு ஃப்ரண்டு கூட மழைல தொப்ப்லா நனைஞ்சு..aahaa..


" வாடிக்கை மறந்ததும் ஏனோ??' நு வாடகை சைக்கிள் அண்ணா எல்லாம் புலம்பினாங்க பாவம்.


"சார்..உங்க பொண்ணை கொஞ்சம் மெதுவா ஒட்டச் சொல்லுங்க..பார்க்கவே பயமா இருக்கு"..uncles எல்லாம் என்னிடம் தோற்ற சோகத்தில் அப்பாக்கிட்ட கோழி மூட்டுவாங்க.😄😄😄


காலம் ஓட..

மகள் முதல் முதலில்.." அம்மா சைக்கிள்ள உன்ன doubles அடிக்கிறேன்"..சொன்னபோது ரொம்ப happy.❤️


"மணி ஓசை கேட்டு எழுந்து..சைக்கிள் 

மணி ஓசை கேட்டு எழுந்து'..

லீவு நாட்கள்..இன்னும் leave ஆகலை மனசிலிரிந்து.


சாரதியாய் சகட்டு மேனிக்கு சந்தோஷம்.


 ஸ்கூட்டர் கார் ஓட்டினாலும்..

 இந்த சைக்கிள் தந்த சந்தோஷம் இருக்கே..ஆஹா..


"ஐம்பதிலும் ஆசை வரும்..ஆசையுடன் பாசம் வரும்.."


இந்த சைக்கிள் பார்த்தாலே ஒரு காதல் தான்.


US போனபோது. Facebook office ல வெச்சிருந்த சைக்கிள பொண்ணோடு ஓட்டினது செம்ம ஜாலி.


தங்க ரதம் தான்..மனதில்

தங்கிய ரதம் தான்..


மிதி பல வாங்கி..எனக்கு மகிழ்ச்சி 😃 தந்த ரதம் தான்.

Madhyamar-செவ்வாய்_கவிதை

 #செவ்வாய்_கவிதை


..


ம்ம்ம்ம்ம்..

என்னை பார்த்தால்..டயட்டிங்ல இருக்கற மாதிரி தெரியுதா..?


இல்லையா பின்ன??


தொந்தி கொஞ்சம் கம்மியாச்சு..

ஜீரோ சைஸ் வேண்டி நானும்..

ஜிம்முக்கு தான் போறேனே..

ஜம்முனு ஒல்லியா ஆனேனே..🤣🤣


கையும் கொஞ்சம் ஒல்லியாச்சு..

காப்பும் கொஞ்சம் கழண்டு போச்சு..

வங்கியும் தான் நழுவி போச்சு..மூச்சு

வாங்குவது குறைஞ்சு போச்சு..💪💪


நாளைக்கு என் பிறந்த நாளு..

நானும் வாரேன் உங்க வீட்டுக்கு..


மில்லட்டில் கொழுக்கட்டையும்..

சத்து மாவில் பாயசமும்..

சத்தியமா..படைக்காதீங்க..

செத்து கிடக்கும் நாவிற்கு..

சுவையாய் சமைச்சு போடுங்க..


அள்ளி வரமும் நான் தரவே

ஆசையுடன் காத்திருக்கேன்..

இல்லமெல்லாம் இன்பம் பொங்க..

என்னருளும் என்றும் உண்டே...

Madhyamar-கமகம ..கோவா..

 #Diwali_special.

#பாஞ்ச்_மினிட்_பால்கோவா


Micro wave ல பண்ணது சாப்பிடாதவர்கள்..கடந்து விடலாம் இந்தப் பதிவை.


கை விடாம கிளற வேண்டாம்..

கண் கொட்டாமல் micro wave வேலை செய்யறத பார்த்தால் போதும்.


Yummy பால் கோவா..திரட்டுப்பால் ரெடி


Sweetened Condensed milk- 400 gm 

Curd - 1 table spoon

Ghee- 2 spoon

ஏலக்காய் /cardamom powder- little


கொஞ்சம் அகலமான microwave safe bowl எடுத்துக்கணும்.


அதில்..

Condensed milk and curd நல்லா மிக்ஸ் பண்ணனும்.


high temperature ல் முதல்ல ஒரு 1 நிமிஷம் வைக்கணும்..


Condensed milk பொங்கி வழியலையேனு கவனிக்கணும்.


இப்படியே..ஒவ்வொரு நிமிஷமா வெச்சு எடுக்கும்போது..


அஞ்சாவது நிமிஷத்தில் ..பால் கோவா ரெடி ஆகிடும்.


அடுத்து ..அது தலை 2 spoon நெய் ஊற்றி..ஒரு 30 seconds வெச்சு எடுக்கணும்..


கடைசியில்.. ஏலக்காய் பொடி போட்டு கலக்க..

கமகம ..கோவா..


திரட்டுப்பால் ரெடி..


இதுல ஒரு சின்ன டிபன் பாக்ஸ் அளவு வரும்.


என் கிட்ட..பெரிய bowl இல்ல..

So minimum quantity போட்டு செய்வேன்.


நிறைய வேணும் என்றால்..2 or 3 times செஞ்சு..டப்பாக்கள் ரொப்பலாம்.💪💪💪


எப்ப நாக்கு..பால் கோவா கொடுனு கேட்கிறதோ..ஜம்முனு கொஞ்சமா செஞ்சு சாப்பிடலாம்.😄😄


என் ஓர்ப்படி சொல்லிக் கொடுத்தார்கள். YouTube லயும் இருக்கு

Madhyamar-மறைந்து_போன_மறக்க #முடியாதவை.

 #Sunday_topic 16-12-22


#மறைந்து_போன_மறக்க #முடியாதவை.



நான் ரொம்ப மிஸ் பண்ணுவது..


இழுத்துப் பிடிச்சு உட்கார்த்தி வைத்து..நமக்கு தலை பின்னி விடுவாங்களே..

