#sunday_topic
#கனவு_வேலை Nov 2022
" எப்படித்தான் நாள் பூரா வீட்ல இருக்கீங்களோ..?"..
கனவு நிஜமாகி..
கைப்பையைத் தூக்கிக் கொண்டு வேலைக்கு செல்பவர்கள்....கரண்டியும் கையுமா இருக்கும் இந்த அகிலாவைப் பார்த்து அடிக்கடி கேட்கும் கேள்வி..
' நானும் தான் வேலைக்கு போயிருக்கேன்'..நான் சொல்வது காதில் விழாத மாதிரி நகரும் கூட்டத்துக்குள் ...
என்ன செய்வது?..
என் குழந்தை இஞ்சினியர் ஆகணும் ..டாக்டர் ஆகணும்னு ..பிறக்கும் போதே முத்திரை குத்தும் கனவுத் தொழிற்சாலையில் பிரசவமாகாத product நான்.
அப்பாவும் அம்மாவும் தங்கள் குடும்பத்துக்காக ஓடிய ஓட்டத்தைப் பார்த்து..நான் பின் தங்கி விட்டேனோனு..அடிக்கடி எண்ணம் வரும்.
என் கனவும் பலிக்காமல் இல்லை..ஆனால், பாதியில் நின்று போச்சு..அவ்வளவுதான்.
இப்படி ஆகலாமா..அப்படி ஆகலாமா?..
அகலாமல் தொடர்ந்த கேள்விக்கு விடை தேடி..
ஓடினேன்..ஓடினேன்..
Accounts ,audit ,finance ...ரொம்ப பிடிக்கும்..
பரிட்சை பல எழுதினேன்..என் பலம் காட்ட முடியவில்லை..
இண்டர்வியூ ..இடைவிடாமல் சந்தித்தேன்..இன்ன காரணம் என்று புரியாமலே நிராகரிக்கப்பட்டேன்..
நேரம் சரியில்லை..நகர்ந்து வழி விடும் என்று நினைத்து..
கிடைத்த ஒரு சின்ன வேலையைப் பிடித்துக் கொண்டு..திறமை காட்டினேன்..
சித்தி..பாங்க் உத்தியோகத்தில் கிளார்க்காக கலகலப்பா இருந்தது பார்த்து கனா கண்டேன்.அவள் உயர்ந்தபோது..மீண்டும் கனவு கண்டேன்.
அம்மாவை..அதிகாரியின் நாற்காலியில் பார்த்தபோது ..கனவு கண்டேன்..
நானும் கிளார்க்காக சேர்ந்து..குறுகிய காலத்தில் accounts department ல் கிடுகிடுனு பதவி உயர்வு பெற்றேன்...அந்த நிறுவனத்தில்.
.சுழல் நாற்காலியில் அமர்ந்து எங்களை பம்பரமாக சுழல வைத்த சீனியரைப் பார்த்து கனவு கண்டேன்..
"இன்னும் கொஞ்சம் தூரம் தான் வா.."என்று கையைப் பிடித்து தூக்க நினைத்த அவரின் அன்புக்கரத்தை விட்டேன்..வீட்டில் ஆசையாய் முதல் பெண் பிறந்தபோது..
எட்டாக்கனியாகும் இனி வேலை என்பது புரியாமல்..அவர் அட்வைஸை..அப்புறம் எடுத்துக்கொள்ளலாம் என்று விட்டேத்தியாய் வீடே உலகம் என்று ஆனேன். ( அங்கே தான் தடுமாற்றம் started)
அப்புறம் என்ன..?
விட்டதை புடிக்க முடியல..
களம் இறங்க நினைத்தபோது..காலம் ஓடிப்போச்சு.
உங்க resume ல இவ்வளவு இடைவெளி இருக்கேனு...வேலை தேட மீண்டும் ஆரம்பித்தபோது..
உள்ளே நுழைய இடமில்லை..
காலச்சக்கரம் ஓட..
என் கனவைத் துரத்துவது இருக்கட்டும்னு...
குழந்தைகள் கனவுக்கு ..கை கொடுத்தேன்..
எல்லாரும் சொல்ற மாதிரி..என்ன இது பெரிய தியாகமா..it shows your incompetency ....
ஏச்சுகளை காதில் போட நேரமில்லாமல்....ஓடினேன்..
அம்மாவாய், தோழியாய்,டீச்சராய், சாரதியாய். ...எத்தனை வேலை செஞ்சேன்..
சரி..நமக்கு..வருமானம் வரும் வேலைதான் ராசியில்லை..
வாலண்டியரா சில நிறுவனங்களுடன் இணைந்தேன்.
மாற்றுத் திறனாளி குழந்தைகளிடம் நிறைய கற்றேன்.
இவர் ஸைட்டில் இருந்த ஸ்கூலுக்கு இங்கிலீஷ் டீச்சராக ஜாலியா என் ரெண்டாவ்து பெண்ணை கைக் குழந்தையாய் தூக்கிக் கொண்டு சென்றேன்.
இப்போ கொஞ்சம் மீண்டும் ப்ரேக்.
அப்பாவை தனியா நீயே சாப்பாடு போட்டுக்கோ..நான் ஓடறேன்னு சொல்ல மனசில்ல. So, எனக்கு பிடிச்சதை செய்து..me happy.
இப்படியாக சின்னச் சின்ன கனவுகளுடன் என் பயணம்..
அதில் கிடைக்கும் களிப்பும் அலாதி. இப்படி எழுத்து, drawing ,keyboard, பாராயணம், ஊர் சுற்றல் ..இப்படினு life is moving.
தூக்கத்தில பாதி முழிச்சதும்..காணும் கனவு தொடருவதில்லை..அதே போலத்தான் ..தொடராக் கனவு..
அப்பப்போ..GM finance ஆ ஆகியிருப்பேனா..அதுக்கும் மேலேயும் போயிருப்பேன் இல்லனு என் பெண் கிட்ட கேட்டு..செம்ம டோஸ் வாங்குவேன்.
கடைசியா..ஒரே ஒரு திருப்தி..
டேபிள் எட்டாத வயசில் வேலைக்குச் சேர்ந்து..எட்டா உயரம் போகணும்னு நினைத்து ...சாதித்த என் அம்மாவுக்கு .....அவள் கனவு மெய்ப்பட கை கொடுத்தேன்..
என் பசங்களின் கனவோடு ..இன்றும்..அவர்களுக்கு support ஆ இருக்கேன்.
பலமாக..பாலமாக..என் அன்புக்குரியவர்களுக்கு இருப்பது..நான் கனவிலும் நினைக்காத ஒன்று.
அத்ற்கு எப்போதும் என் நன்றியை சாமிக்கிட்ட சொல்லுவேன்...
So no regrets..me ..always happy


No comments:
Post a Comment