ஆஹா..


இரட்டை பின்னல் லாவகமாம போட்டு..

அதை மடித்துக் கட்டிக் கொண்டு போன பள்ளி நாட்கள்.


அதுவும் அப்படியே சீப்பால் ,மெதுவாக சிக்கெடுத்து..ஆ...ஊனு ..பொய்யா கத்தி ஆர்ப்பாட்டம் செய்து..

இப்படியும் அப்படியும் தலையை வேண்டுமென்றே ஆட்டி...

யாராவது தலை வாரி விட்டால்..ஒரு சுகம் இருக்கும் பாருங்க..அது ..சொர்க்கம்..


அப்படியே சொக்கும்..தூக்கம் தாலாட்டும்.


அசக்காதடினு ...அன்பா ஒரு அதட்டல் கேட்கும்.

பின்னலுக்கு உட்காரும் முன்பே ..ரிப்பன் ரெடியா இருக்கணும்..அப்ப தான் கரெக்ட்டான நேரத்தில் நீட்ட முடியும்.

இல்லாட்டா..பின்னல் லூஸாகி..திரும்பியும் முதல்லேர்ந்தானு ஆரம்பிக்கணும்..


அந்த ரிப்பன் எல்லாம் ஒரு டப்பாக்குள்ள அழகா சுத்து வெச்சிருப்போம்.


ஸ்கூல் நாளில் கறுப்பு ரிப்பனும்..ஸ்போர்ட்ஸ் டே க்கு வெள்ளை ரிப்பன்.


ஆனால்..வெளியே போகணும்னால்..

நோ..மடித்துக் கட்டல்.


கொஞ்சமா நுனியில் முடியை விட்டுட்டு..

 ..கலர் கலர் ரிப்பன்.

 

 அதை சும்மா ஏனோ தானோனு இழுத்து போடாமல். அழகா பட்டர்ஃப்ளை மாதிரி போட்டுக் கொள்ளும்போது ..

 ஜாலியா இருக்கும்.


இப்போ இப்படி ஒரு சர் ..அப்படி ஒரு சர்ருனு வாரிக் கொண்டு ...ஒரு ரப்பர் பேண்ட் போட்டுண்டு..ஓட்டம் தான்.


குழந்தைகளிடம்..

கண்ணுங்களா..

தலை வாரிப் பூச்சூடி உன்னை..

பாடசாலைக்கு அனுப்பினேண்டா..

அகிலா..உன் அன்னைனு..பாட்டு பாடினால்.


அவங்களோ...

அம்மா..அது அந்தக் காலம்..அது அந்தக் காலம்னு எச பாட்டு பாடறாங்க..


அதே போல...

பூ வெச்சு தச்சு ஒரு ஃபோட்டோ கண்டிப்பா எல்லார் வீட்லயும் இருக்கும்..


நல்ல மல்லிப்பூ கனகாம்பர சீஸன்ல ஜம்முனு பூ தச்சு...வேலை மெனக்கெட்டு ஃபோட்டோ ஸ்டுடியோ போய் ..ஃபோட்டோ எடுத்ததெல்லாம் இப்போ சொன்னால்...


அம்மா..அதுதான்..உனக்கு இதெல்லாம் மறக்கக்கூடாதுனு ..

மத்யமர்ல சங்கர் சார் டாபிக் கொடுக்கறாரே..அது போறாதா?


புலம்புத் தீர்த்துடும்மா..

பொண்ணு எஸ்கேப்..😄


படத்தில் இருக்கற பாட்டி கூட பாருங்க..

எவ்வளவு சமத்தா... But கொஞ்சம் சோகமா..


' நான் உனக்கு தலை வாரி விடலாம்னு நினைச்சால்...நீ ..என் வெள்ளி முடியில்..விந்தை காண்பிக்கப் போகிறாயானு" ஒரு மைண்ட் வாய்ஸுடன்..

Madhyamar-க்ஷணநேர_முடிவு

 #sunday_topic 02-06-22

#க்ஷணநேர_முடிவு


இதுதான் உன் முடிவா???

(மெளனராகம் கார்த்திக் டயலாக் மாதிரி இருக்கா??


நான் கொடுத்த பேப்பரை கையில் வைத்தபடி..


Should I sign ? Are you sure?

You have few seconds left.

பேனா மூடியை slow motion ல் திறந்தார். 

பேனா எழுதுகிறதா என்று பக்கத்திலிருந்த பேப்பரில் செக் செய்வது போல...பாவ்லா செய்தார்.


" அகிலா.. இந்த க்ஷணத்திலும் உன் முடிவை மாற்றலாம்"..மனசு உள்ளுக்குள் பேச..


" please sign sir" என்றேன்.


என் ராஜினாமா கடிதத்தை மிகுந்த ஏமாற்றத்துடன் கையெழுத்திட்டார் என்னுடைய மிக உயர் அதிகாரி.


You are an asset நு நினைப்பேன்.. இப்படி அசடு மாதிரி....


' இல்ல சார்..பாஷை புரியா ஊர். கைக்குழந்தையை காப்பகத்தில் விடற மனசில்லை'..என்றேன்.


க்ஷண நேரத்தில் முடிவை மாற்றி இருந்திருந்தால்..???


இன்று..

அடிக்கடி உள்ளுக்குள் எட்டிப் பார்க்கும் இந்த்க் கேள்வி.

பசங்களோடயே ஓடிக் கொண்டே இருந்தாலும்...

ஒரு நிமிஷம் ஓய்வா உட்காரும்போது...இன்னிக்கு அந்த வேலையில் இருந்திருந்தால் என்ன பதவியில் இருந்திருப்பேன்னு ...யோசனை வரும் போகும்.


யோசித்து எடுத்த முடிவு தான் என்றாலும்..க்ஷண நேரத்தில் மாற்றி இருக்கலாம். The ball was in my court..but..எல்லாம் நன்மைக்கே..


இப்படி சோக க்ஷண முடிவுகள் இருக்க...சைடில் கைக்கோர்த்து வரும் சில காமெடி 

 க்ஷண நேர முடிவுகள் ..flashback ல் ஓடும்..


நானொரு ராசியில்லா ராஜா (ணி)...

ஆமாங்கோ..ரொம்ப யோசிச்சு ஒரு முடிவு எடுப்பேன்..

மூச்சு வாங்கி எல்லாம் முடிக்க..ஃபணால்னு ஒரு சத்தம் நம்ம ஹார்ட்ல கேக்கும்..

" தப்பு பண்ணிட்டியே அகிலானு"..


ஒழுங்கா நகற க்யூல நின்னுகிட்டு இருக்கும் போது..க்ஷண நேரம் புத்தி பேதலிக்கும்..பக்கத்து க்யூல்ல போய் நின்னு.....


கரெக்டா தெரியும் பதிலுக்கு...க்ஷண நேரம் வரும் சந்தேகத்தில் ..கோட்டை விட்ட மார்க்குகள் ஏராளம்.


இந்த க்ஷணம் வேணும்னு அடம் புடிச்சு வாங்கின ட்ரஸ்..அட்ரஸ் இல்லாம..அலமாரி அடியில் ஒளிச்சு வைச்சு..திட்டு வாங்கினது...பெரிய லிஸ்ட்..


ஆனா..அடுத்த முறை..


" இது தான் உன் முடிவா???"

கார்த்திக் ஸ்டைலில் கேட்டது..என்னோட வூட்டுக்காரர் தான்.


ப்ராஜக்ட் வழ்க்கையில்..எங்க சைட் ..மாறிண்டே இருக்கும்.


டெஹ்ராடூன் லேர்ந்து .. குஜராத்  சைட் .ஒரே ஒரு ஸ்கூல்


 என் பெண்ணை 9 th std . very crucial. என்ன செய்யறதுனு ஒரே குழப்பம்.

எப்பவுமே..இவர் இருக்கும் சைட்க்கு சில கிலோ மீட்டர் தொலைவில் குழந்தைகள் ஸ்கூலுக்காக வீடு பார்த்து நான் தனியா இருப்பேன். இவர் weekend வந்துட்டு போவார். நாங்களும் நினைச்ச போது போய் பார்க்கற மாதிரி இருக்கணும்னு ஒரு முடிவு.


ஆனா..இந்த சைட்ல அங்கேயும் இருக்க முடியாது.. பக்கத்திலயும் இருக்க  முடியாத ஒரு கஷ்டம்.


என்ன செய்யறது இப்போ?..


நாள் பூரா ஸ்கூலுக்கு அலைந்து விட்டு.. ..கெஸ்ட் ஹவுஸில் வந்தவுடன்..

நேர அங்க இருந்த சாமி வெச்சிருந்த இடத்தில உட்கார்ந்து pray பண்ண ஆரம்பிச்சேன்.


என்னனே தெரில..

டக்குனு எழுந்து என் வீட்டுக்காரர் கிட்ட போய்...' அப்பா..நானு குழந்தைகளோட பெங்களூர்ல இருக்கேன்"..


க்ஷண நேரம் ..எடுத்தாச்சு முடிவு.


எங்க அம்மா ...."அது என்ன ரெண்டுங்கெட்டானா பெங்களூர்..பேசாம சென்னை வந்துடு'..


உண்மையா சொல்றேன்..ஏன் அப்படி தோணித்துனு தெரில.

ஆனால்..கடகடனு பெங்களூரில் வீடு, ஸ்கூல் எல்லாம் கிடைச்சது..


அம்மாவும் அப்பாவும் பெங்களூரின் weather enjoy பண்ண வந்தார்கள்.


என் மாமியாரை..என் நாத்தனார் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நான் இருந்த காடு மேட்டுல டாக்டர் வசதி அதிகம் கிடைக்காது என்பதால்.

மாமியாரும் என்னோட வந்து இருக்க ஆரம்பிச்சா.


Kahaani mein twist.. இவருக்கு Hyderabad transfer. Second and fourth Saturday அவரும் வந்துடுவார்.


க்ஷண நேர முடிவில் கிடைத்த சந்தோஷ நாட்கள்.


மீண்டும் ஒரு திருப்பம்.

மாமியார் உடல் நிலை மோசமாகி எங்களை விட்டுப் பிரிந்தார்.ஆனால்..நான் கூடவே இருந்து அவரை கவனித்துக் கொண்ட சந்தோஷத்தில் கண்ணை மூடினார்.


அம்மாவுக்கும்..மருந்தே இல்லாத உடம்புக்கு வந்து...அம்மாவை கூட்டிக் கொண்டு வந்து..பார்த்துக் கொண்டேன்..அவளும்...


எனக்கு இப்படி உன்னோட இருக்க முடியுமானு ஏங்கிண்டு இருந்தேன்..அது நடந்துடுத்து என்று சொல்லி..கண் மூடினாள்.


நான் ..வேற எங்கியாவது போய் இருந்திருந்தால் ...இந்த ரெண்டு ஜீவன்களை கவனிக்கும் பாக்கியம் விட்டுப் போயிருக்குமேனு..


அந்தக் கடவுளுக்கு தான் நன்றி சொல்வேன்.


அவன் தானே எல்லாம் நடத்திக் கொடுப்பவன்.


நான் எடுத்த க்ஷண முடிவு என்று பெருமையாக நினைத்தாலும்..

' உனக்கு கடமைகள் இருக்குனு ..என்னைக் கொண்டு வந்து சேர்த்தது அவன் தானே..🙏🙏🙏


என் பொண்ணு 12th ல Bangalore topper.

Happy moments தான்

Madhyamar-Diamond_biscuit

 #Diwali_special. Oct -2022


#Diamond_biscuit


..diamond biscuit..


தீபாவளிக்கு ..அகிலா வீட்டுக்கு யார் போனாலும் ..

கப்பில golden biscuit தராளாமே😄😄😄😄


ஹலோ..அது..


Diamond biscuit...😄😄😄


நமக்கு தெரிஞ்ச gold biscuit இதுதானுங்கோ..😄😄


Gold(&)en diamond பிஸ்கோத்து.....😀😀


எப்பவுமே....ஈஸியா இருப்பதை start பண்றது என் பழக்கம்.


முதல்லயே..கோணலா வர ஆரம்பிச்சா..ஆர்வம் குறைஞ்சிடும்.


இந்த technique வாழ்க்கையிலும் ..நமக்கு ஒத்துப் போகும் தானே.


ரெசிபி..

எல்லார்க்கும் தெரியும் தானே..


மைதா/ கோதுமை மாவு - ஒன்றரை கப்

சக்கரை பொடிச்சது ..

அரை கப்..

adjust sweetness according to taste.

சின்ன ஸ்பூன் ரவை

சிட்டிகை..cooking soda

நெய்....2 spoon.


நெய்யில் ,சோடா போட்டு மிக்ஸ் பண்ணி, கொஞ்சம் நல்ல whisker ஆல beat பண்ணிட்டு..

சக்கரை மைதா ரவை கலந்து ஒரு கால் மணி நேரம் மூடி வைக்கணும்.


அப்புறம்..

மாவை எடு..உருட்டு...சப்பாத்தி போல தேய்த்து..

விருப்ப ப்பட்ட shape ல் கட் பண்ணி பொறிக்க..

ஆஹா..


தனியாவும் சாப்பிடலாம்.


ஆனா..அந்த மிக்ஸர்ல போட்டு கலக்கும் போது..காரத்துக்கு நடுவே..இந்த பிஸ்கட் சாப்பிடும்போது..


ஆஹா..ஓஹோ..பேஷ்..பேஷ் தான்.

-Diwali_special

 #Diwali_special



Akilas kitchen ல..என்னனு பார்க்க ஆசையா..?..


#ஜவ்வரிசி_தட்டை.


ஜவ்வரிசி..அது காட்ட்ற ஜாலம் இருக்கே...எத்தனை வெரைட்டி பண்ணலாம்...


ஜவ்வரிசி - 1 cup

(Soak ஜவ்வரிசி for 2 hours after washing thoroughly adding 1 cup of water )

அரிசி மாவு- 2 cup

 பொட்டுக்கடலை - 4 tablespoon... powder it.

 வறுத்த வேர்க்கடலை- 4 tbs powder it

பெருங்காய்ப் பொடி

உப்பு

மிளகாய்ப் பொடி ( தேவைக்கேற்ப).


After 2 hours

ஜவ்வரிசியில் இருக்கும் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு..நன்றாக பிசையணும்.


பின் பொட்டுக்கடலை powder , peanut powder ,பெருங்காயம் உப்பு காரப்பொடி , கருவேப்பிலை எல்லாம் நன்றாக மிக்ஸ் பண்ணனும்.


இப்போ..

கடாயில் எண்ணெய் ஊற்றவும்.

கொதிக்கும் எண்ணெயில் ஒரு கரண்டி எடுத்து இந்த மிக்ஸ் பண்ணி வைத்திருக்கும் மாவில் கலக்கணும்.

நன்றாக மிக்ஸ் பண்ணனும்.


இனி..

தேவைக்கேற்ற தண்ணீர் மிக்ஸ் செய்து...மாவு கையில் ஒட்டாமல் உருண்டை செய்யும் பதத்தில் ரெடி பண்ணனும்..


இனி என்ன..

உருண்டை மாவு.

இலையிலோ..

ப்ளாஸ்டிக் ஷீட் லயோ

வட்டமாக்கி..


எண்ணெய்யில் போட்டு பொறிக்க....


தட்டை என்ற பேரோடு..

கரகர மொறு மொறு  ரெடி..ரெடி..💪💪💪

Madhyamar -தடைக்கல்லும் எனக்கொரு படிக்கல்லப்பா..

 #sunday_topic

தடைக்கல்லும் எனக்கொரு படிக்கல்லப்பா..



சுந்தரகாண்டத்தின் முதல் ஸர்கம்.

ஹனுமன் கடலை கடப்பது...ஒவ்வொரு முறை படிக்கும் போதும்..இவர் பார்க்காத தடைக்கலா நான் பார்த்தேன்னு என்னை நானே கேள்வி கேட்டுப்பேன்.


தடைக்கல் ..என்னை பொறுத்தவரை அதை இரண்டா பிரிப்பேன்.


ஒண்ணு..நம்ம மனசுக்குள்ள உட்கார்ந்து ..internal ஆ ..ஆடாம அசையாம ..

நான் இப்படித்தான்ன்னு வாதாடும் ஓரு கல்..


அடுத்தது..obviously ..external தடைக்கல்.


முதல்ல..மனசுக்குள் உட்கார்ந்து மணியடிக்கும் கல்லை தூக்கி எறிய முயற்சி செய்யும்போது..

வெளில காத்துக் கொண்டிருக்கும் கல்..இவ கிட்ட நம்ம பருப்பு வேகாதுனு ஜகா வாங்க ஆரம்பிக்கும்.


என்னடா..ஃபிலாஸஃபி பேசறேன்னு நினைக்கறீங்களா?.


அது எப்படித் தான் கரெக்டா அடுக்கி வெச்சிருப்பாரோ தெரியாது..

ஆஹா..இந்தக் கல்லை கடந்தேனு காலர் உயர்த்தும் போது....கவலைப்படாதே சகோதரினு அடுத்தது லைன்ல நிக்கும்.


யோசித்துப் பார்த்தால் ..இந்த தடைக்கல் இல்லாமல்..வாழ்க்கை smooth ஆ இருந்தால் ..எள்ளளவும் thrill இல்லாம....நினைக்கவே போரடிக்குது தானே..


கோவிட் ..கோவிட்னு ஒண்ணு வந்ததே..மறக்க முடியுமா?


எதோ வைரஸாம்..என் பொண்ணு கல்யாணத்துக்கு மண்டபம் fix பண்ணும் போது பேச்சு அடிபட்டது..


தடைக்கல்லுனு தெரியாமலே..ஏற்பாடுகள்..

நாள் ஆக ஆக..தீவிரம் உணர முடிந்தது.

இருந்தாலும் நப்பாசை யாரை விட்டது...


எத்தனையோ கடந்தோம்..இதுவும் கடப்போம்னு நினைச்ச கனவில் ..லாரி மண்ணு..

வெளிநாட்டிலிருந்து குழந்தைகள் வர முடியலை..எல்லாம் cancel.


தடைக்கல் தான்..துக்கம் தொண்டை அடைச்சது தான்.


ஆனால்..என்ன செய்ய..வழியே இல்லையே..


அந்த ஊர்லயே இருப்பதால்.. முதல்ல registered marriage நடக்கட்டும்னு அப்ளை பண்ணி ..பெரிய க்யூ அதுக்கும்.


ஒரு வழியா நாள் கிடைக்க..

இங்கேர்ந்து யாரும் போக முடியாத நிலை.


குடும்பத்தின் முதல் zoom wedding.

இங்கேர்ந்தே அட்சதை..ஆசீர்வாதம் எல்லாம்.


" செலவே இல்லாம கல்யாணம் பண்ணிட்ட..'..

கிண்டல் பேச்சு இன்னி வரைக்கும் தொடரும்.


ஆனால்..கோவிட் எப்ப முடியும்...குழந்தைகளுக்கு stamping  க்கு அப்பாயிண்ட்மெண்ட் எப்போ கிடைக்கும்..! 


தடை தான்..உடைத்தோம் ..


மனதிடத்தால் மட்டுமே.


இரண்டு பக்கமும் ஒரே wave length ல் இருந்து..

குழந்தைகள் வாழ்க்கையை நல்ல படியா ஆரம்பிக்கட்டும்னு நினைத்தோம்.


தடைக்கல்லுனு உட்கார்ந்து அழாமல்...

படிக்கல்லா மாற்றி...அவங்க வாழ்க்கையின் முதல் படியில் எடுத்து வைக்க..நாங்க எடுத்த முடிவு..


எங்களை என்றும் இயக்கும் தெய்வ சக்தி..அருளால் மட்டுமே முடிந்தது.


இப்போதான் ..இரண்டு வருஷம் கழித்து appointment கிடைத்து வர முடிந்தது அவர்களால்.


என் மாமியார் எப்பவும் சொல்வார்கள்..' நாம எல்லாரும் என்னிக்கு சேருகிறோமோ..அன்னிக்குத்தான் எனக்கு தீபாவளியும் ..பொங்கலும்'..

சத்தியமான வார்த்தை..


குறுகிய நாட்கள் வந்து இருந்தாலும்..குதூகலமா கொண்டாடினோம்.


இப்படி ஒரு தடைக்கல் வரும்னு நினைச்சு கூட பார்த்ததில்லை..


அதை கடந்தும் விட்டோம்னு... நினைக்கும் போது...feel happy.


மனதளவில் வளர்ந்து matured ஆ ஒரு முடிவு எடுத்த தருணம்.

 #மத்யமர்_5_வருடங்கள் ..

#கொண்டாட்டம்..


#Garden_city ல் ஒரு grand event.


Vanilla and mango  cake மத்யமருக்கு happy birthday சொல்ல..🥮


Bangalore Traffic ம்..distance ம் எங்கள் மத்யமர் மீட் கொண்டாட்டாத்திற்கு என்றுமே தடையாக இருந்ததில்லை..💪💪


ஆசையோடு கூடினோம்.

காஃபி குடித்தோம்

கேக்கும் வெட்டினோம்...

பிடித்ததை உண்டோம்..💃


பேச்சு..பேச்சு என்று பேசித் தள்ளினோம்.😄😄


வேறென்ன..

MTR முழுவதும்..

மத்யமர் ..மத்யமர் ...என்ற வார்த்தை தான்..

உணவு வாசனையையும் தூக்கிச் சாப்பிட்டது..


அருமையான மாலை..

அகம் மகிந்தோம்..நட்புகள் இங்கே..


நன்றி கோடி சொன்னோம்..

நம்மையெல்லாம் சேர்த்த மத்யமருக்கே..🙏🙏


பிரிய மனமின்றி பிரிந்தோம்..


அடுத்த சந்திப்புக்கு..ஆவலாய் காத்திருக்கோம்..🎆


Shankar Rajarathnam sir

Raghupathy N 

Gopalan Sankaran 

Revathy Janakiraman 

Bhanu Ram 

Geetha Manikantan 

Chitra Murali 

Saroja Arunachalam 

Kavitha satheesh

Bhanumathy Venkateswaran 

Kala Chandrashekar

அவளும் நானும்

 #PPAP_1 (20-05-23)

#அந்தாதி

அவளும் நானும்



என் பாட்டு நீ கேளு

கதையோடு கருத்தும் இருக்கு..


இருக்கு கொஞ்சம் இடமென்றே

இட்டேன் சில விதைகளுமே..


விதையும் வளர்ந்து செடியாச்சு

விளைச்சல் இப்போ மூணுபோகம்..


போகத்தில் பாகமும் பிரித்தேனே..

பழுத்த தக்காளியும் எலுமிச்சையும்..


எலுமிச்சை ரசம் கொதிக்க

எண்ணம் போனதே பின்னோக்கி!!!


பின்னொரு காலம் சொர்க்கமன்றோ..???

பின்னி எடுக்கலையே வெய்யிலுந்தான்..!!


வெய்யிலு வந்தும் போனதுவே

வைதல் இல்லாது திரிந்தோமே..


திரிந்த பாலில் திரட்டுப்பாலும்

கறந்த பாலில் காப்பியுமே..


காப்பி ராகம் பாடியபடி

கலகலப்பாய் கூட்டுக் குடும்பம்...


குடும்பம் இப்போ சிறுசாச்சு

குதூகலம் இப்பொ குறைஞ்சாச்சு


குறைஞ்ச வருமானக் குடித்தனத்தில்

நிறைஞ்ச மனசு இருந்ததுவே..


இருந்ததை பங்கிட்டு உண்டோமே..

ஆனந்தம் அதில் கண்டோமே..


கண்டங்கள் தாண்டி குடும்பங்கள்..

காண்பது இப்போ அரிதாச்சு..


அரிதாய் வரும் விருந்தாளிக்கு

பெரிதாய் என்ன சமைப்பேனோ???


சமையல் அறையும் அங்கிருக்கு..

சட்னு செல்லடி என் மீனாளே..!!

கனியுமா காலம்?

 #PPAP-1

#அந்தாதி

#கவிதை_1


கனியுமா காலம்?



கருவறையின் இருள் வாசத்திலும்

கைகால் வீசி மகிழ்ந்தேனே..


மகிழ்ச்சியில் மிதந்தது சுற்றமுமே..

குலவிளக்காய் நான் பிறந்ததுமே..


பிறந்த வீட்டில் எப்போதுமே

பொத்தி வைத்து கொண்டாட்டமே.


கொண்டாட்ட மிப்போ  திண்டாட்டமாச்சு

வெட்டினாரே பட்டென என்சிறகை.


சிறகெல்லாம் அழகுக்கு மட்டுமே

ஆட்டுவித்தாரே ஆளுக் கொருவர்.


ஒருவன் வருவான் கைபிடிக்க

உனக்குத் தருவான் சுதந்திரமே


சுதந்திர காற்றை சுவாசிக்க

சுற்றி அலைந்தது என்மனமே


மனதுக் கினியான் வருகைக்கே

மனமும் மிதக்குது கனவினிலே


கனவில் உலவும் அரசிளங்குமரன்

அவிழ்ப்பானா என் கட்டை?


கட்டுக்கட்டாய் நோட்டு கேட்டு

நோகடிக்கா குண

மிருக்கணுமே?


இருப்பது என்னிடம் அன்பொன்றே..

அள்ளித் தருவேன் ராசனுக்கு..


ராச வாழ்க்கை

தேடலிலில்லை..

ரசமிகு வாழ்வே போதுமெனக்கு..


எனக்குத் துணையாய் பறந்திடவே..

வண்ணச்சிறகோடு வரும் நாளெப்போ?


நாட்கள் ஓடுது நொடியாக

நானும் எடுத்தேன் புகைப்படமே..


புகைப்படம் சூசகமாய்க் காட்டிடுமே

அகப்படம் என்னுள்ளே எதுவென்று...!!!

Saturday, September 23, 2023

Ganapathi Bappa Moriya

 "தலை'யாய( போகிற) பிரச்சனை.


எங்க அபார்ட்மென்ட் புல்வெளியில் இப்போ ஒரு மாசமா ..ஒரே மாநாடு தான். வேற என்ன? பிள்ளையார் சதுர்த்திக்கு நடக்கப் போகும் cultural events க்கு செம்ம ப்ளான்.


குட்டீஸ்களின் குறும்பு..'aunty .நீங்க போடற ப்ளானை அங்கே போய் சொல்லிடட்டுமா " எந்று பயமுறுத்தியே.bribe ஆ chocolate வாங்கிண்டு போன சிட்டூஸ்.


இப்படியே போனால் தள்ளுவண்டி, சுண்டல் சுண்டல்னு வியாபாரம் ஆரம்பிக்கலாமோனு சில start up க்கள் யோசிக்க ஆரம்பிக்க..


மாஸ்டர் ப்ளான் மல்லிகாக்கள் எக்கச்சக்கம்.(சுருக்கமா..மா.பி.ம)


ஒரு குரூப்புக்கு பெரிய ப்ரச்சனை..இதிகாச காலத்திலேர்ந்து இருக்கிற அதே கூந்தல் பிரச்சனை.


:" என்னோடது step cut ஆச்சே ..இதுல எப்படி சவுரி முடி வைப்பேன்.

அட .அது ஒரு ப்ராப்ளமே இல்லை.. நிறைய pins நிறைய ஜெல் ( ஜொள் ..இல்லப்பா) போட்டு செட் பண்ணிடலாம்  .என் சுருள் முடிக்குள் எப்படி இந்த சவுரியை சொருகுவேன் பகவானே..ஆனை முகத்தோனை ஆஜராக வேண்ட..


அப்போதான் ஜோதியில ஐக்கியமாக வந்தவர்

i love your curly hair நு கடுப்பேத்த ஆரம்பிச்சா..


ஏய் ப்ளீஸ்ப்பா..i will do French plait. நு அடுத்தவ ஆலாபனை பிடிக்க  ஆரம்பிக்க...no...no..fish tail braid will suit you நு அவளை மீனம்மா ஆக்க முடிவோ(யோ) ட. ஒரு ஜால்ராஸ்.


"நான் பன் கொண்டை..அதை சுற்றி நல்லா கெட்டியா தொடுத்த மல்லி..that's my favourite நு அடுத்த பார்ட்டி..


ஐயோ.நல்ல வேளை ஞாபகப் படுத்தினே ப்பா..சவுரிக்கு பூ சுத்தணுமே..( நமக்கு காதுல பூ சுத்திதான் பழக்கம்னு மை.வா. வேற )


ஒரு ரவுண்டு கனகாம்பரம் ஒரு ரவுண்டு மல்லி will look stunning நு பழைய காலத்து ஐடியா எடுத்துக் கொடுத்த ஒரு மா.பி.மல்லிகா பெருமையா ஒரு ரவுண்டு பார்க்க..

she always comes out with an ethnic idea நு புகழ் மழையில் அவளை நனைய வைக்க...ஓகே..girls..i will supply flowers for all  நு சொல்லி அவள் பாலை வார்க்க.


.(பின்ன ..பண்டிகைன்னா..என்ன விலை தெரியுமா பூ...ஒரே ஒரு ஐஸ்..எப்படி நம்ம டெக்னிக்னு ..கண் ஜாடை பரிமாறல்கள😉்)


YouTube ல செக் பண்ணிட்டு , we will do it for each other நு முதல் நாள் எடுத்த முடிவு எப்போதும் போல மூலைக்கு தள்ளப்பட்டு ..

நம்ம  beautician பானுவை கூப்பிட்டுடலாம்நு ஏகபோக முடிவு.


பொட்டு, ஜிமிக்கி, வளையல் ..நெத்திச் சூட்டி வேணுமா வேண்டாமா..


அப்போது மூச்சிரைக்க ஓடி வந்த ..மா.பி.மல்லிகாவில் இன்னோருத்தி.."hey listen carefully .very important..எல்லாரும் ஒழுங்கா வகிடு எடுக்கணும். அதுக்கும் மார்க்க் உண்டாம். நம்ம ஜட்ஜ் பேசிண்டதா கேள்வி..ம்ம்ம்ம்..be careful. our team should not lose at any cost..


watsapp group ஒண்ணு " ஜடையும் ஜாடையும்" நு create பண்ணியாச்சு.

என்ன display pic வெக்கலாம்னு தீவிர ஆலோசனை..

சவுரியா, கொண்டையா, ஃபிஷ் டைலா..?


அதெல்லாம வேண்டாம்.. என்கிட்ட ஒரு cute ganesha pic இருக்கு..அதையே போடறேன்னு ஒரு சுப நாளில் create ஆன க்ருப்புக்கு வந்த முதல் msg..


' hey girls..இது மடிசார் புடவை competition. we forgot to discuss' .


பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பித்து பொங்கல் வரைக்கும் பண்டிகையோ பண்டிகைதான்.

இங்கே பதிவுகள் குவித்து பொழுதை பொன்னாக்கும் மத்யமர் அனைவர் வாழ்விலும் இன்பம் நிரம்பிய வழிய வாழ்த்துக்கள்.


Ganapathi Bappa Moriya

Friday, September 15, 2023

எழுதுகிறேன்_ஒரு_கடிதம்_சீஸன்_4

 #எழுதுகிறேன்_ஒரு_கடிதம்_சீஸன்_4


என் அன்பு பேரன் ராசாவுக்கு,


நல்லா இருக்கியாப்பா? உன் நினப்புத்தான் ராசா எப்பவும் இந்த அப்பத்தாவுக்கு.

 என்னடா இது...ஃபோன் தான் இருக்கே ..எதுக்கு அப்பத்தா கடிதாசி எழுதுதுனு உன் மனசில கேள்வி வருதா?

என்ன செய்ய ராசா?

நீ கொடுத்த ஃபோன் இப்போ என் கையில இல்ல . பசங்க படிப்பேல்லாம் மொபைல்ல தான் நடக்குது இங்கே. கிழவி உனக்கெதுக்கு இதுனு உன் சித்தப்பன் புடுங்கி அவன் பொண்ணுகிட்ட கொடுத்துட்டான்..

நீ வீடியோ வந்து பேசும்போதும் என்னய கூப்பிடறது இல்ல.." கிழவி உனக்கெங்கே காதுல விழப்போகுதுனு " சிரிக்கறானுக..


உங்கப்பா ..தலைச்சன்னாப் பொறந்த பாவத்துக்கு  இந்த குடும்பத்துக்கு ஓடா உழச்சு தேய்ஞ்சு..போயே சேர்ந்துட்டான். உன் ஆத்தா..என் ஆசை மருமவ ..அவளும் அவன் பின்னாடியே போய்ச் சேர்ந்தா.. இப்போ உன் இரண்டு சித்தப்பன் அத்தை நடுவில நீ மாட்டிக்கின..


அவங்களுக்கெல்லாம் உன் துபாய் பணந்தான் வேணும் ராசா..

உன் சித்தி அவ உறவுக்கார பொண்ணு ஒருத்த்திய உனக்கு பேசி முடிக்கணும்னு ஒத்தக் கால்ல நிக்குறா..உன் அத்தை..இருக்காளே..அவ பொண்ணை உனக்கு தரணும்னு நிதமும் சண்டை போடுறா..

எனக்கு அந்த பொண்ணுக உனக்கு செட்டாவாதுனு தோணுது ராசா..


முக்கியமா ஒரு விசயம் சொல்லத்தான் இந்தக் கடுதாசி..

நீ மாசா மாசம் அனுப்பற பணம் போதாதுனு உன் அம்மா நகைங்க மேல  ஒரு கண்  இவங்களுக்கு. 

நான் என்னா செஞ்சேன் தெரியுமா? அவங்களுக்கு தெரியாம நம்ம வீட்டு துளசி மாடத்துக்குள்ள ஒரு சொம்புல போட்டு அந்த நகைங்கள புதைச்சு வெச்சிருக்கேன்.  உன் ஆத்தா அவ மருமவளுக்கு கொடுக்கச் சொல்லி என் கிட்ட தந்துட்டு கண்ணை மூடிட்டா..

அது உன் சொத்து..உன் கையில ஒப்படைக்கணும்ப்பா..

இந்த வீடும் ரொம்ப ஓட்டையா இருக்காம்..இடிக்கணும்னு ஒரே புடியா இருக்கானுங்க.. அவங்க வீட்டை உடைச்சா..இந்த நகையும் அவனுங்க கையில கிடச்சுடும்.

உங்கிட்ட பணம் மட்டும் வாங்கிக்கிறது போதாதுனு....இந்த சொத்துல பங்கும் வேணாம்னு எழுதி வாங்கப் போறாகளாம்.


நான் கண்ணை மூடற வரைக்கும் இதெல்லாம் காப்பாத்துவேன். அதுக்கப்பறம் அவனுங்க ஓட்டல் கட்டப் போறாங்களா..இல்ல பத்து பதினஞ்சு வீடு கட்டி பிரிச்சுக்கப் போறாங்களோ தெரில..


இதெல்லாம் உனக்குத் தெரியணும் தம்பி. வெள்ளந்தியா இப்படியே எத்தனை நாளு இந்தக் குடும்பத்துக்குனு சம்பாரிப்ப?

இந்த அப்பத்தா கண்ணு மூடறதுக்குள்ள ஒரு வாட்டி வந்துட்டு போய்டு ராசா.


போன மாசம் ரொம்ப உடம்புக்கு முடியாம போச்சு..என்னை ஆஸுபத்திரியில் சேர்த்து விட்டுட்டு ஒருத்தனும் எட்டிக் கூட பாக்கல. அங்கே ஒரு நர்ஸு பொண்ணு தான் ' பாட்டி..பாட்டினு' என்னை நல்லா கவனிச்சுது.. பொண்ணும் நல்ல குணம்மா இருக்கு..அந்தப் பொண்ணை உனக்கு பேசலாமானு எனக்கு ஒரே ஆசை..


ஆனா..அன்னிக்கு  பக்கத்து வீட்டு சண்பகம் உன்னோட பேஸ் புக்காமே..அதுல ஒரு பொண்ணோட  நீ இருக்கற போட்டோ காட்டுச்சு..பொண்ணு லட்சணமா நல்லா இருக்குதுப்பா..அவளையே நீ கல்யாணம் கட்டிக்கிறயா?


உன் விருப்பம் என்னனு கடுதாசி போடு. 

இப்போ இருக்கும் தள்ளாமையில ஒவ்வொரு நாளு தள்ளுறதே பெரும் பாடா இருக்கு ராசா..


உன்ன ஒரே ஒரு முறை பார்த்துட்டு கண்ணை மூடணும்னு இந்த கிழவிக்கு ஆசை..

நம்ம குலதெய்வம் கோயிலுக்கு நேர்ந்துக்கிட்டு இருக்கேன்.

உன் உடம்பை நல்லா கவனிச்சுக்கப்பா. கெட்ட பழக்கம் ,கெட்ட சகவாசம் எதுலயும் மாட்டிக்கிடாதே..


நீ வர நாளுக்காக ஆசையா காத்திருக்கும்

 உன் அப்பத்தா..

Monday, August 21, 2023

பிள்ளையார் சதுர்த்தி

 Options பலவிதம்


வடை..

ஓட்டை வடையா..

ஆமை வடையா..


கொழுக்கட்டை.

கடை மாவா..

வீட்டில அரைச்சதா..?


சுண்டல்..

வெள்ளையா..

கருப்பு கொத்துக்கடலையா..


அப்பம்..

கோதுமையா?

அரிசியா?

குழியிலா?

கொதிக்கும் எண்ணெயிலா?


இப்படி யோசித்தது போக..

இந்த முறை for a change..


பிள்ளையாரை..

எப்படி செய்யறது?


களி மண்ணிலா?

காப்பி பொடியிலா?

மஞ்சளிலா?..கூட

மைதா சேர்த்தா?

கோதுமையிலா?..

கொழக்கட்டை மாவிலேயா?

🍫 சாக்லேட்டிலா?..

ஓட்ஸிலா?..


கடையில் வாங்கி மணையில் வெச்சது போதும்..உன்

கையால் என்னை உருவாக்கு..

உனக்கு உண்டு ஆக்கம்..நான்

தருவேன் ஊக்கம் ..


சொல்ல வந்தாரோ..

#சித்தி_விநாயகர்..


சரி..சரி..

இப்போதைக்கு..உங்க படம் மட்டும் ஒண்ணு வரைஞ்சேன்..


#turban_ganesha

YouTube learning😃

Wednesday, June 14, 2023

Vadai

 #வாங்க_சாப்பிடலாம்

#very_easy_vadai


உளுந்து ஊற வைக்கணுமா?

No..

அரைச்சு எடுக்கும் வேலை இருக்கா?

No.

தண்ணி ஜாஸ்தியா..கம்மியா? டென்ஷனா?

No..No..

அப்போ என்னதான் செய்யணும்?

சொல்றேன் சொல்றேன்.


நம்ம கிச்சன்ல , ஃப்ரிட்ஜில இருக்கிற ஐட்டம்ஸ் எல்லாம் எடுங்க..

கலக்குங்க..

காட்டுங்க உங்க creativity😋


For 15 vada

Soft dosai  -2 ( fresh ஆ ரெண்டு பண்ணுங்க)

Bread -2

புளிக்காத தயிர் ஒரு 2கரண்டி

தோசையும் ப்ரெட்டும் தயிரில் ஊறவைக்கவும்.( thanks Raghupathy N sir for the idea 🙏)

உளுத்தம் மாவு - ஒரு கரண்டி

அரிசி மாவு - 1 ஸ்பூன்

உருளை ஒன்று சின்னதா வேகவைத்தது

(Optional)

வெங்காயம்

பச்சை மிளகாய்

இஞ்சி

தேங்காய்ப் பல்

மிளகு

கொத்த்மல்லி

தேவையான உப்பு.

எலாவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்யுங்க.


( உளுத்தம் மாவு last ஆ சேர்க்கணும்.)

எண்ணெய் காய்ந்ததும் போட்டு எடுங்க..

Crispy tasty vada ready😀


இதை உதிர்த்து வெங்காயம் பச்சை மிளகாய் தாளித்து கொட்ட 

#வடை_உப்புமா ரெடி Bala Hari